Sunday 27 April 2014


பேஸ்புக்'கை பயன்படுத்துவோரால் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வசதியாக, புதிய செய்தி பக்கத்தை, "பேஸ்புக்' நிறுவனம், அறிமுகப்படுத்தி உள்ளது. "பேஸ்புக்'கை பயன்படுத்துவோர், தினசரி, கோடிக்கணக்கான நிகழ்வுகளையும், செய்திகளையும், நொடிப்பொழுதில், தங்கள், "பேஸ்புக்' பக்கத்தில் வெளியிடுகின்றனர். அவர்களால் வெளியிடப்படும் தகவல்கள், பெரும்பாலும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தான் இருக்கும். அதனால், அவற்றில் சில தகவல்கள், ஊடகங்களில்
செய்திகளாக வெளியிடும் வகையில் அமைந்துவிடுகின்றன. எனினும், அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடிவதில்லை. அதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், "ஸ்டோரிபுல்' எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, ஆங்கில ஊடகங்களுடன் மட்டும், தற்போது பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில், "பேஸ்புக்' நிறுவனம், "ஸ்டோரிபுல்' நிறுவனத்தின் உதவியுடன், "பேஸ்புக்'கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்து, அவற்றை, facebook.com/FBnewswire  எனும் பக்கத்தில், செய்தியாக வெளியிட திட்டமிட்டது. இதை தொடர்ந்து, அந்த பக்கத்திற்கான சேவை, நேற்று முதல், உலகம் முழுவதும் துவங்கப்பட்டது. அதில், தனி நபர் பகிர்ந்து கொள்ளும் தகவல் மட்டுமில்லாமல், அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும், செய்தியின் மதிப்பை பொறுத்து வெளியிடப்படுகின்றன. இந்திய மொழிகளில், இது போன்ற செய்தி சேவை துவங்குவது குறித்து, "பேஸ்புக்' நிறுவனம், எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment