01.05.2014 அன்று சென்னை சென்டரல் ரயில்
நிலையத்தில் வெடித்த வெடிகுண்டுகளும், அண்ணா மேம்பாலத்தை தகர்க்க நடந்த சதி
முறியடிப்பும், 31.05.2014 அன்று கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளியும்
தமிழகத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதை நிரூபித்துள்ளது.
காவல்துறையும், தமிழக அரசும் விழிப்புடன்
செயல்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம்
பயங்கரவாதி உளவாளியும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுரின் ஆலோசனைபடி
செயல்பட்டதாக கூறியதை மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் அதன்பிறகு அதன்
புலன்விசாரணை என்னவாயிற்று என்று தெரியவில்லை.
படுகொலையும், வெடிகுண்டு சதியும்
முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் காவல்துறையும், புலனாய்வுத் துறையும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு ஓட்டு வங்கி அரசியலை
தூக்கியெறிந்து துணிவோடு செயல்பட வேண்டும்.
சென்னையில் குறிப்பாக பெரியமேடு, மண்ணடி,
திருவல்லிக்கேணி முதலான பயங்கரவாதிகள் பதுங்கும் லாட்ஜ்களையும் தங்கும்
விடுதிகளையும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும். சிறிய
சந்தேகத்திற்கு இடமளிக்கும் எவரையும் கைது செய்து தீர விசாரிக்க வேண்டும்.
புலனாய்வுத் துறைக்கு கிடைக்கும் எந்தவொரு சிறு தகவலையும் முழுமையாக
விசாரிக்க உத்திரவிட வேண்டும். வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ்
படுகொலைகளில் சம்பந்தப்பட்டவனும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பவனுமான
சித்திக் கைது செய்யப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவன்
வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணன் என்றும், இவனுடைய தொடர்பில் இன்னமும்
சிலர் இருக்கலாம் என்பதும் அப்போதே வந்த செய்தி.
இது ஏதோ திடீரென்று ஏற்படும்
பிரச்னையில்லை, திட்டமிட்டு, மூளை சலவை செய்யப்பட்ட, உள்ளூர் முஸ்லிம்கள்
துணையோடு நடத்தப்படும் சதி செயல். சென்னை சென்டரல் இரயில் நிலையத்தில்
வெடித்த குண்டு பெங்களூரில் தயாரித்து குண்டூரில் வெடிக்க வைக்க கொண்டு
சென்ற வழியில் சென்னை சென்டரலில் வெடித்துவிட்டது என ஊடகங்கள்
தெரிவிக்கின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்ல கேரளா உட்பட
தென்பாரதம் முழுவதும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என்பதே உண்மை.
பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும்
ஒழிக்க வேண்டுமானால், முழு மனதோடு காவல்துறையை செயல்பட அரசியல்வாதிகள்
வலியுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இரக்கமற்ற இக்கொடியவர்களை கண்டுபிடித்து
நீதியின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். இச்சம்பவத்தில்
உயிரழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை இந்து முன்னணி
தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்த சகோதர, சகோதரிகளுக்கு ஆறுதலைத்
தெரிவித்துக்கொள்கிறது.
0 comments:
Post a Comment