Tuesday 29 April 2014


திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.



 இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதையாகவே ஆண்டாண்டு காலமாக விளங்கி வருகின்றது.
ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.



இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் இந்த மலைப் பிரதேசத்தின் மூன்று ரிஷிகள் வசித்து வந்தார்கள். அவர்கள் அங்கு தாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஒரு குழந்தை அங்கு அழுதுகொண்டு அனாதையாகக் கிடந்தது. அதை அவர்கள் கருணையோடு எடுத்து வந்து வளர்த்து அறிவு புகட்டினார்கள். அந்தக் குழந்தை நன்கு அவர்களிடம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொண்டவுடன், அங்கிருந்து கிளம்பி ஷேத்ராடனம் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஒரு நாள் அந்த மூன்று ரிஷிகளும் அந்த மலையின் (தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) ஒரு மரத்தில் தேன்கூடாக மாறி விட்டார்களாம். அதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரு முனிவரிடம் பெற்று இருந்த சாபமே. பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். அந்த மலையில் தேன் எடுப்பவர்கள். ஒரு முறை அவர்கள் அந்த முனிவர் அங்கு தவத்தில் இருந்ததைப் பார்க்காமல் அவர் தவம் இருந்த மரத்தின் மீது இருந்த தேன் கூட்டை கலைக்க அந்த கூட்டில் இருந்த தேன் அந்த முனிவர் மீது வாய் மீது விழுந்து அவர் தவம் கலைந்தது. ஆகவே அவர் அவர்களை தேன்கூடுகளாக மாறி விடுவார்கள் என்றும் பல காலம் பொறுத்து ஒரு சாபத்தினால் அங்கே வந்து குழந்தையாக பிறக்க உள்ள நாரத முனிவர் அவர்களின் சாபத்தைத் தீர்ப்பார் என்றும் சாபமிட்டார். ஆகவே அந்த முனிவர்கள் அந்த மரத்தின் மீதே தேன் கூடுகளாக மாறி அமர்ந்து இருந்தார்கள். அபோது அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறும் ரிஷி முனிவர்களின் வாயில் ஒரு சொட்டு தேன் விழுமாறு அவை பார்த்துக் கொள்ளும். அதன் காரணம் தமது பூர்வ ஜென்மக் குழந்தை அங்கு வந்தால் அந்த செய்கையை புரிந்து கொண்டு தமக்கு சாப விமோசனம் தரும் என்பதற்காகவே.

 தேசிய நெடுஞ்சாலையில் வரும்
வளைவில் திரும்ப வேண்டிய இடம் 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பூத்தார் என்ற பெயர் கொண்ட முனிவராக மாறி இருந்தக் குழந்தை மீண்டும் அங்கு வந்து அவர்களைத் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த மூன்று முனிவர்கள் தேன்கூடாக இருந்த மரத்தின் அடியில் படுத்து இருந்தபோது அவர் வாயில் ஒரு சொட்டு தேன் விழுந்தது. உடனேயே அவர் அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அங்கேயே இருந்த காளியின் முன் தவமிருந்து அவளது அருளைப் பெற்று அவர்களுக்கு சாப விமோசனம் பெற்றுத் தந்தார். ஆகவே இனிமையான தேனை போன்ற வாழ்கையை வழங்கும் இடமான அந்த ஆலயம் மதுர (இனிமை என்று பொருள்) பெயர் கொண்டு மதுர மலை ஆயிற்று.

 ஆலயத்தில் ஒரு காட்சி 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
நான்கு கைகளைக் கொண்ட அன்னையின் ஒரு கையில் அக்ஷயபாத்திரம் இருக்க தந்து இடது காலை மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். சாதாரணமாக காளி உக்ரஹ வடிவில்தான் அனைத்து ஆலயத்திலும் காலடியில் தான் வதம் செய்த மனிதன் மீது நின்றபடி காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள காளியோ கருணை முகத்துடன் காட்சி தந்து அருளைத் தருவதால் மதுர காளி அம்மன் என்ற பெயரைப் பெற்றாள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கண்களுக்குத் தெரியாமல் அங்குள்ள சித்தர்களும் ரிஷி முனிவர்களும் அந்த ஆலயத்து தேவியை வணங்க ஆலயம் மூடப்பட்டு உள்ளதாம். இந்த மதுர காளி தேவியும் உக்ரஹமான காளியின் அவதாரமே. v.kalathur seithi


நன்றி- http://santhipriyaspages.blogspot.in/


 
 ஆலயம் செல்லும் வழி 

0 comments:

Post a Comment