கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 4-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பு, உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகளில் 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னையில் மாதவரத்திலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 14 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பத்தை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் கட்டணம் ரூ. 250, இதர பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும். விற்பனை மையத்தில் விண்ணப்பங்களைப் பெற எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 கட்டணமும், இதர பிரிவினர் ரூ.600 கட்டணமும் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தோரின் தரவரிசைப் பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஜூன் நான்காவது வாரத்தில் நடத்தப்படும். கலந்தாய்வு குறித்த பிற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. v.kalathur seithi .
நன்றி-தினமணி
0 comments:
Post a Comment