Tuesday, 29 April 2014


பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஏர்கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்கம் தொடர்பான இலவச பயிற்சி மே 5-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 5-ம் தேதி முதல் முதல் ஏர் கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் 18 வயதிலிருந்து 35-க்கு குறைவாக, குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேந்தவராக, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
30 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்குவதோடு, பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328277896 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். v.kalathur seithi

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment