வேப்பந்தட்டை, : வி.களத்தூர் ஊராட்சி மேட்டுச்சேரி கிராமத்தில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடையை தமிழ்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ஊராட்சி மேட்டுச்சேரி கிராமத்தில் சுமார் 150க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வி.களத்தூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன்கடையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண் ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட் களை வாங்கி வந்து பயன்படுத்தி வந்த னர். இது அந்தப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்ப்படுத்தி வந்தது.
இதனைத்தொடர்ந்து மேட்டுச்சேரி கிராமத்திற் கென தனியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்தனர்.
வி.களத்தூர் ரேஷன் கடையிலிருந்து மேட்டுச்சேரி கிராமத்தை தனியாகப் பிரித்து பகுதிநேர ரேஷன் கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுச்சேரி கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன் தலைமை தாங்கி பகுதி நேர ரேஷன்கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
மாவட்டக் கவுன்சிலர் செல்வராணி ராயமுத்து, ஊராட்சி தலைவர் நூருல்ஹிதாஇஸ்மாயில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் மணிமேகலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கீதா, வெண்பாவூர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. பிரமுகர்கள் குணசேகரன், கண்ணபிரான், சூரியகுமார், கை.களத்தூர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்ட னர்.
முடிவில் அய்யாக்கண்ணு நன்றி கூறினார்.
நன்றி- தினகரன்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=247747&cat=504