Saturday, 3 May 2014


இந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு?

இன்றைய நிலையில் இந்துக்கள் ஜாதியினால் பிரிவுபட்டிருக்கிறார்கள்.தங்களுக்கு என ஒரு சங்கம் ஆரம்பித்து அதற்க்கு ஒரு தலைவரையும் நியமித்து அவர்கள் சொல்லும் குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே செயல்படுகின்றனர்.புனித நூலான “ பகவத்கீதையில் ” பகவான் கிருஷ்ணர் சொல்கின்றார்.

“ ஜாதி என்பது பிறப்பினால் வருவது இல்லை மாறாக – அது
குணத்தினால் வருவது “ என்று.

மேலும் நான் போரிட்டால் என் ஜாதி அழிந்துவிடும் என அஞ்சும் அர்ஜூனனிடம்,கண்ணண் போரிட தூண்டுகிறான். கண்ணண் ஜாதியை ஆதரிப்பவனாக இருந்தால் போரிட தூண்டியிருக்கமாட்டான் மாறாக அவன் ஜாதியை ஓழிப்பவனாக இருக்கிறான்.ஆங்கிலேயர்கள் ஆகட்டும்,இன்றைய ஆட்சியாளர்களாகட்டும் தங்கள் பதவி சுகத்தை காப்பாற்ற நம்மை பிரித்துவைத்து வழி நடத்துகின்றனர்.இருந்தாலும் கூட நாம் கண்ணனையும், சிவனையும், இசக்கியம்மனையும், சுடலையும், வணங்குவதோடு சைவம்,வைணவம் பிரிவு பாராட்டாமல் சமம்மாகவே பாவித்து வணங்கிவருகிறோம்.

இந்து மததில் மட்டுமே ஜாதிகள் உண்டு என்று சொல்லி இந்துக்களை முஸ்லீம்களும்,கிறிஸ்தவர்களும் இந்துக்களை மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ பிரிவினைகள்

எங்களிடம் ஜாதி இல்லை என் கூறும் கிறிஸ்தவர்களில் கேரளாவில் மட்டும் 146 பிரிவுகள் உள்ளன.பாதிரிகள் கூட தங்களுக்குள் ஜாதி வேற்றுமை பார்ப்பதாக பல செய்திகள் வெளி வருகின்றன.தங்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்கும்போது கூட தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. எறையூரில் வன்னிய கிறிஸ்தவர்களும்,ஆதி திராவிட கிறிஸ்தவர்களும் மாறி,மாறி தங்களது வீடுகளை தாக்கிக்கொண்டனர்.இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவர் பலியானார்.செஞ்சி தாலுகாவில் பாதிரியை சர்சை பூட்டி திருப்பி உள்ளனர்.விழுப்புரம் தாலுகாவில் கடலூர்,பண்ருட்டி போன்ற பல இடங்களிலும் தங்கள் ஜாதியில் உள்ளவர்தான் பாதிரியாக வரவேண்டும் எனக்கூறி வந்தவர் விரட்டியடிக்கப்பட்டார்.ஆனால் கிறிஸ்தவ மிஷினரிகள் கிறிஸ்தவத்தில் ஜாதிகள் இல்லை என்கிறார்கள்.

கிறிஸ்தவத்தில் உள்ள சில பிரிவுகள்...........

லத்தீன் கத்தோலிக்க சர்ச்,
பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்,
மார்தோமா சர்ச்,
சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச்,
ஜெகோவா பைட்,
பெந்தகோஸ்,
இது போன்ற பிரிவுகள் 146 கேரளாவில் மட்டும் உள்ளன.

லத்தீன் கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் லத்தீன் கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள்.இவர்கள் இரண்டு பேரும் மார்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் மூன்று பேரும் பெந்தகோஸ் சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் நான்கு பேரும் சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் 5 பேரும் மார்த்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்க மாட்டார்கள்.இப்படியாக ஒரே மதம்,ஒரே பைபிள், ஒரே இயேசு, என்று கற்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு தரப்பட்ட பிரிவினைகள்.ஒரு சர்சை சார்ந்தவர்கள்,மற்ற சர்சை சார்ந்தவர்களுடன் பிராத்தனை செய்வது கிடையாது என்பது மட்டும் அல்லாமல் ஒருவரை ஒருவர் இழித்து,பழித்து பேசுவதும் தொடர்கிறது.

இஸ்லாம் பிரிவினைகள்

ஷியா,
சன்னி,
முஜாகிதீன்,
சூபி,

என 37 பிரிவுகள்.இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்வத் என்பது காலம் காலம்மாக தொடர்ந்து வருகின்றது.எதிர்தரப்பு முஸ்லீம்களை கொல்ல அவர்களை வெட்டி கை வலிக்கிறது என்பதற்க்காக ஒரு அறை ஒன்றை தயார் செய்து அதில் எதிர்தரப்பு முஸ்லீம்களை அடைத்து வைத்து விஷவாயுவை செலுத்தி கொல்கின்றனர்.இந்த குற்றத்துக்காகத்தான் சதாம்ஹூசைன் தூக்கிலிடப்பட்டார்.இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மற்றொரு தரப்பு அந்த அறையிலே சதாம்ஹூசைன் பிணத்தை சுற்றி கொண்டாடியது தொலைகாட்சிகளில் வெளியானது.ஈரானில் நிலவிய ஷியா,சன்னி பிரிவு மோதலை பயன்படுத்தியே ஈரானை அழித்தது அமெரிக்கா.இது மட்டும் அல்லாது தங்களுக்குள் எதிர்தரப்பு மசூதியை குண்டு வைத்து தகர்கின்றனர். குவைத்தை அமெரிக்கா ஆக்ரமித்தபோது குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழிக்கவேண்டும் என சுற்றியிருந்த இஸ்லாமிய நாடுகள் வேண்டுகோள் வைத்து தங்கள் நாட்டில் அமெரிக்க ராணுவபடைகளை நிறுத்த அனுமதித்தன.இதன் பயனாக குவைத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா பிரதிபலனாக குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழித்து தனது நன்றி சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டிற்க்கு அர்ப்பணித்தது. ஒரே இறைவன்,ஒரே மறை,ஒரே மதம் என வடிவமைக்கப்பட்ட இஸ்லாம் மதம் இன்று தங்கள் சகோதரர்களை விஷவாயு செலுத்தியும்,ம்சூதியில் குண்டுகளை வைத்தும் கொன்று இஸ்லாத்தை வேடிக்கையான ஒரு பொருளாக மாற்றிவிட்டனர்.

இந்து ஒற்றுமைகள்

ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நாயன்மார்கள்,பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உபநிஷங்கள்,ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட விரிவுரைகள்,நாற்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பிரிவுகள்,பல தரப்பட்ட மொழிகள்,பல தரப்பட்ட கலாச்சாரம் என பல்வேறாக பிரிந்திருந்தாலும் எந்த ஒரு இந்துவும் எந்த ஒரு இந்து கோவிலுக்கும் சென்று இறைவனை தரிசிக்கலாம் அதற்க்கு தடையே கிடையாது.இதுதான் ஒற்றுமை. இந்து மதத்தில் ஏனைய பிரிவுகள் இருக்கின்றன.மிகப்பெரிய பாவச்செயல் என்று வர்ணிக்கப்படும் தீண்டாமை முன்பு போல் இப்போது இந்து மதத்தில் இல்லை. ஒரு தாழ்தப்பட்டவன் கூட ஆகம விதிகளையும்,சாஸ்திரங்களையும் கற்றால் அவன் கோவில் குருக்கள் ஆகலாம் என்பது இந்துவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்.உதாரணம்மாக கோழிக்கோடு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இந்து சகோதரர்களுக்கு வேத உபநிதம் பிரமாணர்களால் கற்பிக்கப்பட்டு அவர்கள் பிராமாணர்களாக ஏற்க்கப்பட்டிருக்கின்றனர். இந்துக்கள் தங்களது தெருக்களில் நடமாடக்கூடாது என்றவுடன் இந்துக்கள் எழுச்சி அடைந்தனர்.ஆனால் இந்துக்களின் எழுச்சியை அடக்க இப்பொழுது நாமெல்லாம் நாடரல்லவா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்து சகோதரர்களே கீதையை படியுங்கள்,அதனை பின்பற்றுங்கள்..நமக்குள் ஜாதிகள் வேண்டாம்.இந்து என்கிற உணர்வே போதும்.நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். v.kalathur seithi .

பாரத நாடு பழம்பெரும் நாடு, நாமதன் புதல்வர் இந்நினைவகற்றோமே....... 


நன்றி- https://www.facebook.com/Mission118

யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றது. அசம்பாவிதம் என்று சொல்வதை விட, அது ஒரு சதி. நரேந்திர மோடி முதலமைச்சராக பதவியேற்று ஏறக்குறைய 150 நாட்கள் ஆகியிருக்கும். மோடி ராஜ்கோட் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மூன்று நாட்கள் கழித்து, அவர் சட்டசபையில் எம்.எல்.ஏ வாக பதவியேற்ற அன்று, அதாவது 2002 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள், அந்த சம்பவம் நடைபெற்றது.

கோதரா, குஜராத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு 65% இந்துக்களும் (ஜெயினர்களையும் சேர்த்து), 35% முஸ்லீம்களும் உள்ளனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையானோர் கான்ஜிபிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பரம்பரையாக எண்ணெய் உற்பத்தி செய்பவர்கள். ஆப்கானிய சிப்பாய்களுக்கும், பில் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்கும் தோன்றிய வம்சாவளியினர்தான் இந்த கான்ஜி முஸ்லீம்கள். மூர்க்க குணம் உடையவர்கள். எதிலும் மிகத் தீவரம் காட்டுபவர்கள். இவர்கள் சமுதாயத்தில், படிக்காதவர்கள் அதிகம். ஏழைகளும் அதிகம். இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் நிறைய வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுவரை கோதராவில் நடந்தேறியுள்ள வன்முறைகள்:
1927 ஆம் ஆண்டு, பி.எம்.ஷா என்ற வழக்கறிஞரும், இந்து மஹா சபா உறுப்பினரும் கொல்லப்பட்டனர்.
1946 ஆம் ஆண்டு, இந்தப் பகுதியை சேர்ந்த சர்தார் அலி ஹாதி என்பவர் "பாகிஸ்தான் சிந்தாபாத்" என்று எழுதப்பட்ட பட்டத்தை வானில் பறக்கவிட்டார். பின்னர் பாகிஸ்தான் உருவான பிறகு, அங்கு ஒரு மாநிலத்தின் ஆளுரராக நியமிக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு, பிம்பிள்கர் என்ற ஒரு காவல்காரரும், ஒரு பால்காரரும் கொல்லப்பட்டனர். மேலும் பல ஹிந்துக் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
பிறகு 1980 ஆம் ஆண்டு, ஐந்து ஹிந்துக்களும், இரண்டு குழந்தைகளும், கோதரா ரயில் நிலைய யார்டில் கொல்லப்பட்டனர்.
பின்னர் 1990 ஆம் ஆண்டு, மதராஸாவில் (இஸ்லாமிய மதத்தை போதிக்கும் பள்ளிக்கூடம்) பாடம் எடுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஹிந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தன்று -அயோத்தியில் இறைத்தொண்டு செய்துவிட்டு சுமார் 2000 கர சேவகர்கள், சபர்மதி எக்ஸ்பிரஸில் அயோத்தியாவிலிருந்து அஹமதாபாத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த ரயில், கோதராவில் நின்றது. கோதரா ரயில் நிலையம், முக்கியமான மும்பை - டில்லி வழித் தடத்தில் அமைந்துள்ளது. விடியற்காலை 3:45 மணிக்கு வரவேண்டிய சபர்மதி எக்ஸ்பிரஸ், சம்பவத்தன்று நான்கு மணி நேரம் காலதாமதமாக சுமார் 7:43 மணிக்கு கோதரா வந்தது. இரயிலில் இருந்த கர சேவகர்கள், காலையில் தேநீர் பருக இரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கினர். பின்னர் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இரயில் கோதரா ரயில் நிலையத்திலிருந்து வதோதராவிற்கு புறப்பட்டது. அப்பொழுது ஒரே சமயத்தில் ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளிலிருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு, இரயில் நிறுத்தப்பட்டது (அபாய சங்கிலியின் சமிங்ஞையை வைத்து, என் ஜின் டிரைவர் இரயிலை நிறுத்த வேண்டியதில்லை. அபாய சங்கிலியை இழுத்தால் இரயில் தானாகவே நின்றுவிடும். அபாய சங்கிலி இரயிலின் பிரேக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், ரயில் தானாகவே நின்றுவிடும்). இரயில்வே ஊழியர்கள், சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிகளை பார்வையிட்டனர். அந்த சமயத்தில் ரயில் பெட்டிகளின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. 7:55 மணிக்கு மறுபடியும் இரயில் கோதரா ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டது. அப்பொழுது மறுபடியும் இரயிலின் பல பெட்டிகளிலிருந்து ஒரே சமயத்தில் அபாய சங்கலிகள் இழுக்கப்பட்டன. புறப்பட்ட இரயில் மறுபடியும் நின்றது. இரயில்வே நடைமேடையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் சிக்னல்ஃபாலியா என்ற இடத்தில் இரயில் நின்றது. அந்த சமயத்தில், எங்கிருந்தோ திபு திபுவென சுமார் 900 முதல் 1000 பேர் கொண்ட முஸ்லீம் கூட்டத்தினர் ரயிலை நோக்கி விரைந்தனர். ஒலிப்பெருக்கியால் ஒருவர், 'அந்த காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்' என்று அறிவித்தவண்ணம் இருந்தார்.

இரயிலின் 5 மற்றும் 6 ஆம் நம்பர் பெட்டியை அபாயகரமான ஆயதங்கள் கொண்டு தாக்கினர். கையெறி குண்டுகள் மற்றும் திராவகத்தாலும் பயணிகள் தாக்கப்பட்டனர். தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பயணிகள் இரயிலின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடினர். தரையிலிருந்து இரயில் பெட்டி உயரமாக இருந்ததால், தாக்குதல் செய்ய வந்த கும்பலின் ஒரு பிரிவு 6 வது மற்றும் 5 வது பெட்டிகளுக்கு இடையேயான இடைகழியில் (Vestibule) உள்ள துணி மறைப்பைக் கிழித்து, அதன் வழியாக அவர்கள் கொண்டுவந்திருந்த 140 லிட்டர் எரிபொருளை இரயிலின் ஆறாவது பெட்டியின் மீது ஊற்றினர். தீ வைத்தனர்.
திகுதிகுவென நெருப்பு எங்கும் பரவியது. இரயில் பெட்டியின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டு அதன் வழியாகவும் எரிபொருள் ஊற்றப்பட்டது. 6 வது பெட்டியின் உள்ளே இருந்தவர்களிடையே மூச்சுத் திணறல். எங்கும் அலறல் சத்தம். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எரிந்து கொண்டிருக்கும் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க, பயணிகள் இரயில் பெட்டியின் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கலவரக்காரர்கள் இரயில் பெட்டியின் கதவுகளை திறக்கமுடியாமல் செய்துவிட்டனர். எந்த வகையிலும் தப்பிக்க முடியாமல் தவித்த 40 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பயணிகள், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயில் கருகி இறந்தனர். காரணமே இல்லாமல் அந்த 58 பேரும் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 48 பயணிகள், ஒருவழியாக மீட்கப்பட்டனர். இரயிலின் 6 ஆம் நம்பர் பெட்டி முழுவதுமாக எரிந்து போனது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சுலபமாக வரமுடியாதவாறு, கலகக் கும்பல் பல தடைகளை ஏற்படுத்தியது. கலகக் கும்பலின் நோக்கமே சபர்மதி இரயிலை முற்றிலுமாக தீக்கிரையாக்குவதுதான். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் இரயில்வே பணியாளர்களுடன் சேர்ந்து முழுதும் எரிந்து போன 6 ஆம் நம்பர் பெட்டியையும், அரைகுறையாக எரிந்து போன 7 ஆம் நம்பர் பெட்டியையும் இரயிலிருந்து நீக்கி, அவைகளைத் தனியே கோதரா இரயில்வே யார்டுக்கு எடுத்துச்சென்றனர். சுமார் 11 மணியளவில், தாக்குதல் கும்பல் இரயில்வே யார்டுக்கும் சென்றது. அங்கிருந்த சபர்மதி இரயிலின் 7வது பெட்டியை சேர்ந்தப் பயணிகளைத் தாக்க தொடங்கியது. தாக்குதலில் பலர் பலத்த காயம் அடைந்தனர். கலகக்காரர்களை விரட்ட காவல்துறை, துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இருவர் பலியானார்கள். காவல்துறையைச் சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

குஜராத் அரசு, குஜராத் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் கோதரா இரயில் எரிப்பு மற்று அதன் பின்னர் நடைபெற்ற மத கலவரத்தைப் பற்றி விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்கட்சியினரும் ,சமூக ஆர்வலர்களும், நீதிபதி ஷாவை விசாரணை கமிஷனின் தலைவராக செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியே விசாரணைக்கு தலைமை தாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளுக்கு இணங்கி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு நானாவதியை விசாரணை கமிஷன் தலைவராக குஜராத் அரசாங்கம் நியமித்தது. மேலும் விசாரணை கமிஷன், இருவர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது.விசாரணை நிலுவையில் இருக்கும்போது ஷா மரணமடைந்தார். எனவே அரசாங்கம் ஷாவிற்கு பதிலாக, அக்ஷய் குமார் மேத்தா என்ற ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தது.

நானாவதி - மேத்தா விசாரணை கமிஷன் தன்னுடைய விசாரணையை 6 ஆண்டுகள் காலம் நடத்தியது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 40,000 விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது. 1000 க்கும் மேலான சாட்சியங்களை விசாரித்தது. நானாவதி - மேத்தா கமிஷன் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டது.
அந்த விசாரணையின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு,

1. கோதரா ரயில் எரிப்பின் பின்னணியில், மவுல்வி ஹுசைன் ஹாஜி இப்ராஹிம் உமர்ஜி என்ற செல்வாக்குள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு செயல்பட்டிருக்கிறார்.
2. அவருக்குத் துணையாக இந்த இரயில் எரிப்பில் ஈடுபட்டவர், மத்திய ரிசர்வ் காவல்படையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி நானுமியான். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
3. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த குலாம் நபியும், அலி முகமதுவும் இரயில் எரிப்பு சதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
4. கலவர கும்பலை தூண்டிவிட்டு வழிநடத்தி சென்றவன் நானுமியான்.
5. சபர்மதி இரயிலை எரிப்பதற்கான எரிபொருட்களை பதுக்கி வைத்த இடம் ரசாக் குர்குர் என்பவரது அமான் என்ற விருந்தினர் மாளிகையில். 140 லிட்டர் பெட்ரோலை சேமித்து வைக்க, சுமார் 7 முதல் 8 பெட்ரோல் கேன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
6. இவர்களைத் தவிர, கோதரா நகராட்சியின் தலைவர் முகமது கலோட்டாவும், நகராட்சியின் கவுன்சிலர்கள் ஹாஜி பிலால் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) மற்றும் அப்துல் ரஹ்மான் தாண்டியா என்பவர்களும் இரயில் எரிப்பிலும், வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
7. ஹாஜி பிலாலும், ஃபாருக் பானாவும் கலவர கும்பலுடன் சேர்ந்து கொண்டு தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி, தீயை அணைக்கவிடாமல் சண்டையிட்டார்கள் என்றும், தீயணைப்பு துறையினரின் மீது தாக்குதல் தொடுத்ததாகவும், தீயணைப்பு வீரர் சுரேஷ் கோசாய், நானாவதி கமிஷனிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
8. அப்துல் ரஹ்மான் தாண்டியா என்ற கவுன்சிலர், கலவரக்காரர்களுடன் சேர்ந்து சபர்மதி இரயிலின் மீது கற்கள் வீசியிருக்கிறார்.
9. தடயவியல் துறையின் ஆய்வின் படி, சபர்மதி ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்கு முன்னர் பெட்டிகளில் பெட்ரோல் ஊற்றப்பட்டது என்று நிரூபனம் செய்யப்பட்டுள்ளது.
10. கோதரா ரயில் நிலையத்தின் அருகாமையில் வசித்து வந்த இஸ்லாமியர்கள்தான், இரயிலைக் கொளுத்தியதாக நானாவதி கமிஷன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது.
மேற்சொன்ன குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து குற்றவியல் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22 ஆம் தேதி தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் படி, கோதரா இரயில் எரிப்பு, ஒரு திட்டமிட்ட சதி என்ற முடிவு வெளியிடப்பட்டது. மேலும் இந்த சதியில் ஈடுபட்டு கொலை செய்த குற்றத்திற்காக, 11 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது; 20 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது; 61 குற்றவாளிகள் நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில், தங்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அதேபோல் குஜராத் அரசாங்கமும், 20 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்தும், மேலும் 61 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்த இரண்டு மேல் முறையீடுகளும் விசாரணையில் உள்ளன. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

நானாவதி கமிஷன் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில், டில்லியில் இயங்கிவரும் சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை (CIAHR), ஓய்வு பெற்ற கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான திவத்தியா தலைமையில் ஒரு தனிபட்ட குழுவை அமைத்து, கோதரா ரயில் விபத்தைக் குறித்தும், அதன் பின்னர் தொடர்ந்த வன்முறைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி திவத்தியா தலைமையிலான விசாரணைக் குழுவில் இடம்பெற்ற மற்ற நபர்களின் பெயர்களும்,விவரங்களும் பின்வருமாறு,
1) டாக்டர் ஜே.சி.பாத்ரா - உச்ச நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர்
2) டாக்டர் கிருஷ்ணன் சிங் - சண்டிகரைச் சேர்ந்த பேராசிரியர்
3) ஜவஹர்லால் கவுல் - ஜனசட்டா பத்திரிக்கையின் துணை ஆசிரியர்
4) பேராசிரியர் பி.கே.குதியாலா - ஜீ.ஜே.பல்கலைக்கழத்தின் மீடியாத் துறை தலைவர்
நீதிபதி திவத்தியா தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, நான்கு நாட்கள் விசாரணை நடத்தி, ஏராளமான நபர்களை பேட்டியெடுத்து, தனது அறிக்கையை வெளியிட்டது.
நடந்த சம்பவங்களை சார்பு நிலையற்று அலசி ஆராய்ந்த நீதிபதி திவத்தியா குழு, தன்னுடைய விசாரணையின் முடிவுகளை நான்கு பிரிவுகளாக பிரித்தது.
அவை
1) ஆதாரப்பூர்வமானவை,
2) உறுதி செய்யப்படவேண்டியவை,
3) உண்மையற்றவை
4) மர்மமானவை.
நீதிபதி திவத்தியா குழு தங்கள் விசாரணையின் முடிவில் ஆதாரப்பூர்வமானவை என்று குறிபிட்ட விவரங்கள் பின்வருமாறு,
1) 2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி, சபர்மதி எக்ஸ்பிர ஸ் கோதரா ரயில் நிலையத்தை சுமார் நான்கு மணி நேரம் கால தாமதமாக அடைந்தது.
2) சபர்மதி இரயிலில் இரண்டாயிரம் ஹிந்து யாத்திரிகர்கள் இருந்தனர்.
3) கோதரா ரயில் நடைமேடையில், பயணிகளுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் / கடை வைத்திருப்பவர்களுக்கும் இடையே சண்டை, வாய்த் தகராறு, கைகலப்பு எதுவும் ஏற்படவில்லை.
4) கோதராவை விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பும் சமயத்தில் அதன் மீது கற்கள் வீசப்பட்டன. சிக்னல்ஃபாலியாவில் இரயில் நின்ற பிற்பாடு, மறுபடியும் இரயிலின் மீது கற்கள் வீசப்பட்டன.
5) கையெறி குண்டுகள், திராவகம், எரியூட்டக்கூடிய பொருட்கள் வைத்து இரயில் கொழுத்தப்பட்டது.
6) மேற்கூறியப் பொருட்கள் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
7) தாக்குதல் நடத்தியவர்கள், தீயணைப்புத் துறையினரை தீயை அணைக்கவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர்.
8) கலகக்காரர்களால் ஒரு இரயில் பெட்டிக்கு மட்டும்தான் தீ வைக்கமுடிந்தது.
9) 6ம் நம்பர் இரயில் பெட்டியின் ஜன்னல் கதவுகள் வெளியிலிருந்து உடைக்கப்பட்டன.
10) இந்த சதிவேலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாஜி பிலால் என்ற கவுன்சிலர் ஈடுபட்டிருக்கிறார்.
11) அபாய சங்கிலியை இழுத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரயிலின் வெற்றிடக் குழாய் (Vaccuum Pipe) துண்டிக்கப்பட்டிருக்கிறது.
12) ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி, "காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்" என்ற அறிவிப்பு விடப்பட்டு, கலகக்காரர்கள் ஆவேசப்படுத்தப்பட்டார்கள்.
13) சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி வேலை. இந்த சதிக்குப் பின்னால் அந்நிய சக்திகளும், உள்ளூர் ஜிஹாதிகளும் ஈடுபட்டுள்ளனர்.
உறுதி செய்யப்பட வேண்டிய விவரங்கள்:
1) கோதரா நகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்புத் துறையின் செயல்பாடுகளை முடக்கிவிட சதி நடந்தது.
2) இரயில் எரிப்பில் பங்குகொண்டவர்கள் கோதரா முஸ்லீம்கள் மட்டுமல்ல, வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களும்தான்
3) கலகக்காரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
4) காவல்துறையினர் கலகக்காரர்களில் சிலரை சம்பவ இடத்திலேயே பிடித்திருக்கக்கூடும் அல்லது கொன்றிருக்கக்கூடும்
5) உள்ளூர் அரசியல்வாதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலகக்காரர்களை தூண்டிவிடும் முக்கியப் பணியில் ஈடுபட்டனர்.
6) கோதராவிற்கு முந்தைய இரயில் நிலையமான தாகோத்தில் இயங்கிய இரயில்வே காவல்படை, சபர்மதி எக்ஸிபிரஸில் பயணம் செய்து வரும் சில முஸ்லீம் இளைஞர்கள் கோதராவில் ஏதோ விஷமத்தில் ஈடுபடப்போவதாக கோதரா காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
7) எரிந்துகொண்டிருந்த 6 வது நம்பர் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது. பின்னர் துண்டிக்கப்பட்ட தலை, எரிந்து கொண்டிருக்கும் ரயில் பெட்டியினுள் தூக்கி வீசப்பட்டது.
உண்மையற்ற செய்திகள்:
1) சில பெண் பயணிகள் காணாமல் போய்விட்டனர்.
2) சில பெண் பயணிகள் கற்பழிக்கப்பட்டனர், மானபங்கபடுத்தப்பட்டனர்
3) பயணிகள் தங்களுடன் ஆயுதம் ஏந்திச் சென்றனர்
4) இரயில்வே ஊழியர்கள், கலகக்காரர்களுடன் இணைந்து ரயில் எரிப்பில் ஈடுபட்டனர்
5) பயணிகள் கோதரா ரயில் நிலையத்தில் உள்ள சில முஸ்லீம்களை அவதூறாகப் பேசினர்
6) கலகக்காரர்கள் இரயில் எரிப்பில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லீம்கள் இறந்து போயினர்.
மர்மமான சம்பவங்கள்:
1) கோதராவின் துணை மாவட்ட ஆட்சியர் (உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லீம்), கோதரா சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே விடுப்பில் சென்று விட்டார். கோதராவில் வன்முறை நடந்து கொண்டிருக்கும் போது அவர் ஊர் திரும்பவில்லை. எல்லாம் முடிந்த பிறகு, பொறுமையாக மார்ச் மாதம் தான் ஊர் திரும்பினார்.
2) கோதராவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை, காரணமே இல்லாமல் அதிகரித்திருக்கிறது.
3) கோதரா மாவட்ட நிர்வாகம், எத்தனை பேருக்கு ஆயுத உரிமை வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை பராமரிக்கவில்லை
4) கோதரா வாழ் மக்களுக்கு அதிக அளவிலான பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது
5) குடும்ப அடையாள அட்டை இல்லாமல் நிறைய பேர் கோதராவில் உள்ள சிக்னல்ஃபாலியா மற்றும் போலன் பசார் பகுதிகளில் வசிக்கிறார்கள்
6) ஏராளமான வேலையில்லாத முஸ்லீம் இளைஞர்கள் கைபேசியுடன் கோதராவில் சுற்றித் திரிகின்றனர்.
7) இரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்னர், கோதராவிற்கும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கும் இடையே அதிக அளவில் தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.
8) சம்பவத்திற்கு முன்னர் கோதராவில் நடைபெற்ற இஸ்தேமா (மதக் கூட்டங்களில்) நிறைய வெளிநாட்டவர் பங்கு கொண்டிருக்கின்றனர்.
முடிவாக நீதிபதி திவத்தியா குழு, கோதரா இரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சர்வதேச தீவிரவாதச் செயல் என்றும், இந்தத் தீவிரவாதிகளின் நோக்கமே இந்தியாவில் பெரிய அளவில் கலவரம் ஏற்படவேண்டும் என்பதாகும் என்ற தங்களுடைய முடிவை வெளியிட்டது.

இது இப்படியிருக்கையில், 2004 ஆம் ஆண்டு, அதாவது கோதரா சம்பவம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டு காலம் கழித்து, காங்கிரஸ் அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, இரயில்வே அமைச்சராக செயல்பட்ட லல்லு பிரசாத் யாதவ், கோதரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான உமேஷ் சந்திர பானர்ஜி என்பவரை, ஒரு நபர் விசாரணைக் கமிஷனாக நியமித்தார்.

பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, பானர்ஜி கமிஷன் தன்னுடைய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

கமிஷன் தன்னுடைய அறிக்கையில், கோதராவில் இரயில் எரிந்தது சதியால் அல்ல; அது ஒரு விபத்து என்று தெரிவித்தது. இரயில் பெட்டியில் பயணிகள் சமையல் செய்து கொண்டிருந்ததால், அதன் பொருட்டு தீ பரவி இரயில்பெட்டி எரிந்து விட்டதாக, பானர்ஜி தன்னுடைய அறிக்கையில் இரயில்பெட்டி எரிந்ததற்கான காரணம் எனத் தெரிவித்தார்.
கோதரா ரயில் எரிப்பில் உயிர் பிழைத்த பயணியான நிலகந்த் துளசிதாஸ் பாத்தியா என்பவர், நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜியின் அறிக்கை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி குஜராத் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பானர்ஜி கமிஷன் நியமனம் செல்லாது என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. விசாரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ தான் அதிகாரம் உள்ளது என்றும், இரயில்வே நிர்வாகத்திற்கு இல்லை என்றும் கூறியது குஜராத் நீதிமன்றம். மேலும் தன்னுடைய தீர்ப்பில், "ஏற்கனவே மாநில அரசு, சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குள் நானாவதி தலைமையிலான ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்துள்ளது. ஒரு விசாரணைக் கமிஷன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதே விவகாரத்திற்காக இன்னொரு கமிஷனை நியமித்தது சரியாகாது" என்று தெரிவித்தது. மேலும், பானர்ஜி கமிஷன் சரியாக விசாரணை நடத்தவில்லை; முக்கியமான சாட்சிகளை விசாரிக்கவில்லை; பானர்ஜியின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது; எனவே அந்த அறிக்கை நிலைக்கத்தக்கதல்ல என்று அதை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான தீஸ்டா செட்டல்வாட் என்பவர், நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்குத் தொடுத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை தடைசெய்ய மறுத்துவிட்டது.v.kalathur seithi . 


நன்றி- https://www.facebook.com/Mission118


கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?

எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அன்னிய ஊடுறுவல்
பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?

அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்டது.

போடோ புரட்சி  மற்றோர் தேசிய அபாயம்
வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல், ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.

போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்
1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது.  பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983ல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavit தாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavitஐ முந்தைய 1999 Affidavitஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.

இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்சநீதிமன்றம்  சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.

இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்? எப்படி காய் நகர்த்துகின்றனர்?

குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்
இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி,  கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது, கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்
கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?

எந்த இனம் அழியப் போகிறது?
வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகாரர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்டது. கலவரத்தின் நோக்கமும் நிறைவேறிவிட்டது.

பாவம் அந்த 59 ஜீவன்கள்! இந்த மூவர் நலனுக்காக இவ்வுலகை விட்டு முந்திச் சென்றுவிட்டன! 

v.kalathur வ.களத்தூரில் இன்று காலை ராயப்பா கோவில் வளாகத்தில் நல்லேரு திருவிழா இனிதே நடைபெற்று முடிந்தது.எம் முன்னோர்கள் விதை முளைப்புத்திறன் காண கோவில் நிலத்தில் ஏர் உழுது விதைவிதைக்கும் திருவிழா... நல்லேரு...  மரபு மாறினாலும் அதன் மணம் மாறா இத்திருவிழாவில்,  ஏர் பூட்டிய எருதுகளோடு எந்திர எருதுகளான டிராக்டரும் கலந்துகொண்டு ராயப்பா கோவில் வளாகத்தை உழுது சீர் செய்தன. கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டதோடு எம் மரபும் மணம் கமழ்ந்தது.

Friday, 2 May 2014


 கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 4-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பு, உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகளில் 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னையில் மாதவரத்திலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 14 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பத்தை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் கட்டணம் ரூ. 250, இதர பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும். விற்பனை மையத்தில் விண்ணப்பங்களைப் பெற எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 கட்டணமும், இதர பிரிவினர் ரூ.600 கட்டணமும் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தோரின் தரவரிசைப் பட்டியல் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஜூன் நான்காவது வாரத்தில் நடத்தப்படும். கலந்தாய்வு குறித்த பிற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. v.kalathur seithi .

நன்றி-தினமணி


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (MBBS, BDS) படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகிஷிவ்தாஸ்மீனா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் ந.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி டி.கிறிஸ்துராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி மற்றும் அனைத்துப் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விண்ணப்ப விற்பனை ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பங்களை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்ககப் படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.1,550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து "பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002, சிதம்பரம்' என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். au_regr@ymail.com மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்ததாவது: முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்றார் ஷிவ்தாஸ்மீனா. v.kalathur seithi

நன்றி- தினமணி.

டீசல், உதிரிப் பாகங்கள் விலையேற்றம், காப்பீடு பிரீமியம் உயர்வு உள்ளிட்டவற்றால் லாரிகளை இயக்குவதில் ஏற்பட்டு வரும் சிரமங்களைச் சமாளிக்க லாரி வாடகையை 30 சதம் உயர்த்திப் பெற்றிட தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த வாடகை உயர்வுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் கே.நல்லதம்பி வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு கடந்த 2013, ஜனவரி 1ஆம் தேதி முதல் 2014, ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் டீசல் விலையை 21 முறை உயர்த்தியது. இதனடிப்படையில், ஏறத்தாழ டீசல் லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஓராண்டில் லாரிகளுக்கான டயர் விலை 16 சதவீதம், காப்பீட்டு பிரீமியம் தொகை 20 சதமும், உதிரிப் பாகங்களின் விலை 10 சதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிமென்ட் ஆலைகள் போன்ற பெரிய தொழில்சாலைகளில் அரசின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக அதிகமான எடையை லாரிகளில் ஏற்றிட கட்டாயப்படுத்தப்படுகிறது. அவ்வாறு லாரிகளில் அதிகப்படியான எடை ஏற்றுவதால் லாரிகளின் உதிரிப் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமன்றி, விபத்துகள் நிகழவும் காரணமாகிறது. தவிர, இந்த அதிகப்படியான சுமை காரணமாக லாரிகளுக்கு சரக்குகள் கிடைப்பதிலும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.
தொடரும் இந்த லாரி போக்குவரத்துத் தொழில் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 30ஆம் தேதி நிலவர லாரி வாடகை தொகையில் இருந்து 30 சதம் உயர்த்திப் பெற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. எனவே, லாரி புக்கிங் ஏஜெண்டுகள், சரக்கு உற்பத்தியாளர்கள், வாங்குவோர், விற்போர் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து, லாரி வாடகையை 30 சதம் உயர்த்தி வழங்கி லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.
முதல்வருக்கு நன்றி..: லாரி போக்குவரத்துத் தொழிலில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை தளர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் 8ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரிந்த லாரி ஓட்டுநர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, 8ஆம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற முடியும். தொடர்ந்து, அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிடவும் வழிவகை ஏற்படும் என்பதால், தமிழக அரசின் இந்த அறிவிப்பு லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி என்றார் அவர். v.kalathur seithi .

நன்றி-தினமணி.
ramagopalanji small

01.05.2014 அன்று சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் வெடித்த வெடிகுண்டுகளும், அண்ணா மேம்பாலத்தை தகர்க்க நடந்த சதி முறியடிப்பும், 31.05.2014 அன்று கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளியும் தமிழகத்தில் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதை நிரூபித்துள்ளது.

காவல்துறையும், தமிழக அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதி உளவாளியும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுரின் ஆலோசனைபடி செயல்பட்டதாக கூறியதை மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் அதன்பிறகு அதன் புலன்விசாரணை என்னவாயிற்று என்று தெரியவில்லை.

படுகொலையும், வெடிகுண்டு சதியும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமானால் காவல்துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு ஓட்டு வங்கி அரசியலை தூக்கியெறிந்து துணிவோடு செயல்பட வேண்டும்.

சென்னையில் குறிப்பாக பெரியமேடு, மண்ணடி, திருவல்லிக்கேணி முதலான பயங்கரவாதிகள் பதுங்கும் லாட்ஜ்களையும் தங்கும் விடுதிகளையும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும். சிறிய சந்தேகத்திற்கு இடமளிக்கும் எவரையும் கைது செய்து தீர விசாரிக்க வேண்டும். புலனாய்வுத் துறைக்கு கிடைக்கும் எந்தவொரு சிறு தகவலையும் முழுமையாக விசாரிக்க உத்திரவிட வேண்டும். வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலைகளில் சம்பந்தப்பட்டவனும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பவனுமான சித்திக் கைது செய்யப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவன் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணன் என்றும், இவனுடைய தொடர்பில் இன்னமும் சிலர் இருக்கலாம் என்பதும் அப்போதே வந்த செய்தி.

இது ஏதோ திடீரென்று ஏற்படும் பிரச்னையில்லை, திட்டமிட்டு, மூளை சலவை செய்யப்பட்ட, உள்ளூர் முஸ்லிம்கள் துணையோடு நடத்தப்படும் சதி செயல். சென்னை சென்டரல் இரயில் நிலையத்தில் வெடித்த குண்டு பெங்களூரில் தயாரித்து குண்டூரில் வெடிக்க வைக்க கொண்டு சென்ற வழியில் சென்னை சென்டரலில் வெடித்துவிட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்ல கேரளா உட்பட தென்பாரதம் முழுவதும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என்பதே உண்மை.

பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டுமானால், முழு மனதோடு காவல்துறையை செயல்பட அரசியல்வாதிகள் வலியுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இரக்கமற்ற இக்கொடியவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். இச்சம்பவத்தில் உயிரழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்த சகோதர, சகோதரிகளுக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் (மே 3) தமிழகம் முழுவதும் 60 மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது.
தமிழகம் முழுவதும் 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் விநியோகிகப்படுகின்றன.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. வளாகம், புரசைவாக்கத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பகுதியில் உள்ள பாரதி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்களை விற்பனை மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விற்பனை மையங்களில் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 250 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 500 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது -செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25 - என்ற பெயருக்கு வரைவோலை எடுத்தோ செலுத்தலாம்.
தபால் மூலம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 450 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 700 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி என்ன? பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி.சி. மற்றும் பி.சி.ஏ.) 45 சதவீத மதிப்பெண்ணுடனும், எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். v.kalathur seithi

நன்றி-தினமணி

Thursday, 1 May 2014

அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.

* மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.
* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.
* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கை தாயே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.
* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயகமலத்தில் வாழ்பவளே! நிலவைப் போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.
* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனிவண்ணம் கொண்டவளே! குறையில்லா வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!
* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெலாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும். v.kalathur seithi

நன்றி-தினமலர்
church enjambakkam1 small
சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையில் புனித தோமையர் ஜெபவீடு உள்ளது. இந்த ஜெபவீடு அந்த பகுதியின் இந்து மீனவ சமுதாயத்தினருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தாம்பரம் சிவில் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

 ஈஞ்சம்பாக்கம் சர்ச்
இந்த நிலையில் கடந்த 27.4.14 அன்று ஜெபவீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஜெபவீட்டை விரிவுபடுத்தி புதிய கொட்டகை அமைக்கும் பணியில் சர்ச் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவலாயத்தில் கூடியிருந்தனர். இதனை அறிந்த இந்து மீனவ சமுதாய மக்கள் ஒன்று கூடி சர்ச் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மீனவ சமுதாயத்தை சார்ந்த ஆண்களும் பெண்களும் அதிகளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தனர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தி மீனவ மக்களை விரட்டி அடித்தனர். இதில் பல பெண்கள் காயம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி ஊர்மக்கள் கூறுகையில் //இந்த இடத்தில் ஈஸ்டர் கொண்டாட தற்காலிகமாக பந்தல் அமைக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. புதிய ஓலை கொட்டகை அமைப்பதன் மூலம் அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கரமிக்கின்றனர்// என்றனர்.

பிரச்சினையின் வீரியத்தை புரிந்து கொண்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு சர்ச் நிர்வாகத்தினர் வர மறுத்துவிட்டனர். சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாழடைந்த கொட்டகையை அகற்றி புதிய கொட்டகை அமைக்க யாருடைய அனுமதியையும் பெற தேவை இல்லை என்று ஃபாதர் மார்ட்டின் ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நியாயமற்ற அடாவடி சர்ச் தரப்பினர் மிரட்டலுக்கு அடிப்பணியக்கூடாது என்று வலுவாக இந்து மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் வேறு வழியின்றி சர்ச் நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும், மீண்டும் பிரச்சினை வராமல் தடுப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

இந்த சம்பவம் குறித்து அறிந்து கொள்ள வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினர், இந்து முன்னணி நிர்வாகி திரு. சத்ய நாராயணனுடன் ஈஞ்சம்பாக்கம் சென்று, அப்பகுதி வாழ் மக்களை நேரில் சந்தித்தனர். ஈஞ்சம்பாக்க மீனவ சமுதாய பிரதிநிதி திரு. மதியழகன் அவர்கள் நமது குழுவுக்கு அளித்த நேர்காணலில் இந்த சர்ச் இடப்பிரச்சினையின் வரலாற்றை தெளிவாக விளக்கினார்.

 mathialgan enjambakkam small
1965ல் ஈஞ்சம்பாக்கத்தில் திரு. அருளப்பா என்ற பாதிரியார் மீனவர்களுக்கு பண உதவி மற்றும் பொருளுதவி கொடுத்து உதவ இந்த ஊருக்கு வந்தார். இப்பணிகளுடன் சேர்த்து எங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஒரு சிறிய இடத்தை கேட்டார். நாங்களும் கொடுத்தோம். இங்கிருக்கும் பெரும்பாலான மீனவர்கள் இந்துக்களே. அவருடைய ஜபத்தில் பெரும்பாலும் எங்கள் சமுதாய மக்கள் தான் கலந்து கொள்வர். ஜபக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பழைய கம்பளி,பனியன் மற்றும் பால் பவுடர் இலவசமாக கொடுத்து உதவுவார். சில மாதங்களுக்குப் பிறகு திரு. அருளப்பா அவர்களை சாந்தோம் சர்ச்சுக்கு மாற்றிவிட்டனர். அவருக்குப்பிறகு வந்த சர்ச் நிர்வாகம் இந்த இடத்தில் உங்களுக்காக பள்ளிக்கூடம் அமைக்கப்போகிறோம் என்றனர். நாங்களும் இவர்களின் நிலமோசடி மற்றும் மதமாற்ற சதியை புரிந்துகொள்ளாமல் எங்கள் சமுதாய குழந்தைகளின் படிப்பை நினைத்து இந்த இடத்தைக் கொடுத்தோம். கொடுத்த இடத்தில் 1980 முதல் 1987 வரை சுமார் ஏழு ஆண்டுகாலம் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. நானும் இந்தப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினேன். திடீரென போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தைக்காட்டி பள்ளியை வெட்டுவாங்கண்ணி என்ற இடத்திற்கு மாற்றிவிட்டனர். பள்ளிக்கூடத்தை மாற்றியபின் அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்ட முயற்சித்தனர். இதனை நாங்கள் தடுத்தோம். ஆனால் மீனவ மக்களுக்காக ஜபம் செய்வதற்காக சிறிய அளவிலான இடமாவது தாருங்கள் என்று எங்களை பாதிரியார் நச்சரிக்க இவர்களின் சூழ்ச்சியை அறியாது நாங்களும் ஒத்துக்கொண்டோம். காலம் செல்லச், செல்ல சத்தமில்லாமல் ஓலைக்குடிசையில் இயங்கிய ஜெபக்கூடம் பெரியளவிலான கட்டிடமாக எங்களின் எதிர்ப்பையும் மீறி உருவானது என்று திரு. மதியழகன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த புனித தோமையர் சர்ச் வந்த பிறகு இப்பகுதியில் மதமாற்றங்கள் நடந்து வருகின்றது. அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு உதவி பெற்றுத் தருகிறோம். கட்டுமரம்,மீன் வலை வாங்கித்தருகிறோம் என்று ஆசை வார்த்தை சொல்லி பலரையும் மதம் மாற்றியுள்ளனர். கிருஸ்துவத்திற்கு மதம் மாறியவர்கள் மூலம் எங்களின் பாரம்பரியத்தை மாற்ற முயல்கின்றனர். மேலும், எங்கள் பாரம்பரியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத புதிய பழக்க வழக்கங்களை திணிக்கின்றனர்.

கிருஸ்துவ மதபோதகர்கள் இந்து மீனவ பகுதிகளில் செய்யும் மதமாற்ற செயல்பாடுகளை நாங்கள் தடுக்க நினைத்தாலும் இவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மதமாற்ற மோசடி வலையில் சிக்கி சில அப்பாவிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி விடுகின்றனர். சில நேரங்களில் இதனால் பிரச்சினைகளும் வருகின்றன என்றார். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார் திரு.மதியழகன். நாங்கள் ஆடிமாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். அந்தவேளைகளில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பேண்டு இசை முழங்க கிருஸ்துவர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த கிறிஸ்தவர்கள் கலவர நோக்கத்தோடு நடத்தும் பேண்டு ஊர்வலம் நம் இந்து மீனவர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

இப்படி மதமாற்ற நோக்கத்துடன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் அமைதி இழந்த இந்த ஊர் மீனவர்கள் இந்த சர்ச்சைக்குறிய ஜெபவீட்டை அப்புறப்படுத்தாமல் ஓயப்போவதில்லை என்று உறுதிபட கூறினர்.

தொடர்ச்சியாக மதமாற்றத்திற்காக இங்கு கிறிஸ்தவர்கள் ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறார்கள். இந்த பணம் வெளிநாடுகளிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உதவிக்காக வந்த பணம். இந்த பணத்தை மோசடி செய்து அதில் வானளாவிய உயரத்திற்கு சர்ச்களை கட்டி மேலும் வெளிநாடுகளிலிருந்து பண உதவியை பெற்று வருகின்றனர் என்று சொன்னார் ஒரு மீனவ பிரமுகர்.

இந்த சர்ச் நிர்வாகத்தினர் அரசிடம் அனுமதிப் பெற்று கிருஸ்துவ விழாக்களை கொண்டாடுகின்றனர். ஆனால் எங்களின் இடத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிய பந்தல் அமைக்கின்றனர். இனி இதுபோல் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவதோடு இந்த கட்டிடத்தை அகற்றும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் நாங்கள் தயாராகிவிட்டோம் என்றார் மதியழகன். இந்தப் பகுதியில் இனி மேலும் மதமாற்றம் நடக்காமல் தடுக்க இந்தப்பகுதி இந்து மீனவ குழந்தைகளுக்கு சமயவகுப்புகள் நடத்தவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார்.

மீனவர்களின் இடத்திற்கான பாரம்பரிய உரிமையை சர்ச் பிடியிலிருந்து மீட்டு மீனவர்களிடமே கொடுக்க வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் அவர்களுக்கு உதவவேண்டும். பாதிக்கப்படும் நம் மீனவ சொந்தங்களின் போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். v.kalathur seithi 


காசோலை பயன்பாட்டில், ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள, சி.டி.எஸ்., என்ற புதிய நடைமுறை, இன்று முதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, வங்கி களில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும்.
பழைய காசோலை திட்டத்தின் படி, பொது மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் காசோலையில், தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண், வங்கியின் பெயர், சின்னம், குறியீட்டு எண் போன்றவை வங்கிக்கு வங்கி மாறுபடும். காசோலையின் நீள, அகலத்தில் கூட, மாற்றம் இருக்கும். காசோலைகளை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர் மூலம், ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு சென்று, அங்கிருந்து, மற்ற வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும். இதனால், காசோலைகள் சரிபார்த்தல் மற்றும் பண பரிவர்த்தனையில், காலதாமதம் ஏற்பட்டது. முறைகேடு நடக்கவும், தொலைந்து போகவும் வாய்ப்பு இருந்தது. எனவே, சில ஆண்டு களுக்கு முன், 'பண பரிவர்த்தனையில், மோசடியை தடுக்கவும், காலதாமதத்தை குறைக்கவும், காசோலையின் தரத்தை உறுதிப்படுத்த, வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 2008ல், டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில், சி.டி.எஸ்., (செக் டிரங்கேஷன் சிஸ்டம் - cheaque truncation system), என்ற புதிய காசோலை திட்டத்தை, வங்கிகள் அறிமுகம் செய்தன. அதன்படி, வங்கியில் செலுத்தப்படும், சி.டி.எஸ்., காசோலைகள், ரிசர்வ் வங்கி மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஊழியர் மூலம் அனுப்புவதற்கு பதில், அதை, 'ஸ்கேன்' செய்து, 'நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா - என்.பி.சி.ஐ.,' என்ற ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து, சி.டி.எஸ்., காசோலைகளின், 'இமேஜ்' சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். வங்கிகள், அதை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையெனில், வாடிக்கையாளர் கணக்கில், பணத்தை வரவு வைக்கும்.


கணக்கில் பணம் இல்லை; பிழை போன்ற காரணங்களால், காசோலை 'ரிட்டர்ன்' ஆனால், அந்த விவரம், என்.பி.சி.ஐ., மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்கப்படும். பின், அந்த சி.டி.எஸ்., காசோலை வங்கிகள் மூலம், வாடிக்கையாளர்களிடம் திரும்ப அளிக்கப்படும். முதல் கட்டமாக, டில்லியில் அறிமுகம் செய்யப்பட்ட, சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு, அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. டில்லியை தொடர்ந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், 2010ல், சி.டி.எஸ்., காசோலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 'வாடிக்கையாளர்கள், சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாற வேண்டும்' என, வங்கிகள், பலமுறை அறிவுறுத்தியும், ஒரு சில வாடிக்கையாளர்கள், இன்னும் புதிய திட்டத்திற்கு மாறவில்லை. இந்நிலையில், 'மே, 1ம் தேதி முதல் சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாறாத காசோலைகள், வங்கிகளுக்கு வரும் போது, திங்கள் மற்றும் வெள்ளி என, வாரத்திற்கு, இரண்டு நாட்கள் மட்டும், பணப் பரிவர்த்தனைக்காக, ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். அக்டோபர், 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஒரு முறை மட்டும் அனுப்ப வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, இன்று முதல், வங்கிகளில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, பொதுத்துறை வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பழைய காசோலைகளை, வங்கி கிளைகளில் கொடுத்து, புதிய சி.டி.எஸ்., காசோலைகளை பெற்று கொள்ளலாம்' என, பல முறை அறிவுறுத்தப்பட்டது. சில வாடிக்கையாளர்கள், இன்னும் இந்த திட்டத்திற்கு மாறவில்லை. அடுத்த ஆண்டு முதல், சி.டி.எஸ்., காசோலை மட்டும் நடைமுறையில் இருக்கும். பழைய முறையில், காசோலையை வங்கியில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். சி.டி.எஸ்., முறையின் படி, இரு தினங்களில், பண பரிவர்த்தனை முடிந்து விடும். இத்திட்டத்தை, ம.பி., மகாராஷ்டிரா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில், அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.



சிறப்பு என்ன?

'சி.டி.எஸ்., 2010 ஸ்டேண்டர்டு' என்று, அச்சிடப்பட்ட காசோலையில், தேதி, கணக்கு எண் போன்றவை எழுதுவதற்கு, தனித்தனி கட்டங்கள் உள்ளன. அனைத்து வங்கிகளின் காசோலையும், ஒரே நீள, அகலத்தில் இருக்கும். காசோலையில், வங்கியில் கணக்கு வைத்துள்ளவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இந்த காசோலையை, 'கலர் ஜெராக்ஸ்' எடுக்கும் போது, போலி என, கண்டுபிடிக்க, தனியாக, ரகசிய குறியீட்டு எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. v.kalathur seithi

நன்றி-தினமலர்.
காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், 'டிவி' சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுடன், தனக்கு உறவு உள்ளதாக, வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவர், திக்விஜய் சிங், 67. மத்திய பிரதேச மாநில முதல்வராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரின் மனைவி ஆஷா, 58, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு காலமானார்.

இணையங்களில் செய்தி:

சமீப காலமாகவே, பிரபல 'டிவி'யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுக்கும், திக்விஜய் சிங்கிற்கும் உறவு உள்ளதாக, இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக, இதுகுறித்து மவுனம் காத்து வந்த திக்விஜய் சிங், நேற்று இதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், அவர் கூறியுள்ளதாவது: அம்ரிதாவுடன், எனக்குள்ள உறவை ஒப்புக்கொள்வதில், எந்த தயக்கமும் இல்லை. அம்ரிதாவும், அவரின் கணவரும், ஒருமித்த கருத்துடன், விவாகரத்து கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு முடிவடைந்ததும், எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்போம். அதேநேரத்தில், என் தனிப்பட்ட விஷயத்தில், மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை, நான் விரும்பவில்லை. இவ்வாறு, அவர், அதில் தெரிவித்துள்ளார்.

'விவாகரத்தானதும்...':

அம்ரிதாவும், 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், 'என் கணவரும், நானும், பிரிந்து வாழ்கிறோம். இருவரும், விவாகரத்துக்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். விவாகரத்து கிடைத்ததும், திக்விஜய் சிங்கை திருமணம் செய்வது குறித்து, முடிவு செய்வேன்' என, தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம், காங்கிரஸ் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. v.kalathur seithi

நன்றி-தினமலர்.
நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுவதற்காக "எக்ஸாம் பேட்' என்ற நவீன உபகரணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு என எல்லாவகைத் தேர்வுகளும் காகிதத்தால் ஆன விடைத்தாளில் தான் எழுதப்பட்டு வருகின்றன. இப்போது தேர்வு
முறைகளில் நவீனத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எக்ஸாம் பேட்' என்ற தொழில்நுட்பம் மூலம் நவீன உபகரணத்தின் உதவியோடு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த 2013 டிசம்பரில் நடந்த தேர்வுகள் அனைத்தும் "எக்ஸாம் பேட்' உதவியோடு எழுதப்பட்டுள்ளன.
இதன்மூலம் மாணவர்கள் தேர்வுக்கால முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். மாணவர்கள் "எக்ஸாம் பேட்' நவீன உபகரணத்தில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்து தேர்வு எழுத முடியும். தற்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து உபகரணம் பெற்று தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு விடைத்தாள்கள் அனைத்தையும் சர்வரில் சேமித்து, ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வருங்காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக "எக்ஸாம் பேட்' பெறப்பட்டு தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உபரகணத்தில் இணையவழி பாடத்திட்டங்களைப் படிக்கமுடியும்.
தேர்வுக்காலத்தில் மட்டும் மற்றொரு கணினிச் செயல்பாட்டில் (ஆப்ரேஷன் சிஸ்டம்) தேர்வெழுத முடியும். தேர்வு நேரத்தில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். v.kalathur seithi

நன்றி-தினமணி.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்  வரும்  4ம் தேதி தொடங்கி 28 வரை நீடிக்கிறது. பெரும்பாலான நகரங்களில் இப்போதே வெயில் 1000 டிகிரியை தாண்ட்டியுள்ளது. 
வெயிலின் கொடூரத்தால், பகலில் அனல் காற்றும் வீசுகிறது. பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்நிலையில்  நேற்று தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. . இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கோடையின் வெப்பம் வாட்டி வதைக்கும் நேரத்தில் இதுபோன்று பெய்யும் திடீர் மழை மக்கள் மனதுக்கு மகிழ்ச்சையை கொடுக்கிறதது.
எனினும் இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.v.kalathur seithi


நன்றி-தினமணி.