![]() |
| தலைப்பைச் சேருங்கள் |
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 145 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று, குணமடைந்த 143 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு கடந்த 10-ந் தேதி இருமல், காய்ச்சல் இருந்ததாம். இதையடுத்து அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மூதாட்டி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எவ்வித அறிகுறியும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.
RSS Feed
Twitter
Monday, June 15, 2020
வ.களத்தூர் செய்தி

