Tuesday, 6 November 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

கடந்த ஆயுத பூஜை அன்று இந்துக்களின் வாகனங்களை வழிமறித்து தாக்கியவர்களை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுதலின் பேரில் வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பலர் இஸ்லாமிய இயக்கங்களில் பொறுப்பு வகிப்பவராகள். ஆனால் அவர்களின் நடவடிக்கைக்கு மத சாயம் பூசும் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் இறங்கியுள்ளன.

இந்த கைதை கண்டித்து sdpi/pfi சார்பில் பெரம்பலூரில் ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த சூழ்நிலையில் வ.களத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் எங்கள் ஊர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எங்கள் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்று கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக pfi ஆர்பாட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் உள்ளூர் ஜமாத் எதிர்ப்பையும் மீறி காவல்துறையை கண்டித்து போஸ்டர் ஒட்டினர்.

ஆனால் வ.களத்தூரில் அமைதியை விரும்பாத இஸ்லாமிய இயக்கங்கள் குறிப்பாக pfi அமைப்பு தீவிரமாக அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் சமீபத்தில் லெட்டர் பேடு கட்சிகளைக்கொண்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பெரம்பலூர் மாவட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை, நாம் தமிழர் கட்சி யின் மாவட்ட பொறுப்பாளர் அருள் மற்றும் இந்துக்களை மட்டுமே திட்டுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ள திராவிட இயக்கங்கள் கலந்து கொண்டு வ.களத்தூர் இந்துக்களுக்கு எதிராக பேசி உள்ளனர். மேலும்  இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வ.களத்தூர் இந்துக்களுக்கு எதிராக மனு கொடுக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. 

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறிப்பாக இந்துக்கள் இப்போதாவது கம்யுனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் உண்மை வேடத்தை அறிந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதே வ.களத்தூர் ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.