Friday, 11 July 2014

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது. இருநூறுக்கும் அதிகமான பல்வேறு வகைப்பட்ட இந்து அமைப்புகள் பங்கு பெறுகின்றன. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம், திருவான்மியூர். தேசபக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து, பயன் பெற வேண்டுகின்றோம் !!! ...  ...

Wednesday, 9 July 2014

பாஜக தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் புதன்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமையில் புறநகர் பேருந்து...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 26, ஆக. 2-ம் தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாம்களில், 21 வங்கிகளைச் சேர்ந்த 68 வங்கிக் கிளைகள் பங்கேற்க உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், பெரம்பலூர்...
சென்னை: மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில்  59% மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாக மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார்....
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு காலி மனையுடன் மாதம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: கடந்த 2008ம் ஆண்டு திருமாந்துறை, பென்னகோணம், அயன்பேறையூர்...
. அன்னமிடும் அம்மா… மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம். தமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி...
‘தோட்டத்தில் பாதி கிணறு’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப படிக்கும் எவரும், அதிலுள்ள விலையில்லாத் திட்டங்களுக்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைக் காண முடியும். உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில்   மரத்தடி வகுப்பு தவிர, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் இதேபோன்ற இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு...
தமிழக இல்லத்தரசிகளைக் கவரும் விலையில்லா திட்டங்கள்… ஒரு மக்கள்நல அரசு என்பது எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். சமுதாயத்தில் வலிவுள்ளோர் பெறும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் எளியோர் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலைக்கு எளியோர் தள்ளப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் தடைப்படும். எனவே தான் மக்களாட்சி முறையில் எளியோரின்...

Monday, 7 July 2014

 வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை . இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நம் மன்றத்தின் சார்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு.  முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு ...
இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக கொல்லப்படுவதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னால், அரவிந்த ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், வரிசையாக வெட்டிக் கொல்லப்பட்டனர். மர்ம நபர்களால்... : அது தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்க,...
புதுடில்லி: 'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத்...
வ.களத்தூர் முக்கியஸ்தர்   மறைந்த திரு.பரமசிவம் உடையார் அவர்களின் பேரனும், நம் விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளருமாகிய திரு.சத்தியபாலன் அவர்களின் திருமண விழா வ.களத்தூர் adm திருமண மண்டபத்தில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது . மணமக்களுக்கு விவேகானந்தர் மன்றம் சார்பாக மனமகிழ் வாழ்த்துக்கள்... ...