Friday, 8 August 2014


மீரட் : உ.பி.யில் இஸ்லாமியர்களால் கூட்டுக் கற்பழிப்பு செய்யப்பட்ட 22 வயதான இந்து ஆசிரியை இஸ்லாமிய வெறியர்களால் மீண்டும் கடத்தப்பட்டு, மசூதியில் தங்கவைக்கப்பட்டு முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் மாற்றப்பட்டுள்ளார்.

கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு சமீப காலமாக பலமாக அடிபடும், உ.பி., மாநிலத்தில், 22 வயது இளம்பெண், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கட்டாயமாக இஸ்லாமிய  மதம் மாற்றப்பட்ட கொடூரமும் நடந்துள்ளது.
 சகரான்பூர் என்ற இடத்தில், சிலநாட்களுக்கு முன், பயங்கர மத கலவரம் நடைபெற்ற நிலையில், அதன் அருகில் உள்ள மீரட் நகரில், பயங்கர சம்பவம் நடந்துள்ளது.  மீரட் அருகே உள்ள சராவா என்னும் கிராமத்திலிருக்கும் மதரசாவில் ஆங்கில மற்றும் இந்தி கற்றுகொடுக்கும் ஆசிரியையாக  பணியாற்றிய  இந்து  மதத்தை சேர்ந்த, 22 வயது பெண்ணை, அதே கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய  மதத்தை சேர்ந்த நவாப் கான் என்ற கிராமத் தலைவர் ஒருவர் உத்தரவின்படி, ஐந்து பேர்கொண்ட  கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதன் பின் அந்தப் பெண்ணை, வழிபாட்டுக் கூடம் ஒன்றில் தங்க வைத்து, கட்டாயமாக மதம் மாற்றியுள்ளனர்.
இதை அந்தப் பெண் போலீசில் புகார் கூறியும், புகாரை ஏற்றுக் கொள்ளாததால், இந்த விவகாரம் அரசியல் தலைவர்களுக்கு தெரிய வந்தது. புகாரை பதிவு செய்ய மறுத்த, மீரட் நகர போலீஸ்
அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி- http://www.indiatvnews.com/crime/news/woman-gangraped-forced-to-convert-rape-religious-conversion-6393.html
http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html

Thursday, 7 August 2014


திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் தீபா (13,  பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,சுகன்யா (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் கடந்த  மாதம் 11ம் தேதி காலை பள்ளிக்கு சென்றனர் ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை.  இது குறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தனித்தனியாக  புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி  வந்தனர். மாணவிகள் வைத்திருந்த செல்போன் நம்பரின் சிக்னலை ஆராய்ந்தபோது  இருவரும் விருத்தாசலம், புதுச்சேரி கோலியனூர், வடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று  வந்த தகவல் தெரியவந்தது. கடைசியாக அவர்கள் வடலூரில் இருந்தபோது சதீஷ்குமார்  என்பவருடன் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. உடனே சதீஷ்குமாரை காவல் நிலையம்  அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அவனது போன் மூலம்  மாணவிகளிடம் பேசி அவர்களை திட்டக்குடி வரவைத்து போலீசார் பிடித்தனர். கடலூர்  ஏடிஎஸ்பி முரளி தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேர் கொண்ட   கும்பல் மாணவிகளை பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி  தகவல் அம்பலமானது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: காணாமல் போன மாணவிகள்  இருவரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று வருவது  வழக்கமாக கொண்டுள்ளனர். அங்குள்ள பாதிரியார் அருள்தாஸ் இருவரையும் பலாத்காரம்  செய்துள்ளார். இது தெரிந்ததும், திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர்  மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பின்னர் இருவரையும்  விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு  விற்றுவிட்டார். 2 நாள்  வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு  விற்றுள்ளார். தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த  சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

புதுச்சேரி வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் மாணவிகளை  தங்க வைத்து சிலருக்கு சதீஷ்குமார் விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.  உடனே போலீசார், பாதிரியார் அருள்தாஸ்(60), சதீஷ்குமார்(28), லட்சுமி(30), கலா(48),  ஜெமினா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து திட்டக்குடி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் மாணவிகள் இருவரும் கடலூர் சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

நன்றி-தினகரன்.

Wednesday, 6 August 2014


பெரம்பலூர்:
மாவட்டத்தின் வடஎல்லையிலுள்ள திருவாளந்துறை கிராமத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படவேண்டும். 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியில்லாமல் அவதிப்படுகிறோம் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வேப்பந்தட்டை தாலுகா, திருவாளந்துரை கிராமத்திலிருந்து வந்திருந்த மக்கள் கலெக்டர் தரேஸ்அகமதுவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தின் வடகோடியில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது திருவாளந்துறை கிராமம். இங்கு 3ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். அருகிலுள்ள இனாம் அகரம் கிராமத்தில் 2ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருவாளந்துறையில் ஆர்சி பள்ளியும், மாணவ,மாணவியர் விடுதியும் உள்ளது. இங்குள்ள மேல்நிலைக் கல்விபயி லும் மாணவ, மாணவியர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூரில் வேலை செய்பவர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் வணிகம், மருத்துவம், கல்வி போன்ற அனைத்திற்கும் பெரம்பலூரையே சார்ந்துள்ளோம்.
திருவாளந்துறை கிராமத்திற்கு தடம் எண் 2 நகரப்பேருந்து காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும், இரவு 9 மணிக்கும் மட்டுமே இயக்கப்படுகிறது. மீதம் நான்கு முறை 4 கி.மீ. முன்னதாக இருக்கும் வி.களத்தூருடன் திரும்பி விடுகிறது. காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடைப்பட்ட 7 மணி நேரத்திற்கு பேருந்து வசதியே இல்லாமல் தவித்து வருகிறோம். இதனால் மருத்துவ தேவை க்கு கூட 4 கி.மீ. நடந்து சென்று வி.களத்தூரில் பேருந்து பிடிக்க வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வி.களத்தூர் வழியாக இயக்கப்படும் அனைத்து நடைகளையும் திருவாளந்துறை முடிய இயக்க உத்தரவிட வேண் டும். அதே போல தாலுகா தலைநகராக உள்ள வேப்பந்தட்டைக்குச் செல்ல 40 கி.மீ. கடந்து பெரம்பலூருக்கு சென்று, அங்கிருந்து வேப்பந்தட்டைக்கு 13 கி.மீ.செல்ல வேண்டியுள்ளது.
எனவே பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை வழியாக வி.களத் தூர் வரை இயக்கப்படும் நடைஎண் 15, அல்லது நடை எண் 18 ஆகிய நகரப்பேருந்துகளை திருவாளந்துறைவரை நீட்டித்து இயக்க உத்தரவிட வேண்டும், திருச்சியிலிருந்தும் திருவாளந்துறைக்கு நேரடியாக புறநகர் பேருந்து இயக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

-தினகரன்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை குழந்தையுடன் ஆஜரான துர்கேஸ்வரி.
இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை விதித்தார்.
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத் துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெ னவே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை ஆஜராகினர்.
அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனி யாண்டி ஆகியோர் கூறியது:
துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள் ளன.
அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார். துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்.
தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். 

அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர்.
சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.

பங்களிப்பு -தி இந்து 
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே ஆலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரஜீஷ்(24). எலக்ட்ரீஷியனான இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (டிஒய்எப்ஐ) செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரஜீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் மாதா அமிர்தானந்தமயி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இவரது கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து கொல்லம் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் உமேஷ் பாபு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரஜீஷை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் பேஸ்புக்கில் பிரசுரித்த கருத்துக்களுக்கு ஏராளமானோர் லைக் செய்திருந்தனர். அவர்கள் குறித்த விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

-one india.
தளபதி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கலெக்டரும் எஸ்பியும் அமர்ந்து கொண்டு லோக்கல் தாதாவையும் அவனது கைத்தடியையும் கண்டிப்பார்கள். நீங்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள் என்பார் எஸ்.பி. உடனே தாதாவின் கைத்தடி ஒரு வசனம் சொல்வார். ”கலெக்டர் சார்! நீங்க எப்பவாவது ஏழையா இருந்திருக்கீங்களா? பட்டினியா இருந்திருக்கீங்களா? பைல நாலணா காசில்லாம அலைஞ்சிருக்கீங்களா? வயிறு காலியா இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க. அவங்களுக்கு வேண்டியது நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”
04.09.21.SwordInjustice-X
இதே போன்ற ஒரு வாதத்தை வைத்து விஸ்வலோசன் மதன் என்பவர் 2005ல் தொடர்ந்த வழக்கில் (WRIT PETITION (CIVIL) NO. 386 OF 2005) உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல செக்கூலரிச புத்திஜீவிகள் வாதாடுகிறார்கள். சில முஸ்லிம் அறிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வஹாபியச் சிந்தனையில் ஊறிப்போன பலரும் இப்படித்தான் பேசுகிறார்கள். ”நீதிபதி சார்! நீங்க எப்பவாவது வஹாபி முஸ்லிமா இருந்திருக்கீங்களா? 4 பொண்டாட்டி கட்டி ஒருத்திக்கு நாலுங்கிற கணக்கில 16 புள்ள பெத்திருக்கீங்களா? வேற ஒருத்தி மேல ஆசை வந்துட்டா இருக்கிற நாலுல ஒருத்திய காரணமே சொல்லாம தலாக் தலாக் தலாக் அப்படின்னு மூணு வாட்டி சொல்லிட்டு வீட்டவிட்டு பத்திவிட்ருக்கீங்களா? மருமகளை பலாத்காரம் செஞ்சு அவள் மகனுக்கு இனி மனைவியில்லை அப்படின்னு ஃபத்வா வாங்கிருக்கீங்களா? இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க? அவங்களுக்கு வேண்டியது அவங்களுக்கான நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”

இந்த ரீதியில் நீதிமன்றத்தால் வழக்குகளில் ஆஜராகத் தடை செய்யப்பட்ட வக்கீல் ராஜீவ் தவன் லண்டன் பத்திரிகை ஒன்றில் பொறுமுகிறார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு ஒரு வேளை உணவைத் தவிர்த்ததாகச் சொல்கிறார் இவர். உலமாக்கள் வருந்துகிறார்கள். நமது ஆங்கிலேயச் சட்ட அமைப்பில் முஸ்லிம்களை திணிப்பது தகாது என்கிறார் தவன். அதே சட்ட அமைப்பில் ஹிந்துக்களைத் திணித்திருப்பது பற்றி வாய்திறந்தால் மதசார்பின்மை மாசுபடும் என்பதால் அது பற்றிப் பேசவில்லை அவர். ஆனால் நீதிபதி ஹிந்துத்வ அமைப்புகளுக்கு அனுசரணையாகத் தீர்ப்பளித்திருப்பதாகப் புலம்புகிறார்.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2690781/Supreme-Courts-ruling-fatwas-faulty.html

மேற்கத்திய நாடுகளில் ஷரியா சட்டப்படியான நீதிமன்றங்களே உள்ளன. பிரிட்டனில் 5 ஷரியா நீதிமன்றங்கள் 2008ல் தொடங்கப்பட்டன. ஆனால் நம் நாட்டில் இருக்கும் இந்த தாருல் உலூம்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை அல்ல. ஆகவே இவற்றைப் புறக்கணித்து ஷரியாவைச் சட்டபூர்வமானதாக ஆக்கினால் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இருக்காது என்கிறார் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆலோசகர் சைஃப் மகமுது.

சிவில் வழக்கு என்பதால் நடுரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் படியாக கும்பல் கூடித்தொழுவது, அயல்நாட்டுத் தூதரகத்தில் கல்லெறிவது, எங்கோ நடந்த விவகாரங்களுக்கு எங்கேயோ கலவரம் செய்வது போன்ற சம்பவங்களை இங்கே பேச இடமில்லை. உரிமையியல் சிக்கல்கள் என்று அறியப்படும் நிலத்தகராறு, கணவன் மனைவி பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள், விவாகரத்து, அனைத்துவிதமான காதல்கள், இப்படி பலவற்றில் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் மத அறிஞர்கள் தீர்ப்புச் சொல்கிறார்களே! இதெல்லாம் நம் நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இல்லையே. நியாயம் என்பது எள்முனையளவும் இல்லாத தீர்ப்புகளாக இவை இருக்கின்றன. இதை எப்படி ஒரு பன்முகச் சமுதாயம் ஏற்கமுடியும் என்ற கேள்வியுடன் தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய நீதி என்று நடத்திவரும் கட்டப்பஞ்சாயத்துக்களைத் தடை செய்யவேண்டும் என்று கோரினார். மத்திய மாநில அரசுகளுக்கு தாருல் காஜா எனும் இஸ்லாமிய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை உடனடியாகக் கலைத்துவிடவும் இவர்கள் ஃபத்வா என்ற பெயரில் வழங்கிவரும் தீர்ப்புகள் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளிக்கவும் உத்தரவிடக் கோரினார். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தையும், இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனங்களையும் இதுபோன்ற மதம் சார்ந்த தீர்ப்புகளை அளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களைப் பயிற்றுவிப்பதைத் தடை செய்யவும் வழக்கில் கோரப்பட்டது. அரசு அளித்த பதில் மனுவில் முஸ்லிம் உலமாக்கள் அளிக்கும் தீர்ப்புகள் அவர்களின் கருத்துக்கள்தானே தவிர சட்டப்பூர்வமான தீர்ப்புகள் அல்ல என்று தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் தவிர்த்து வேறு எந்த அடிப்படையில் வழக்கில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அத்தகைய முடிவுகளுக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் தன் நிலைப்பாட்டைச் சொன்னது அரசு.

வாதப் பிரதிவாதங்கள் நடந்து முடிந்தபிறகு நீதிபதிகள் பிநாகி சந்திர கோஷ், சந்திரமௌலி குமார் பிரசாத் ஆகியோர் கடந்த 2014 ஜூலை மாதம் 7ஆம் நாள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பின் சாரம் ஃபத்வாக்கள் தீர்ப்புகள் அல்ல, ஷரியா சட்டம் அல்ல என்பதே. தீர்ப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41747
அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்பது உலமாக்களைக் கொண்ட ஒரு அமைப்பு. உலமாக்கள் இஸ்லாமிய மதச் சட்டம், இறையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். மனுதாரர் தெரிவித்தபடி இந்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய அரசியல் சாசனப்படியான நீதிபரிபாலன முறையில் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாகச் சொல்லி ஒரு தனிப்பட்ட நீதித்துறை அமைப்பை நம் நாட்டில் உருவாக்க முனைகிறது. மேலும் நீதித்துறையில் வழக்கு நடத்துவதில் ஏற்படும் காலதாமதங்கள் ஏழ்மையில் வாழும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்துகிறது என்றும் இந்த வாரியம் சொல்கிறது. இதனால் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களை அமைக்கவேண்டியதானது என்றும் இந்த வாரியம் கூறுகிறது.

நாட்டில் தாரும் காஜா என்ற பெயரில் இது போன்ற இணை நீதித்துறையை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு மட்டுமான தனிச்சட்டம், தனி நீதி என்று அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக இந்த ஷரியா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன. இது போன்ற இஸ்லாமிய மத அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிவகுப்புகள் நாடு முழுவதும் இந்த வாரியத்தால் நடத்தப்படுகின்றன. இதில் பயிற்சி பெற்ற உலமாக்கள் எனும் இஸ்லாமிய மத அறிஞர்கள் நாடுமுழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கும் நீதிபதிகளாக சட்டவிரோதமான இணை நீதிமன்றங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கட்டப்பஞ்சாயத்துக்களில் நீதி முறையாக வழங்கப்படுவதில்லை என்பது மனுதாரரின் வாதம். பல ஃபத்வாக்களில் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது இந்த வாதத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இம்ரானா என்ற 28 வயதுப் பெண், 5 குழந்தைகளுக்குத் தாய், தன் கணவனின் தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார், அவரது மணவாழ்வின் நிலை குறித்தும் ஐந்து குழந்தைகளின் நிலை குறித்தும் கேள்வி எழுந்தது. இதில் தாருல் உலூம் அளித்த ஃபத்வா “அந்தப் பெண் தன் கணவனின் தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்பது சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது பலாத்காரம் செய்த ஆண் ஒப்புக்கொண்டாலோ ஹராம் முஷஹரத் நிரூபிக்கப்படுகிறது. அவள் தன் கணவனுக்கு சட்டப்பூர்வமான மனைவியாக வாழத் தகுதியற்றவள் ஆகிறாள். தன் தந்தை பலாத்காரமாகவோ அல்லது சம்மதத்துடனோ உறவுகொண்ட ஒரு பெண்ணை மகன் மனைவியாகக் கொண்டு வாழமுடியாது. ஏனெனில் ‘உன் தந்தை புணர்ந்த பெண்ணை நீ மணந்து கொள்ளாதே’ என்று குரான் சொல்கிறது.” இந்தக் கருத்தைச் சொல்லி மணவாழ்வை முறித்து கணவன் மனைவி சேர்ந்து வாழக்கூடாது என்று தீர்ப்பளித்தது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

(மகன் மணந்த பெண்ணைப் புணராதே என்று குரான் சொல்லவில்லையா என்று கேட்டால் நீங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் மதவாத நச்சுப்பாம்பாக அறியப்படுவீர்கள்.)

இதே போல அசூபி என்ற பெண்ணை அவளது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அந்தக் குற்றத்துக்கு காவல்துறையில் புகார் தரக்கூடாது என்று ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாமனார் மீது குற்றத்தை நிரூபிக்க சாட்சி இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் புகாரை பரிந்துரைத்தாலோ மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படும் என்றது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

இன்னொரு ஃபத்வா 19 வயது ஜட்சொனாராவை கணவனை விவாகரத்து செய்துவிட்டு பலாத்காரம் செய்த மாமனாரைக் கணவனாக ஏற்கச் சொன்னது. இதுவரை கணவனாக இருந்தவனை மகனாகப் பார்க்கச் சொன்னது. இதுவரை தந்தை நிலையில் இருந்தவனைக் கணவனாக ஏற்கச் சொன்னது.

இத்தகைய ஃபத்வாக்கள் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது. இந்த வாரியம் நாடு முழுவதும் இத்தகைய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை முஸ்லிம் சட்டப்படி அமைக்க விழைகிறது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. நீதிநிர்வாகம் என்பது அரசாங்கத்தின் கடமை அது தனியார் வசம் போவது மக்கள் நல்வாழ்வுக்கும் சட்டப்பூர்வமான வாழ்வு முறைக்கும் உகந்ததல்ல. மேற்கண்ட சம்பவங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் வழக்கினைத் தொடர்ந்தார். இதில் ஃபத்வாக்களையும் ஷரியாவையும் சட்டவிரோதம் என்று அறிவிப்பதோடு இதுவரை அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் அனைத்தும் செல்லாது என்றும் அவை சட்டவிரோதமானவை என்றும் அறிவுறுத்தக் கோரினார் மதன்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஃபத்வாக்கள் வெறும் கருத்துக்களே தீர்ப்புகள் அல்ல என்று சொன்ன போதும், இந்த தாருல் காஜா எனப்படும் அமைப்பு ஒரு பிணக்குத் தீர்வுக்கான மாற்று முறையாகக் கொள்ளலாம் என்றும் இந்த தாருல் காஜாக்கள் உரிமையியல் பிரச்சினைகளையே கையாள்வதால் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் வராது என்றும், செலவு குறைந்த முறையில் நீதிமன்றத்துக்கு வெளியிலான தீர்வுகளைத் தர இவ்வமைப்பு உதவக்கூடும் என்றும் சொன்னது. இதற்கு சட்டப்பூர்வமான தீர்ப்பாய அங்கீகாரம், தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், ஆகியவை இல்லை என்பதால் இணை நீதிமன்றங்களாக இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்களைக் கருத முடியாது என்றும் சொன்னது.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தனது மனுவில் தாருல் காஜாக்களை ஏற்படுத்துவதையோ, காஜிக்களைப் பயிற்றுவித்து ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ஃபத்வா வழங்குவதையோ மறுக்கவில்லை. அது ஒரு இணக்கமான பிணக்குத் தீர்வு முறை என்றும் சட்டத்தின் பாற்பட்ட நீதித்துறைக்குப் போட்டியாகவோ, இணையாகவோ செயல்படாது என்றும் கூறியது.

தாருல் உலூம் என்ற இஸ்லாமிய மத அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் அமைப்பு தன் மனுவில் இம்ரானா வழக்கின் ஃபத்வா ஹனாஃபி சட்டமுறையின்படி (ஃபிக் எ ஹனாஃபி) சரியானது என்றும் ஹனாஃபி முறை குரான், ஹதிஸ் இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியது. ஆனால் ஃபத்வாக்களை நடைமுறைப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கில்லை என்றும் அது ஒத்துக் கொண்டது. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஈமான்களான முஸ்லிம்கள் ஃபத்வாக்களைப் பின்பற்றுவார்கள் என்றும் அதை மீறுவோர் இறைவனின் சட்டத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றும் அவ்வமைப்பு கூறியது.

மத்தியப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் சட்டத்தின் முன் எந்தவித மதிப்பும் கொண்டவையல்ல என்று தெளிவுறக் கூறியது. உத்திரப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் ஆலோசனைகள் மட்டுமே தீர்ப்புகள் அல்ல என்றது. ஆனால் முஸ்லிம்கள் நீதிமன்றங்களை அணுகுவதை தாருல் காஜாக்கள் தடுக்க முடியாது என்றும் ஆகவே அவை இணை நீதிமன்றங்கள் அல்ல என்றும் உ.பி அரசு கூறியது.

காஜி அல்லது முஃப்தி எனப்படும் மத அறிஞர்கள் தங்கள் கருத்துக்களான ஃபத்வாக்களை யார் மீதும் எந்த வகையிலும் திணிக்க முடியாது. தங்கள் ஃபத்வாவுக்கு மிரட்டிப் பணிய வைப்பதும் கூடாது. மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஃபத்வாவுக்கு இருந்த அங்கீகாரமோ மதிப்போ சுதந்திர பாரதத்தில் கிடையாது. யாருக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கப்பட்டாலும் அவர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும். ஃபத்வாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அவசியமில்லை. ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. புறக்கணிப்பது சட்டபூர்வமானதே.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் “முஸ்லிம்களுக்கான ஒரு தனிப்பட்ட நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் அமைக்கப்படவேண்டும் என்றும், முஸ்லிம்கள் தங்களுக்கான ஒரு நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் இருக்கிறது என்றும் தங்கள் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மத அறிஞர்கள் உள்ளார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் விழைகிறது. வாரியத்தின் சொற்களில் “அல்லாவின் புத்தகத்தையும் ரசூலின் சுன்னத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டு இவ்விரண்டின் அடிப்படையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்படவேண்டும். இந்த முறை முஸ்லிம்களை முஸ்லிம் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரும். அவர்களுக்கு நீதி கிடைக்கும்.” நீதி கிடைக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த அமைப்புக்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

தாருல் காஜாக்களின் அமைப்போ, அவர்களது ஃபத்வா கருத்துக்களோ இருக்கவேகூடாது என்பதோ இருப்பது சட்டவிரோதம் என்பதோ இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் கிடையாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த அமைப்பு நீதிமன்றத்துக்கு வெளியே சிக்கல்களை சுமுகமாகத் தீர்த்துவைக்க முயற்சி செய்யலாம். ஆனால் இவர்களது முடிவுகளில் திருப்தி இல்லாதோர் நீதிமன்றங்களை அணுகி சட்டப்பூர்வமான தீர்வுகளைப் பெறமுடியும். ஃபத்வாக்களை ஏற்பதோ மறுப்பதோ தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் மதத்தின் அதிகாரம் கொண்டு ஃபத்வாக்கள் தரப்படுவதால் அவற்றால் நீதி மறுக்கப்படுவோர் மாற்று வழி தேடுவதற்குள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னது நீதிமன்றம்.

தாருல் உலூம் “கடவுளுக்கு அஞ்சும் யாரும் ஃபத்வாக்களை ஏற்பார்கள்” என்கிறது. ஃபத்வாக்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமை என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தாருல் உலூம் அதே பத்திரத்தில் “கடவுளுக்கு அஞ்சி வாழ்வோர், தாங்கள் கடவுளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று நம்புவோர், தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளைக் கடவுளின் ஆணைப்படிச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்வோர் ஃபத்வாக்களை மதித்து ஏற்பார்கள்” என்று சொல்கிறது. இது அப்பட்டமான மதரீதியான மிரட்டல்.

இம்ரானா விவகாரத்தில் மாமனாரின் காம வெறிக்குப் பலியான அந்த அப்பாவிப் பெண் தண்டிக்கப்பட்டாள். அவளோ அவளது கணவனோ கருத்துக் கேட்டு ஷரியா நீதிமன்றத்தை அணுகவில்லை. யாரோ சம்பந்தமில்லாத நபரான ஒரு பத்திரிகையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளது திருமணம் முறிக்கப்பட்டு அவள் கணவனுடன் வாழ தடை விதிக்கப்பட்டது. வன்கொடுமைக்கார மாமனாருக்கு எந்த தண்டனையும் இல்லை. இது நீதியே அல்ல.

சட்டத்தின்பாற்பட்ட ஆட்சி நடைபெறும் நாட்டில் இப்படி ஒரு சிக்கல் தீர்வு முறைகள் ஏற்கப்பட முடியாதது. மதம் சார்ந்த விவகாரங்களில் ஃபத்வா வெளியிடுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோருக்கான தனிப்பட்ட விவகாரம். ஆனால், ஒரு தனிநபரின் விவகாரத்தில் சம்பந்தமில்லாத ஒருவரின் வேண்டுகோளின்படி பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையும், குற்றவாளிக்கு விடுதலையும் வழங்கும் ஒரு முறைமையை நீதி நிர்வாகம் என்று ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட நபரோ அல்லது விவகாரத்தில் நேரடியான ஈடுபாடு உடையவரோ கேட்டால் மட்டுமே அந்த விஷயங்களில் ஃபத்வா வழங்கப்படலாம்.

ஆனால் இரு தரப்பாரில் ஒருவர் ஃபத்வாவை ஏற்கவில்லை என்றாலோ அல்லது இந்த பிணக்கு தீர்ப்பு முறைக்கு உடன்படவில்லை என்றாலோ அவர்களைக் கட்டுப்படுத்தி தங்கள் கருத்தை ஏற்கச்செய்யும் அதிகாரம் இந்த காஜி, முஃப்தி ஆகியோருக்கோ அல்லது தாருல் உலூம் அமைப்புக்கோ இல்லை.

முஸ்லிம் தனிநபரின் உரிமை, தனிநபர் நிலை, கடமைகள் ஆகியவற்றில் அந்த நபர் கேட்டுக் கொண்டால் மட்டுமே ஃபத்வா வழங்கவேண்டும். சம்பந்தமில்லாத நபர்களின் வற்புறுத்தலில் வழங்கப்படும் ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டோரைத் தண்டிப்பதோ, அப்பாவிகளை துன்பத்துக்கு ஆளாக்குவதோ, இரக்கமின்றி நடந்து கொள்வதோ அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். மனிதாபிமானமற்ற செயல்களுக்கு மத நம்பிக்கை பயன்படுத்தப்படக் கூடாது. சட்ட அங்கீகாரமற்ற எந்த ஒரு அமைப்பும் யாரையும் கட்டுப்படுத்தி எந்த ஒரு கருத்தையும் மதத்தின் பெயராலோ வெறெந்த நம்பிக்கையின் பெயராலோ திணிக்கமுடியாது.

சட்ட அங்கீகாரம் இல்லாத எந்த ஒரு அமைப்பும் எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்ப்புக்கூற உரிமையில்லை. அப்படித் திணிக்கப்படும் கருத்துக்கு சட்டப்படியான வலு இல்லை. சட்ட அங்கீகாரமில்லாத ஃபத்வாக்களை எவ்வித
மிரட்டலின் மூலமாகவும் நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி நடைமுறைப்படுத்த முயலும் யார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பினை சரியான முறையில் அமலாக்கினால் நாட்டில் சட்டப்படியான ஆட்சி நிலவும். ஹிந்துக்களுக்கு மட்டும் மதம் சாராத சட்டத்தின்படியான ஆட்சி முஸ்லிம்களுக்கு மதம் சார்ந்த சட்டத்தின்படி நீதி என்ற அநீதி இந்தத் தீர்ப்பின் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. குரான், ஷரியா என்று நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் தனித் தர்பார் நடத்திவந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவர்களை ஊக்குவிக்கும் மதத் தலைவர்களும் இந்தத் தீர்ப்பின் மூலமாகச் சட்ட அங்கீகாரம் அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஷாபானு வழக்குப் போல நீதிமன்றத்தின் நீதியைக் கேலிக்கூத்தாக்கி ஓட்டுக்கு மாரடிக்கும் அரசு மத்தியில் இல்லை என்ற நம்பிக்கையுடன் நாட்டின் அரசியல் சாசனத்தை அனைத்திலும் மேலானது என்று உயர்த்திப் பிடித்த இந்தத் தீர்ப்பை வரவேற்போம். வந்தே மாதரம்!

Monday, 4 August 2014


இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், இஸ்லாமிய மயமாக்கப்படுவதை கண்டித்தும் பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் 04.03.2014 அன்று பின்வரும் கோரிக்கைகளை மையமாக வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
  • பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்.
  • தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.
இது குறித்த செய்தி அறிக்கையை  வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக அறநிலையத்துறை, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு எதிராக புதிய வழக்குறைஞரை நியமித்து சரியான முறையில் வழக்கை நடத்தியது. இதன் விளைவாக ஏப்ரல் 17 2014 க்குள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் 22 2014 அன்று பழனி மலை பாதையில் (யானை பாதை, நடைபாதை இரண்டிலும்) இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
இதே போல், பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி விவகாரத்தில் ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் முஸ்லீம் இடஓதுகீட்டிற்கு கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதிலும் இந்துக்களுக்கு வெற்றி கிடைத்தது.

palani tasmac shop
இந்த இரண்டு வெற்றிகளை தொடர்ந்து பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தொடர்ந்து பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில் அரசு நடத்தி வரும் மதுபானக்கடையை அகற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இதன் விளைவாக நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பேரில் அரசு பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில் நடத்தி வந்த டாஸ்மாக் கடைகளை 01.08.2014 அன்று அகற்றியது.
ஒற்றுமையாக இந்துக்கள் போராடியதின் விளைவாக இந்த வெற்றிகள் படிப்படியாக பழனியில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இதை ஒருங்கிணைத்து வழி நடத்திய பழனிமலைக் கோவில் பாதுகாப்பு பேரவையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். இதுபோலவே அனைத்து ஊர்களிலும் இந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் அதர்மம் அகன்று தர்மம் நிலைபெறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!! 


திருவள்ளுவர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ்குமார் அண்மையில் ஜீன் 18ம் தேதி முஸ்லீம் பயங்கிரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் அருள்திரு.சக்தி அம்மா அவர்கள் (வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி கோவில்) சார்பாக ரூ.5 ஈலட்சம் வழக்கப்பட்டது. சுரேஷ்குமார்ன் மனைவி புவனா பெற்றுக்கொண்டார். அருகில் மாநில பொதுச் செயலாளர் சி.பரமேஸ்வரன் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கோட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி



பெரம்பலூர்,அரியலூர்,துறையூர், நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐஜேகே எனப்படும் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது. இதற்கு முன்னரே ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தருக்கு சொந்தமான கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றபோது, சிறப்பு விருந்தினராக மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார். இப்போது கூட்டணியில் உள்ள நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஐஜேகே கட்சி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார் பாரிவேந்தர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மேற்கண்ட ஊர்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைத்து நாட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.


-தினகரன்.