பெரம்பலூர்,அரியலூர்,துறையூர், நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐஜேகே எனப்படும் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது. இதற்கு முன்னரே ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தருக்கு சொந்தமான கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றபோது, சிறப்பு விருந்தினராக மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார். இப்போது கூட்டணியில் உள்ள நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஐஜேகே கட்சி அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார் பாரிவேந்தர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மேற்கண்ட ஊர்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைத்து நாட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
-தினகரன்.
0 comments:
Post a Comment