Saturday, 11 October 2014




பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற  மாவட்ட நிர்வாகம் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில்  இன்று காலை காவல்துறை உதவியுடன்  ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.
 


பட உதவி- வசந்த ஜீவா .

Thursday, 9 October 2014


அரியலூர் சபரீஷ் அய்யர் என்று அறியப்படும் ஜனார்த்தனன் ஜி அவர்களின் பூர்வீகம் கேரளா என்றாலும் தனது இளம் வயது கடும் உழைப்பால் "சபரீஷ் கபே" என்ற உணவு விடுதியை அரியலூரில் நிறுவி வெற்றிகரமாக நடத்தியவர். நம் சங்க தொண்டர்களுக்கு அவரது உணவகம் ஒரு அன்னபூரணி.

இளம் வயது முதலே RSS மீது வெகு ஈடுபாடு கொண்டு செயல்பட்டவர். பெரம்பலூர் , அரியலூர் பகுதிகளில் சங்கம் வளர முக்கிய கார்ய கர்த்தாவாக விளங்கியர் சபரீஷ் அய்யர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி சங்கத்தை தடை செய்தார். அக்காலத்தில் சங்க தொண்டர்களை தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.

ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் சங்கத்தின் சார்பாக சிறை சென்ற வர்களில் முதன்மையானவர் சபரீஷ் அய்யர் அவர்கள். பலமாதங்கள் சிறை கொடுமையை அனுபவித்தவர். இதனால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சங்க தொண்டராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது 90 நெருங்கும் வேளையில் உடல் பலகீனப்பட்ட நிலையிலும் அவரின் கடை ஆசைகளில் ஒன்று சென்னை சக்தி காரியாலயத்தை கண்டு விட வேண்டும் என்பது. கடைசி வரை அது கனவாகவே போய்விட்டது. இறந்தும் இந்த உலகை காணும் ஆவலில் தனது கண்களை தானம் செய்துள்ளார் என்பது கூட  அவருக்காக அரியலூர் அரிமா சங்கத்தின்  கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த பிறகுதான் தெரிகிறது.

மூத்த சங்க உறுப்பினரான ஜனார்த்தனன் ஜி அவகளின் இறுதிச்சடங்கில் நமது RSS ன் பிரார்த்தனா வான " நமஸ்தே சதா வத்சலே.. எனத்தொடங்கும் பாடல் பாடப்பட்டது எனபது நினைவு கூறத்தக்கது. 

பெரம்பலூர் மாவட்டம்,   வ.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே  நடந்து சென்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

 வ.களத்தூர் காட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் மு. சின்னம்மாள் (75). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சின்னம்மாள், வண்ணாரம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுவிட்டு பசும்பலூர்- வ.களத்தூர் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் சின்னம்மாள் பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பிறகு தீவிரச் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சின்னம்மாள் புதன்கிழமை அதிகாலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், வ.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த திருவாலந்துறையைச் சேர்ந்த செல்லதுரையை (23) கைது செய்தார்.


-

Wednesday, 8 October 2014


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் முருகாம்பாள்(18), பிளஸ் 1வகுப்பு வரை படித்த இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கடந்த சில வருடங்களாக பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மதியம் 2 மணி முதல் முருகாம்பாளை காணவில்லை . அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் முருகாம்பாள் கிடைக்கவில்லை. இது குறித்து நேற்று வ.களத்தூர் போலீசில் பெருமாள் புகார் அளித்தார்.இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


-தினகரன்.

பெரம்பலூரில் மர்மவிலங்கின் கால்தடம் பதிவானதால் சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்களி டையே ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அடுத்த கவுல்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தன.
அந்த பகுதியில் சிறுத்தை நடமாடு
வதாக பொதுமக்கள் புகார் செய்ததால், வனத்துறையினர் கவுல்பாளையம் மலைப்பகுதியில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அதை வனத்துறையினர் மீட்டு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர்.
அதன் பிறகும் கவுல்பாளையம், எளம்பலூர், பெரம்பலூர் புறநகர் பகுதியில் அடிக்கடி மர்ம விலங்கின் கால்தடம் பதிவானதால், அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. வனத்துறையினர் இதற்காக பல இடங்களில் கூண்டு வைத்தும், சிறுத்தை சிக்கவில்லை. அதன்பின் கடந்த 4, 5 மாதங்களாக இந்த பீதி அடங்கியிருந்தது.
இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரை அண்ணா நகரை சேர்ந்த செல்லமுத்து என்பவரது வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டப்பகுதியில் மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளது. இதை அவரது மனைவி ஆசிரியை மல்லிகா நேற்று காலை பார்த்துள்ளார். இதே போல் மேலும் சில இடங்களில் விலங்கின் கால் தடம் பதிந்து இருந்தது. இதனால் அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பெரம்பலூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் ஏழுமலை, வனச்சரகர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் கருப்பையன், வனவர் வீராசாமி ஆகி யோர் அங்கு சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை பார்வையிட்டு, செல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்கள், மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியில் படுக்காமல், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 -தினகரன்.

      தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்றும் முயற்சியில் இந்தியாவின் முதன்மையான மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) சார்பாக இன்று  09-10-2014 வியாழக்கிழமை பெரம்பலூர் வானொலி திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மாணவ சமுதாயத்தினரிடையே மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறோம்.

Monday, 6 October 2014

பழனி பாபா. இவர் ஏதோ சாமியார் என்ற எண்ணம் தற்காலத்தில் பலருக்கும் இருக்கலாம். மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். அந்த மறதிதான் பல அரசியல்வாதிகளுக்கு வாழ்வாதாரம். 800 ஆண்டுகள் பாரதத்தில் அடித்த கொள்ளையும், தாருல் இஸ்லாம் என்ற லட்சியத்தில் செய்த கொலைகளும் ஆங்கிலேயரிடம் இவர்களது அதிகாரம் பறிபோனபின் மக்களால் மறக்கப்பட்டன. அரசியலில் பெரும்பான்மை ஹிந்து மக்களை ஓரங்கட்டிவிட்டுத் தமக்குச் சலுகைகள் பெறுவதிலும், தேவைப்படும் போது ஹிந்து மக்களைச் சகோதரர்கள் என்பதும் தேவையற்ற போது அடக்குமுறைக் கும்பல் என்பதும் இஸ்லாமியர்களின் அரசியல் தந்திரத்தையே காட்டி வந்துள்ளது.
palani-baba

இந்த வகையில் மதத் தீவிரவாதம் பேசுவதை அதிகாரத் தோரணையோடு செய்துவந்தவர் ஜிஹாத் கமிட்டி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த அகமது அலி என்ற பழனிபாபா. சட்டத்தையோ, நீதிமன்றத் தீர்ப்புகளையோ, பிற மதத்தினரின் உணர்வுகளையோ மதிக்காமல் பேசுவதும் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பித்துக் கொள்வதும் இந்த அகமது அலிக்கு வாடிக்கை. இவர் பேசிய பேச்சுக்கள் பலவும் ஹிந்துக்களின் தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கும் விதமாகவே இருந்துவந்தன. இவர் மீது பல குற்றவியல் வழக்குகளும் இருந்தன. இவர் 1997ல் பொள்ளாச்சியில் கொல்லப்பட்டார். தமிழகம் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் இவரது அடிப்பொடிகள் அல் உம்மா என்ற பெயருடன் 1998ல் செய்த துரோகம் இன்னமும் கோவை நகரில் ஆறாத காயமாக இருக்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் இந்தத் தீவிரவாதி அகமது அலி என்ற பழனிபாபாவின் பெயரில் பாசறை தொடங்கிய தீவிரவாதிகள் சிலர் அல்லாவையும் ரசூலையும் தவறாகப் பேசினால் குர்பானி (பலி) கொடுப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.
bakrid poster2

 வன்முறையைத் தூண்டும் இந்தப் போஸ்டரைக் கண்டித்து உள்ளூர் ஹிந்து அமைப்புகளின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து முன்னணியின் நகரச் செயலாளர் சங்கர் கணேஷ் முன்னின்று புகார் அளித்துள்ளார்.
petition1
Add caption
 .
petition2

petition

இந்துக்களை கொன்று விடுவோம் என்றும் பாகிஸ்தானுடன் சேர்ந்து போர் புரிவோம் என்றும் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் கக்கும் விஷமத்தனமாக பிரச்சாரங்களும் செயல்பாடுகளும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடந்து வரும் தொடர் கொலைகள், இஸ்லாமிய வெறிச்செயல்கள் போன்றவற்றின் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இப்போது முன் அறிவிப்பு கொடுத்து தாக்கும் அளவிற்கு தமிழ்நாடு தாலிபான் தளமாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த பிரிவினைவாத பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முகமாக தென்னகத்தில் கருதப்படுபவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒவைசி சகோதரர்கள்.
இவர்களை முன்மாதிரியாக கொண்டு இன்று தமிழகத்தையும் பயங்கரவாத கூடாரமாக்கி ஹைதராபாத்தை போல் தமிழகத்தில் பல பகுதிகளை முஸ்லீம்கள் மாற்றி வருகின்றனர். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முன்னோடியின் வரலாற்றை கவனித்தால் தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்து என்ன என்பதை புரிந்துக்கொள்ளமுடியும். இவர்கள் தாருல் இஸ்லாம் அதாவது இந்தியாவை இஸ்லாமிய தேசமாக்குதல் என்பதை பழனி பாபவைப் போலவே அடிப்படைக் கடமைகளாகக் கொண்டவர்கள். அதற்காக இந்த ஒவைசி சகோதரர்கள் கையாளும் வழிமுறை இஸ்லாமிய ஓட்டுவங்கி மூலம் சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் பிற ஆட்சி மன்றங்களில் நுழைந்துகொண்டு அங்கிருந்தபடி பாரதத்துக்கு எதிரான கருத்துக்களை இஸ்லாமியர் உணர்வு, மத சுதந்திரம் ஆகிய போர்வைகளில் வெளிப்படுத்துவதுமே ஆகும்.
ஒவைசி என்றாலே ஆந்திர மக்களுக்கு பயங்கரவாதம், பாகிஸ்தான் ஆதரவு படுகொலை போன்ற கொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 15 நிமிடம் காவல்துறை ஓரமாய் நிற்கட்டும் இந்தியாவிலிருக்கும் 25 கோடி முஸ்லிம்கள் 100 கோடி ஹிந்துக்களை ஒழித்து விடுவோம் என்று இரத்தவெறி பிடித்து முழங்கிய அக்பருதீன் ஒவைசியின் சகோதரனும் அக்கட்சியின் தலைவருமானவரே அஸாதுதீன் ஒவைசி. அக்பருதீனுக்கு அண்ணன் என்பதை தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துத் தன் தந்தை மறைந்த சுல்தான் சலாவுதீன் ஒவைசிக்கு நிம்மதி தருபவர் அவர். சமீபத்தில் இந்த அண்ணன் ஒவைசி ஒரு விஷயம் பேசினார். ”ஹிந்துஸ்தானம் பாகிஸ்தானின் மீது படையெடுக்கத் துணிந்தால் பாரதத்தில் உள்ள 25 கோடி முஸ்லிம்களும் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போர் புரிவார்கள்” என்பதே அந்தப் பேச்சு. 15 நிமிடங்களில் கொன்று விடுவோம் என்றான் தம்பி எப்படி கொல்லுவோம் யாருடன் சேர்ந்து கொல்வோம் என்று திட்டத்தைத் தெளிவுபடுத்தினான் அண்ணன். என்னே சகோதர ஒற்றுமை! இந்த கொலைகார அழைப்பு கஷ்மீர் அப்சர்வர் என்ற பத்திரிகையில் செய்தியாக வந்தது.
owasisee observer
இருதினங்களுக்குப் பின் செய்தியைக் காணவில்லை என்கிறது பத்திரிகையின் இணையதளம்.
owasiee removed
ஆனால் ஆதாரங்கள் சேர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு விவாத தளத்தில் இது குறித்துப் பெருமையாக எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் வழமையான அரசியல்வாதிகள் போல மூத்த ஒவைசி இது பொய் என்றும் அந்தச் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார், இதுவரை எந்த வழக்கும் தொடரப்பட்டதாகத் தெரியவில்லை. இவரது வரலாற்றைச் சற்றே உற்று நோக்கினால் இவர் முஸ்லிம் அடிப்படைவாத கொள்கையில் ஊறிப்போனவர் என்பது புலப்படும். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் நாடு, மொழி, இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இசுலாம் என்ற ஒரே குடையின் கீழிருப்பவர்கள் என்பதே அந்தக் கொள்கையின் சாரம். இதே உலகாயத இஸ்லாமியக் கொள்கை தான் 1947ல் நம் நாட்டைக் கூறுபோட்டது. இன்று உலகெங்கும் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாத, பிரிவினைவாத செயல்களுக்கு இந்த கொள்கையே அடித்தளமாக அமைந்துள்ளது. இந்தக் கொள்கையிலேயே இவர்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பயணித்துள்ளது.
இந்த குடும்பத்தில் பிறந்த அசாவூதீன் ஒவைசியை முதலில் நாம் தெரிந்து கொள்வோம். லண்டனில் சட்டம் படித்த பாரிஸ்டர். பாராளுமன்ற உறுப்பினர். தம்பிக்குச் சற்றும் சளைக்காத அண்ணன். அசாமில் ஊடுறுவிய பங்களாதேசத்து இசுலாமியருக்கு அரசு உதவவில்லை என்றால் முஸ்லீம் இளைஞர்கள் செய்யும் புரட்சியைத் தடுக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் அரசை மிரட்டியவர். அரசுப்பணத்தில் 'முஸ்லிம்களுக்கு மட்டும்' என்று எழுதி வைத்து அரசு உதவிகளை வழங்கியவர். இப்படிப் பேச அவருக்குத் துணிவு எங்கிருந்து கிடைக்கிறது? அவரது பின்னணி என்ன? யார் யார் அவரை ஆட்டுவிக்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிப் பார்க்கலாம்.
குல் ஹிந்த் மஜ்லிஸ் ஏ இட்டேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) என்பது ஓவைசி சார்ந்துள்ள கட்சி. இதற்கு அகில பாரத முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்று பொருள் வரும். இந்தக் கட்சியின் வரலாறு என்ன? கொள்கை என்ன என்று பார்த்தால் இவர்களின் இந்த இந்துஸ்தான எதிர்ப்பு வெறி ஆச்சரியம் தராது. இந்த மஜ்லிஸ் அமைப்பு 1927ல் அப்போதைய ஐதராபாத் நிஜாமின் உத்தரவின் பேரில் அவருக்கு ஆதரவாகத் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு ஐதராபாத் ஒரு முஸ்லிம் சமஸ்தானமாக தனித்து இருக்கவேண்டும் என்று பாடுபட்டது. ஐதராபாத் இந்தியக் குடியரசுடன் இணைவதை எதிர்த்தது. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hate-speech-not-new-for-Owaisi-clan/articleshow/17963124.cms
இவர்களது வரலாறு சுருக்கமாக இதோ:
பொது ஆண்டு 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதிய மன்னன் ப்ரதாப ருத்ரனை வென்று கொள்ளையிட்ட போது இசுலாமிய ஆட்சியில் விழுந்தது. இங்கு கொள்ளையடிக்கபட்ட கோஹினூர் வைரம் உள்ளிட்ட பொருட்கள் 1000 ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு தில்லி கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் 1336ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்யர் வழிகாட்டுதலில் சங்கம வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹரர், புக்கரராயர் எனும் இளைஞர்கள் தலைமையிலான படை இசுலாமியர்களை வென்று ஹிந்து ராஜ்யத்தை அமைத்தது. இந்த ராஜ்யம் 1678 வரை இசுலாமிய ஏகாதிபத்தியத்தைத் தடுத்து பாரத பாரம்பரியத்தைக் காத்தது. இந்த சாம்ராஜ்ஜியம் தெற்கே மதுரை முதல் வடக்கே ஹிமாசலம் வரை மேற்கே சௌராஷ்டிரம் முதல் கிழக்கே அசாம் வரையிலும் பரவியிருந்தது. இதனால் தென்னிந்தியாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முகலாய அரசுக்கு 500 ஆண்டுகள் பிடித்தன. இதன் வீழ்ச்சிக்குப் பிறகு பல நவாபுகள் சுல்தான்களின் ஆட்சிகள் பலபகுதிகளில் நடந்தன.
1678ல் கோல்கொண்டாவின் இசுலாமிய ஆட்சியாளர்களிடம் வீழ்ந்தது வாரங்கல். விஜயநகரப் பேரரசு அத்துடன் முடிவுக்கு வந்தது. நிஜாம்களின் ஆட்சியில் இருந்த அந்தப்பகுதியில் 1752ல் கடற்கரை ஆந்திரப்பகுதியை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அன்பளிப்பாக நிஜாம்கள் வழங்கினர். 1766ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அப்பகுதியைக் கைப்பற்றியது. ஆனாலும் கோல்கொண்டா பகுதி (தெலுங்கானா/ஹைதராபாத் சமஸ்தானம்) தில்லி, பஹாமன், குதுப் ஷாஹி, மொகலாயர், மற்றும் நிஜாம் வம்சத்தினரின் ஆட்சிகளில் சில நூற்றாண்டுகள் இருந்தது.
ஹிந்துக்களின் அரசியல் கலாசார விழிப்புணர்வு பல்வேறு துறவிகள் பக்திமான்களால் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்த போதும் 19ஆம் நூற்றாண்டில் ஹிந்துக்களின் அரசியல் விழிப்புணார்வு தலை தூக்கியது. நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் 90% மக்கள் ஹிந்துக்கள். அவர்கள் அரசியல் பலம் பெறுவது பொறுக்காத நிஜாம் கலாசார அடிப்படையைக் குலைக்கத் திட்டமிட்டார்.
எலகண்டலா, பலமுறு, இந்துரு, மேடுகு ஆகிய பகுதிகளின் பெயர்கள் முறையே கரீம்நகர், மெஹபூப் நகர், நிஜாமாபாத், மேடக் என்று மாற்றப்பட்டன. பாக்கியநகர் ஹைதராபாத் ஆனது. புவனகிரி போங்கிர் ஆனது. பாடு என்று முடியும் ஊர்ப்பெயர்களை பஹாட் என்று உருதுப்படுத்த உத்தரவிட்டார் நிஜாம். அதே வேளையில் 1905ல் ஹைதராபாத் ஒரு இசுலாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. 1911ல் மீர் உஸ்மான் அலிகான் அதிகாரத்துக்கு வந்ததும் இசுலாமிய மயமாக்கம் வேகம் பிடித்தது. மஜ்லிஸ் இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பு துவக்கப்பட்டது.
உஸ்மானியா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு உருதுக்கல்வி போதிக்கப்பட்டது. உருது பேசும் முஸ்லிகளுக்கு முக்கியத்துவம் தந்தும் உருது தெரிந்த ஹிந்துக்களுக்கு சலுகைகள் வழங்கியும் உத்தரவிட்டார் நிஜாம். தெலுங்கு மொழி மதிப்பிழந்தது. ஹிந்து கலாசாரம் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டது.
1937ல் மிலாது நபி கொண்டாட்டங்களில் பேசிய நசருல் ஹசன் கிலானி ”இந்த ராஜ்ஜியத்தில் இன்னும் 22 லட்சம் தின்பண்ட வழிபாட்டாளர்கள் (பசு வழிபடும் ஹிந்துக்கள்) இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்" என்று பேசினார். முகமதலி ஜின்னா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேசும் போது “என் இனிய இஸ்லாமிய மாணவர்களே” என்று அழைத்துப் பேசினார். ஹிந்து மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அவர் முகம் சுளித்தார். அவர்களை நோக்கிப் பேச மறுத்து முஸ்லிம் மாணவர்களை மட்டுமே விளித்து அவர்கள் செய்யவேண்டிய செயல்கள் குறித்தே பேசிவிட்டுச் சென்றார்,
nawab-bahadur-yar-jang

1938ல் நவாப் பகதூர் யார் ஜங் என்பவர் மஜ்லிஸின் தலைவரானார். இவர் வஹாபிய அடிப்படைவாதி. ஐதராபாத் நிஜாமை "அராபிய முகமதின் முடிசூடிய அடிமை" என்று பொது மேடையில் அழைத்தவர். இவர் காலத்தில் மஜ்லிஸ் அரசியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட்டது. முகமதலி ஜின்னாவின் முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்பட்டது.
இந்த நவாப் பகதூர் யார் ஜங் 1927ல் ஆரியசமாஜத்தை எதிர்த்து இஸ்லாமைப் பரப்புவதற்கு ஒரு அமைப்பை நிறுவினார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்களை சமுதாய சீர்திருத்தம் மூலம் ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தில் தக்கவைப்பதை இவர் வெறுத்தார். இந்துக்களைப் பெருங்குழுக்களாக மதமாற்றப் பரிந்துரைத்தார். (http://www.bahaduryarjung.org/)
இவர் 1944ல் ஹக்கிம் அலி கான் என்ற நீதிபதி வீட்டில் நடந்த விருந்தில் ஹூக்கா புகைத்ததும் உயிரிழந்தார். ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைக் காக்கும் சேவகர் மட்டுமே, மன்னரில்லை. இசுலாமியர் அனைவரும் இறைவனைத் தவிர யாரையும் தலைவனாக ஏற்க வேண்டாம் என்று பேசியதால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவருக்குப் பிறகு மஜ்லிஸ் தலைமைக்கு வந்தவர் சையது காசிம் ரிஸ்வி. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் ரசாக்கர் என்ற நிஜாமின் ராணுவப் படைக்குத் தலைவராக இருந்தார். ஐதராபாத் இந்தியக் குடியரசுடன் இணைவதை எதிர்த்தார். ரகசியமாக பாகிஸ்தானுடன் ஐதராபாத் இணைவதற்குப் பணியாற்றினார். 1947ல் ”விடுதலை! விடுதலை! பாரத மாதா கீ ஜெய்!” என்று பாரதம் முழுவதும் முழங்கிய போது ”ஆஜாத் ஹைதராபாத்” முழக்கம் அங்கே கேட்டது. ரஜாக்கர் படையினரை ஏவிவிட்டு பாரதத்துடன் இணையத் துடிக்கும் சொந்த நாட்டு மக்களையே சித்ரவதை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதி.
razkakilling

ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் பல்லாயிரம் ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். பிற பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் முஸ்லீம் மன்னனுக்கு ஆதரவாக ஹைதராபாத் வந்தனர். அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் இருப்பிடமும் வழங்கப்பட்டது. ஹைதராபாத் சுதந்திர தேசம் என்று அறிவித்த இரண்டு மாதங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகரித்தது என்று பாண்டுரங்கராவ் குல்கர்னி தெரிவிக்கிறார். http://www.hindu.com/thehindu/2003/04/27/stories/2003042700081500.htm
razakar army1

இந்தியக் குடியரசில் ஐதராபாத் இணையவேண்டும் என்று விவசாயிகளும் இந்துக்களும் சுவாமி ராமானந்த தீர்த்தரின் தலைமையில் ஆந்திர இந்து மஹாசபா ஆதரவுடன் போராடினர், அவர்களை இந்த ரசாக்கர் படையினர் கொடூரமாகத் தாக்கி அடக்கி வைத்தனர். பாரத அரசு கவலை கொண்டாலும் நிஜாம் இணைப்பு பற்றி முடிவெடுக்க இரண்டு மாத அவகாசம் கேட்டதால் பேசாதிருந்தது. நிஜாம் உலக இசுலாமிய நாடுகளுக்கு இராணுவ மற்றும் அரசியல் உதவி கேட்டு தூதுவர்களை அனுப்பினார். ஹைதராபாத்தில் மக்களுடன் இணைந்து ஹிந்து அமைப்பினர் ரசாக்கர்களை எதிர்த்துப் போரிட்டனர். இந்தப் போராட்டத்தை சுவாமி இராமானந்த தீர்த்தர் வழிநடத்தினார், நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். ரஜாக்கர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி பாகிஸ்தானுடன் இணைய நிஜாமைக் கட்டாயப்படுத்தினார். http://www.srtri.in/index.htm
img swamiji

ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, பயிர்கள் கொளுத்தப்பட்டன, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். எர்ரபள்ளம் என்ற கிராமத்தில் சந்த் கான் என்ற காவல் அதிகாரியின் துணையுடன் ரஜாக்கர்கள் ஒவ்வொரு வீடாகக் கொள்ளையடித்து மொத்தக் கிராமத்தையும் சூறையாடினர். 70 பெண்கள் கிராமத்தின் நடுவே வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஹைதராபாத் வங்கியில் 22 லட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டது.
இந்நிலையில் 1948ல் பாரதத்தின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆப்பரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் 5 முனைகளில் ஹைதராபாத்தைத் தாக்கிக் கைப்பற்றியது. நிஜாம் சரணடைந்தார். காசிம் ரிஸ்வி சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் இதற்குள் ஹைதராபாத்தில் இருந்த ஹிந்துக்கள் பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இத்தகைய கொடுமைகளைச் செய்த ரஜாக்கர் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போதும் அவர்களின் தலைவர் காசிம் ரிஸ்வி உட்பட பலரும் விடுவிக்கப்பட்டனர். சர்தார் படேல் மேற்கொண்ட போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு ரசாக்கர் படை கலைக்கப்பட்டது. மஜ்லிஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. காங்கிரசுக் கட்சி முஸ்லிம்களை தாஜா செய்து அவர்கள் ஓட்டுகளைப்பெற அவர்களைக் குறைந்த தண்டனையுடன் விடுவித்தது. காசிம் ரிஸ்வி சர்தார் படேலைச் சந்தித்துப் பேசுகையில் 'பேனா முனையில் சரணடைவதை விட கத்தி முனையில் வீரம் காட்டிச் சாவோம்' என்று பேசினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தம் விடுதலைக்காக பிரதமர் நேருவிடம் பேரம் பேசினார். பாகிஸ்தான் சென்று விடுவதாக உறுதியளித்தார். ஆனால் சர்தார் படேல் இவரைச் சிறையில் அடைத்தார். இவருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. 1957ல் ரிஸ்வி நேருவின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானுக்குப் போய்விடவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அவர் இட்டேஹதுல் முஸ்லிமீன் அமைப்பை யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி பலரிடம் பேசினார். யாரும் முன்வராத நிலையில் மௌலானா அப்துல் வஹீத் ஒவைஸி என்ற வழக்கறிஞரிடம் அமைப்பை ஒப்படைத்தார். பின்னர் பாகிஸ்தான் சென்றார். http://www.time.com/time/printout/0,8816,799076,00.html
Autocracy to Integration, Lucien D Benichou, Orient Longman (2000)
police-action hydreabad

மஜ்லிஸ் மீதான தடை 1957ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மௌலானா அப்துல் வஹீத் ஒவைசி இதனை அரசியல் கட்சியாக்கித் தலைமை ஏற்றார். தலைமை ஏற்றவுடன் இவர் பாரத்தத்துக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும், முஸ்லிம்களுக்கு வெறியேற்றும் வகையிலும் பேசத் தொடங்கினார். 1958ல் ஓராண்டு காலமாகப் பேசிவந்த தேசவிரோதப் பேச்சுக்காகவும், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காகவும் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு தேசத்துக்கு எதிராகப் பேசுவதில்லை என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hate-speech-not-new-for-Owaisi-clan/articleshow/17963124.cms
தேர்தலில் ஆதரவு போட்டி அரசியல் என்று சிறிது சிறிதாக மஜ்லிஸ் வளர்ந்தது. அப்துல் வஹீத் ஒவைசி ஃபக்ர் ஏ மில்லத் (மக்களின் பெருமிதம்) என்று அழைக்கப்பட்டார். 1960ல் அப்துல் வஹீதின் மகன் சையத் சலாஹுதீன் ஓவைசி ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மல்லேபள்ளி பகுதியில் காங்கிரசை எதிர்த்து வென்றார். சையத் சலாஹுதீன் சலார் ஏ மில்லத் (மக்களின் தளபதி) என்று அழைக்கப்பட்டார்.
1962ல் சலாஹுதீன் சட்டமன்றத் தேர்தலில் பத்ரகட்டி தொகுதியில் வென்றார். பிறகு சார்மினார் தொகுதியில் 1967ல் வென்றார். அதன் பிறகு ஐதராபாத் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் சட்டமன்றத் தேர்தலில் வென்றார். 1983ல் தெலுகுதேசம் பெரும்பான்மையாக வென்ற போதும் ஐதராபாத் பகுதியில் மஜ்லிஸ் வென்றது. 1984ல் சலாஹுதீன் பாராளுமன்றத் தேர்தலில் வென்றார், 2004 வரை அவரும் அதன் பின் அவர் மகன் அசாதுதீன் ஒவைசியும் தான் ஐதராபாத் எம்பியாகத் தொடர்கின்றனர். 2008ல் சலாஹுதீன் இறந்தபின் அசாதுதீன் மஜ்லிஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றார். http://www.hindu.com/2008/09/30/stories/2008093058670300.htm
2007ல் மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஐதராபாத் வந்த போது அவரைத் தாக்கினர். நஸ்ரின் தலையைக் கொய்வது இசுலாமியக் கடமை என்று கூறினர். தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஷ்டி இருவருக்கும் எதிரான உயிர்க்கொலை ஃபத்வாவை செயல்படுத்துவோம் என்று சூளுரைத்தனர். http://www.hindu.com/2007/08/11/stories/2007081161781600.htm
http://ibnlive.in.com/news/mla-vows-to-behead-taslima-nasreen/46658-3.html
ஹைதராபாத் உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை இடங்களில் இவர்கள் வைத்ததே சட்டம் என்ற வகையில் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் நடந்து வருபவர்கள். ஆனால் ஓட்டு வங்கி மதசார்பின்மை என்று காங்கிரசுக் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் இவர்களைக் கண்டு கொள்ளாது இருக்கின்றன. இந்த அமைப்பின் கோட்பாடு இந்தியாவை இசுலாமிய நாடாக்குவதே என்பது இந்த வரலாற்றைப் பார்க்கிற போது புரியவரும்.
அசாதுதீன் ஒவைசி தாலிபான்களிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். இல்லையென்றால் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை அரசு இழக்க நேரும் என்று மிரட்டினார்.
http://www.hindustantimes.com/india-news/newdelhi/should-hold-talks-with-taliban-owaisi/article1-1022378.aspx
1992 நவம்பர் மாதத்தில் காவல்துறை அதிகாரி கிருஷ்ணபிரசாத் பிருந்தாவன் காலனியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் அங்கே சென்றார். மஜ்லிஸ் அமைப்பின் கைத்தடியும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியுமான முஜீப் என்பவனால் கிருஷ்ணபிரசாத்தும் ஒரு காவலரும் கொல்லப்பட்டனர். கொன்ற முஜிப்பையும் அவனுக்குத் துணை நின்ற அவனது தம்பி நஜீபையும் பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றித் தங்கவைத்து ஒவைசி குடும்பம் காப்பாற்றியது. 19 ஆண்டுகள் கழித்து 2002 ஜனவரி மாதத்தில் இந்த இருவரில் நஜீபைக் காவல்துறையினர் கைது செய்தனர். முஜிப்பைக் கைது செய்து ராஜஸ்தானில் சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. மஜ்லிஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் லஷ்கர் இ தய்யபா, ஜய்ஷ் ஏ முகமது, சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். http://www.newindianexpress.com/cities/hyderabad/article326589.ece?service=print
இந்த மஜ்லிஸ் கட்சியின் ஆதரவு ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரசுக்குத் தேவை என்பதால் இவர்களின் பல தேச இறையாண்மைக்கு எதிரான போக்கு கண்டு கொள்ளப்படவில்லை. 2011ல் ஆந்திர பொது விநியோகத்துறை அமைச்சர் அடிலாபாத் பகுதியில் ரேஷன் கடை முறைகேடுகள் குறித்த புகார் பற்றி விசாரிக்க வந்தார். மஜ்லிஸ் கட்சியினர் அமைச்சர் ஒவைசியின் அனுமதியின்றி வந்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர். அமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
இவரது தம்பி அக்பருதீன் ஒவைசி ஆந்திர சட்டமன்ற உறுப்பினர். 2013ல் நிர்மல் என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது திரைப்பட வில்லன் வசனம் பேசுவது போலப் பே(ஏ)சியிருக்கிறார், அவர் பேச்சு 64 நிமிடங்கள் நீடித்தது. முழுதும் இந்துக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகள், பாரத தேசத்தின் தொன்மை மிக்க வரலாறு இவற்றை சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்தது அந்தப் பேச்சு.
M Id 342863 Akbaruddin Owaisi





சான்றுக்குச் சில இங்க
ஏ இந்துஸ்தானமே! நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம், நீ 100 கோடி பேரைக் கொண்டிருக்கிறாய். 15 நிமிடங்கள் காவல்துறையை அகற்று. யார் வலுவானவர்கள் பார்த்துவிடலாம். இந்துஸ்தானமே! இன்று என் முன்னால் ஒலிபெருக்கி இருக்கிறது. நாளை வேறெதாவது இருக்கும். அப்போது இந்த நாட்டில் ஓடும் ரத்த ஆறு போல ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பார்த்திருக்க முடியாது.
இப்படிப் பேசிய ஒவைசி மீது புகார் ஏதுமில்லாமலே நடவடிக்கை எடுக்க வழியிருந்தும் ஆந்திர போலீஸ் கைகட்டி நின்றது. இதனால் ஆந்திர மாநில பாஜக சட்டப்பிரிவு இவர் மீது புகார் கொடுத்தது. வீரம் பேசிய சூரர் சின்ன ஒவைசி மருத்துவம் பார்க்கிறேன் என்று இங்கிலாந்துக்கு ஓடினார். முதலில் புகாரைக் கிடப்பில் போட்ட காவல்துறை ஊடகம் மற்றும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் அதிகமானதும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சின்னவருக்குச் சம்மன் அனுப்பியது.
சில நாட்கள் கழித்து ஐதராபாத் வந்தவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தது ஆந்திர காவல்துறை. ஆந்திர டிஜிபி இது ஒரு சாதாரண வழக்கு. விசாரணை அதிகாரி பார்த்துக் கொள்வார் என்றார். நடவடிக்கை பற்றி வற்புறுத்திக் கேட்டபோது "ஒரு டிஜிபி விசாரிக்க வேண்டிய வழக்கு இது இல்லை" என்று சொல்லிவிட்டுப் போனார். காங்கிரசுக் கட்சி இஸ்லாமியர் ஓட்டு போய்விடுமோ என்று அஞ்சிப் பேசாதிருக்க காங்கிரசு அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் செய்வதறியாது சும்மா கிடந்தது. ஊடகங்கள் ஒரு புறம் ஓவைசியைக் கண்டித்தால் மதசார்பின்மை பாதிக்குமோ என்று அஞ்சி "இது ஒரு தனி மனிதனின் புலம்பல்” என்று கூறின. இஸ்லாமியர் பலர் ஓவைசியை ஆதரித்தனர். சிலர் இது தேவையற்ற பேச்சு, ஆனால் பெரிது படுத்த வேண்டாம் என்றனர்.
ஐதராபாத்தில் எங்கோ மூலையில் ஓவைசி பேசியதை ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டி பெரிதாக்கிவிட்டன என்று குற்றம் சாட்டினார் ஒரு மௌல்வி. இணையம் குறித்தோ யூ டியூப் என்பது குறித்தோ அவர் அறிந்திருக்க நியாயமில்லை. யூ டியூப் இசுலாமுக்கு எதிரானது என்று ஃபத்வா கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. மருமகளின் மீது கொண்ட காமத்தால் உந்தப்பட்டு மகனை விவாகரத்து செய்யவைத்து மருமகளை பெண்டாண்ட அவலத்தை உலகத்தின் தலைசிறந்த வாழ்வியல் கோட்பாடு என்று போற்றுவோரிடம் நியாயம் குறித்து விவாதித்துப் பயனில்லை.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Police-failed-to-act-on-first-complaint-against-Akbaruddin-Owaisis-hate-speech/articleshow/17963235.cms?
இத்தகைய பாகிஸ்தான் ஆதரவுக் கொள்கையும் வஹாபியச் சிந்தனையும் நாடி, நரம்பு, இரத்தம், சதை, புத்தி என்று அனைத்திலும் ஊறிப்போன வம்சாவழியில் வந்தவரான அசாதுதீன் ஒவைசி பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து இந்தியாவை எதிர்ப்போம் என்று பேசியிருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த அசாதுதீன் ஒவைசியின் வஹாபியச் செயல்பாடு பாராளுமன்றத்திலேயே நடக்கிறது. பாராளுமன்றத்தில் தினசரி அலுவல்கள் முடிகிறபோது வந்தேமாதரம் பாடல் இசைக்கப்படுவது மரபு. இவர் சமீபத்திய 2014ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வந்தேமாதரம் பாடலுக்கு மரியாதை நிமித்தம் கூட நில்லாமல் சபையை விட்டு வெளியே வந்தார். அது குறித்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் மிகுந்த வருத்தப்பட்டார். வேறொருவர் இவரைத் கடுமையாகச் சாடினார். ஆனாலும் ஒவைசி இன்னும் வந்தே மாதரத்தை மதிக்காமல் வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 15 நிமிடம் காவல்துறை கைகட்டி நின்றால் 25 கோடி முஸ்லிம்களா 100 கோடி இந்துக்களா பார்த்துவிடுவோம் என்று இவரது தம்பி அக்பருதீன் ஒவைசி பேசுவதும் அச்சரியமில்லை. இவர்களது பரம்பரையே ஹிந்து விரோத, பாரத விரோத, இசுலாம் தவிர்த்த அனைத்தும் தீமை என்ற சிந்தனை ஓட்டத்தில் ஊறித்திளைத்த வஹாபியர்கள். ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் 'மதசார்பற்ற' கட்சிகள் இவர்களது செயல்பாடுகள் குறித்து மௌனம் காப்பதும் புதிதல்ல.
இந்தச் சகோதரர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தில் சேரச் சொன்ன பேச்சை ஒவைசி மறுத்துள்ளார் என்ற போதும் செய்தியின் பயங்கரத்தின் காரணமாக அது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு தேவைப்பட்டால் இவர்களும் இவர்களைச் சார்ந்த பாகிஸ்தான் ஆதரவாளர்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படவேண்டும். அக்பருதீன் ஒவைசி மீது 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களைக் கொல்வேன் என்ற பேச்சுக்காக இதே போன்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவர்களுக்கு இந்திய முஜாஹிதீன், சிமி போன்ற தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது. அந்த அமைப்புகள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆணைப்படி செயல்படுபவை. ஐஎஸ்ஐயில் பாதிப்பேர் வஹாபியத் தீவிரவாதிகள். அவர்கள் தாலிபானுக்கு உண்மையானவர்கள். தாலிபான் அல் காயிதாவுக்கு தோள் கொடுக்கச் சத்தியம் செய்து கொடுத்த அமைப்பு. முல்லா ஓமர் பின் லேடனின் மாப்பிள்ளை. இந்நிலையில் அல் காயிதா இந்தியத் துணைக்கண்டத்தில் முஸ்லிம்களுக்காகப் போர்த் தளம் ஒன்றை அமைப்போம் என்று அறிவித்திருக்கிறது. சுற்றிச் சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணராது நெருப்பைக் கண்டு சிரித்தபடி சென்று தொட்டுச் சூடு பட்டதும் கதறியழும் குழந்தைபோல இவர்கள் வளைத்துத் தாக்கும் போது புலம்பிப் பிதற்றும் நிலையில் நாமிருக்கக்கூடாது.
தெலுங்கானா மாநில அரசு இவர்களது தயவில் இருக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் மஜ்லிஸ் அமைப்பையும் ஒவைசியையும் பகைத்துக்கொள்ள மாட்டார். சந்திரசேகர ராவின் மகள் ஹைதராபாத் தனி ராஜ்ஜியம் அதை இந்தியா பறிந்த்துக் கொண்டது குற்றம் என்று பேசினார். நடவடிக்கை வரும் என்று அறிந்ததும் விளக்கம் சொல்லி வாபஸ் பெற்றார். ஆகவே தெலுங்கானா மாநில அரசு தீவிரவாதிகளுக்குத் துணை போவது திட்டவட்டம். 
bakrid police action2

இன்று திண்டுக்கல்லும் ஒவைசியின் ஹைதராபாத்தை போல் மாறி வருகிறது. மிரட்டல் விடுக்கும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. திண்டுக்கல்லையும் தமிழகத்தையும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்ற தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 
வந்தேமாதரம்!