அரியலூர் சபரீஷ் அய்யர் என்று அறியப்படும் ஜனார்த்தனன் ஜி அவர்களின் பூர்வீகம் கேரளா என்றாலும் தனது இளம் வயது கடும் உழைப்பால் "சபரீஷ் கபே" என்ற உணவு விடுதியை அரியலூரில் நிறுவி வெற்றிகரமாக நடத்தியவர். நம் சங்க தொண்டர்களுக்கு அவரது உணவகம் ஒரு அன்னபூரணி.
இளம் வயது முதலே RSS மீது வெகு ஈடுபாடு கொண்டு செயல்பட்டவர். பெரம்பலூர் , அரியலூர் பகுதிகளில் சங்கம் வளர முக்கிய கார்ய கர்த்தாவாக விளங்கியர் சபரீஷ் அய்யர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி சங்கத்தை தடை செய்தார். அக்காலத்தில் சங்க தொண்டர்களை தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.
ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் சங்கத்தின் சார்பாக சிறை சென்ற வர்களில் முதன்மையானவர் சபரீஷ் அய்யர் அவர்கள். பலமாதங்கள் சிறை கொடுமையை அனுபவித்தவர். இதனால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சங்க தொண்டராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது 90 நெருங்கும் வேளையில் உடல் பலகீனப்பட்ட நிலையிலும் அவரின் கடை ஆசைகளில் ஒன்று சென்னை சக்தி காரியாலயத்தை கண்டு விட வேண்டும் என்பது. கடைசி வரை அது கனவாகவே போய்விட்டது. இறந்தும் இந்த உலகை காணும் ஆவலில் தனது கண்களை தானம் செய்துள்ளார் என்பது கூட அவருக்காக அரியலூர் அரிமா சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த பிறகுதான் தெரிகிறது.
மூத்த சங்க உறுப்பினரான ஜனார்த்தனன் ஜி அவகளின் இறுதிச்சடங்கில் நமது RSS ன் பிரார்த்தனா வான " நமஸ்தே சதா வத்சலே.. எனத்தொடங்கும் பாடல் பாடப்பட்டது எனபது நினைவு கூறத்தக்கது.
0 comments:
Post a Comment