பெரம்பலூர், டிச.31:பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள 113-இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(33), சங்கரி(27) தம்பதி. இவர்களுக்கு ராஜவிஷ்வா(7), சுஜிதா(5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜப்பா 4 மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊரு க்கு வந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்று விட் டார். மாமனார்&மாமியாருடன் வசித்து வந்த சங்கரி தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 24ம் தேதி மாலை தனது குழந்தைகளுடன் அரியலூர் மாவட் டம் உடையார் பாளையம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல் வதாக கூறிச் சென்றார்.ஆனால் அவர் கொடுக் கூருக்கு வரவில்லை. இதையடுத்து சங்கரியை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து நேற்று வ.களத்தூர் போலீஸ் நிலையத்தில் சங்கரியின் தந்தை ராஜேந்திரன்(52) புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-தினகரன்.