Wednesday, 25 May 2016

பத்தாம் வகுப்பு தேர்வில் வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்: முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -   450/500. இரண்டாம்...

Tuesday, 24 May 2016

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துள்ளது. மேலும், பல ஏரி,...

Monday, 23 May 2016

பெரம்பலூர் : கோடை கால விடுமுறை முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான பராமரிப்பின்றியும், கேட்பாரற்றும் கிடக்கும் சுற்றுலாத் தலங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் பரப்பளவை குறைவாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியை நம்பியுள்ள விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்கரில்...
பெரம்பலூரில் தமிழ்நாடு பிராமணர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்புகள் மதரசா சாலையில் உள்ள என்.டி.சி.மையத்தில் சனிக்கிழமை மாலை துவங்கியது. இம்மாதம் 30-ந்தேதிவரை தினமும் மாலை 4மணிமுதல் 6மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத மொழி பயிற்றுனர்கள் விஷ்ணு, மஞ்சுளா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும்...