பெரம்பலூரில் தமிழ்நாடு பிராமணர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்புகள் மதரசா சாலையில் உள்ள என்.டி.சி.மையத்தில் சனிக்கிழமை மாலை துவங்கியது.
இம்மாதம் 30-ந்தேதிவரை தினமும் மாலை 4மணிமுதல் 6மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத மொழி பயிற்றுனர்கள் விஷ்ணு, மஞ்சுளா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமானஆனந்த நடேசன் துவங்கி வைத்து பேசும்போது, இந்த பயிற்சியில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், பெரியவர்கள் இருபாலரும் அனைத்து வயதினரும், சமஸ்கிருதம் பயில ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். பயிற்சி துவக்க விழாவில் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சுபிக்ஷா சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment