Friday, 4 April 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரையில் உள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் ரூ.6 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், இந்த உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 16 லட்சம் பேர் பயன் அடைவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பெற்று இப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
முன்தேதியிட்டு கிடைக்கும்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு அதாவது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தனது உத்தரவில் சண்முகம் கூறியுள்ளார்.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுத் தொகை ரொக்கப் பணமாக உடனடியாக வழங்கப்படும். அரசுத் துறைகளில் முழு நேரமாகப் பணியாற்றி, அகவிலைப்படி உயர்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
யார் யாருக்கு பொருந்தும்? உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது, ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல
அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை எழுத்தர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சதம் அடித்த அகவிலைப்படி

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி சதம் அடித்துள்ள நிலையில், இதற்கடுத்து எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது:
அகவிலைப்படி உயர்வானது நூறு சதவீதத்தை எட்டும்போது, அதில் 50 சதவீத அகவிலைப்படியானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவது வழக்கம். அவ்வாறு சேர்க்கப்பட்ட பிறகு அகவிலைப்படியானது 50 சதவீதமாகக் குறையும். இதன்பின்னர், அந்த 50 சதவீதத்தில் இருந்து சிறிது சிறிதாக அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இப்போது அகவிலைப்படி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்ப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் எதையும் வழங்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் முடிவை ஒட்டியே, தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராம ஜென்மபூமி பூமியில் எழுப்பப்பட்டிருந்த மசூதி இடிக்கப்பட்டது திட்டமிடப்பட்ட செயல் என்றும் இதனை கோப்ராபோஸ்ட் நிருபர் ஆஷிஷ் என்பவர் ஸ்டிங் ஆபரேசன் செய்து கண்டுபிடித்தாக அந்த இணையதள பத்திரிகை செய்தி வெளிடப்பட்டுள்ளது. 
http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5789&cid=70 
K.ஆஷிஷ் என்ற ஆஷிஸ் கேதன்
K.ஆஷிஸ் கோப்ரா போஸ்ட் அசோசியேட் எடிட்டர்.
அரவித் கேஜ்ர்வால் ஆஷிஸ் க்காக ஒட்டு கேட்கிறார்.

இந்த ஸ்டிங் ஆபரேசனை நடத்திய ஆசிஷ் என்பவர் தற்போது ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் வேட்ப்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆசிஷ் கேதன் என்பவராவார்.

இந்த செய்தி நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்க சிலநாட்கள் இருக்கும்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஊகித்து அறியலாம்.

எளிதாக சொல்வதென்றால் காங்கிரஸ் தலைவி சோனியா டெல்லி ஜிம்மா மசூதி இமாமை போய் ஆதரவு கேட்டு முஸ்லிம் ஒட்டு பிரிந்துவிடக்கூடாது என்று கூறுவதும். ஆம் ஆத்மி முஸ்லிம் ஓட்டை கவர இந்த செய்தியை பரப்பிவிடுவதும் (உண்மை தன்மை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது........) இவர்களில் யார் தேர்ந்த அரசியல் விபசாரி என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

பெரம்பலூரில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் இன்று மதியம் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான தரேஷ் அகமதுவிடம் வேட்பு மனு விண்ணப்பத்தை தாக்கல்செய்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் எத்ரில் உள்ள IJK தேர்தல் அலுவலகம்.
தொண்டர்கள் அணிவகுக்க
கூட்டணி கட்சியான தே,மு,தி.க தொண்டர்கள்.
மக்கள் வெள்ளத்தில் பாரிவேந்தர்.

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. இந்நிகழ்ச்சியில் மங்கலமேடு துணைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் துணைக் கண்காணிப்பாளர் சுருளியாண்டி, மங்கலமேடு காவல்
ஆய்வாளர் தே. சிவசுப்ரமணியன், குன்னம் காவல் ஆய்வாளர் சிவராஜ், வ.களத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

Thursday, 3 April 2014

பெரம்பலூரில், போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை தலைமைக் காவலர்கள் 2 பேர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் ஆயுதப்படைக் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா, வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடி போதையில், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிடச் சென்றனராம்.
அப்போது அங்கு சாப்பிட வந்த பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த போலீஸார் தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், போலீஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர்கள் பிரம்மா, முத்தையா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

நன்றி-தினமணி.
தேர்தல் பிரச்சாரங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறையாகும். ஆனால் 2G ஸ்பெக்ட்ரம் புகழ் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வ.களத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது சிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவருகின்றனர். இதன் மீது மாற்றுக்கட்சி தொண்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள   ஐஜேகே கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரான பாரிவேந்தர் என்கிற டிஆர் பச்சமுத்து போட்டியிடுகிறார். இதனையொட்டி விறுவிறுப்பான தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ள பச்சமுத்து இன்று (3ம்தேதி) துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரித்துவிட்டு, நாளை(4ம்தேதி) பகல் 12மணிக்குப் பிறகு பெரம்பலூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 

நன்றி-தினகரன்.
பெரம்பலூரில் போதையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கி அவர்களின் மண்டையை உடைத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள்  ஈடுபட்டிருந்தனர். இரவு சரியாக 10.30 மணிக்கு மேல் ஆயுதப்படையைச் சேர்ந்த  தலைமைக்காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா இவர்களுடன் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரும் பெரம்பலூரில் உள்ள நாமக்கல் செல்வம் எனும் ஹோட்டலில் குடி போதையில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது  அந்த ஹோட்டலுக்கு துறையூர் வழியே உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு லாரியில் திரும்பிய 30க்கும் மேற்பட்டவர்களும், அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது லாரியில் வந்தவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த காவலர் முத்தையா  லாரியில் வந்தவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், கல்லால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்துள்ளது.
உறவினருக்கு ரத்தம் வடிவதை பார்த்த மற்றவர்கள், இனியும் விடக்கூடாது என போதையிலிருந்த காவலர்களை நைய புடைந்து விட்டனர். இதில்  தலைமைக்காவலர்கள் பிரம்மாவும், முத்தையாவும் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் மண்டை உடைந்தது. பின்பு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து போய்விட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என  எதுவும் தெரியவில்லை. 

நன்றி-தினமலர்.

Wednesday, 2 April 2014

ராசா குடும்பத்தினருடன்.
நீலகிரி தொகுதியில் 2 வது முறை எம்.பி.,யாக போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா தனக்கு ரூ. 3 கோடியே 61 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் சங்கரிடம் ராசா தனது வேட்பு மனுவை கொடுத்தார். இந்த மனுவில் அவர் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு விவரம் வருமாறு:

அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ; ரூ. 3 கோடியே 61 லட்சம்.

கடன்- 33 லட்சம்,

செலுத்தப் படாமல் உள்ள வரி பாக்கி 25 லட்சம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அசையும் சொத்து;

1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 850 ரூபாய்

மனைவி பரமேஸ்வரி பெயரில் 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாய்.

மகள் மயூரி பெயரில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாய்.

பரபரம்பரை 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாய்.

அசையா சொத்து:

தனது பெயரில் 32 லட்சத்து 85 ஆயிரத்து 375 ரூபாய்

மனைவியின் பூர்வீக சொத்து 14 லட்சத்து, 53, 875 ரூபாய்

பாகப்பிரிவினை செய்யப்படாத பரம்பரை சொத்து மதிப்பு 14 லட்சத்து 53 ஆயிரத்து 875 ரூபாய்.

கடன் விவரம் :

தனது பெயரில் கடன் , 35 லட்சத்து 51 ஆயிரத்து 680 ரூபாய்.

மனைவி பெயரில் கடன் மூன்றரை லட்சத்து 92 ஆயிரத்து 864 ரூபாய்

பரபரம்பரை சொத்தில் கடனாக, 20 ஆயிரத்து 823 ரூபாய்.

இது தவிர வருமான வரி செலுத்துவதில் சில குளறுபடிகள் உள்ளதால் எனது பெயரில் 25 லட்சத்து 52 ஆயிரத்து 260 ரூபாய் நிலுவையில் உள்ளது. பரபரம்பரை சொத்தில் , 3 லட்சத்து 24 ஆயிரத்து 420 ரூபாய் வரி செலுத்தப்டாமல் உள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு டில்லி கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.

நன்றி-தினமலர்.
பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து இன்று காலை 9.35 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி, செங்குணம், கவுல்பாளையம் வழியாக நெடுவாசல் என அடுத்தடுத்த கிராமங்களில் பிரசாரம் செய்தார். 


க.எறையூர் கிராம பிரசாரத்தில் பேசிய பாரிவேந்தர்," தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சக்களத்தி சண்டை போட்டு அனைத்தையும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்"  என குற்றஞ்சாட்டினார்.

அவர் பேசுகையில், ''பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரான நான் உங்கள் முன் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கான தேர்தல் இல்லை. டெல்லி நாடாளுமன்றத்திற்கான தேர்தல், சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஓட்டு போடுங்கள். இது  டெல்லிக்கான தேர்தல் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை மறந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் இங்கு சக்களத்தி சண்டைப்போட்டு தமிழகத்தை குட்டி சுவராக்கி விட்டார்கள்.

அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் அங்கும் சண்டைப்போட்டுக்கொண்டு தமிழகத்துக்கான திட்டங்களை தடுத்து விடுவார்கள். இப்போது உண்மையான போட்டி என்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான். காங்கிரசுக்கு கடந்த 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். ஆனால் காங்கிரஸ் நல்ல திட்டங்கள் ஏதும் கொண்டு வரவில்லை. ஆனால், அதில் ஐந்து வருடம் மட்டும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். தங்க நாற்கரச்சாலை கொண்டு வரப்பட்டது.

அப்படித்தான் பாலைவன மாநிலமான குஜராத்தை சோலைவனமாக மாற்றிய நரேந்திரமோடி, இப்போது பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு உதவியாக என்னையும் டெல்லிக்கு அனுப்பி வைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அப்படி செய்தால் இத்தனை ஆண்டு காலம் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு கல்வி உதவி செய்து வந்த நான், உங்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர உழைப்பேன்'' என்றார்.

நன்றி-https://www.facebook.com/syaanand
       வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் பள்ளிவாசல் முன்பு வாக்குசேகரிக்கும்போது சில இஸ்லாமிய அடிப்படை அமைப்புகளால் தாக்கப்பட்டதும் , வழிபாட்டு தளங்களில் வாக்குசேகரிக்க கூடாது என்ற நடத்தை விதிகளை மீறியதாக கூறி சுதீஷ் மீது  வழக்கு பதிவுசெய்யபட்டது.

      விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் , சிதம்பரம் மக்களைவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான திருமாவளவன்,  சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட , பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த லப்பைகுடிக்காடு பள்ளிவாசலில் இன்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்தார் .
லப்பைகுடிக்காடு பள்ளிவாசலில் திருமாவளவன் வாக்கு சேகரித்த காட்சி
வீடியோ கூட எடுக்கப்பட்டிருக்கிறது.

  இது தொடர்பாக மாற்று கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் என்ன செய்யப்போகிறார்கள் . இது தொடர்பாக சிதம்பரம் மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பட ஆதாரம்- https://www.facebook.com/photo.php?fbid=1487849894767655&set=pcb.1487850344767610&type=1&theater

https://www.facebook.com/photo.php?fbid=1487850144767630&set=pcb.1487850344767610&type=1&theater

https://www.facebook.com/photo.php?fbid=1487850321434279&set=pcb.1487850344767610&type=1&theater

Tuesday, 1 April 2014

தற்போதைய நிலையில், கூட்டணியில், தே.மு.தி.க., மட்டும் தான் களத்தில் இறங்கி, வேகமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த், தன்னுடைய முதல்கட்ட பிரசாரத்தை முடித்து, இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவங்க உள்ளார். இதேபோல், அவரது மனைவி பிரேமலதாவும், தமிழகத்தில் பாதி தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டார். பா.ஜ., கூட்டணி உறுதியாகி, கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், பரபரப்பான பிரசாரத்திற்கான அறிகுறிகளை காணோம், பா.ஜ., சைகையில் பிரசாரம் செய்து வருகிறதா, என்றெல்லாம் கடந்த 30ம் தேதி "தேர்தல் களம்' பகுதியில் கேள்விகளை எழுப்பி இருந்தோம். ஆனால், கூட்டணி கட்சிகள் மீண்டும் அடிபிடிகளில் இறங்கி உள்ளதால், ஒன்றுகூடி தேர்தல் பணியாற்றும் நிலையில் கூட அந்த கூட்டணி இல்லை என, கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் மூலம் தெரியவந்து உள்ளது. இருவரும், பா.ஜ., கூட்டணிக்காக வேறுபாடு பார்க்காமல் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களை கடந்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., போன்ற கட்சிகள், ஏன் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் கூட, அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை தாண்டி, சிறு துரும்பையும் எடுத்துப்போட மறுக்கின்றனர். இதனால் வருத்தமடைந்து இருக்கும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "நாமும், கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வோம்' என்ற முடிவுக்கு, வந்துவிட்டதாக தெரிகிறது. அவருடைய இரண்டாம் கட்ட பிரசார திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தே.மு.தி.க., போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களை தவிர்த்து விட்டார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் நாங்கள் சேருவதற்கு முன்பாக பேச்சுவார்த்தை நடந்த போது; நாங்கள், எங்களுக்கு உரிய மரியாதையை கூட்டணியில் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று, ஆரம்பத்திலேயே சொன்னோம். நாங்கள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டோம். ஆனால், கூட்டணி கட்சியில் இடம் பெற்று இருப்பவர்கள் அப்படி அல்ல. குறிப்பாக, பா.ம.க.,வினர், தமிழகம் முழுவதும், எங்களோடு மட்டுமல்ல, யாரோடும் ஒத்துப் போகாமல் இருந்து வருகின்றனர். புதுச்சேரியில் ஆரம்பித்த பிரச்னை, நாகப்பட்டினம் வரையில் தொடருகிறது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, துடிக்கின்றனர். அது தவறில்லை. அதற்காக, காங்கிரஸ் கட்சியில் சீட் இல்லை என்று, பா.ம.க., பக்கம் வரும் மணிரத்தினம் என்பவரை, வேட்பாளராக்க துடிக்கின்றனர். ஏற்கனவே, அங்கே போட்டியிட அறிவிக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இதை எதிர்க்கின்றனர். இதனால், இன்னும் அங்கு குழப்பம் நீடிக்கிறது. அந்த குழப்பத்தால் தான், எங்கள் தலைவர், அந்த பக்கம் போனபோது, அங்கு பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி கொண்டார். அதேபோல தான், புதுச்சேரியிலும். அங்கே, என்.ஆர். காங்கிரசுக்கு, பா.ஜ., கூட்டணியில் தொகுதியை ஒதுக்கி விட்டனர். புதுச்சேரி முதல்வரும் தன் கட்சி சார்பில், ராதாகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராகவும் அறிவித்து விட்டார். அவர்கள் தனியாக பிரசாரம் செய்து கொண்டிருக்க, பா.ம.க., தரப்பிலும் அனந்தராமன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றனர். இதே நிலைமை நீடித்தால், அந்த தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர், கட்டாயம் தோற்பார். அதேநேரம், பா.ம.க.,வும் தோற்கும். அதுமட்டும் அல்லாமல், கடலூர் தொகுதியை எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய பின், பா.ம.க.,வினர் மீண்டும் அந்த தொகுதிக்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் நெருங்கி விட்டது.

வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தே, மூன்று நாட்கள் ஓடிவிட்டன. இன்னும், அந்த தொகுதிக்காக போராடலாமா? சேலத்தில், சுதீஷ் வேட்பாளராகி விட்டார். ஆனால், ஏற்கனவே பா.ம.க., வேட்பாளராக ராமதாசால், தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட அருள், தொடர்ந்து கூட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். பல இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கான பஞ்சாயத்திலேயே சுதீஷுக்கு பாதி பொழுது போய்விடு கிறது. ஜெயிக்க வேண்டிய சேலமும் கண்டிப்பாக கை நழுவி விடுமோ என, அஞ்சுகிறோம்.
நாகப்பட்டினம் தொகுதியில், பா.ம.க., தரப்பு, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், ம.தி.மு.க.,வும் அதே நிலையில் தான் இருக்கிறது. அவர்கள் இப்படி தொகுதிக்காக எங்களோடு முட்டல் மோதலில் ஈடுபடவில்லை என்றாலும், ம.தி.மு.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்கள் தொகுதிகளுக்கு நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டுமாம். பிறகு எதற்கு கூட்டணி? இவ்வாறு அந்த தே.மு.தி.க., நிர்வாகி கூறினார்.

தே.மு.தி.க.,வின் புகார்கள் பற்றி பா.ம.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க., குறிப்பிடும் பிரச்னைகள் நிஜம்தான். ராமதாசுக்கு கூட்டணியில் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. அதை சரி பண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது சரியாகி அவர், பிரசாரத்துக்கு கிளம்பி விட்டால், எல்லாம் சரியாகி விடும். இந்நிலையில், அவருடைய உடல்நிலையும் சரியில்லாமல் இருப்பதால், விரைந்து எதிலும் முடிவெடுக்க முடியவில்லை. மற்றபடி, எல்லா கூட்டணியிலும் இருக்கும் பிரச்னைகள்தான். சரி பண்ணக்கூடியதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகளிடையே உள்ள பிரச்னைகளை சரி செய்து, அரவணைத்து, வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் பா.ஜ., மவுனம் காத்து வருகிறது. பா.ஜ.,விற்கு வேலூர் மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காததால், அதன் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.
பா.ஜ.,வில் இருக்கும் நாலு தலைவர்களும், ஆளுக்கு ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களும், தங்கள் தொகுதியை விட்டுவிட்டு அடுத்த தொகுதிக்கு வர மறுக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஆளுக்கு ஒரு மூலையாக, தனித்து செயல்படும் முறை கூட்டணியில் இப்படியே தொடர்ந்தால், கூட்டணி அமைத்ததற்கான பலனே இருக்காது என, கூறப்படுகிறது.

நன்றி-தினமலர்.

Monday, 31 March 2014

தேர்தல் விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள், "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டளிப்பதன் அவசியம், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வாங்கக் கூடாது போன்றவற்றை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் சார்பில், ஆறு விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, "யூ டியூப்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் வெளியிடுவதற்காக, தணிக்கை சான்றிதழ் பெற, இந்தப் படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ""தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும், தியேட்டர்களில் திரையிடப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் நேற்று தெரிவித்தார். தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும், இம்மாதம், 24ல் தேர்தல் நடக்க உள்ளது.

நன்ற்-தினமலர்.
v.kalathur வ.களத்தூர் காவ்யா ரவியுடன் அ.தி.மு.க. வேட்பாளர் மருதை ராஜா.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வ.களத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜா வாக்கு சேகரித்தார். அவருடன் வ.களத்தூர் நிர்வாகிகளான காவ்யா ரவி, கண்ணபிரான் மற்றும் பலர்கலந்துகொண்டு வாக்குசெகரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை எறையூர், அயன்பேரையூர், தைக்கால், வி.களத்தூர், இனாம் அகரம், திருவாலந் துறை, வண்ணாரம்பூண்டி, பிம்பலூர், மரவனத்தம், சாத் தனாவாடி, மேட்டு பாளையம் ஆகிய ஊர்களில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வேட்பா ளர் மருதராஜா தீவிரமாக வாக்கு சேகரித்தார்.



கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஆதர்ஷினி கூறியதாவது:லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பிடித்தேன். இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, மார்ச் 22ல், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
லேப் - டாப்பை பிரித்து பொருத்திய, கோவை தனியார் பள்ளி நான்காம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், 'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை' டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.

நன்றி-தினமலர்.

Sunday, 30 March 2014

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன.
நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப் பேச்சில் இருந்தே புரிந்துகொள்ளலாம். அரதப் பழசான  மகாத்மா காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் தேர்தல் பிரச்னையாக்க முயன்றிருக்கிறார் காங்கிரஸின் இளவரசர்.
காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது நீதிமன்றத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், கபூர் கமிஷன் உள்ளிட்ட பல விசாரணை ஆணையங்களில் ஆர்.எஸ்.எஸ். நிரபராதி என்று தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும், இதனை 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுப்பி வருகிறது காங்கிரஸ். தாங்களே நாட்டின் அறிவுஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் முற்போக்குகளும் இதே அவதூறு பிரசாரத்தை பன்னெடுங்காலமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தான் நீதிமன்றத் தீர்ப்புகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறுபவர்கள்! 
இம்ரான் மசூத்.

லோக்சபா தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை இப்போதே கண்டுவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இப்போதே ஜன்னி கண்டுவிட்டது. அதன் விளைவாக ராகுல் மீண்டும் காந்தி கொலைவழக்கு விவகாரத்தை எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால், இதுவரை நடைபெற்றது போலல்லாமல், இம்முறை அதற்கு நல்ல குட்டுப் பட்டிருக்கிறார்.
எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். தன் மீதான அவதூறுப் பிரசாரங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இம்முறை, ராகுலின் அபவாதத்தைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தவிர, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, ராகுலிடம் எந்தச் சத்தத்தையும் காணோம். அநேகமாக, தேர்தல் முடிவத்ற்குல் ராகுல் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கலாம். வழக்கமாக இத்தகைய உளறல்களை அதற்கென்றே தயாரிக்கப்பட்டவரான திக்விஜய் சிங் கொட்டுவது தான் வழக்கம். இப்போது ராகுல், சோனியா வரை உளறல் வியாதி பரவிவிட்டது.
தலையே இப்படி இருந்தால், அதன் வால்கள் எப்படி இருக்கும்? உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் பேசிய முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மோடியை கொல்லப் போவதாகக் கொக்கரித்ததை, ராகுலின் தொடர்ச்சியாகவே காண வேண்டும். உ.பி.யின் சஹரான்பூரில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மசூத் தான் இவ்வாறு முட்டாள்தனமாகவும் வெறித்தனமாகவும் உளறியவர். உளறல் திலகம் திக்விஜய் சிங்கே இம்ரானைக் கண்டித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
குற்றப் பின்னணி:
இந்த இம்ரான் மசூத் காங்கிரஸ் வேட்பாளரானது எப்படி என்று படித்தாலே தலை சுற்றும்! நடப்புத் தேர்தலில் கொலை மிரட்டலுக்காக கைது செய்யப்பட்டுள்ள முதல் வேட்பாளரின் பின்னணி குறித்து அறியாமல் இருக்கலாமா? இதோ அவரது சிறப்புக் குறிப்பு…
இந்த இம்ரான் மசூத் மீது உ.பி.யில் மட்டுமே பல குற்றவியல் வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெருமைக்குரியவர் இவர். காங்கிரஸ் கட்சிக்குத் தோதான வேட்பாளர் தான்.
இவரது மாமா ரஷீத் மசூத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஊழல் குற்றத்திற்காக  சிறைத்தண்டனை பெற்றதற்காக, முதன்முதலாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரஷீத் மசூத். திரிபுரா மருத்துவக் கல்லூரியில் தகுதியில்லாத மாணவர்களை பணம் பெற்றுக்கொண்டு சேர்த்துவிட்ட ஊழல் வெளிப்பட்டு, அதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2013-ல் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ரஷீத். அதையடுத்து காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது. அவரது சகோதரர் மகன் தான், மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இம்ரான் மசூத். 
ரஷீத் மசூத்

லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் கட்சிகளில் அரசியல் செய்து அலுத்த ரஷீத் மசூத், பிற்பாடு முலாயமின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் லோக்சபா உறுப்பினரானார். அங்கிருந்து 2011-ல் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற சட்டசபைத் தேர்தலின்போது தாவிய ரஷீத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளித்து அழகு பார்த்தது காங்கிரஸ். தனது மாமாவுடன் அப்போது காங்கிரஸில் அடைக்கலம் புகுந்தவர் தான் இம்ரான் மசூத்.
ஆனால், தனக்கு காங்கிரஸில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, மீண்டும் சமாஜ்வாதிக்குத் தாவினார் இம்ரான். அங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் பெஹித் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். இன்னிலையில், ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த ரஷீத்தும் மீண்டும் சமாஜ்வாதிக்கு இடம் பெயர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி அவரைச் சேர்த்துக்கொண்டு மதச்சார்பின்மையைக் காத்தார் முலாயம்.
முதலில் சஹரான்பூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக இம்ரான் மசூத் தான் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரஷீத் மசூத்தின் நிர்பந்தத்தால், அவரை மாற்றிவிட்டு, அவரது மகன் ஷாஜன் மசூத்தை வேட்பாளராக்கினார் முலாயம்.  சகோதரர் மகனைவிட சொந்த மகன் தானே ஜனநாயகத்திற்கு முக்கியம்? சிறைத் தண்டனை பெற்ற ரஷீத் மசூத் தேர்தலில் சஹரான்பூரில் போட்டியிட முடியாவிட்டால், அவரது சொந்த மகன் அங்கு போட்டியிடுவது தானே மதச்சார்பின்மை நியாயம்?
திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டவுடன் கொந்தளித்த இம்ரான் மசூத், மீண்டும் காங்கிரஸ் முகாமில் சேர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி மீண்டும் அவரை சேர்த்துக் கொண்டார் ராகுல். அவரையே சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவித்தார். அதாவது, ஒரே தொகுதியில் ரஷீத்தின் மகனும் சகோதரர் மகனும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகிறார்கள். எவர் வென்றாலும் குடும்பத்தில் ஒருவர் எம்.பி!
ஆனால், காலம் ரஷீத் மசூத்தை விட புத்திசாலித்தனமானது. இப்போது வீசும் மோடி அலை, சஹரான்பூர் இஸ்லாமிய வாக்குவங்கியை அடித்துக்கொண்டு போய்விடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஏற்பட்ட பதற்றமே, இம்ரானின் கொலை மிரட்டலில் வெளிப்பட்டிருக்கிறது. தவிர இஸ்லாமிய வாக்குகளை அள்ளுவதில் ஏற்பட்ட போட்டியும் அவரை ஆத்திரக்காரராக மாற்றிவிட்டது.
மார்ச் 28-ல் தனது தொகுதியில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய இம்ரான் மசூத், தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் பேசியதன் சாராம்சம் இது:
“உத்தரப்பிரதேசத்தை குஜராத் போலக் கருதுகிறார் மோடி. குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரப்பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டு விடுவேன். நான் தெருவிலிருந்து வந்தவன். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்…” என்று பேசினார்.
இந்தத் திடுக்கிடும் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது உள்ளூர் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய குறுந்தகடு சஹரான்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தியா திவாரிக்கு கிடைத்தது. அவர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, உள்ளூர் போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்து, மார்ச் 29, அதிகாலையில் கைது செய்தனர்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின்கீழ், இரு தரப்பினரிடையே பகைமை உணர்வைத் தூண்டுதல், வன்முறை, மத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  மத நம்பிக்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துதல்,  குற்றம் செய்யும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ், இம்ரான் மசூத் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மசூத் மீது பாய்ந்துள்ளது.
பல்டி மன்னர்கள்:
இதனிடையே தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரசாரச் சூட்டில் அப்படிப் பேசிவிட்டேன். தேர்தல் காலத்தில் இவ்வாறு நான் (மற்ற சமயத்தில் பேசலாமா?) பேசியிருக்கக் கூடாது. நான் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார்.ஆனால், கைதான உடனே தியாகிப் பட்டம் பெற வேண்டி, “நான் தவறுதலாக எதுவும் பேசவில்லை. இது எல்லாமே பாஜக-வின் சதி. இதற்காக மோடியிடம் நான் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை” என்று இம்ரான் மசூத் கூறி இருக்கிறார். 
இம்ரான் மசூத் கைதாகியுள்ளதால், அங்கு மார்ச் 29-ல் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த ராகுல் தனது பிரசாரத்தை ரத்து செய்வதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சஹரான்பூர் வந்த ராகுல், இம்ரான் மனைவியுடன் அதே மேடையில்  ‘கர்ஜனை’ செய்தார்.  வெறுப்பூட்டும் பேச்சுக்களை காங்கிரஸ் விரும்புவதில்லை என்று பெரும்போக்காகக் கூறிய ராகுல்,  இம்ரான் பேச்சுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால்,  சஹரான்பூர் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்தை ராகுல் உடனடியாக மாற்றியிருக்க வேண்டுமே?
இப்போது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் உ.பி. மக்களுக்கு புலப்படத் துவங்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 40-க்கு மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் 40 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர். அவர்களது வாக்குகளை கபளீகரம் செய்ய அக்கட்சி எந்த அளவிற்கு தரம் தாழவும் தயாராக உள்ளது. ஆனால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸின் இப்போக்கு இந்து மக்களை பாஜக-வுக்கு சாதகமாக ஓரணியில் தானாகவே திரட்டிவிடும் என்பதை முட்டாள் இளவரசர் உணராமல் இருக்கிறார்.
கடநத 6 மாதங்களாகவே, காங்கிரஸின் துஷ்பிரசாரம் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகளை ராகுலின் மதச்சார்பினமி குருவான திக்கிராஜா பரப்பிக்கொண்டே இருக்கிறார். மோடியின் பால்ய மணத்தை பற்றியும் கூட விவாதிக்கப்பட்டது. இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக பிரச்னை எழுப்பியும் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மோடியை டீக்கடைக்காரர் என்று ஏளனம் பேசியது. இவை அனைத்துமே காங்கிரஸுக்கு எதிர்மறையான பலன்களையே தந்தன.
சென்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது மோடியை  ‘மரண வியாபாரி’ என்று விமர்சித்தார் சோனியா. கர்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய சோனியா, தேர்தலுக்காக விஷவிதைகளை பாஜக தூவுவதாகவும் குற்றம் சாட்டினார். இப்போது மரண வியாபாரி யார் என்பதும், விஷவிதை தூவும் கட்சி எது என்பதும் இம்ரான் மசூத் மூலமாக அம்பலமாகிவிட்டது.
இந்தத் தேர்தல் களம், மோடி ஆதரவு- மோடிக்கு எதிர்ப்பு என்று இருகூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒருபுறம் மோடியின் அபார சாதனைகள் பிரசாரம் செய்யாமலே மக்களை ஈர்க்கின்றன. மறுபுறம், மோடியின் பிராபல்யத்தால் நடுங்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட மதச்சார்பின்மை வியாதி கட்சிகள் மோடியின் புகழைக் குலைக்க அவதூறுப் பிரசாரங்களை அள்ளித் தெளிக்கின்றன. 2002 குஜராத் கலவரத்தை இஸ்லாமியர்கள் மறந்தாலும் இவர்கள் மறக்க விட மட்டார்கள்.
இத்தனைக்கும் குஜராத் கலவரங்களில் அம்மாநில முதலவராக இருந்த நரேந்திர மோடிக்கு எந்தப் பங்கும் கிடையாது எனப் பல ஆணையங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்திவிட்டன. குஜராத் கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 250-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதையோ (கலவரத்தை மோடி வேடிக்கை பார்த்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா?), சபர்மதி ரயில் எரிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 59 கரசேவகர்களைப் பற்றியோ இக்கட்சிகளுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.
இத்தனையையும் செய்துவிட்டு,  “வெவ்வேறு மதத்தினரிடையே மோதலை ஊக்குவிக்கும் வெறுப்பு அரசியலை பாஜக கட்டவிழ்த்துவிடுகிறது” என்று பேச ராகுலுக்கு எத்துணை துணிவு வேண்டும்? மண்டபத்தில் யார் எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே மேடையில் படிக்கலாமா ராகுல்?
கடந்த சனிக்கிழமை (மார்ச் 29) கூட, பிரதமர் மன்னுமோகனார் அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் பாஜக-வால் ஒருபோதும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது” என்று கூறி இருக்கிறார். என்ன நெஞ்சழுத்தம்! எல்லாப் பிளவு அரசியலையும் செய்துவிட்டு, அதையே எதிரணி மீது தூக்கிப் போடுவது  எவ்வளவு  மோசமான தந்திரம்? இந்த மன்னுமொகனைத் தான் எந்த அரசியலும் தெரியாத அப்பாவி என்று செய்தி வாசிக்கின்றன ஊடகங்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெல்லவும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் நடத்தும் இத்தகைய நாடகங்கள் தான், சமுதாயத்தில் ஆழமான பிளவை உருவாக்குகின்றன. இதை இஸ்லாமியர்கள் உணரத் துவங்கிவிட்டனர் என்பதையே, பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்,  மஹாராஷ்டிராவின் அனைத்திந்திய ஹஜ் கமிட்டி தலைவர் சலீம் ஜக்காரியா உள்ளிட்டவர்கள் பாஜக-வில் சேர்ந்துள்ளது காட்டுகிறது.
ஆனால், படிப்பறிவற்ற, வறுமை நிலையில் தவிக்கும் முஸ்லிம் மக்களை செக்யூலர் அரசியல்வாதிகளின் பொய்யான பிரசாரம் திசைதிருப்பிவிடும் வாய்ப்பு உள்ளது. அவர்களை நம்பித்தான் இப்போது செக்யூலர் படை தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறது.
ஏற்கனவே, மோடியைக் கொல்லத் திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நால்வர் (மார்ச் 23) ராஜஸ்தானிலும்,  மேலும் இருவர் உ.பி.யின் கோரக்பூரிலும்  (மார்ச் 27) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த விழைவோருக்கு தூண்டுகோலாக இருக்கின்றன, செக்யூலர் பித்தலாட்டக்காரர்களின் மாய்மாலங்கள். சேலத்தில் மசூதி ஒன்றின் முன்பு வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் சுதீஷை, திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் திட்டமிட்டு தகராறு செய்து துரத்தியுள்ளது (மார்ச் 28), இதற்குத் தகுந்த உதாரணம்.
இந்த நேரத்தில் மோடி ஆதரவாளர்களும், பாஜக கூட்டணியினரும் நிதானம் காப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இன்னதென்று தெரிந்தே தான் தவறு செய்கிறார்கள். தோல்விமுனையில் இருக்கும் அவர்களுக்கு, இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, வெற்றிச் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.
இப்போது அவர்கள் தங்கள் பொய்முகங்களை தாங்களாகவே தோலுரிக்கிறார்கள். அதை மட்டும் மக்களிடம் பிரசாரம் செய்தாலே-நாட்டு மக்களை கூறுபோட்டு அரசியல் நடத்த முயலும் எத்தர்களை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டினாலே- போதும். இனிமேலும் அவதூறுப் பிரசாரங்களினாலும், மிரட்டல் அரசியலாலும் இந்திய மக்களை முட்டாளாக்க முடியாது. 16-வது லோக்சபா தேர்தல் முடிவு அதை நிச்சயம் காட்டும்.
ஒட்டுமொத்த தமிழகத்திலும் அம்மா அலை வீசுவதாக ஊடகங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில்தான் இந்தக் கூட்டணி அமைந்து, அனைவரையும் யோசிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில் பல மாதங்களாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட ஒரு குழு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் பாஜக தலைவர்கள் கொண்ட முனைப்பு போலவே அதன் நண்பர்கள் குழாம் மேற்கொண்ட உழைப்புக்கும் பங்கிருக்கிறது.
இந்தக் கூட்டணி ஒருமாதம் முன்னதாக அமைந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தானே வைத்திருக்கிறான்? எந்த முயற்சியும் காலமும் இடமும் பொருந்தாவிடில் வெற்றிபெறாது.  பாஜகவின் தொலைநோக்கிலான கூட்டணி முயற்சி கனிந்துவர சில காலம் தேவைப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்திற்கான முழுக் காரணமும் பாஜகவையே சாரும். எவ்வாறு கூட்டணிக்கு பாஜக காரணமோ, அதேபோல அதன் தாமதத்திற்கும் பாஜக தான் காரணம்.
தேசியக் கட்சியான பாஜக மாநிலத்தில் தன்னை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தால், இந்தக் கூட்டணி சற்று முன்னதாகவே சாத்தியமாகி இருக்கும். ஆனால், பாஜக தமிழகத்தில் இன்னமும் வளர வேண்டியுள்ளது. இப்போதைய கூட்டணி பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் அதிவிரைவான வளர்ச்சியால் தான் சாத்தியமாகி இருக்கிறது. பாஜகவை நெருங்க விழையும் கட்சிகள் தங்களுக்கு அதனால் லாபம் என்ன என்று சிந்திப்பது இயற்கை. அதற்கான தூண்டுதலை மோடியின் பிராபல்யம் அளித்தது.
ஆனால், மாநில பாஜக-வில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தன. ஒருதரப்பு திமுகவுடன் சேர்ந்தால் சிரமமின்றி 10-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும் என்றது. இன்னொரு தரப்பு அதிமுகவுடன் சேர்ந்தால் அதிகபட்ச லாபம் இருக்கும் என்றது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் ஜனநாயக ரீயிலான ஒரு கட்சியில் இருக்கவே செய்யும். தவிர, தேசியத் தலைமையின் வழிகாட்டுதலுடன் தான் எந்த ஒரு முடிவையும் மாநிலத் தலைமை எடுத்தாக வேண்டிய நிலைமை. அவர்களோ ஆரம்பத்தில் சிரமமில்லாத கூட்டணி அமைக்க முடியுமா என்றே சிந்தித்தார்கள்.
இந்த சமயத்தில் தான் பாஜக-வின் நலம் விரும்பும் நண்பர்கள் குழு, பாஜக தமிழகத்தில் மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தது. அதேசமயத்தில் காந்தீய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் இக்கருத்தை பொதுமேடைகளில் பேசத் துவங்கினார். பாஜக-வின் நண்பர்கள் மாநிலத் தலைவர்களுடனான் சந்திப்புகளில் மாற்று அணியின் சாத்தியக் கூறுகளை விவாதிக்கத் துவங்க, அதற்கான கரு உருவாகத் துவங்கியது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்.
பாஜக-வின் மாநிலத் தலைமை தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளின் கூட்டணிக்கு ஆயத்தமானது. தமிழருவி மணியன் பாஜக-வின் தன்னிச்சையான தூதுவராக மதிமுக, தேமுதிக, பாமக தலைவர்களைச் சந்தித்து மாற்று அணியின் அவசியம் குறித்து பேசிவந்தார். இதில் முதலில் மதிமுக-விடம் இருந்து சாதகமான பதில் வந்தது. அதன் தலைவர் வைகோ தில்லி சென்று பாஜக உயர்தலைவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டார்.
ஆனால், தேமுதிக, பாமக-வை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆசைகாட்டுதல்கள், அன்பான எச்சரிக்கைகள், தனிப்பட்ட தொடர்புகளால், பாஜக பக்கம் இவ்விரு கட்சிகளும் நெருங்கத் தாமதம் ஆனது. மறுபுறம் திமுக-வும் தேமுதிக-வுக்கு வலைவீசி வந்தது. தேர்தல் அரசியல் பலகோடிகள் புரளும் வியாபாரமாகிவிட்ட சூழலில், கூட்டணி அரசியல் சார்ந்த முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, தேமுதிக, பாமக இரு கட்சிகளும் மாநிலத்தின் பல பகுதிகளில் சமபலத்துடன் உள்ள கட்சிகள். பாமக தலைவர் ராமதாஸ்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருவருக்கும் நல்லுறவும் இல்லை. இந்தச் சூழலில் அவர்களை ஒரே அணியில் இணைக்கும் முயற்சி சவாலானதாக இருந்தது.
ஆனால். பாமக தலைவரின் மகன் அன்புபுமணியும், தேமுதிக தலைவரின் மனைவி பிரேமலதாவும் தமிழக அரசியல் நிதர்சனத்தையும் பாஜக-வுடன் சேர்வதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தனர். அதனால் தான் ஆறு மாதம் பாடுபட்டதற்கு மார்ச் 20-ல் பலன் கிடைத்தது. தனித்தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த மதிமுக-வும் பாமக-வும் பாஜக பக்கம் வருவதற்கு, அக்கட்சிகளின் முந்தைய கூட்டணி அனுபவமும் ஒரு காரணம். வாஜ்பாய் தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடந்தபோது (1998- 2004) இக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், இப்போதும் பாஜக தலைவர்கள் காட்டிய பெருந்தன்மையும் அவர்களை இயல்பாக தோழமைக் கட்சிகளாக்கின.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பல்வேறு ஜாதி சமுதாயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த நடத்திய சமூக நல்லிணக்க மாநாடுகளில் பங்கேற்ற பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பாஜக-வின் தொடர்பு எல்லைக்குள் வந்திருந்தார்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், பாமக-வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போன்ற பலரது தொடர்பு இப்போது கூட்டணி அமைய உதவியது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனான தனிப்பட்ட நட்புறவைக் கொண்டிருந்த பாஜக நண்பர்களின் உதவியும் இதற்கு மிகவும் பயன்பட்டது. சுதேசி இயக்கத் தலைவர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பலரது தனிப்பட்ட முயற்சிகளுக்கு கூட்டணியின் உருவாக்கத்தில் பெரும் பங்குண்டு.
இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் குழு விடாமுயற்சியுடன் பாடுபட்டது. கூட்டணிக்கு வரச் சம்மதிக்கும் ஒவ்வொரு கட்சியின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து, அவர்களின் நம்பிக்கையை இழக்காமல், அதேசமயம் அவர்களது நிர்பந்தங்களையும் புரிந்துகொண்டு நிதானமாக பாஜக குழு இயங்கியது. அதன் பலன் அழகிய  கூட்டணியாக இப்போது மலர்ந்திருக்கிறது. இதனை வெற்றிக் கூட்டணியாக்குவது இனிவரும் நாட்களில் கூட்டணித் தோழர்களின் உழைப்பில் தான் உள்ளது.
கூட்டணியில் இணைவது என்று மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துவிட்டாலும், எந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற கேள்வி அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்ற முறையிலும், மக்களிடையே உள்ள விஜயகாந்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலும், தேமுதிக-வுக்கு 14 தொகுதிகள் என்று முடிவானது.
அடுத்து ஏற்கனவே சமுதாய அமைக்களை ஒருக்கிணைத்து இயங்கிவந்த பாமக-வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தேமுதிக-வுக்கு அளித்த அதே எண்ணிக்கையில் தனக்கும் தொகுதிகள் வேண்டும் என்றது பாமக. இந்தக் கோரிக்கையால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியானது. கூட்டணியின் சாதக பாதகங்களை விளக்கி, இறுதியில் பாமக-வுக்கு 8 தொகுதிகள் என்ற முடிவுக்கு ஒருவாறாக சம்மதம் பெறப்பட்டது.
பாஜக-வின் இயல்பான நண்பராக இருந்த வைகோ, அரசியல் சூழலின் கட்டாயங்களை உணர்ந்து எந்த கெடுபிடியும் இன்றி 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பார்வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதிக்கு சம்மதித்தன. மீதமிருந்த (தமிழகம் மற்றும் புதுவை) 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடத் தீர்மானித்தது.
ஆக, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகிவிட்டது. இக்கூட்டணியின் தலைவர்களான வைகோ, விஜயகாந்த், ராமதாஸ்  ஆகியோர் மாநிலம் அறிந்த தலைவர்கள். இவர்களது மோடிக்கு ஆதரவான பிரசாரம் பாஜக கூட்டணிக்கு மிகவும் தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
தொகுதிகளின் எண்னிக்கை இறுதி செய்யப்பட்டாலும், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதைத் தீர்மானிப்பது அடுத்த சவாலாக இருந்தது. கூட்டணியின் லாபத்தைப் பெறுவதிலும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதிலும் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் முனைவது இயற்கையே. இதில் ஒவ்வொரு கட்சியும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து இறுதியில் சமரசம் கண்டன. ஊடகங்களின் ஏளனமான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் தாண்டி, பொறுமையுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது பாஜக. இப்போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளும் பாஜக தலைமையிலான கூட்டணியால் அதிர்ந்து போயிருப்பதாகத் தகவல்.