பெரம்பலூரில், போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை
தலைமைக் காவலர்கள் 2 பேர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் ஆயுதப்படைக் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா, வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடி போதையில், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிடச் சென்றனராம்.
அப்போது அங்கு சாப்பிட வந்த பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த போலீஸார் தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், போலீஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர்கள் பிரம்மா, முத்தையா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
நன்றி-தினமணி.

0 comments:
Post a Comment