Saturday, 22 March 2014

மாதிரி விடைத்தாள்
26-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 26-ந் தேதி (புதன் கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள் 4 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 416 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான வினாத் தாட்கள் அனைத்தும் சிறப்பு அலுவலர்கள் மூலமாக அனைத்து தேர்வு மையங் களுக்கும் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் வாகனங்களில் எடுத்து சென்று வழங்கப்பட உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
மாவட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் இருப்பு மையங்களுக்கும் விடைத்தாள் இருப்பு மையங்களுக்கும், தலா 2 போலீசார் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை துணை- கலெக்டர் மதுசூ தனன் ரெட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்வார் கள்.
புகைப்படத்துடன் விடைத்தாள்
தேர்வு எழுதுவோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விடைத்தாள்கள் இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. மாணவ -மாணவிகளின் பெயர் பதிவு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.
தனித் தேர்வர்கள் தங்களது தேர்வு மைய நுழைவுச்சீட்டை வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகள் முறைகேடுகள் இன்றி நடக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளது. தேர்வு மையங் களின் அருகே ஒலிபெருக்கி தேவையற்ற சப்தம் போன்ற வற்றால் ஏற்படும் இடையூறு களை உடனுக்குடன் களையவும் போதிய பாதுகாப்பு வசதி செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள்
மேலும் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிமலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நேரடியாக விண்ணப்பித்த தனித்தேர்வர் களும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தட்கல் முறையில் விண்ணப் பித்த தனித் தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுத வுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி-தினத்தந்தி.

Friday, 21 March 2014

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மற்றும் IJK நிறுவனர் பாரிவேந்தர் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் மார்ச்-23 ஞாயிற்றுக்கிழமை மாலை பெரம்பலூர் வருகிறார். ஒன்று கூடுவோம் உறவுகளே......
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், .தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்போம் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் என்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம்' என்றும் கூறினார்.
மேலும் கூறியதாவது:  கன்னியாகுமரியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள்.. அந்த மீனவர்களின் நலனுக்காக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி இதுவரை ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவில்லை.
அதேபோல், இங்கு ரப்பர் தோட்ட தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, இதுவரை மாறி மாறி ஆட்சி செய்துவரும அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எந்த நன்மையும் செய்யவில்லை. இங்கே பட்டா உள்ள நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்குகூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது என்றார்.

நன்றி-தினமணி
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சுமுகமாக நடத்ததுவதற்கான ஏற்பாடுகைள தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. தேர்தலுக்கு முந்தைய நாளானா 23–ந்தேதியும் வாக்குப்பதிவு  நாளானா 24–ந்தேதியும் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்க  வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதனை ஏற்று  ஏப்ரல் 23, 24–ந்தேதிகளில் மதுபானம் விற்க தமிழகம் முழுவதும் தடைவிதித்தது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 16 ஆம் தேதியும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நன்றி-தினமணி
பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் வரை பல்வேறு விதமான தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்களைப் பெறலாம். -டெக்ஸ்ட்வெப்- நிறுவனம் சார்பில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக 51115 என்ற எண்ணுக்கு என்ன விதமான தேர்வுக்கான மாதிரி வினா வேண்டும் என்பதை எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும். அதன்பிறகு, மாதிரி வினா எஸ்.எம்.எஸ்ஸில் வரும். அந்த வினாவுக்கு பதிலளித்தவுடன், நாம் விரும்பினால், அடுத்தக் கேள்வியும் எஸ்.எம்.எஸ்ஸில் வரும் என டெக்ஸ்ட்வெப் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஸ்ரீவித்யா ராமநாதன் கூறினார்.
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு @10board எனவும், பிளஸ் 2 வகுப்புத் தேர்வுக்கு 12board எனவும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு @upsc எனவும் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். குறுகிய கால சிறப்புத் திட்டங்களிலும் மாணவர்கள் சேரலாம். மொத்தம் 15 நாள்களுக்கு ரூ.15 என்ற கட்டண விகிதங்களில் இந்தத் திட்டங்கள் உள்ளன. இதில் சேருவோர் அந்த குறிப்பிட்ட நாள்களில் எத்தனை எஸ்.எம்.எஸ். வேண்டுமானாலும் கட்டணமின்றி அனுப்பலாம் என ஸ்ரீவித்யா ராமநாதன் கூறினார்.
ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், டாடா ஆகிய நிறுவனங்களின் செல்போன் இணைப்பு பெற்றவர்கள் மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ். சேவையைப் பெற முடியும். மேலும் பல நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் சேரும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களோடு பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரத்து 700 விதமான சேவைகளையும் எஸ்.எம்.எஸ். மூலம் பெறலாம். கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கவும், நகைச்சுவைகளைப் பரிமாறிக்கொள்ளவுமே இந்த எஸ்.எம்.எஸ். சேவையை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

நன்றி-தினமணி

Thursday, 20 March 2014

தமிழக பா.ஜ., கூட்டணியில் ஐ.ஜே.கே., கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் சார்பில், அதன் நிறுவனர் பச்சமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ., தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று வெளியிட்டார். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8; ஐ.ஜே.கே., 1; கேஎம்டி கட்சி 1 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு விபரம்:
தேமுதிக: திருவள்ளூர், மத்திய சென்னை, வட சென்னை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.: தென்சென்னை, நீலகிரி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.,விற்கு அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக.,: காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், ஸ்ரீபெரும்பதூர், தூத்துக்குடி, தென்காசி, ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர் தொகுதி .
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினமலர்.

Wednesday, 19 March 2014

mariammankovil

 vkalathur வ.களத்தூரில் ஒவ்வொருமுறையும், சுவாமி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு கொடுப்பது வழக்கமான ஒன்று. இந்த நடைமுறை வ.களத்தூரில் மட்டும் நடக்கிறது என்று கருதினால் நம்மைவிட முட்டாள்கள் வேறு இல்லை. இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் இந்த அராஜகம் அரங்கேறுவது வழக்கமாகிவிட்ட ஒன்று... இதோ சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த இஸ்லாமிய அராஜகம்......


பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் திருவிழாவை திருப்பூர், கோவை உட்பட நான்கு மாவட்ட மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த விழா 22 நாட்கள் நடைபெறும். அதில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தேரோட்டம் மூன்று நாட்களும், அப்பகுதி இந்துப் பெண்கள் திருவோடு எடுக்கும் நிகழ்வு 5 நாட்களும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் பெண்கள் திருவோடு எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். இந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் பிப்ரவரி 18 2014ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி மார்ச் 4 2014ம் தேதியிலிருந்து பெண்கள் பகுதிவாரியாக திருவோடு எடுக்கும் நிகழ்வும் தொடங்கியது.

mariammankovil thiruvodu

பொள்ளாச்சி மாரியம்மன் தேர்திருவிழா சமயத்தில் சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி மற்றும் அதனருகே அமைந்துள்ள பகுதி இந்துக்கள் காலங்காலமாக திருவள்ளுவர் வீதி வழியாக ஊர்வலத்தை நடத்திச் சென்று கோவிலை அடைந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த ஊர்வலமானது இரவு நடைபெறும். வழக்கம் போல் இவ்வருடமும் கடந்த 09.03.2014, ஞாயிற்றுக்கிழமை இரவு சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி மற்றும் அதனருகே அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி திருவோடு எடுத்து கோவிலை நோக்கி திருவள்ளுவர் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தினத்தன்று (09.03.2014) திருவள்ளூர் வீதியில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக அந்த வீதியை ஆக்கிரமித்து சாமியானா போடப்பட்டிருந்து. அன்று இரவு இவ்வீதி வழியாக ஊர்வலம் செல்லும் என்று அறிந்திருந்தும் ஊர்வலத்தை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் காலையிலேயே தன் வீட்டு நிகழ்வு முடிந்திருந்தும் வேண்டுமென்றே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சாமியானவை கழற்றாமல் வைத்திருந்தார் அந்த அராஜக எண்ணம் படைத்த இஸ்லாமியர். இதை அறியாத இந்து மக்கள் எப்பொழுதும் போல் திருவோடு எடுத்துக்கொண்டு வழக்கமான தங்கள் ஊர்வல பாதையான திருவள்ளூர் வீதியை அடைந்த போது ஊர்வலம் செல்ல வழியில்லாமல் சாலை ஆக்கிரமித்திருந்தைக் கண்ட இந்துக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளரான இஸ்லாமியரிடம் ஆக்கிரமிப்பை அகற்றும்படி கோரினர். ஊர்வலத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடன் அந்த இஸ்லாமியர் இந்துக்களை வேறுவழியாக சுற்றிச்செல்லும்படியும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது எனவும் பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு திடுக்கிட்ட இந்துக்கள் காலங்காலமாக நாங்கள் செல்லும் இந்த ஊர்வலப்பாதையை மாற்ற முடியாது இவ்வழியே தான் செல்லுவோம் என்று கூறி திருவோடுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதற்கிடையில் அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகையை முடித்துவிட்டு வந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் இந்து மக்களிடையே வாக்குவாதம் நடத்தி இவ்வழியே ஊர்வலம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று பிரச்சினையில் இறங்கி இந்துக்களைத் தாக்க தொடங்கினர். அங்கு ஒரு கலவர சூழல் உருவானது.

polio-013. 1
என்ன நடந்தாலும் சரி எங்கள் பாரம்பரிய ஊர்வலப் பாதையை மாற்றிக்கொண்டு எங்களால் வேறு வழியாக செல்லமுடியாது என்று கூறி இந்துக்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சாலையில் அமர்ந்து போராடினர். இதையறிந்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ”சாலையை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்தி ஊர்வலத்தை தடுப்பது சட்டப்படி குற்றம். ஆக்கிரமிப்பை அகற்றி வழிவிடவேண்டும்” என வற்புறுத்தி இந்துக்களுக்கு பாதுகாப்பளித்து ஊர்வலத்தை அனுமதித்தனர். ஆனாலும், அராஜக இஸ்லாமியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து ஊர்வலத்தில் அம்பிகையின் நாமத்தை இந்துக்கள் பக்தியுடன் கோஷம் போட்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஊர்வலம் பாரம்பரிய வழியாக செல்வதற்காவது அனுமதியளித்தனரே என்று இந்துக்களும் அமைதியுடன் ஊர்வலத்தை நடத்தி சென்றனர். இந்த அடிப்படைவாத முஸ்லீம்களின் அடாவடியால் இரவு ஒன்பது மணிக்கு மாரியம்மன் கோவிலைச் சென்றடைய வேண்டிய திருவோடு ஊர்வலம் தாமதமாகி நள்ளிரவு 1.40 மணிக்கு மாரியம்மன் கோவிலைச் சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நாம் உள்ளூர் பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, இந்த ஊர்வலத்தை சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் SDPI அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் செயல்பட்டுள்ளார்கள். இதே போல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதும் பிரச்சினை செய்தார்கள் என்று கூறினார். மேலும், அவர் கூறுகையில் இந்த பிரச்சினையின் போது சில முஸ்லீம்கள் சாலையில் அமர்ந்திருந்த பெண்களை மோசமாக திட்டியதாகவும் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட இரு பிரிவினரின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென பேச்சுவார்த்தைக்கு வந்ததிருந்த இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அலுவலகத்திலேயே தொழுகையில் ஈடுபட, அதைக்கண்டு வெகுண்ட இந்துக்களும் தனியே சென்று பிரார்த்தனைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அதிகாரிகள் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீதும் மூன்று பிரிவுகளில் (506/1,448,353) வழக்கு பதிந்துள்ளனர். இந்த சமாதான பேச்சுவார்த்தையின்போது இனி மசூதி இருக்கும் தெருவின் வழியே இந்துக்களின் எந்த ஊர்வலமும் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருப்பதாக உள்ளூர் பிரமுகர் ஒருவர் நம்மிடையே கூறினார். 

சென்ற ஆண்டும் இது போலவே இஸ்லாமியர்கள் தடையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் அவ்வாறே திட்டமிட்டு கலவரம் செய்கின்றனர். இந்த கலவரத்தை வாடிக்கையாக்கி கோவில் திருவிழாவை முடக்குவதற்காக உள்ளூர் இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக பல தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் பெருகி வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வெளிப்பாடே இந்த சம்பவம் என்றார் சமூகவியல் ஆராய்ச்சியாளர் திரு. ஹரிபிரசாத். 

இந்த சம்பவம் எழுப்பும் கேள்விகள்:
  • சட்ட விரோதமாக சாலையை ஆக்கிரமித்து பந்தல் போட்ட இஸ்லாமியர் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?
  • காரணமேயில்லாமல் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி கலவர சூழலை உருவாக்கிய இஸ்லாமியர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
  • இப்போது ஊர்வலம் சென்றிருந்தாலும் வரும் காலங்களில் அந்தப் பகுதி மக்கள் அதே தெருவில் ஊர்வலம் செல்லத்தடையில்லை என்ற உத்திரவாதம் அதிகாரிகளால் ஏன் வழங்கப்படவில்லை??

இது போல் சம்பவங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த வண்ணம் உள்ளது. அரசாங்கமும், அதிகாரிகளும் இம்மாதிரி சம்பவங்களில் தங்கள் நடுநிலைத் தன்மையிலிருந்து விலகி போலி மதச்சார்பின்மை பேசி சிறுபான்மையினரின் அராஜகத்திற்கு ஆதரவாக செயல்படுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் வாழும் இந்துக்கள் பருவ மாறுதல்களுக்கு ஏற்றவாறு பாரம்பரியமாக பல திருவிழாக்களை நடத்தி கடவுளர்களை போற்றி வணங்குவதை வழக்கமாக கொண்டவர்கள். இந்நிலை நீடித்தால் இந்துக்களுக்கு அவர்கள் திருவிழா நடத்துவதற்கும் அது சம்பந்தமாக ஊர்வலம் நடத்துவதற்கும் கூட உரிமை மறுக்கப்படும் நிலை வந்துவிடுமோ என்ற சந்தேகம் நம்மிடையே ஏற்படுகிறது. இந்துக்களின் உரிமையை காப்பாற்ற இனிவரும் காலங்களிலாவது அரசாங்கமும், காவல்துறையும் அராஜகத்திற்கும், அடிப்படைவாதிகளுக்கும் அடிப்பணியாமல் செயல்படவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு! 

நன்றி-http://vsrc.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/216-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/itemid-140#.UypZT1Q2b7Y.facebook
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிவாண்டி பகுதியில் உள்ள சோனாலியில் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மகாராஷ்டிர மாநிலம், பிவாண்டி பகுதி செயலாளர் ராஜேஷ் குண்டே, அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் கருத்தாகும்.
அதுமட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ராகுல் இந்தக் கருத்தினை தேர்தல் ஆதாயத்துக்காக வெளியிட்டுள்ளார். எனவே, ராகுல் காந்தி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி-தினமணி
இது என்ன ஜாதி கையிறுப்பா.....?
சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்.
பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம். அதற்கு மாறாக இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தலைமுடி முதல் காலணிவரை இருப்பது எல்லாம் நாகரிகம் என்ற போர்வையில் ஒழுக்கமின்மைதான். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த விஷயம் கை ஓங்கி இருக்கிறது. (இது எல்லாம் எங்கள் பள்ளியில் இல்லை என்பவர்களுக்கு வாழ்த்துகள்).
முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷவிதையை அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப் பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான். எது எப்படியோ, சின்னஞ்சிறு பிஞ்சுக் கையால் பெயருடன் ஜாதி எழுதப்பட்டுவிட்டது. கண்டிப்பாகச் சமூகத்தைக் கெடுக்கும் சீர்கேட்டிற்கு அந்தச் சின்னஞ்சிறு மாணவன் காரணமில்லை என்பது நமக்குத் தெரியும். இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன்.
இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை (பேண்ட் - Band) அணிகிறார்கள். ப்ரெண்ட்ஷிப் பேண்ட் அணிவது, ரெட் ரிப்பன் பேண்ட் அணிவது கேள்விப்படிருக்கிறோம். இந்தப் புதிதான பேண்ட் பேஷனை நினைத்தால். சிரிப்புடன், அந்த மாணவர்கள்மீது பரிதாபம்தான் எழுகிறது. கைகளில் சாமிக் கயிறுபோய், வெள்ளை இரும்பு வளையம்போய், செம்புவளையம்போய், ரப்பர் பேண்ட் போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை, வெள்ளை-மஞ்சள், சிவப்பு-மஞ்சள், நீலம்-வெள்ளை, நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக் கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள்.
மூன்றாவது காட்சி. குழுவாக அமையும் மாணவர்கள் தம் பெயரைக் கைகளில் எழுதிக் கொள்வது. ஏதோ பேனாவில் எழுதுவது என்று தயவுசெய்து நினைத்துக்கொள்ளாதீர்கள். முதலில் காம்ப்பஸ் (compass) எடுத்துக் கொள்ளவேண்டும். எழுதப் போகும் மாணவனின் கையை இன்னொரு மாணவன் பிடித்துக்கொள்ளவேண்டும். கை நடுநடுங்கக் கூடாது. காம்பஸை முனையைக் கொண்டு, வலதுகை அல்லது இடதுகையில் மெதுவாக, ரத்தம் அதிகமாக வெளியேறபடி கீறிக்கீறி எழுதவேண்டும். வலியைப் பொறுத்துக்கொள்ளும்படி எழுதவேண்டும். பீட்ருட் நிறம்போல எழுத்து அமையவேண்டும். எழுதி முடித்தபின் சந்தோஷத்தில் குதிக்கவேண்டும். இரண்டுநாள் கழித்துப் புண் ஆறிவிட்டபின், பொக்குவை நீக்கிவிட்டுப் பார்த்தால், உங்கள் பெயர் உங்கள் கையில் தழும்பாக அமையும். எவ்வளவு அற்புதம் இது. இந்த அற்புதத்திற்குத் தலைகுனியவேண்டியவர்கள் நம் பெற்றோர்கள். இரண்டாவதாகத் தலைகுனியவேண்டியவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டிக்கமுடியாததற்காகத் தலைகுனியவேண்டும். அறிவுரை கூறியும் திருந்தாத மாணவர்களை நினைத்து ஆசிரியர்கள் தலைகுனியத்தான்வேண்டும்.
இந்த மூன்று காட்சிகளைப் பார்த்தபின் நமக்குச் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அதில் முதல் கேள்வி, ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்பது. அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அறிவுரையும் கலந்தாலோசனையும்தான் தரமுடியும். அந்த மாணவர்களின் ஜாதிக் கைப்பட்டையை அறுத்தால், ஆசிரியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் கைப்பட்டையை அறுக்கிறாரோ, அவர் ஒழுக்கத்தைப் பேணுபவர் ஆகமாட்டார். அவர் அந்த ஜாதியத்திற்கு எதிரானவர். மாற்று ஜாதியைப் பள்ளியில் மறைமுகமாகத் தூண்டுபவர் என்று பார்க்கப்படுகிறது. ஓருவேளை அதே ஜாதி என்றால், உறவுப் பகை உருவாகிவிடுகிறது. எனவே, ஆசிரியர்களின் வார்த்தைகள் – இந்த மாதிரி எல்லாம் பள்ளிக்கு வரக்கூடாது. பள்ளிக்கு வெளியே அணிந்துகொள். பள்ளிக்குள் வேண்டாம். நீ படிக்கிற பையன். உங்கள் வீட்டில் கேள்விப்பட்டால் வருத்தப்பட மாட்டார்களா?. நீ நல்ல பையன்தானே– என்பதுதான். இதை மீறி கண்டித்தாலோ, மாணவனுக்கு ஏதாவது நேர்ந்தாலோ ஆசிரியர்களின் பணிக்கு உத்தரவாதம் இல்லை. அடிப்படையாக ஒரு மனிதனுக்குப் பணி பாதுகாப்பு அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதைச் சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும்? இதைச் சரி செய்ய ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு முக்கியமானது.
பெற்றோர்களைப் பொறுத்தவரை, தன்னுடைய பிள்ளையின் (மாணவனின்) ஒழுக்கச் செயல்பாடு என்ன? சமீபத்தில் மாறி இருக்கிறதா? அவனுடைய பேச்சில், நடையில் எந்த மாற்றம் நிகழ்கிறது? அவனுடைய நண்பர்களின் தன்மை எப்படி? பிள்ளையின் கவனம் படிப்பிலா, பொறுக்கித்தனத்திலா? அவனைத் தனியாக அழைத்து அன்புடன் பேசுகிறேனா? இது சரி, இது தவறு என்று சொல்கிறேனா? என்பதில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.
அறிவுரையுடன் ஆசிரியர்கள் நின்றுவிடாமல், மாணவனை அழைத்துக் கலந்தாலோசிக்கவேண்டும். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை எனில். தலைமையாசிரியர் வழியாகப் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துவிடவேண்டியதான். தவறு செய்யும் மாணவனைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ ஆசிரியரின் பணி இல்லை. மாறாக ஒழுக்கத்தைக் கற்றுத்தரவேண்டும் நாம். ஒழுக்கம் தவறினால், கண்டிப்பாகப் பெற்றோரிடம் முறையிடுவது நமது கடமை. அதுவும் நாம் நேரடியாக இல்லாமல், தலைமையாசிரியர் வழி அமையவேண்டும்.
ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு சரியாக அமையும் பட்சத்தில் பிரச்சினை அதிகமாக வளர வாய்ப்பில்லை. மாணவர்களின் கல்வி அதிகமாகப் பாதிப்பதில்லை. இதுபோன்ற சமூகச் சீர்க்கேட்டினால் பாதிக்கப்படுவது ஆசிரியரோ, பெற்றோரோ, ஜாதியோ இல்லை. மாணவர்கள் மட்டும்தான். அவர்களுடைய ஒழுக்கம், கல்வி பாதிக்கப்படுகிறது.
கோயில் செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாகத்தான் சாமி கும்பிடுகிறோம். ஹோட்டல் செல்கிறோம். ஒன்றாகத் தான் சாப்பிடுகிறோம். பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கிறோம். அங்கு சாதிப் பார்க்கப்படுவதில்லை. பள்ளி என்பது கோயில் போன்றது. இங்கு கல்விதான் கடவுள். ஜாதியம் அல்ல. பள்ளியில் மாணவர்கள் கல்வியை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள். வெளியே பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள். நடுவில் நுழைந்திருக்கும் ஜாதி நரிக்கூட்டம்தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைத் தயவுசெய்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஆசிரியர்களே! எப்போதும்போல், மாணவர்களுடன் அன்புடன் உரையாடி புத்திமதி கூறித் திருத்துங்கள். ஜாதிய அபிமானிகளே! உங்கள் அரசியலுக்கு மாணவர்களைப் பலிகடா ஆக்காதீர்கள். அவர்கள் படித்து முன்னேறவேண்டும். அவர்கள் கைகள் இப்போதைக்குச் சுமக்க வேண்டியது புத்தகம்மட்டும்தான். உங்கள் ஜாதி பேண்ட் அல்ல. ஜாதிகளுக்கு மாணவர்கள் ஒன்றும் ஜாதிப்பரப்புச் செயலாளர்கள் இல்லை. அவர்கள் மாணவர்கள். இந்த பரந்த இந்தியாவைத் தாங்கப் போகிறவர்கள். தயவுசெய்து யாராக இருந்தாலும் ஜாதியத்தை மாணவர்களிடம் புகுத்தாதீர்கள்.
மாணவப் பருவம் என்பது வாழ்க்கையின் முக்கியமான பருவம். அந்த சமயத்தில், அவர்களை ஜாதியின் பெயரால் மடை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்றால், தயவு செய்து ஜாதி என்கிற விஷவிதையை மாணவர்களின் மனதில் யாரும் விதைக்காதீர்கள். அது நிச்சயமாக வருங்காலத்தில் நல்ல கனியையோ, நிழலையோ தரப்போவதில்லை.
ரா.தாமோதரன் - தொடர்புக்கு raa.damodaran@gmail.com
ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்த எந்த ஒரு நபரும், தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைய நபராக கருதப்படுகிறார். அதன்படி, புதிய வாக்காளராக சேர்க்கப்படும் பலரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, சட்ட சிக்கலால் கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின், தற்போதைய நடைமுறைப்படி, ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயதை அடையும் இளைஞர்கள், வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த நாளான, ஜனவரி, 2 அன்று, 18 வயது பூர்த்தி அடையும் நபர், தன்னை தகுதியுடைய வாக்காளராக பதிவு செய்ய இயலாது. அவர், அடுத்த, ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.நாடு முழுவதும், இதுபோல், ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தும், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாமல் உள்ளனர். இதனால், ஜனவரி, 1 என்ற கெடு தேதிக்கு பதிலாக, ஓராண்டில், 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டது.

தேர்தல் கமிஷனின், இந்த பரிந்துரையை, சட்ட அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே, இதை அமல்படுத்த முடியாது. ஓட்டுரிமை குறித்து தெளிவுபடுத்தும், அரசியல் அமைப்பு சட்ட விதி, 326ல் உள்ளபடி, 18 வயது அடைந்தவர்களுக்கு, ஓட்டுரிமை என்பதில் மாற்றம் செய்தால் தான், இதை அமல்படுத்த முடியும் என, தெளிவுபடுத்தியுள்ளது.'தேர்தல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல; அதற்காக முறையான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகம் இப்போதும் தெரிவித்துள்ளது.இதனால், 18 வயதாகும், இளைஞர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சித்த, தேர்தல் கமிஷன் முயற்சி, பின்னடைவைச் சந்தித்துள்ளது.வாக்காளர் பட்டியல் என்பது, அந்தந்த மாநில அரசுகள் தயாரிக்கும், ஓட்டளிக்க தகுதியுள்ளோர் பட்டியல்; அதில், பெயர் இருப்பவர்கள் மட்டும் தான், தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும்.

நன்றி-தினமலர்.
எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டளித்த பலருக்கும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண் தெரிவதில்லை. எங்கு ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரமும் தெரிவதில்லை.வாக்காளர்களின் வசதிக்காக, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு உங்கள் மொபைல் போனில், ரைட் மெசேஜ் பகுதிக்குச் சென்று, திரையில், 'epic' என்று டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் அதனை, 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.ஒரே நிமிடத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும். அதில் உங்கள் பெயர், பூத் எண், அதன் முகவரி ஆகிய விபரங்கள் வெளியாகும். இந்த விபரம் இருந்தாலே போதும். பூத் சிலிப் கூட தேவையில்லை. இதில் உள்ள விபரம் மூலம் ஓட்டளிக்கலாம்.

நன்றி-தினமலர்.
தமிழகத்தில் உள்ள, நீர் நிலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, அந்த எண்களை, இணையத்தில் வெளியிட, தமிழக பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், விரைவில் முடிவடைய உள்ளன; அதற்கு பிறகு, நீர் நிலைகள் குறித்த, அனைத்து தகவல்களையும், எளிதில் பெற முடியும்.
தமிழக பொதுப்பணித் துறையின், நீர் வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில், 14 ஆயிரம் குளங்கள், 34 ஆறுகள், 17 பெரிய வடி நிலங்கள், 127 உப வடிநிலங்கள் உள்ளன. தமிழகத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 91.2 செ.மீ., மாநிலத்தின், மொத்த மேற்பரப்பு நீர் வள ஆதாரம், 853 டி.எம்.சி., என, கணக்கிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் மற்றும் மேற்பரப்பில் உள்ள நீரின் அளவை கண்காணிக்க, நீர் வள ஆதாரத் துறையினர் முடிவு செய்தனர். புவிசார் தகவல் அமைப்பின் மூலம், அனைத்து, பாரம்பரிய நீர் நிலைகளுக்கும், தனித்தன்மை கொண்ட, விசேஷ, குறியீட்டு எண் அளித்துள்ளனர்.
இதன்படி, குறிப்பிட்ட நீர் நிலையை பற்றிய தகவலை அறிய வேண்டுமானால், அந்த நீர்நிலையின், குறியீட்டு எண்களை, அதற்கான இணையத்தில், 'டைப்' செய்தால், நீர் நிலை குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

நீர் நிலையின் பரபரப்பளவு, கொள்ளளவு, நீர் மட்டம், சீரமைப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும், இந்த முறையில், எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டே, இதற்கான பணிகள் முடிந்தன. இத்துடன், நீர் நிலை குறியீட்டு எண் தகவலை, குறுந்தகட்டில் பதிவு செய்யவும், இணையதளத்தில் வெளியிடவும், பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது, லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் இருப்பதால், தேர்தலுக்கு பிறகு, குறுந்தகடு வெளியிடப்படும் என, தெரிகிறது. 'தவுசண்ட் மில்லியன் கியூபிக் பீட்' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே, டி.எம்.சி., இதை, எளிதாக, 100 கோடி கன அடி என, கொள்ளலாம்.

நன்றி-தினமலர்.
கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது.

புதிய தீர்ப்புகள்:சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும், ஏழு, அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட், தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை, சட்டக் கல்லுாரி மாணவர்கள் முதல், கீழ் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் என, அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
கோர்ட்களில், 'வீடியோ கான்பரன்சிங்' வசதி வந்துள்ள நிலையில், கல்லுாரிகளிலும், பல வசதிகளை ஏற்படுத்த, சட்ட பல்கலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் மாணவர்கள், சட்ட கல்லுாரி, சட்ட பல்கலையில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது.பல்கலையில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வபோது, சுப்ரீம் கோர்ட் மற்றும் பிற கோர்ட்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.
இதை, சட்ட கல்லுாரி மாணவர்களும் பார்க்க, வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட உள்ளது.
இணைய தள, 'டிவி'இது தவிர, இணைய தள, 'டிவி' வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படுகிறது.திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த்தப்படும். சட்டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப்பதை, தமிழில் மொழிபெயர்த்து, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக்காக, 27 மிக முக்கிய சட்ட நுால்கள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

கீழ் கோர்ட் நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. முதல் கட்டமாக, 2,000ம் ஆண்டுக்கு பின் அளிக்கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்புகளில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மீதமுள்ளவை, மூன்றாண்டுகளுக்குள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட், டில்லியில் உள்ளது. நாட்டின் உயரிய நீதிமன்றமான, சுப்ரீம் கோர்ட்டின், தலைமை நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த, பி.சதாசிவம் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ் உள்ள அனைத்து கோர்ட்டுகளும், கீழ் கோர்ட்டுகள் என, அழைக்கப்படுகின்றன.

நன்றி-தினமலர்.

Monday, 17 March 2014

தேர்தலில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என ஒரு வகை உள்ளது. அதேபோல, சிக்கலான ஓட்டுச்சாவடிகள் (கிரிட்டிக்கல் போலிங் ஸ்டேஷன்) கண்டறியவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலின்போது, 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச் சாவடியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் 75 சதவீத ஓட்டுகள், ஒரே வேட்பாளருக்கு பதிவாகியுள்ளதா என கண்டறிந்து, அதை 'கிரிட்டிக்கல் ஓட்டுச்சாவடி' என அறிவிக்க வேண்டும்.

நன்றி-தினமலர்.
''அலோபதி டாக்டர்களின் படிப்பில், சந்தேகம் இருந்தால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் செய்யலாம்,'' என, அதன் உறுப்பினர் செந்தில் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மருத்துவ கவுன்சிலில் அரசு, தனியார் அலோபதி டாக்டர்கள், ஒரு லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். 4970 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இதில் 998 அரசு ஸ்கேன் மையங்கள் தவிர, மீதி தனியாரிடம் உள்ளன. பி.சி.பி.என்.டி.டி., சட்டத்தின் கீழ், பதிவு பெறாத சென்னையைச் சேர்ந்த 15 மையங்கள் மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மையம் மீது, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. இதில் 8 மையங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, அந்த டாக்டர்களின் இரண்டாண்டு கால மருத்துவ சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், 8 டாக்டர்களின் மருத்துவ சேவை, விரைவில் ரத்து செய்யப்படும். புதிதாக ஸ்கேன் மையங்களை லைசென்ஸ் பெறாமல், துவக்க முடியாது. ஏற்கனவே லைசென்ஸ் பெற்ற மையங்கள், முறையாக மறுபதிவு செய்ய வேண்டும். இடைவெளி விட்டு மறுபதிவு செய்தால், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். மறுபதிவு உடனே செய்யாமல், தொடர்ந்து ஸ்கேன் மையங்களை நடத்தினால், அது குற்றம். தற்போது மாவட்ட அளவில் பொது மருத்துவத் துறை இணை இயக்குனரிடம் லைசென்ஸ் அனுமதி, மறுபதிவு செய்யலாம். ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் பதிவு விவரங்கள், தனிப் படிவங்களில் சேகரிக்க வேண்டும். 'டிவி'க்களில், மருத்துவம் சார்ந்த சேவை செய்ய, 'ஸ்க்ரோலிங்' முறையில், விளம்பரம் செய்வது தவறு. சிகிச்சைக்காக மட்டுமின்றி, இந்த விளம்பரம் குறித்து, யார் புகார் செய்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாத படிப்பைத் தவிர, சில டாக்டர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் படிப்பு என, பெயர் பலகையில் எழுதியிருந்தாலும் புகார் செய்யலாம். டாக்டர்கள் படிப்பில் சந்தேகம் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி ஹை ரோடு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளரிடம் புகார் செய்யலாம். tnmedicalcounsil.org என்ற இணையதளத்தில், விவரங்களைப் பெறலாம், என்றார்.

நன்றி-தினமலர்.
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் பிரகாரத்தில் வண்ணம், ஓவியம் தீட்டும் பணி துவங்கியுள்ளது.

இக்கோவிலில், இந்தாண்டு இறுதியில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையடுத்து, சுவாமி, அம்மன் சன்னிதி, பஞ்சமூர்த்திகள் சன்னிதி விமானம், வடக்கு, தெற்கு ராஜகோபுரத்தில் மராமத்து துவக்க, கடந்த, 12ல், கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. தற்போது சுவாமி, அம்மன் சன்னிதியில் உள்ள தூண்கள், சிற்பங்கள், 40 லட்சம் ரூபாய் செலவில், வார்னிஷ் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 50 லட்சம் ரூபாய் செலவில் மூன்றாம் பிரகார தூண்கள், சிற்பங்களில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன், மேல் பகுதியில் சிதிலமடைந்த ஓவியத்தை அகற்றி, புதிய ஓவியம் வரைந்து, வண்ணம் பூசும் பணி, நடைபெற்று வருகிறது.

நன்றி-தினமலர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அங்கிருந்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவிக்கும், மாவட்டத்தில் உள்ள, கல்வி மாவட்டத்துக்கு, விடைத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, தனியார் பார்சல் வேன் மூலம், விடைத்தாள்கள் அனுப்பபடுகின்றன. விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும், 21ம் தேதி துவங்கும் நிலையில், அவற்றை திருத்தி முடிக்க, 10 முதல், 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என, மொழி பாடங்களில், முதல் மற்றும் இரண்டாம் விடைத்தாள்களை, வரும், 21ம் தேதி முதல் திருத்தி, மதிப்பெண் வழங்கும் பணியை, ஏப்., 5க்குள்ளும், பிற பாடங்களை, வரும், 1ம் தேதி துவங்கி, 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் முதல் தாள் திருத்தம் முடிந்த பின், இரண்டாம் தாள் திருத்தம் செய்ய, வழங்கப்படும். பெறப்பட்டுள்ள விடைத்தாள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு நாளும், எவ்வளவு விடைத்தாள் திருத்தி வழங்க வேண்டும் என, கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி-தினமலர்.
வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக, ஏப்ரல், 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை, அஞ்சல் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலம், ஏப்ரல், 17 வரை செலுத்தலாம். போட்டித் தேர்வு, ஜூன், 14 காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கும். இந்த தேர்வு, பொது அறிவில், 75 கேள்வி, வி.ஏ.ஓ., பணிகள் தொடர்பாக, 25 கேள்வி, திறனறிதல் பிரிவில், 20 கேள்வி மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில், 80 கேள்வி என, மொத்தம், 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக, 90 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 4, வி.ஏ.ஓ., போன்ற தேர்வுகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக இருப்பதால், ஒவ்வொரு முறையும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் - 4 தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். அதேபோல், இந்த தேர்வுக்கும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி-தினமலர்.
'பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்' என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

தற்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத்திட்டமும், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண், மாணவர்களின் செயல்திறன் நடவடிக்கைகளுக்கு, 40 மதிப்பெண் என, பிரித்து, தேர்வு நடத்தப்படுகிறது. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான கோப்பு, முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, பல மாதங்கள் கரைந்த நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்கு, இன்னும், இரண்டு மாதமே உள்ளது. ஜூன் முதல் வாரம், 2014 - 15 கல்வி ஆண்டு துவங்குகிறது. இரு மாதத்திற்குள், முப்பருவ கல்வி முறைக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும், தற்போதுள்ள முறையை, தொடர்ந்து கடைபிடிக்க, அரசு முடிவெடுத்து உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது. இதற்கு ஏதுவாக, பழைய பாட புத்தகங்களை அச்சடிக்க, பாடநூல் கழகத்திற்கு, அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி-தினமணி.
வியாபாரிகள், உரிய ஆவணங் களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை மற்றும் தணிக்கை குழு அமைக்கப்பட்டு, அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இச்சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், நகை, சேலை, போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

நிராகரிப்பு:

அதிரடி சோதனைக்கு, வியாபாரி களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆவணம் இல்லாமல், 3 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. 'வியாபாரிகள், உரிய ஆவணங்களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்லலாம். ஆவணங்கள் இல்லாமல், கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், பறிமுதல் செய்யப்படும்' என, அறிவித்தது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: அரசியல்வாதிகள் மட்டும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எடுத்து செல்லக் கூடாது. ஆனால், வியாபாரிகள், 10 லட்சம் ரூபாய் வரை, எடுத்து செல்லலாம். அதற்கு மேல் எடுத்து சென்றால், வருமான வரி கணக்கு காட்ட வேண்டும். வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்திற்கு, உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் முறையாக, உரிமம் பெற்று தொழில் செய்வதற்கான சான்று, பணம் எடுத்து செல்வதற்கான ஆவணம், பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, பொருட்கள் வாங்கு வதற்காக, பணத்தை எடுத்து செல்வதாக இருந்தால், ஏற்கனவே, இதுபோல், சமீபத்தில் பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, போன்றவற்றை காண்பிக்கலாம்.

கண்காணிப்பு குழு:

உரிய ஆவணங்களை காண்பிக்கும் வியாபாரிகளிடம், பணம் பறிமுதல் செய்ய வேண்டாம் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டால், மாவட்ட உதவி தேர்தல் அலுவலரிடம், முறையீடு செய்யலாம். சோதனைகள் மேற்கொள்ள, தற்போது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், 15 குழுக்கள் வரை நியமிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஊழியர்கள், பயிற்சி முடித்து, தயார் நிலையில் உள்ளனர். கூடுதல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நன்றி-தினமலர்.
:''குஜராத்தில், 2002ம் ஆண்டு நடந்த மத கலவரத்திற்கு, அம்மாநில, பா.ஜ., முதல்வர், நரேந்திர மோடியை குறை கூற முடியாது; இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது,'' என, மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதான கட்சிகளில் ஒன்றான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.

மத்திய அரசில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சி, முக்கிய அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிர மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, அரசு நடத்துகின்றன.

நெருங்கிய நட்பு:



தேசிய அரசியலில் பிரபலமாக விளங்கும் சரத் பவாருக்கு, அனைத்து கட்சி தலைவர்களுடன், நெருக்கமான நட்பு உள்ளது. குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியுடன், அவர் நெருங்கிய நட்பு வைத்துள்ளார்.மோடி பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு, ஜூலையில் அறிவிக்கப்பட்டதும், மோடிக்கு ஆதரவாக, சரத் பவார், ஐ.மு.கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என, செய்திகள் கிளம்பின.

மோடி -- பவார் சந்திப்பு:



அது உண்மை தான் என்பதை உணர்த்தும் வகையில், சில மாதங்களுக்கு முன் திடீரென, மோடியை சந்தித்து பேசினார், சரத் பவார். இந்த சந்திப்பு, தேசிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, மோடி தலைமையிலான, பா.ஜ.,வின், தேசிய ஜனநாயக கூட்டணியில், சரத் பவார் சேர உள்ளதாக, செய்திகள் வெளியாயின.அதற்கு அப்போதே பதிலளித்த சரத் பவார், 'மத்திய விவசாய அமைச்சர் என்ற முறையில், மோடியை சந்தித்து பேசினேன். இதில், வேறு ரகசியம், எதுவும் இல்லை' என, கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் அளித்த பேட்டி ஒன்றில், 'குஜராத் கலவரத்தில், அம்மாநில முதல்வர், மோடி குற்றமற்றவர் அல்ல; அந்த பயங்கர கலவரத்தில், மோடியின் பங்கு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. மோடி, குற்றமற்றவர் என, நற்சான்றிதழ் கொடுத்திருப்பது தவறு' என, குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், தனியார், ஆங்கில செய்தி, 'டிவி'க்கு, சரத் பவார் அளித்த பேட்டியில், கூறியதாவது:

தோழமையுடன்:



காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், எங்களின், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இப்போதும், தேர்தலுக்கு பிறகும், மிகவும் முக்கிய கட்சியாக விளங்கும். குஜராத் முதல்வர், நரேந்திர மோடியுடன், நல்ல நட்பு உள்ளது. அவரிடம் மட்டுமல்ல, அனைத்து கட்சி தலைவர்களுடன் தோழமையுடன் உள்ளேன். என்னைப் பொறுத்தமட்டில், அரசியலில் பகைமை என்பது இல்லை.முதல்வர், மோடி தலைமையிலான, குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட கலவரத்தில், மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த கலவரங்கள் தொடர்பாக, அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை.இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. கோர்ட்டின் தீர்ப்பை, நான் ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு மாறுபட்ட தகவல் கிடைத்து இருக்கலாம்; அது பற்றி எனக்கு தெரியாது. நான், கோர்ட் சொன்னதன் அடிப்படையில், என் கருத்தை தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

'குஜராத் கலவரத்திற்கு, மோடி பொறுப்பாளி ஆக மாட்டார்' என, சரத் பவார் கூறியுள்ளதன் மூலம், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஒருவேளை அவர், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மோடியுடன் கூட்டணி சேர்வதற்கான, அச்சாரமாக, சரத் பவாரின் இந்த கருத்தை கருதலாம் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'கரசேவகர்கள்':



கடந்த, 2002ல், குஜராத்தின், கோத்ரா என்ற இடத்தில், இந்து அமைப்பினர் பயணம் செய்த ரயில், எதிர்தரப்பினரால் எரிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட, 'கரசேவகர்கள்' இறந்தனர். அதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த வன்முறையின் போது, இருதரப்பிலும், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.இதில், காங்கிரஸ் முன்னாள், எம்.பி., எசான் ஜாப்ரி உட்பட, 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி உட்பட, 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்த, சிறப்பு விசாரணைக்கு குழு, நரேந்திர மோடி உட்பட, ?58 பேரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்தது.அதை எதிர்த்து தொடரப்பட்ட, மேல் முறையீட்டு மனுவையும், ஆமதாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து, மோடி குற்றமற்றவர் என, கூறியது.

நன்றி-தினமலர்.
மதுரையில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில், அடுத்தடுத்து, ஐந்து குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. ஏழு இடங்களில், குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில், ஒருவர் கூட, இதுவரை கைது செய்யப்படவில்லை. குண்டை யார் வைக்கின்றனர் என, போலீசுக்கு தெரிந்திருந்தும், 'ஆதாரம்' இல்லை; 'விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகி விடும்' என்ற காரணத்திற்காக, வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாலேயே, தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இப்போது மதுரையில், எதற்கெடுத்தாலும், சிறிய அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குண்டு வைப்பது சகஜமாகி விட்டது. கடந்த, பிப்.,11ல், மதுரை உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இரும்பு பைப் வெடிகுண்டு தவிர, மற்ற குண்டுவெடிப்பு, குண்டு கண்டெடுப்பு சம்பவங்களில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். மறைமுக அமைப்பு கடந்த, 2002ல், மதுரையைச் சேர்ந்த, இமாம்அலி மற்றும் அவரது கூட்டாளிகள், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் சிலர், ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட துவங்கினர். இதற்கு, அரசு தடை விதித்தது. இதுநாள் வரை, அந்த அமைப்பினர் மறைமுகமாக செயல்படுகின்றனர்.
இமாம்அலியை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் திட்டமிட்டு, 2011ம் ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி, டாஸ்மாக் கடையில், 'டைம் பாம்' வெடிக்க செய்தனர். அதே ஆண்டு செப்.,30ல், புதுார் பஸ் டிப்போவில், பஸ்சிலிருந்து, 'டைம்பாம்' கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், மதுரையில், ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மேற்கொண்டார். அவர் செல்ல திட்டமிட்டிருந்த, திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், சக்தி வாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. எகிறும் போலீஸ் பி.பி.,
தேசிய தலைவர் விவகாரம் என்பதால், சம்பவம் நடந்த மூன்று நாட்களில், 'போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக் உட்பட சிலரை, போலீசார், குற்றவாளிகள் என, அறிவித்தனர். அதேசமயம், 'டைம்பாம்' வழக்குகளில் குற்றவாளிகள் யார் என, அறிவிக்காத நிலையில், டிச.,7ல் திருவாதவூர் பஸ்சில், 'டைம் பாம்' இருந்தது, போலீசாரின் ரத்தக் கொதிப்பை எகிற வைத்தது.
பின், நான்கு மாதங்கள் போலீஸ் விசாரணை இழுத்து கொண்டிருந்த நிலையில், 2012, மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் சுற்றுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளில், 'டைம்பாம்' வெடித்தது. அதைத் தொடர்ந்து, போலீசார், 'விசாரணையிலேயே' இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம், சவுராஷ்டிரா சமூகத்தினரின் மாநாட்டிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'டைம்பாம்' வைக்கப்படக் கூடும் என, போலீஸ் கருதிய நிலையில், மதுரை தெற்குகிருஷ்ணன் கோவிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், உமர்பாரூக் என்பவரின் கடைக்கு, 'டைம் பாம்' வந்து சேர்ந்தது.

'ஈகோ' பிரச்னை

இதில், புகார்தாரரான உமர் பாரூக்கையே, தெற்குவாசல் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன், சில மாதங்களுக்கு பின், கைது செய்தார். இதற்காக, மோகனுக்கு பாதுகாப்பு கருதி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நவ.,2ல் திருப்பரங்குன்றம் மலையில், சிலர், 'டைம் பாம்' தயாரிப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்தி, உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கை, உள்ளூர் போலீசார், அப்போதைய கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில், விசாரித்தனர். இவர்களுக்கும், மத அமைப்பினரை கண்காணிக்கும், சிறப்பு பிரிவு போலீசாருக்கும், 'ஈகோ' பிரச்னை ஏற்பட, விசாரணை ஓராண்டுக்கும் மேலாக இழுத்தது.

ஒரே ஸ்டைல்

இதுவரை கைப்பற்றிய குண்டுகள் அனைத்தும், டைமர், பேட்டரி, ஒயர், கரிமருந்து என, ஒரே, 'ஸ்டைலில்' இருந்ததால், 'குறிப்பிட்ட நபர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்' என, போலீசார் முடிவுக்கு வந்தனர். அவர்களும் போலீஸ் கண்முன்னேயே நடமாடியபடி இருந்தனர். ஆனால், ஆதாரம் இல்லாததால், அவர்களை விசாரிக்கக் கூட, போலீசார் பயந்தனர்.
இச்சூழலில் தான், கடந்த ஆண்டு நவ.,20ல், நெல்பேட்டையில், வழக்கறிஞர் அக்பர்அலி காருக்கு அடியிலும், காதர்மொய்தீன் டூவீலரிலும் குண்டு வெடித்தது. இவர்கள் பொறுப்பு வகிக்கும், சுங்கம் பள்ளிவாசலில், கேமரா வைத்தது தொடர்பாக, எச்சரிப்பதற்காகவே, குண்டு வைக்கப்பட்டது என, விசாரணையில் தெரிய வந்தது. இதிலும், சிலர் மீது, போலீசாரின் சந்தேக கண் இருந்தாலும், 'தொட்டால் சிக்கல்' என்ற அச்சம் காரணமாக, கண்டும் காணாமல் உள்ளனர். இந்த தைரியத்தில் தான் தொடர்ந்து குண்டு வைத்து, 'விளையாட்டு' காட்டுகின்றனர்.
போலீசார் 'அமைதி'யாக இருக்கும்பட்சத்தில், மதுரையில் தொடர்ந்து நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

நன்றி-தினமலர்.