Saturday, 10 May 2014


மணிகண்டன்
v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் இடம் பெற்ற மணிகண்டன் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர். கணிப்பொறி அறிவியலை பாடமாக எடுத்து படித்த அவர்
தமிழ் :178
ஆங்கிலம்: 157
இயற்பியல் : 181
வேதியியல் : 179
கணிதம் : 153
கணிணி அறிவியல் : 195
மொத்தம் : 1043 
பெற்றுள்ளார். அவருக்கு நமது மன்றத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் . 


Friday, 9 May 2014

 வ.களத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு கல்வியளிப்பதில் முக்கிய பங்காற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 179 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் சுமார் 173 பேர் தேர்சி பெற்றுள்ளனர். சராசரி விகிதம் :96%
 சதவீதம்..  

v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் நான்கு இடங்கள் பெற்ற மாணவர்கள் விபரம்..

முதல் இடம் : மணிகண்டன்
தமிழ் :178
ஆங்கிலம்: 157
இயற்பியல் : 181
வேதியியல் : 179
கணிதம் : 153
கணிணி அறிவியல் : 195
மொத்தம் : 1043

இரண்டாம் இடம் : ஆனந்தி
தமிழ் : 174
ஆங்கிலம்:156
இயற்பியல் :169
வேதியியல் :178
கணிதம் :131
உயிரியியல்: 165
மொத்தம் : 973

முன்றாம் இடம் : சுதாகரன்
தமிழ் :158
ஆங்கிலம்:177
கணிணி அறிவியல் :143
பொருளாதாரம்: 174
வர்த்தகம்: 183
கணக்கர் துறை:185
மொத்தம் : 960

நான்காம் இடம் : நஜிமுநிஷா
தமிழ் :184
ஆங்கிலம்:156
இயற்பியல் :151
வேதியியல் :155
கணிதம் :128
உயிரியியல்:172
மொத்தம் : 946





Thursday, 8 May 2014


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ, மாணவியர், ஆவலுடன் உள்ளனர்.

தேர்வுத் துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in' ஆகிய, நான்கு இணையதளங்களில், சரியாக, காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத் துறைதயாராகியுள்ளது.

இதில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்:

பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HSC<space>"Registration Number" என்ற அடிப்படையில் அடித்து எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். TNBOA RD<SPACE><REGISTERNO><DOB in DD/MM/yyyy> என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.



Wednesday, 7 May 2014

வரலாறாய் மாறப்போகும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்

ஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்
===============================================
ஜல்லிக்கட்டுக்.காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன மிருகவதைத் தடைச்சட்டத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவு நியாயமானது.?

மனிதர்களுக்காக இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் படைக்கப் பட்டிருப்பதாகக் கருதிக் கொண்டு மனிதர்கள் வதைக்கும் மிருகங்களும் பறவைகளும் தினந்தோறும் எத்தனை எத்தனை? அங்கீகரிக்கப்பட்ட கோழிக்கறிக் கடைகளிலும் ஆட்டுக்கறிக் கடைகளிலும் மாட்டுக்கறிக் கடைகளிலும் வெட்டப்படும் மிருகங்களை எந்த வதைச் சட்டத்தின் மீது தடை செய்ய முடியும்?. மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் வந்து விடும் என்பதற்காக லட்சக் கணக்கான கோழிகள் அவ்வப்போது கொல்லப்படுகின்றனவே? அதையெல்லாம் சட்டத்தினைக் காரணம் காட்டித் தடுக்க முடியுமா? ஜல்லிக்கட்டில் மட்டும் தான் மிருகங்கள் வதை செய்யப்படுகின்றனவா?

இப்படியெல்லாம் கேள்வி எழுப்புவது விதண்டாவாதம்தான். ஒரு விதண்டாவாதத்திற்கீடாக இன்னொரு விதண்டாவாதம் தானே பதிலாக இருக்க முடியும். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தின் அடையாளம் அல்ல; அது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்தத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கூட அல்லதான். அப்புறம் எதற்குத் தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக் கேட்கலாம்.
ஜல்லிக்கட்டுதான் தமிழர்களின் அடையாளம்; அதை அழிந்து விடாமல் காக்க வேண்டும்; அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என யாரும் கேட்கவில்லை; கோரிக்கையும் வைக்கவில்லை. ஜல்லிக்கட்டைத் தங்களின் அடையாளமாகக் கருதும் ஒரு சிறு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். பாதுகாப்பாக நாங்களே நடத்துகிறோம் என அரசு தானாக முன் வந்தது அப்படிச் செய்யத் தொட்ங்கினால் எல்லாவற்றையும் அரசின் விழாவாக ஆக்கிக் கொண்டே போக வேண்டியதுதான்..

ஜல்லிக்கட்டு பண்டைய தமிழகத்தின் பரப்பிலும் கூட மொத்தத் தமிழ் நாட்டிலும் இருந்த அடையாளம் அல்ல. வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்களின் அடையாளம் தான். சங்க காலத்தில் வேளாண்மைவளம் நிரம்பிய மருத நிலப் பின்னணியில் தான் காளைகளை அடக்கும் வீர விளையாட்டாக ஏறு தழுவுதல் இருந்துள்ளது. ஏறு தழுவிய ஆண்மை மிக்கவன் மீது பெண் காதல் கொண்டாள் என்று இலக்கியங்கள் சொல்கின்றனவே ஒழிய காளையை அடக்கினால் தான் திருமணம் என்று முன் நிபந்தனை எதுவும் இல்லை.
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்போது நடக்கும் விவாதங்கள் மறைமுகமாக வேறு சில உண்மைகளை உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் வாழ்க்கை முறை, புதிய புதிய அடையாளங்களோடு நவீன வாழ்முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது; அதனைத் தடுக்கும் விதமாகச் சில பண்பாட்டுக் கூறுகள் முன் நிற்கின்றன. அவற்றை விட்டு விடுவதா ..? தொடர்ந்து பின்பற்றுவதா ..? என்று முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறது தனிமனித மனம். அந்தத் தவிப்பின் தொடர்ச்சியாக முடிவு எடுக்கும் வேலையை, மனம் என ஒன்றில்லாத அரசு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட முனைகின்றனர் மனிதர்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள சட்டங்கள் என்ற அளவுகோலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. ஆனால் பண்பாட்டுக் கூறுகள் அவ்வளவு சுலபமாகச் சட்ட விதிகளுக்குக் கட்டப்படக் கூடியவை அல்ல.

ஜல்லிக்கட்டை நடத்தும் பாலமேடும் அலங்காநல்லூரும் வைகைப் பாசன வயல் வெளிகளைக் கொண்ட கிராமங்கள். பொறுப்பேற்று நடத்தும் அம்பலகாரர்கள் அந்தக் கிராமங்களில் நிலவுடைமை யாளர்கள். ஜல்லிக்கட்டுக் காளைகளின் உரிமையாளர்களும் நிலவுடைமையின் காரணமாகப் பெருந்தனக்காரர்களாக அறியப்படுபவர்கள். ஆனால் காளைகளை அடக்குபவர்கள் அத்தகைய பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்கள் அல்ல. அதனால் ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிரிழப்புகளும் படுகாயங்களும் அப்பாவிக் குடும்பங்களைத் தான் பாதிக்கிறது என்ற வாதமும் இங்கே முன் வைக்கப்படுகிறது. இந்த வாதத்தோடு பண்டைய கிரேக்க சமுதாயங்களில் நிலவிய அடிமைகளின் மோதலைக் கண்டு களிக்கும் பிரபுத்துவ மனநிலையோடு தொடர்புபடுத்தியும் கூட வாதிடுகின்றனர். ஆனால் இத்தகைய வாதங்கள் அடிப்படைகளற்ற வாதங்கள் எனச் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அடிமைகளை மோதவிட்டு வேடிக்கை பார்த்த பிரபுக்களைப் போலக் குரூர இன்பம் இங்கே கிடையாது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி வாடி வாசலுக்குள் அனுப்புவதில்லை. தான் வீரன் எனக் கருதும் ஒருவன், அதை வெளிப்படுத்த விரும்பித் தானே கோதாவில் இறங்கிக் காளையை அணைகிறான்.இத்தகைய வெளிப்பாடு ஒரு காலகட்டத்திய-வட்டாரம் சார்ந்த வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் சமய நம்பிக்கை சார்ந்த நேர்த்திக் கடனில் இருக்கும் கேள்விகளற்ற நம்பிக்கையும் நேர்த்திக் கடனைச் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் கூட இதில் கிடையாது.

கடந்த நூறு ஆண்டுகளில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நின்று போயுள்ளன. வேளாண்மை சார்ந்த பண்பாட்டிலிருந்து விலகும் போது அதன் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் மதிப்பீடுகளையும் மனிதர்கள் விட்டு விடுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. தெருக்கூத்து மட்டும் அல்ல. வட்டாரம் சார்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நாட்டார்கலைகள் பலவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. சென்னை சங்கமம் போன்ற வருடாந்திர நிகழ்வுகளால் அவற்றைக் காட்சிப் பொருளாக ஆக்கிப் பார்த்த வினைகள் தொடர முடியாதவை. அப்படிச் செய்தால் கூட அவற்றை அதன் மொத்த உயிர்ப்புடன் வாழ வைக்க முடியாது. அப்படி வாழ வேண்டுமானால் நிகழ்கால மனிதனின் ஓய்வுப் பொழுதைத் தனதாக்கும் கூறுகளைக் கொண்டதாக அவை மாற வேண்டும்.

நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழையும் ஆவேச வேகத்துடன் இருக்கும் தமிழர்களுக்கான கலைவடிவமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிகழ்வுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு நாட்டார் கலைகள் போட்டியிட்டு உயிர் வாழ்வது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மக்களின் பண்பாட்டு அடையாளங்களான சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் நுழைய அரசுக்கும் அதன் துணை அமைப்புக்களான காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றிற்கு எந்த அளவு இடம் தரலாம் என்ற முக்கியமான கேள்வியை ஜல்லிக்கட்டு எழுப்பியுள்ளது. இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு பிறப்பித்த கோயில்களில் உயிர்ப் பலித் தடைச் சட்டம் கூட அத்தகைய கேள்வியை எழுப்பி விட்டுப் பின் வாங்கிய ஒன்றுதான். படித்தவர்களும் , அதனால் நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட மனிதர்களும் உயிர்ப்பலி தடை, ஜல்லிக் கட்டுக்குத் தடை போன்றவற்றிற்கு நேரிடையாக இல்லையென்றாலும் மனத்தளவில் ஆதரவு தெரிவிக்கத் தான் செய்வர். ஆனால் அதனை ரத்தமும் சதையுமாகக் கருதி, வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி வைத்திருக்கும் மனிதர்கள் அப்படிக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாகச் சிறுபான்மைப் பண்பாட்டின் மீது பெரும்பான்மைப் பண்பாடு ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகத் தான் கருதுவார்கள். அப்படிக் கருதும் போது எழும் உணர்வெழுச்சிகள் வன்முறைக்கு இட்டுச் செல்லும். தனது வீரத்தைக் காட்ட வாய்ப்பளிக்கும் ஜல்லிக்கட்டில் உயிரைத் துச்சமாக மதித்து, காளைகளை அடக்கத் துடிக்கும் இளைஞர்களைப் போலப் பண்பாட்டுக் கூறுகளைக் காப்பாற்ற விரும்புவது நனவிலி மனத்தின் கூட்டுச் செயல்பாடு என்பது உளவியல்.

வட்டாரம் சார்ந்த அடையாளங்கள் மதம், மொழி, இனம் என்ற பெரிய கதையாடல் சார்ந்த அடையாளங்கள் போன்றன அல்ல. மதம், மொழி, இனம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் பல நேரங்களில் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முற்போக்கான பார்வையை வளர்த்தெடுப்பதற்கும் தடைகளாக இருக்கின்றன. ஆனால் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு அடையாளம் அப்படியொரு தடையாக இருப்பதில்லை என்பதையும் அரசும் நீதிமன்றமும் கவனம் கொள்ள வேண்டும். 


நன்றி- https://www.facebook.com/ramasamy.tamil
v.kalathur வ.களத்தூரில் நேற்று இரவு தொடங்கி பலத்த மழை பெய்துவருகிறது. அக்கினிநட்சத்திரம் தொடங்கி சில நாட்களில் வெப்பசலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் இருநாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில்... இந்த கோடைகாலம் நமக்கு குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என நம்பலாம்... கல்லாற்றில் வெள்ளம் வரவும் வாய்ப்பு அதிகம்..


Tuesday, 6 May 2014


பீஜிங்: சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மோடி தலைமையில் அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையேயான நட்பு, மேலும் பலமடையும். குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில், மோடியை மறைமுகமாக தொடர்புபடுத்தி, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், பொருளாதார தடையை திணித்ததால், தற்போது அவர் பிரதமர் ஆவதை அவர்களால் ஏற்க முடியவில்லை.இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து மோடி பேசியதாக வெளியான தகவல்கள், இரு நாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில், மேற்கத்திய ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டவை.இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது           v .kalathur seithi  .

நன்றி-தினமலர்

கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு முன் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய 3 அம்சங்களை மாணவர்கள் கவனிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார்.
"தினமணி' மற்றும் "ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம்' ஆகியவை இணைந்து பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியை சென்னையில் திங்கள்கிழமை நடத்தின. இதில் மன்னர் ஜவஹர் பேசியதாவது:
உயர் கல்வியில் ஏராளமான படிப்புகள் உள்ளன. கலை, அறிவியல் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகள் என ஏராளமான படிப்புகள் உள்ளன.
பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளிலேயே சேரவே விரும்புகின்றனர். தமிழகம் முழுவதும் இப்போது 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. எனவே, பொறியியல் படிக்க இடம் கிடைப்பது எளிது. ஆனால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு 3 முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதி மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய மூன்றையும் அறிய வேண்டியது மிக அவசியம்.
ஆசிரியரைப் பொருத்தவரை உயர் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதைவிட, ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கின்றனரா, ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி இருக்கிறது உள்ளிட்டவற்றைக் கவனிக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரை நூலகம், ஆய்வகம், வகுப்பறை, கம்ப்யூட்டர் வசதிகள் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
வளாகத் தேர்வை பொருத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு கல்லூரியில் மாணவர்களைத் பணிக்குத் தேர்வு செய்ய எத்தனை நிறுவனங்கள் வருகின்றன என்பதை அறிய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதால், அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபாட்டோடு பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமை பெற்றிருக்கும்.
ஆனால், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்த மூன்றும் முழுமை பெற்றிருப்பதை உறுதி செய்வது கடினம். எனவே, இந்த கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள், அவற்றில் படித்த நண்பர்கள் மூலம் அந்தக் கல்லூரிகளின் நிலை குறித்து அறிந்து கொண்டு அதன் பிறகே கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
விருப்பமான பிரிவை தேர்வு செய்ய வேண்டும்: பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல், சிவில், எல்க்ட்ரிக்கல், பயோ-டெக்னாலஜி என 89 பிரிவுகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு விருப்பமானப் பிரிவை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திவிட வேண்டும். உயர் கல்வியில் மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ, அதைப் படிக்க அனுமதிப்பதே சிறந்தது.
முதலாமாண்டு மட்டுமே கடினம்: தமிழகத்தில் பொறியியல் சேர்பவர்களில் 68 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு படிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், தமிழ் வழியில் படித்து வந்தோம் என்கிற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். இதனால், இந்த மாணவர்கள் பல்வேறு சூழல்களில் பின்தங்க வேண்டியச் சூழல் ஏற்படுகிறது.
இந்த எண்ணத்தை கிராமப்புற மாணவர்கள் முதலில் கைவிட வேண்டும். பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு, பொறியியல் படிப்பில் முதலாமாண்டு மட்டும்தான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பு மிகவும் எளிதாகிவிடும். எனவே, தேவையற்ற அச்சத்தை மாணவர்கள் கைவிடவேண்டும் என்றார் மன்னர் ஜவஹர் v.kalathur seithi .

Monday, 5 May 2014


பெரம்பலூர், : பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்ச நல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 250வாக்குச்சாவடிகள், முசிறி தொகுதியில் 244வாக்குச் சாவடிகள், துறையூர் தொகுதியில் 247வாக்குச் சாவடி கள், பெரம்பலூர் தொகுதியில் 297வாக்குச்சாவடிகள் என நாடாளுமன்ற தொகுதிஅள வில் 1,518வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 6,33,416 ஆண் வாக்காளர்கள், 650,827 பெண்வாக்காளர்கள், 26 திருநங்கைகள் எனமொத்தம் 12,84,269 வாக்காளர்கள் உள்ள னர்.
     கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலில் குளித்தலை தொகுதியில் 1,70,170 வாக்குகளும், லால்குடிதொகுதி யில் 1,55,225 வாக்குகளும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 1,69,567 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,64,348 வாக்குகளும், துறையூர் தொகுதியில் 1,58,086 வாக்குகளும், பெரம்பலூர் தொகுதியில் 2,10,291வாக்குகளும் பதிவாகியுள்ளன. பெரம்பலூர் நாடாளுமன்ற  தொகுதியில் 80.02சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய 3சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனையொட்டியுள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பத்திரமாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 16ம்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 டேபிள்கள் என 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1518 வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84 டேபிள்களில் வைக்கப்பட்டு 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணி 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவித் தேர்தல் நடந்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த 84 டேபிள்க ளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஏதுவாக மத்தியஅரசு நிறுவ னங்களில் பணிபுரியக்கூடிய 84 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 84டேபிள்களையும் வீடியோ பதிவுடன் கண்காணிக்கவுள்ளனர்.
அதோடு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கவுண்டிங் சூப்பர்வைஸர், ஒரு அசிஸ் டெண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர் v.kalathur seithi .
நீலகிரி தொகுதியின் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில் அவரை பா.ஜ.கவின் மாநில தலைமை அவரை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளது.





v.kalathur வ.களத்தூரில்  இன்று காலை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழை அக்கினி நட்சத்திரம் நேற்று  தொடங்கிய நிலையில் இன்று பெய்த காரணத்தால் அக்கினி நட்சத்திரத்தின் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 4 May 2014


 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகராக ஸ்ரீநகர், திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்குகிறது.
அதன்படி, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை 6 மாதங்களுக்கு ஸ்ரீநகரில் இருந்து செயல்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோடையில் ஸ்ரீநகரை தலைநகராகக் கொண்டும், குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து, ஜம்முவில் இயங்கிவந்த அரசு அலுவலகங்கள் கடந்த மாதம் 25ஆம் தேதியுடன் மூடப்பட்டன.
இதையடுத்து கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்குகின்றன.
இந்த அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை செயல்படும். பின்னர், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் ஜம்முவில் இருந்து செயல்படும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த நடைமுறை இருந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி பயங்கரவாதிகளால் அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் ஸ்ரீநகர் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது v.kalathur seithi .

நன்றி-தினமணி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்.
இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் ஜெய்ப்பூர் போலீஸார் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். போலீஸாரால் தேடப்பட்டு வந்த அஷ்ரப் அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்துள்ளார்.
அஷ்ரப் அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மதபோதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மதபோதகர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் புதுதில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர் v.kalathur seithi  .

நன்றி-தினமணி.

பெரம்பலூர், : வாக்கு எண்ணும் பணிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 15 டேபிள்கள் என 6 தொகுதிக்கு 90டேபிள்கள். 18சுற்றுகளில் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232 வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள், முசிறி தொகுதியில் 244வாக்குச்சாவடிகள், துறையூர் தொகுதியில் 247வாக்குச்சாவடிகள், பெரம்பலூர் தொகுதியில் 297வாக்குச்சாவடிகள் என நாடாளுமன்ற தொகுதி அளவில் 1,518வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 6,33,416 ஆண் வாக்காளர்கள், 650,827 பெண் வாக்காளர்கள், 26திருநங்கைகள் எனமொத்தம் 12,84,269 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் குளித்தலை தொகுதியில் 1,70,170 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 1,55,225 வாக்குகளும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 1,69,567 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,64,348 வாக்குகளும், துறையூர் தொகுதியில் 1,58,086 வாக்குகளும், பெரம்பலூர் தொகுதியில் 2,10,291வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதன்படி 6சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,98,647 ஆண் வாக்காளர்கள், 5,29,022 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் எனமொத்தம் 10,27,687வாக்காளர்கள் கடந்த 24ம்தேதி நடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதன்படி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.02 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய 3சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனையொட்டியுள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பத்திரமாக வைத்து பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 16ம்தேதி வாக்கு எண் ணும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் நடந்து வருகிறது.
இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 15 டேபிள்கள் என 6தொகுதிகளுக்கும் 90டேபிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 84 டேபிள்கள் வாக்கு எண்ணுவதற்கும், 6டேபிள்கள் 6உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு நுண்பார்வை யாளர் எனப்படும் மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கவுண்டிங் சூப்பர்வைஸர், ஒரு அசிஸ்டெண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு 6தொகுதிகளிலுள்ள 1518 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84டேபிள்களில் வைத்து 18 சுற்றுகளில் எண்ணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது v.kalathur seithi .


பெரம்பலூர், : திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, தற்போது பயனற்றுப் போனதால், பழுதாகிப் போனதால் உபயோகப்படுத்தப்படாமல், திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் அதுகுறித்த விரங்களை மாவட்ட நிர் வாகத்திற்கு உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக எங்காவது ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும்பணி நடந்தால் அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் அதன் வாய்பகுதியினை உடனடியாக உரிய மூடிகொண்டு மூடப்படவேண்டும் என்று ஆழ்குழாய் அமைக்கும் வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறுகள் திறந்த நிலையில் இருப்பின் அதில் குழந்தைகள் தவறி விழுவதற்கான அபாயம் உள்ளது.
எனவே ஆழ்குழாய் கிணறுகள் திறந்த நிலையிலிருந்தால் உடனே பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள 1077என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது v.kalathur seithi.

நன்றி-தினகாரன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014லி2015லிஆம் கல்வியாண்டுக்கான பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே 9லிஆம் தேதி முதலும், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர மே 12லிஆம் தேதி முதலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை மே 31லிஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2லிஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.800. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.400 ஆகும்.
விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழக கேஷ் கவுன்ட்டர் மற்றும் அனைத்து தொலைதூரக் கல்வி மைய படிப்பு மையங்களிலும் கிடைக்கும். பி.இ மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தனி, தனி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் பொதுப் பிரிவினர் ரூ.850லிம் (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.450லிம் ( ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்லி608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் v.kalathur seithi .

நன்றி-தினமணி.