கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட
இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில்
உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்.
இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் ஜெய்ப்பூர் போலீஸார் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். போலீஸாரால் தேடப்பட்டு வந்த அஷ்ரப் அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்துள்ளார்.
அஷ்ரப் அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மதபோதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மதபோதகர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் புதுதில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர் v.kalathur seithi .
நன்றி-தினமணி.

0 comments:
Post a Comment