பெரம்பலூர், : பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்ச நல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 250வாக்குச்சாவடிகள், முசிறி தொகுதியில் 244வாக்குச் சாவடிகள், துறையூர் தொகுதியில் 247வாக்குச் சாவடி கள், பெரம்பலூர் தொகுதியில் 297வாக்குச்சாவடிகள் என நாடாளுமன்ற தொகுதிஅள வில் 1,518வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 6,33,416 ஆண் வாக்காளர்கள், 650,827 பெண்வாக்காளர்கள், 26 திருநங்கைகள் எனமொத்தம் 12,84,269 வாக்காளர்கள் உள்ள னர்.
கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலில் குளித்தலை தொகுதியில் 1,70,170 வாக்குகளும், லால்குடிதொகுதி யில் 1,55,225 வாக்குகளும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 1,69,567 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,64,348 வாக்குகளும், துறையூர் தொகுதியில் 1,58,086 வாக்குகளும், பெரம்பலூர் தொகுதியில் 2,10,291வாக்குகளும் பதிவாகியுள்ளன. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.02சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய 3சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனையொட்டியுள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பத்திரமாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 16ம்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 டேபிள்கள் என 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1518 வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84 டேபிள்களில் வைக்கப்பட்டு 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணி 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவித் தேர்தல் நடந்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த 84 டேபிள்க ளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஏதுவாக மத்தியஅரசு நிறுவ னங்களில் பணிபுரியக்கூடிய 84 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 84டேபிள்களையும் வீடியோ பதிவுடன் கண்காணிக்கவுள்ளனர்.
அதோடு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கவுண்டிங் சூப்பர்வைஸர், ஒரு அசிஸ் டெண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர் v.kalathur seithi .
0 comments:
Post a Comment