ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகராக ஸ்ரீநகர், திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்குகிறது.
அதன்படி, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை 6 மாதங்களுக்கு ஸ்ரீநகரில் இருந்து செயல்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோடையில் ஸ்ரீநகரை தலைநகராகக் கொண்டும், குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து, ஜம்முவில் இயங்கிவந்த அரசு அலுவலகங்கள் கடந்த மாதம் 25ஆம் தேதியுடன் மூடப்பட்டன.
இதையடுத்து கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்குகின்றன.
இந்த அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை செயல்படும். பின்னர், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் ஜம்முவில் இருந்து செயல்படும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த நடைமுறை இருந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி பயங்கரவாதிகளால் அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் ஸ்ரீநகர் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது v.kalathur seithi .
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment