Saturday, 21 June 2014


  • 18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்?
  • அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன? உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா? அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா?
  • கொலை செய்யப்பட்ட பாடி சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்?
  • பாடி சுரேஷ் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்த (மெயின் ரோடுகளில் மசூதி இருப்பதை காரணம் காட்டி) வழியை திடீர் திடீரென்று மாற்றி மாற்றி, வன்முறையை தூண்டியது அதிகாரிகளா? பொதுமக்களா?
  • மசூதி இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி வண்டியில் சென்ற சவ ஊர்வலத்தைக்கூட விடமாட்டேன் என்று மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது ஜனநாயக செயலா? வருங்காலத்தில் இந்துக்களும் இதுபோல் எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறை என்ன செய்யும்?
  • பல இடங்களில் இந்து முன்னணி தொண்டர்கள் மீது காவல்துறை அத்துமீறி தடியடி நடத்தியதும், கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்தியதும் யாரை திருப்திப்படுத்த?
  • கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தராதது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமில்லையா? காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தகவல் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்பது காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தானே?!
  • தடியடியின் போது காவல்துறையினர் உடன் வந்த இயக்க வண்டிகளை அடித்து நொறுக்கியதும், எந்தவித அசம்பாவிதத்தில் ஈடுபடாத மக்கள் மீது பலம் கொண்ட மட்டும் பலப்பிரயோகம் செய்தது. (இது குறித்த விடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தகுந்த நபர்களிடம் அவை சமர்ப்பிக்கப்படும்.)
  • இந்து முன்னணியின் பல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்களை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டும், அதனை அலட்சியம் செய்து, அவை போலி மிரட்டல்கள் என்ற சொன்ன அதிகாரிகள், பாடி சுரேஷ் கொலைக்கு பொறுப்பு தானே!
  • இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை எடுத்து விட்டோம் என்று பத்திரிகைகளில் பகிரங்கமா அறிவிப்பு கொடுத்த அதிகாரி செயல், கொலைகாரர்களுக்கு உடந்தை இல்லையா?
  • பாடி சுரேஷ் கொலையை பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்வதாக பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பது, மக்களை திசைத்திருப்பவோ என சந்தேகம் கொள்கிறோம். முன்னர் பக்கம் பக்கமாக பொய் அறிக்களை வெளியிட்ட உயர் காவல் அதிகாரியின் அதே கோணத்தில் காவல்துறை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
  • 21 ஆண்டுகளாக தேடப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதி ஹைதர் அலி, கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வந்த சில நாட்களில் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா? அல்லது பேரம் படிந்துவிட்டதா?
  • சிறுபான்மையினர் ஓட்டுக்காக, இந்துக்களைக் கேவலப்படுத்திய, அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள் என்னவானார்கள் என்பது சென்ற தேர்தலில் பார்த்தோம், இனி வருகின்ற தேர்தலிலும் பார்ப்போம்..
  • பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சட்டத்தின் படி செயலாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.
  • சாலை விபத்தில் பலியானவர்களுக்கும், அந்நிய நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கும் துடிக்கும் அரசியல்வாதிகள், தமிழக முதல்வர் முதலானோர் இதயங்கள் - சமுதாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பாடி சுரேஷ் படுகொலைக்கு துடிக்கவில்லையே ஏன்? அவர் செய்த குற்றம் தான் என்ன?
  • மனிதாபிமானம், ஜனநாயக சிந்தனை, மனசாட்சி உள்ள அரசியல், சமுதாய தலைவர்கள் இந்தப் படுகொலையை கண்டிக்க முன் வரவேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
  • பாடி சுரேஷ் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் 10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு பணி அளிக்க மனமுவந்து முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இதற்கு முன் நடந்த இந்து முன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் படுகொலைகளில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளும், இந்தக் கொலையை செய்த கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் தமிழக அரசு தனி கவனம் கொடுத்து உடன் புலானாய்வு செய்து கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை நுண்ணறிவு பிரிவு முடுக்கிவிடப்பட்டு, செயலாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Thursday, 19 June 2014


இஸ்லாமிய பயங்கரவாதிகளை கையாலாகாத தமிழக அரசும், காவல்துறையும்  இனியும் தாமதிக்காது கைதுசெய்ய வலியுறித்தி
 இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் திரு. கே.பி.எஸ் . சுரேஷ் ஜி படுகொலையைக்கண்டித்து ஆர்பாட்டம் நடத்த இந்துமுன்னணி அழைக்கிறது....

இந்து அமைப்புகள், நடுநிலைவாதிகள், இந்துதர்மம் காக்க வேண்டுமென்ற சிந்தனை கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்....

 இந்து தர்மம் காக்க போராடிய இன்று சுரேஷ்ஜி க்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் நேரலாம்.... நம் கண்டனத்தை பதிவு செய்வோம்.... பயங்கரவாதிகளுக்கு நம் ஒற்றுமையை காட்டுவோம்.
 
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் திரு. சுரேஷ்ஜி அவர்கள் நேற்று இரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலையாளிகளை கைது செய்ய முடியாத காவல் துறை தடியடிநடத்தினர் .
  கொலையுண்ட சுரேஷ் ஜி வாழ்ந்த பாடி. பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் சென்ற போது, அங்கு மசூதி உள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்து ஊர்வலத்தை தடை செய்தனர். அதை ஆட்சேபித்த நமது மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் ஜி உட்பட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அராஜகம் புரிந்துள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஊர்வலம்.
ராமகோபாலன் ஜி காரை மறிக்கும்  காவல்துறை.
திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம்
கொலையாளியை கைதுசெய்யாத கையாலாகாத காவதுறைஅப்பாவிகள் மீதான தடியடி.
KMC யில் இருந்து அமரர் ஊர்தி கிளம்பிய காட்சி.








சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகே போராட்டம்
திருச்சி மாவட்ட ஆர்ப்பாட்டம்
காவல்துறை குவிப்பு-சென்னை.
ரமேஷ்ஜி உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி.
போலிசின் கெடுபிடி.

கோவை.
புதுச்சேரி
திருப்பூர்
திருப்பத்தூர்
வந்தவாசி
ராஜபாளையம்

Wednesday, 18 June 2014


இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10 மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச் செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாத இயக்கங்களை ஓட்டுக்காக வளர்த்தி வரும் அரசியல் கட்சிகள் இந்த தொடர்கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் 24ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணிக் காட்டிய முஸ்லீம் பயங்கரவாதியான ஹைதர் அலியை நீதிமன்றம் ஜாமீனில் வெளியேவிட்டுள்ளது. அரசின் மெத்தனப்போக்கு தொடர்வதால் தமிழகம் கொலைகளமாக மாறியுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னனியில் உள்ள அமைப்புகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த படுகொலையை கண்டித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் விடுத்த அறிக்கை:
இன்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் வைத்து இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் திரு. கே.பி.எஸ். சுரேஷ் எனும் பாடி சுரேஷ் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம் வெளியில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அமைதி பூங்காவா இருக்கிறது, பயங்கரவாதிகளுக்கு. 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன் ஜாமீன் கிடைக்கும் அளவில் தமிழகத்தின் காவல்துறை செயல்பாடு இருப்பதை கண்டு தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழக முதல்வர் அவர்கள் இக்கொலை வழக்கை நேரிடையான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி- VCRC

Sunday, 15 June 2014


பாஸ்கர் ஜி , VHP பொறுப்பாளர்.

பாஸ்கர் ஜி... பாரதமாதாவின் பாதமலர்.

ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட RSS'ன் மாவட்ட பொறுப்பாளராக பாஸ்கர் ஜி நியமிக்கப்பட்டபோது நமக்கெல்லாம் அறிமுகமானவர். இளைஞர்களுக்கே உரிய கேலிப்பேச்சு கிண்டலோடு சங்கத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தியவர். நம் வ.களத்தூரில் இன்றும் RSS சங்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற இவரும் ஒருகாரணம் .

திண்டுக்கல் மாவட்டத்திற்கு சங்கப்பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டு பணி புரிந்தபோது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் மயிரிழிலையில் உயிர் தப்பினாலும் ஒரு காலை இழந்தார்.

இத்தாக்குதலுக்கு பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டு முன்னைவிடவும் தீவிரமாக சங்கப்பணியாற்றத் தொடங்கினார் . இதனாலேயே அவரின்மீது பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டு, காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

இவரின் திறமை கண்டு சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ன் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராக  பணியை செய்ய பணித்தது . அவருக்கு இன்று பிறந்தநாள் .  நம் சங்க கலாச்சாரத்தில் தனி மனித துதிபாடலை நாம் அனுமதிப்பதில்லை என்றாலும் பாஸ்கர் ஜி போன்ற வாழும் முன்னுதாரணங்கள் நமக்கு ஒரு வழிகாட்டலாய் இருக்கிறார்கள் என்பதே இப்பதிவின் நோக்கம்....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி...

மார்க்ஸ் அந்தோணிசாமி

 இஸ்லாமியர்களின் பிச்சைகாசுக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்ட தலைவராகிய மார்க்ஸ் அந்தோணிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 'காயிதேமில்லத் பிறை' விருது வழங்குகிறது.

சென்ற வருடம் நம் வ.களத்தூரில் நடந்த இந்து-முஸ்லிம் மதமோதல் நடந்தபோது இதே மாரடிக்கும் மார்க்ஸ்'தான் உண்மை கண்டறியும் குழு என்றபெயரில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அறிக்கை தந்தது நினைவிருக்கலாம்.
http://vkalathurseithi.blogspot.in/2013/10/blog-post_25.htm

  மார்க்சின்  இது போன்ற செயல்கள் மனிதஉரிமை , சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் தான் கண்டறிந்த்ததாக கூறி ஒரு அறிக்கையை அரசு அதிகாரிகளிடமும் மூன்றாம்தர பத்திரிக்கைகளிலும் வெளியிடுவதன் மூலம்   அரசை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்ச்சியில் ஈடுபடுவதை lobbying என்ற வார்த்தை பதத்தை ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களின்  முற்போக்கு போலி மதச்சார்பின்மை முகமூடியை பொதுவெளியில் கிழித்து எறிவதே நமது இந்து தர்மத்திற்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும்.