பாஸ்கர் ஜி , VHP பொறுப்பாளர். |
பாஸ்கர் ஜி... பாரதமாதாவின் பாதமலர்.
ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட RSS'ன் மாவட்ட பொறுப்பாளராக பாஸ்கர் ஜி நியமிக்கப்பட்டபோது நமக்கெல்லாம் அறிமுகமானவர். இளைஞர்களுக்கே உரிய கேலிப்பேச்சு கிண்டலோடு சங்கத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தியவர். நம் வ.களத்தூரில் இன்றும் RSS சங்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற இவரும் ஒருகாரணம் .
திண்டுக்கல் மாவட்டத்திற்கு சங்கப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணி புரிந்தபோது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் மயிரிழிலையில் உயிர் தப்பினாலும் ஒரு காலை இழந்தார்.
இத்தாக்குதலுக்கு பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டு முன்னைவிடவும் தீவிரமாக சங்கப்பணியாற்றத் தொடங்கினார் . இதனாலேயே அவரின்மீது பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டு, காவல்துறையால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.
இவரின் திறமை கண்டு சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ன் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராக பணியை செய்ய பணித்தது . அவருக்கு இன்று பிறந்தநாள் . நம் சங்க கலாச்சாரத்தில் தனி மனித துதிபாடலை நாம் அனுமதிப்பதில்லை என்றாலும் பாஸ்கர் ஜி போன்ற வாழும் முன்னுதாரணங்கள் நமக்கு ஒரு வழிகாட்டலாய் இருக்கிறார்கள் என்பதே இப்பதிவின் நோக்கம்....
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி...
0 comments:
Post a Comment