Saturday, 12 April 2014

வரதராஜன்.
ஹேன்ஸ் ரோவர் டயாலிஸஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்குவதற்கான தொடக்க விழா பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் பேசியது:
தூய யோவான் சங்க அறக்கட்டளை, ஆல்டிரின் ரினல் கேர் நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதற்கான முதல் டயாலிஸஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த செலவில், லாப நோக்கமின்றி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் தொடங்கப்பட்ட முதல் டயாலிஸஸ் மையமாகும். தூய யோவான் சங்க அறக்கட்டளையின் ஹேன்ஸ் ரோவர் ஹெர்பல் மருந்தகம் மூலிகை வைத்தியர் சீ. பால்ராஜ் கண்டுபிடித்துள்ள உடற்தேய்வு நோய்க்கான ஹெர்பல் மருந்தான ரோவர் வைரல் நில் என்ற மருந்தை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இந்த மருந்தை உட்கொண்டு, அந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைந்துள்ளனர் என்றார்.

நன்றி-தினமணி.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலம் வாக்களிக்கலாம் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன் வாக்குச் சாவடியில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்த கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட "ஸ்மார்ட் கார்டு', தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் உறுதிப்படுத்தும் போது, வாக்களர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருள்படுத்த தேவையில்லை.
மற்றொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாக்காளர் அளித்தால், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தால் அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். புகைப்படம் பொருந்தாமல் வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த இயலாதபோது மேற்கண்ட மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம் என்றார் அவர்.

நன்றி-தினமணி.
தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் பாரிவேந்தர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்துவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜா சிதம்பரம்.

கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை, தன்னாட்சி நிறுவனமாக மாற்றி விவசாயிகளின் விளைபொருளுக்கும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றிக்கும் மத்திய அரசு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கரும்பில் கிடைக்கும் சர்க்கரை, பாகாஸ், மொலாசஸ், மின்சாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வகையில், ஏற்கெனவே பிறப்பித்த அரசாணையை திருத்தம் செய்து கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்.
கிணறுகளிலிருந்து வெட்டி எடுக்கும் கிராவல், ஏரி, வண்டல் மண் ஆகியற்றை சிறு கனிமங்கள் பட்டியலிலிருந்து நீக்கி, கட்டணமின்றி விவசாயிகள் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேட்டூரிலிருந்து வரும் உபரிநீரை நாமக்கல், தாத்தங்கார்பேட்டை, துறையூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பும் வகையில் பாசன திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். ஏற்கெனவே ஆட்சி செய்த கட்சிகளுக்கு வாக்களித்து விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதாரம் உயரவில்லை. எனவே, நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஐஜேகே வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கப் பொறுப்பாளர்கள் பி. மாணிக்கம், வி. நீலகண்டன், ஏ. மணி, பி. கணேசன், எ. மணிவேல், என்.பி. அன்பழகன், வி. விஸ்வநாதன், எஸ்.ஆர். முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

Friday, 11 April 2014

ஆசீர்வாதம் ஆச்சாரி
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர்.
அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்தவரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் செயலர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் ஆசீர்வாதம் அக்கட்சியில் இணைந்தார்.
இதையொட்டி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆசீர்வாதம் ஆச்சாரிக்கு முறைப்படி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலையொட்டி சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாஜக தேர்தல் உத்திகள் குழுவில் ஆசீர்வாதம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கட்சியில் சேர்ந்தது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் ஆசீர்வாதம் கூறியதாவது:
"2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது மட்டுமின்றி, சிபிஐயிடமும் நீதிமன்றத்திலும் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அளித்துள்ளேன். தேசிய அளவில் நல்லாட்சியை வழங்கும் கொள்கையுடன் செயல்படும் பாஜகவில் சேர்ந்து ஊழலுக்கு எதிரான எனது பணியைத் தொடர விரும்புகிறேன்' என்றார் ஆசீர்வாதம் ஆச்சாரி.

ஆசீர்வாதம் யார்?:
 தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, அடிப்படையில் ரயில்வே துறையில் செக்ஷன் அதிகாரியாக இருந்தவர். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது, அவரது கூடுதல் தனிச் செயலராக பணியாற்றினார். ராசாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியவராகக் கருதப்பட்டார். 2007-ஆம் ஆண்டு அலைக்கற்றை விவகாரத்தில் ராசாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிக் கொண்டே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஆதாரங்களை சிபிஐக்கு அளித்தார். இதனால், அவரை அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளது.

நன்றி-தினமணி.

Thursday, 10 April 2014

மோடி இன்றளவும் பெருமையாக அணியும் RSS ன் தொப்பி.
சிறுவயது திருமணம் என்பது சென்றநூற்றாண்டு வரை இந்திய மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஊறிப்போன விஷயம அதிலும் வடஇந்திய குடும்பங்களில் இன்றளவும் கூட இளவயது திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.

இந்திய அரசு சிறார்கள் என வரிசைப்படுத்தியுள்ள 17 வயதில்தான் ஜசொதா பெண் என்ற சிறுமியை அவரது பெற்றோர்கள் மோடிக்கு மணமுடித்து வைக்கின்றனர். சிறார்கள் திருமணத்தில் மனம் முடிந்தபின் அவரவர் பெற்றோர்களுடன் மனம்முதிர்ச்சி அடையும் வரை மணமக்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். பெற்றோர் பராமரிப்பில் இருக்கும் இவர்கள் பிறகு ஒரு நல்லநாளில் சேர்துவைக்கப்படுவார்கள். இந்த சிறார்திருமான நடைமுறைதான் நம் தேசத்தந்தை என அழைக்கப்படும் காந்தி அவர்களின் வாழ்விலும் நடைபெற்றது என்பது காந்தியின் வாழ்கையை அறிந்தவர்கள் அறிவார்கள்.

திருமணம் முடித்த மோடி தனது பெற்றோருடன் வசித்துவருகையில் இத்ந்துதுவ சித்தனை கொண்ட அவருக்கு RSS அறிமுகமாகிறது. அந்த இயக்கத்தில் இணைந்து முழுமூச்சுடன் பணிபுரிந்துவந்தார். ஒருகட்டத்தில் RSS ன் முழு நேர ஊழியராக பணியாற்ற மனதளவில் தயாராகிறார். RSS ன் முழு நேர ஊழியர்களுக்கென சில கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு...

"திருமணம் செய்துகொள்ளகூடாது, குடும்பத்திலிருந்து வெளியேறி RSS அமைப்பு பணிக்கும் எந்த பணியாக இருந்தாலும், அந்த இடம் எங்கு இருந்தாலும் செல்லவேண்டும்.முழுநேர ஊழியர்களுக்கென ஒரு சிறுதொகையை அதாவது இந்திய அரசு இன்று கூறும் வறுமைகோட்டு வருமான அளவு தொகையை RSS அமைப்பானது அவர்களுக்கு வாழ்கைப்படியாக கொடுக்கும்.இந்த சிறுதொகையைக்கொண்டு நான்கு நாட்கள் வேண்டுமானால் தாராளமாக சாப்பிடலாம்.

அதனால்தான் RSSன் முழுநேர ஊழியர்கள் சந்யாசிபோல பணிநிமித்தம் எங்கு செல்கிறார்களோ அங்குஉள்ள RSS அனுதாபிகள் வீடுகளில் தான் தங்குவார்கள், அவர்கள் வீடுகளில்தான் சாப்பாடு. ஒருநாள் மாளிகையில், மறுநாள் குடிசையில் , எதுவும் இல்லையென்றால் ஏதாவது ஒரு கோவில் குளத்தில்தான் தூக்கம்.பலவேளைகளில் தண்ணீர்தான் சாப்பாடு. தனது பெற்றோர்களைகூட காண நேரம் மற்றும் அனுமதி கிடைப்பது அரிது. இது கதையல்ல RSS பற்றி அறிந்தவர்களுக்கு இது உண்மை என்று தெரியும்.

RSS ன் முழுநேர ஊழியர்களாக பணியாற்றிய வாஜ்பாய், இந்துமுன்னணி ராமகோபாலன், ப.ஜ.க L.கணேசன் போன்றோர் திருமணம் செய்யா காரணம் அவர்கள் நீண்ட நெடுங்காலம் RSS ன் முழுநேர ஊழியர்களாக பணியாற்றியதுதான். அத்வானி சிலவருடம் சென்னையில் RSS முழுநேர ஊழியராக பட்டாளம் பகுதியில் பணியாற்றியிருக்கிறார் என்பது வரலாறு. RSS ல் இருக்கும்வரை சந்நியாசி போல்தான் வாழ்கை நடத்தவேண்டும் என்பது அதன் விதி."

இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மோடி தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு குடும்பம் என்பது பாரதமாதாவின் குடும்பம் என்று ஆனது. ஒரு சந்யாசிபோல் RSS எங்கு பணிசெய்யுமாறு கட்டளையிடுகிறதோ அதனை செவ்வனே நிறைவேற்றினார்.

பலவேளைகளில் RSS அமைப்பின் முழு நேர ஊழியர்கள், சங்க பாரிவாரங்களின் ஏதாவது ஒரு அமைப்புக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அந்தவழி மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் இந்து முன்னணி அமைக்க ராமகோபாலன் அனுப்படுகிறார். அப்படி BJP அனுபிவைக்கப்பட்டவர்களே வாஜ்பாயி, மோடி போன்றோர்.

அன்று தொடங்கிய மோடியின் நாட்டுப்பணி இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது.வாஜ்பாய் முதல் மோடி வரை தங்களது திறமைக்கு க்கு முழுமுதல் காரணம் RSSதான் என பலவேளைகளில் கூற காரணம் அவர்கள் RSS முழுநேரமாக பணியாற்றிய அனுபவம்தான்.

சரி விஷயத்து வருவோம்.. அன்று சிறார்திருமணம் செய்த மோடி RSS ன் முழு நேர ஊழியராக ஆன பிறகு அவருக்கு திருமணம் குழந்தை குட்டி என்பதெல்லாம் அர்த்தமற்றுப்போய்விடுகிறது. பாரதமாதாவின் தாழ்பணியே கடமையாகிறது. இந்த நிலையில் மோடி திருமணம் என்பது வாக்கு அரசியலுக்காக மெல்லப்படும் விஷயமாக ஆகிப்பனதுதான் மிச்சம.

இப்பொழுது சொல்லுங்கள் மோடி திருமணம் ஆனவர்தானே...?

Wednesday, 9 April 2014

         பெரம்பலூர் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் மற்றக்கட்சி வேட்பாளர்களை பின்தள்ளி பெரம்பலூர் தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பம்சமாக இன்றுவரை OC எனப்படும் முன்னேறிய வகுப்பினர் என்ற பட்டியலில் உள்ள ரெட்டியார் சமூகத்தை OBC எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க தேர்தல் அறிக்கையில் உறுதிகூறியுள்ளார். கடந்தமுறை பெரம்பலூர் தொகுதி MP யாக இருந்த நெப்போலியன் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் தற்போது தி.மு.க வேட்பாளரான சீமானுர் பிரபு நேருவின் பினாமி என்பதோடு இந்த நேருவும் ரெட்டி சமூகத்தைச்சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேரு  ரெட்டி சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ரெட்டி சமூகத்தின் OBC அந்தஸ்து பற்றி இந்த தேர்தலில் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.
மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது.
மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.
இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.
காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்
இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?
இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன்.
****
மோடியின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப் படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் மீது அவதூறுகளும், குற்றசாட்டுக்களும் எழுவது சகஜமான ஒன்றே. மோடியின் மீதான விமர்சனங்கள் மென்மையானது முதல் கடுமையானவை வரை பல விதமாகவும் வீசப் படுகின்றன. அவற்றில் நியாயமான குற்றசாட்டுக்களோ சந்தேகங்களோ இருந்தால் அவற்றிற்கான பதில்களை விளக்கிச் சொல்லலாம். அதைத்தான் மது கிஷ்வர், மீடியா க்ரூக்ஸ், குருபிரசாத், ஒத்திசைவு ராமசாமி போன்றோர் ஆக்கபூர்வமாகச் செய்து வருகிறார்கள்.
மோடியின் வெற்றியை எப்படியும் தவிர்க்க முடியாது என்ற நிலையில் முடிந்த வரை அவர் மீது நம்பிக்கையின்மையை எறிந்து பார்க்கலாம் ஒட்டியது ஒட்டட்டும் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றசாட்டுகளையும் அவர்களினால் வைக்க முடியவில்லை. அவர் மீது எந்தவிதமான கிரிமினல் குற்றசாட்டுக்களையும் இந்தியாவின் அனைத்து விதமான கோர்ட்டுகளையும் பயன் படுத்தியும் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே அவர் மீது வாக்காளர்களிடத்து அவநம்பிக்கையையாவது விதைக்க முடியுமா அதன் மூலமாக அவருக்குப் பெருகி வரும் ஆதரவுகளைக் குறைக்க முடியுமா என்று சூடோ செக்குலார் ஊடகங்களும் மோடி வெறுப்பு கட்டுரையாளர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் எரிச்சலும், கோபமும், வெறுப்பும், ஆதங்கமும்,படபடப்பும், பதட்டமும், கையாலாகதத்தன்மையும் அவர்களின் கட்டுரைகளின் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் பெரிதும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
அப்படி மோடி மீதான அவநம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு உத்திகளில் ஒன்று மோடி குஜராத் மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்து வருபவர் ஆகவே அவரால் சிக்கலான, கஷ்டமான, சோதனையான ஒட்டு மொத்த இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியாது என்பது. இதையே பல விதமாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார்கள். மோடி குஜராத் என்ற ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனால் அது மட்டுமே இந்தியாவின் பிரதமராகும் தகுதியை அளித்து விடாது. அது மட்டுமே மாபெரும் இந்தியாவை ஆளும் தகுதியை அவருக்கு அளித்து விடாது ஆகவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆக அருகதை அற்றவர். ஆகவே மக்களே அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே இவர்கள் சொல்ல வரும் செய்தியின் சாரமாகும். இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் எழுதியும் சொல்லியும் ஒரு விஷப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தில் உள்ள அபத்தத்தை முதலில் காணலாம்
மோடி குஜராத்தை நான்காவது முறையாக ஆட்சி செய்து வருகிறார். அவர் குஜராத்தை அமெரிக்கா போலவோ வளர்ந்த வளமான ஐரோப்பா நாடுகள் போலவோ இன்னும் முழுமையாக மாற்றி விடவில்லை. அதற்கு முன்பாக 50 ஆண்டுகள் மோசமான ஆட்சியை அவரால் வெறும் 15 ஆண்டுகளில் மாற்றி விடவும் முடியாது. அதற்கான மந்திரக் கோல் எதுவும் அவரிடம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையுடனும் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் நிர்வாகத் திறனாலும் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும் அளவு கணணிப் படுத்துவதினால் ஊழலை குறைக்கும் விதமாகவும் ஆட்சி செய்து வருகிறார். அவரது நிர்வாகத்தினால் மின்சாரம், நீர் மேலாண்மை, விவசாயம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்து அதற்கான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன. ஐ நா சபை முதல் மத்திய அரசாங்கம் வரை அவரது நிர்வாகத்தைப் பாராட்டி ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் அவர் மீது மாநில அனுபவம் மட்டுமே உள்ளவர் மத்திய அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அவநம்பிக்கை விதைக்கப் பட்டு வருகின்றன.

மோடியை விட்டு விடலாம். ஒரு கார்ப்போரெட் நிர்வாகம் தனது நிர்வாக மேலதிகாரிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்? ஒரு ஐ டி நிறுவனத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு சின்ன ப்ராஜக்ட்டை மேனேஜ் செய்த மேனேஜரை அதை விட அடுத்து பெரிய ப்ராஜக்ட்டை நிர்வாகிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விற்பனை நிறுவனத்தில் ஒரு மாவட்டத்தில் விற்பனையை மேலாண்மை செய்த அதிகாரியை மாநில அளவின் அதிகாரியாக தேர்ந்தெடுக்க்கிறார்கள். மாநில அனுபவம் உடையவர்களை அகில இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவின் பல்வேறு ரீஜியன்களுக்கோ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புக்கு ஏற்கனவே இந்தியா முழுதும் நிர்வாகித்த அதிகாரிதான் வேண்டும் என்று எந்த நிறுவனமும் பிடிவாதம் பிடிப்பதில்லை. முன் அனுபவம் அதை விடச் சிறிய துறையிலோ, பகுதியிலோ இருந்தாலும் அதன் அடிப்படையிலேயே அதை விடப் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.
இந்திய அரசு பதவிகளை எடுத்துக் கொண்டாலும் சரி மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை மாநில நீதிபதிகளாக்குகிறார்கள். மாநில நீதிபதிகளாக இருந்தவர்களைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியை நியமிக்கும் பொழுது நீ ஏற்கனவே இந்தியாவின் தலமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை. நீ மாநில அளவில் ஹைக் கோர்ட்டுகளில்தான் நீதிபதியாக இருந்துள்ளாய் ஆகவே உன்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு அமர்த்த முடியாது என்று எவரையும் மறுப்பதில்லை
மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை.
ஆனால் மோடி என்று வரும் பொழுது மட்டும் இவர்கள் வைக்கும் வாதம் என்ன? அவருக்கு மாநில அனுபவம் மட்டுமே உள்ளது ஆகவே அவரை மத்தியில் பிரதமராக்க முடியாது என்று. சரி அந்த அபத்தமான வாதத்தை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் கூட அவருக்கு மாற்றாக இந்த அறிவு ஜீவிகள் வைப்பது எவரை? ராகுல் காந்தியையும், சோனியாவையும், சீத்தாராம் யெச்சூரிகளையும், கேஜ்ரிவால்களையும் தானே? ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உள்ளவர்தான் வேண்டும் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் உள்ள தேர்வு என்ன? தேவகவுடாவும். வாஜ்பாயியும், மன்மோகனும் தானே? மற்றவர்கள் உயிருடன் இல்லை. இதில் வாஜ்பாயி முதுமை அடைந்தவர் சுயநினைவில் இல்லாதவர். தேவகவுடாவும் உலக மகா ஊழல்களின் தந்தையுமான மன்மோகன் மட்டுமே பிரதமராக இருந்த அனுபவம் உடைய ஒரெ தகுதியுள்ள நபர்கள். அவர்களைத்தான் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் முன்னிறுத்துகிறார்களா என்ன? ஆதரிக்கிறார்களா?
ஆக மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது. இந்து மதத்தை நம்பும் ஒருவர் அதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் பிரதமர் ஆவதைக் கனவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அனைத்து விதமான மோடி எதிர்ப்பாளர்களும் இவை போன்ற சொத்தைக் காரணங்களை முன் வைத்து மோடியை எதிர்த்து அவர் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட பாடு படுகிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிகிறார்கள்.
மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது என்பது மற்றொரு வாதம். அதுவும் இதைப் போலவே அபத்தமான ஒரு வாதமே. ஆகவே அனைத்து விதங்களிலும் முன் அனுபவமும் திறமையும் நேர்மையும் உடைய ஒரு தகுதியுள்ள தலைவர் மோடி அவர் குஜராத் போலவே இந்தியாவையும் நிர்வாகிப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்து அவரை ஆதரிக்க வேண்டும். செய்வார்களா? செய்வார்களா?

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற பாடலுக்கு பொருத்தமாய், நடந்து முடிந்திருக்கிறது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்புமனு விவகாரம். இதன் மூலம், '2ஜி' ஊழலை பற்றி முழங்கி வந்த பா.ஜ., ராஜாவுக்கு எதிராக பேட்டியிடும் வாய்ப்பை இழந்து உள்ளது. பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி, வேட்புமனு உடனான 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை, கலெக்டரிடம் தாமதமாக கொடுத்ததால், நேற்று முன்தினம் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கூட்டணி கட்சிகளோடு குடுமிபிடி சண்டைபோட்டு பெற்ற ஒரு தொகுதியை, வாக்கெடுப்பிற்கு முன்பே பா.ஜ., எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து உள்ளதை பற்றி, பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.
1 கடந்த 1994ல் துவங்கப்பட்ட ம.தி.மு.க., 1996 சட்டசபை தேர்தலை சந்தித்த போது, 180 இடங்களில் போட்டியிட, அந்த கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒரு மனு கூட தள்ளுபடியாகவில்லை. அதேபோல், கடந்த 2005ல் துவங்கப்பட்ட தே.மு.தி.க., 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், ஒரு வேட்பாளரின் மனு கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 1980 முதல், நாடு முழுவதும் பல தேர்தல்களை சந்தித்து வந்துள்ள பா.ஜ.,வுக்கு வேட்பு மனு தாக்கலை கூட சரியாக நிர்வாகம் செய்ய தெரியாதா? இதற்கு கட்சியின் மாநில நிர்வாகம் தான் பொறுப்பா?
2 பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தியும் தேர்தலுக்கு புதியவர் அல்ல. 2009 லோக்சபா தேர்தலிலும், இவரே வேட்பாளர். தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றவர். அதற்கு முன்பாக, குன்னூர் நகராட்சித் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். தேர்தல் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் நன்கு அறிந்த குருமூர்த்தி, 'கார் பழுதானதால் தகுந்த நேரத்தில் படிவங்களை கொடுக்க முடியவில்லை' என்று கூறுவதை கட்சி தலைமை ஏற்கிறதா?
3 கட்சி தலைமை ஏற்கிறதா இல்லையா என்பது குறித்து, இதுவரை எந்த தகவலும் இல்லை. கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுவரை வாய் திறக்காதது ஏன்? மாறாக இதுகுறித்து, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் ஏன் பேட்டி அளிக்க வேண்டும்?
4 இதுகுறித்து, இல.கணேசன் கூறுகையில், 'இச்சம்பவம், துரதிர்ஷ்டவசமானது. நீலகிரி பா.ஜ., வேட்பாளர் தவறு செய்து விட்டார். ஆனால், மாற்று கட்சிக்காக அவர், இவ்வாறு செய்துவிட்டார் என, கூறுவதை ஏற்கமுடியாது. அவர், ஒருபோதும் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டார்' என்று கூறியுள்ளார். தவறு செய்வதற்கு இது பயிற்சி வகுப்பா? மாற்று கட்சிக்காக அவர் இவ்வாறு செய்தார் என, யார் கூறினர்? நேற்று வரை, இதுகுறித்து, எந்த அரசியல் தலைவரும், ஊடகமும் அவ்வாறு கூறவில்லையே. அப்படியானால், இவராக கிளப்பிவிடுகிறாரா? மேலதிகமாக, கட்சிக்கு அவர் துரோகம் செய்யமாட்டார் என, கூறுவதில் என்ன உட்பொருள் உள்ளது?
5 வேட்பாளர் தரப்பில், அதிகாரிகளிடத்தில் அளிக்கப்பட்ட அதே விளக்கம் தான், கட்சி தலைமையிடமும் அளிக்கப்பட்டுள்ளது.'கட்சியின் அங்கீகார சான்றிதழாக கருதப்படும், 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை எடுத்து வரும் வழியில், கார் பழுதாகி நின்று விட்டது. அதனால் காலதாமதம் ஏற்பட்டு, மனு தாக்கலுக்கான கடைசி நாளான, 5ம் தேதி, மாலை, 3:30 மணிக்கு, நீலகிரி கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்துள்ளனர். அந்த நேரத்தில், கலெக்டர் 'மீட்டிங்'கில் இருந்ததால், அவரை சந்தித்துக் கொடுக்க முடியவில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது' என, கூலாக, ஒரு விளக்கம் சொல்லப்பட்டு உள்ளது. இந்த கதையை, அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மட்டுமல்ல; கேட்கிற யாருமே ஏற்க மட்டார்கள் என்பது தான், உண்மை. வேட்பாளர் குருமூர்த்தி, 3ம் தேதியே மனு தாக்கல் செய்து விட்டார். அப்போதே, அவரிடத்தில் இந்த படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாக, கோவை கோட்ட பா.ஜ., பொறுப்பாளரான, செல்வக்குமார் சொல்கிறார். மாநில தலைவரால் கையொப்பமிடப்பட்ட இந்த படிவங்கள், மாநில அமைப்பு பொதுச் செயலர் மோகன்ராஜுலு மூலமாக, பா.ஜ., வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3ம் தேதி இரவே, இந்த படிவங்கள், குருமூர்த்தி கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்த நாளான, 4ம் தேதி இந்த படிவங்களை அவர், தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தால், இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால், அவரோ, நீலகிரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறுகிறார். அவரிடம் இருந்து, அந்த படிவங்களை 5ம் தேதி பெற்றுக் கொண்டு, கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றபோது தான், கார் பழுதானதாக காரணம் சொல்லப்படுகிறது. இவ்வாறு படிவங்கள் ஏன் கைமாறின? 3ம் தேதி கிடைத்த படிவங்களை 5ம் தேதி வரை, குருமூர்த்தி ஏன் வைத்திருந்தார்?
6 மாநில தலைமையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்கள் போய்சேர்ந்துள்ளதா? அவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு? அதில் தவறிழைத்தவர் யார்?
7 தொகுதிக்கு ஒரு வழக்கறிஞரை, சட்ட ஆலோசகராக நியமித்திருப்பதாக மாநில தலைவர் சொல்கிறாரே? அந்த ஆலோசகர் எங்கே போனார்?
8 தெரிந்தே ஒருவர், படிவங்களை ஏன் அறையில் பூட்டி வைத்திருந்தார்? எதற்காக அவர் அப்படி நடந்து கொண்டார்? யார் சொல்லி அதை செய்தார்?
9 கோவை கோட்ட பா.ஜ., பொறுப்பாளர் செல்வகுமாருக்கும், குருமூர்த்திக்கும் 'ஆகாது' என, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேறு ஒரு நபரை வேட்பாளராக்க கட்சியில் ஆதரவு இருந்ததாகவும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு, கண்ணன் என்பவர் 'பேக்ஸ்' அனுப்பி உள்ளார். எனில், கட்சியில் உள்குத்து வேலையால், குருமூர்த்தி வீழ்த்தப்பட்டாரா?
10 லோக்சபா தேர்தலுக்கு கூட முக்கியத் துவம் கொடுக்காமல் பா.ஜ., கட்சி, உள்குத்தில் மும்முரமாக உள்ளதா? இப்படி உள்ள கட்சி நிர்வாகத்தை, கூட்டணி கட்சிகளால் எப்படி நம்ப முடியும்?

நன்றி-தினமலர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வெளியேற்றப்பட்டு ராசாவா ஆத்தாவா என்று முடிவாகிவிட்டபிறகு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க யாரை ஆதரிக்கவேண்டும் என்பது விவாதத்துக்குரிய பொருளாக மாறியிருக்கிறது.

"ராமருக்கு அயோத்தியில் ஆலயம் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது" என்ற கருத்துகொண்ட ஆத்தா மீது இந்து அமைப்புகளுக்கு என்றுமே பாசம் உண்டு. அதனால்தான் பா.ஜ.க வை தவிர்த்து ஒரு போட்டிகளம் உருவானால் அங்கு மற்ற திராவிட கட்சிகளை ஆதரிப்பதைவிட ஆத்தாவை ஆதரிப்பதை இந்து அமைப்புகள் ஒரு கொள்கை முடிவாகவே செய்துவருகின்றன.

அனால் இந்துத்துவ அமைப்புகள், குறிப்பாக பா.ஜ.க தமிழகத்தில் வளராமல் போனதற்கு முக்கிய காரணம் ஆத்தா என்பதை வசதியாக நாம் மறந்துவிடுகிறோம் அல்லது இந்த உண்மை நம் கண்களுக்கு தெரிவதில்லை. முன்பே கூறியதுபோல பா.ஜ.க தமிழகத்தில் வளர்ச்சியடைந்தால் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் அ.தி.மு.க வை விட பா.ஜ.கவைத்தான் ஆதரிப்பார்கள் என்று ஆத்தாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்து அமைப்புகளை குறிப்பாக பா.ஜ.க வை வளரவிடாமல் அதற்கென உள்ள ஒட்டு வங்கியை ஆத்தா இதுநாள்வரை மறைமுகமாக சுரண்டியுள்ளார்.

இதற்க்கு சமீபத்திய உதாரணம் இந்துமுன்னணி வெள்ளையப்பன் முதல் பா.ஜ.க ரமேஷ்ஜி வரையிலான கொடூர கொலைகளை கள்ள உறவு, கந்துவட்டி , முன்விரோதம் என கேவலப்படுத்தியதோடு அல்லாமல் ஆயிரம் பொய்யைச்சொல்லி உண்மைக்குற்றவாளிகளை கைதுசெய்யாமலே ஆத்தா நாடகம் நடத்தினார். எங்கே உண்மை குற்றவாலிகளை கைதுசெய்தால் தன்னை மதவாதி என சித்தரித்டுவிடுவார்களோ என அஞ்சிய ஆத்தா கட்டுக்கதைகளை பரப்பிவிட்டார்.கடைசியில் கருணாநிதியே இந்து தலைவர்கள் கொலையில் தமிழக அரசு வேடிக்கைபார்கிறது என்று கூறியபிறகு கொலையாளிகள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால் இன்று கூட சேலம் பா.ஜ.கவின் ரமேஷ்ஜி குடுமபத்தினருக்கு குறிப்பாக கொலைக்கான சாட்சியாகிய அவரின் மனைவிக்கு ஆத்தாவின் காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் பாதுகாப்பு கேட்டு கோர்ட்டு படியேறி நிற்கின்றனர் .

தற்போது சிலர் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க போட்டியில் இல்லாத நிலையில் பா.ஜ.க கூட்டணி குறிப்பாக இந்துத்துவ சிந்தனை உள்ளவர்கள் அல்லது மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என கூறுகின்றனர். இதற்க்கு அவர்கள் கூறும் காரணம் பண முதலை ராசா வுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதாகும். மேலும் அ.தி.மு.க விற்கு போடும் ஓட்டு தேர்தலுக்கு பிறகு மோடி பிரதமராக கைகொடுக்கும் என்று வேறு கிளப்பிவிடுகின்றனர்.

மக்களவை தேர்தலின் ஆரம்பத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு ஆளாய் பறந்தபோது, எங்கே பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஒட்டு தனக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கருதிய ஆத்தா பா.ஜ.கவை சீண்டகூட இல்லை என்பது நமக்கு தெரியும். அந்த சூழ்நிலையில் பா.ஜ.வை ஒரு கூட்டணிக்கு தலைவனாக்கி அழகு படுத்தியது பா.ம.க, மதி.முக. மற்றும் தே.மு.தி.க என்பது நம் கண்முன் நடந்த உண்மை.

ஆனால் மதவாதிகளுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என விஜயகாந்திடம் வினவியபோது கட்சி பெயரிலேயே மதத்தை கொண்ட கட்சிகள் மதவாத கட்சிகள் இல்லையா... அல்லது அதனுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லையா என எதிர்கேள்வி கேட்டு வாயை மூடினார்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் பா.ம.க வினர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தையும் / குண்டர் தடுப்புசட்டத்திலும் நூற்றுக்கணக்கில் பாய்ச்சி அவர்களின் தொண்டர்களை நாசப்படுத்தியது ஆத்தா .. எதிர்க்கட்சி அந்தஸ்து கொண்ட விஜயகாந்தின் கட்சியை உடைத்து அவரின் தளபதி எனக்கருதப்பட்ட பண்ருட்டியாரை கூட தன்வசப்படுத்தி சீரழித்ததும் இதே ஆத்தாதான். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.கவை கூட்டணி ஆசை காட்டி கடைசியில் நட்டாத்தில் விட்டவர் சாட்சாத் இதே ஆத்தாதான்.

இத்தகைய கட்சிகளை கூட்டணியாக கொண்டுள்ள நிலையில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.கட்சி அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்று கூறினால் கூட்டணி தொண்டர்கள் மற்ற பா.ஜ.க போட்டியிடும் தொகுதியில் எப்படி தேர்தல்பணி செய்வார்கள். இதே கன்னியாகுமரி அல்லது சிவகங்கை தொகுதிகளில் பா.ஜ.க வினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டிருக்குமாயின் இதே அ.தி.மு.க ஆதரவு நிலையை பேசுவார்களா...

எது எப்படி இருப்பினும் பா.ஜ.க நீலகிரி தொகுதியில் அ.தி.மு.விற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பா,ஜ,க கூட்டணியின் குறிப்பாக தமிழக பா.ஜ.கவின் தற்கொலைக்கு சமம்...

Tuesday, 8 April 2014

மணிரத்னம்.

சிதம்பரம் மக்களவை தேர்தலைப் பொருத்த அளவில் போட்டி என்பது முன்று லட்ச்சத்துக்கும் மேற்பட்ட வன்னிய ஒட்டு வங்கியைக் கொண்ட பா.ம.க விற்கும், தி.மு.க கூட்டணியின் பலத்தோடு சுயேட்ச்சையாக போட்டியிடும் திருமாவளவனுக்கும் இடையேதான் போட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்.இங்கு அ.தி.மு.க பெரிய அளவில் இங்கு போட்டியில் இல்லை, என்பதோடு அதன் வேட்பாளர் ஒரு டம்மி பீசு என்பது #ஆத்தாவுக்கே தெரியும்.

பா.ம.க வெறியுடன் களத்தில் இறங்கி வேலைபார்க்கும் தொகுதியில் தர்மபுரிக்கு அடுத்து இந்த தொகுதிதான். திருமாவளவனை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பது பா.ம.க வின் நோக்கம். அதனால்தான் தனது பழைய வேட்பாளரை மாற்றிவிட்டு காங்கிரசு சீட்டு கொடுக்கவில்லை என்பதால் கட்சியைவிட்டு வெளியேறிய மணிரத்னத்திற்கு க்கு சீட்டு கொடுத்தது. அவர் பெரிய தொழிலதிபர் என்பதால் விட்டமின் "ப" வுக்கு பஞ்சம் இருக்காது என்பதுதான் காரணம்.

இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் பா.ம.க வை ஓரம்கட்டிவிட்டால் போட்டிஎன்பது அ.தி.மு.க விற்கும் திருமாவளவனுக்கும் போட்டி என்ற நிலை ஏற்படும் என்பது #ஆத்தாவின் கணக்கு. ப.ம.க வேட்பாளர் தாக்கல் செய்த நான்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட காரணமும் , மாற்றுவேட்ப்பாலரான அவரின் மனைவி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் கூட்டி கழித்துபார்த்தால் #ஆத்தா எந்த அளவு விளையாடியிருக்கிறது என்பது புரியும்.

மாவட்ட ஆட்சியர் சரவணவேல் ராஜன்


வேட்புமனு நிராகரிக்க அரியலூர் மாவட்ட அடிமை கூறும் காரணம் பா.ம.க அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் பத்துபேர் முன்மொழிய வேண்டும், ஆனால் ஒருவர் மட்டுமே முன்மொழிந்தல்தால் நிராகரிக்கப்படுகிறது என்பதுதான். அவரின் மனைவி தாக்கல் செய்த மனுக்களில் ஒன்றும் இதே காரணத்தினால் நிராகரிக்கப்பட்டாலும் மற்றொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து மாற்று வேட்பாளரான அவரின் மனைவியின் ஒரு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு மற்றொரு மனு ஏற்கபபட்டிருப்பதிலிருந்து மாவட்ட அடிமையின் திருட்டு வேலை அம்பலத்துக்கு வருகிறது. ப.ம.க வேட்பாளர் மனைவியின் ஒரு வேட்ப்புமனுவுக்கு பத்து பேரும் மற்றொரு மனுவுக்கு ஒருவரும் முன்மொளிந்திருப்பார்கள் என்பதை எப்படி நாம் நம்பமுடியும்.

இங்குதான் #ஆத்தாவின் சூப்பர் திட்டம் அடங்கியிருக்கிறது. பா.ம.க வின் இரண்டு பேரின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமாயின் இங்கு போட்டி என்பது அ.தி.மு.க விற்கும் திருமாவளவனுக்கும் என்று மாறியிருக்கும். ஆனால் மூன்று லட்சம் வன்னிய மக்களின் ஒட்டு கனவிலும் கூட ஆத்தாவிற்கு கிடைக்காது என்பது அவருக்கே தெரியும். இந்த ஒட்டு திமுக கூட்டணி வேட்பாளரான திருமாவளவனுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு.

மாற்று வேட்பாளருக்கு பா.ம.க வின் சின்னமான மாம்பழம் ஒதுகப்படுமா என்பது தேர்தல் கமிசனின் கருனையப்பொருத்து அமையும்போது பா.ம.க தேர்தல் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.மேலும் கூட்டணிக்கட்சிகளிடையேயும் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சுணக்கத்தை பயன்படுத்தி அ.தி.மு.க வேட்ப்பாளரை வெற்றிபெற செய்ய முயற்சிக்கலாம் என்பதே #ஆத்தாவின் ஆசை.

எது எப்படியோ... #ஆத்தாவுக்கு வாய்த்த மாவட்ட ஆட்சி..... இல்லை அடிமைகள் கூன்பாண்டிகளைவிட நன்றாகவே வேலைசெய்கிறார்கள்.

Sunday, 6 April 2014

பெரம்பலூர் மக்களவை தொகுதி பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும்  IJK நிறுவன தலைவருமான பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாரிவேந்தரின் வேட்புமனு நிராகரிக்கப்படுமாயின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக ரவி தேர்தலில் போட்டியிடுவார்.
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் நாளை முதல் வாக்காளர்களுக்கு வாக்குசீட்டுகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
தேர்தல் பொது பார்வையாளர்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ் அஹமது முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர்சஞ்சய்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் தேர்தல் பொது பார்வையாளர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
பெரம்பலூர்பாராளுமன்ற தொகுதியில் பொது மக்கள் அமைதியான வழியில், அனை வரும் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து எந்நேரமும் தொடர்பு கொண்டு என்னிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர்தரேஸ் அஹமது செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
இன்று முதல்
வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கட்கிழமை முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளது. இப்பணி தேர்தல் நடைபெறும் 5 நாட்களுக்கு முன்னதாக 19-ந் தேதி அன்று முடிவடையும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சீட்டு பெறாதவர் கள் மீதமுள்ள 5 நாட்களில் பெரம்பலு£ர் உதவி-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.13 லட்சம் பறிமுதல்
இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்து 840 மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
புகார் மையத்தில் வாக்கா ளர் அடையாள அட்டை தொடர்பாக 9 புகார்களும், பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக 3 புகார்களும், அரசியல் கட்சிகளின் விளம் பரங்கள் தொடர்பாக 114 புகார்களும், விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக 2 புகார்களும், இதர புகார்கள் 3ம் என மொத்தம் 131 புகார்கள் பதிவு செய்யப்பட்டு அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டி வரப் பெற்ற 16 ஆயிரத்து 202 விண்ணப்பங்களில் 1,497 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டு மீதமுள்ள 14 ஆயிரத்து 705 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்ப லு£ர் சட்டமன்ற தொகுதியில் 87 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குச்சாவடிகளும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 16 வாக்குச் சாவடிகளும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் 16 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லு£ர் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளும், முசிறி சட்டமன்ற தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் 7 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச் சாவடி களாக கண்டறியப்பட்டுள் ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டு கண்காணிக் கும்பணிகளும், துணை நிலை ராணுவ காவலர்களும் பணி யில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் குறித்த கூட்டம் ஏப்ரல் 13, 17, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) மலையாளம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) கார்குழலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (கணக்கு) கார்த்திகாயினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

நன்றி-தினத்தந்தி


வடமாநில ஆங்கில செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பா.ஜ., இதுவரை இல்லாத அளவு, அதிக
இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ., 214 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 259 இடங்களில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 தொகுதிகளில் அதிகபட்சமாக, பா.ஜ., கூட்டணி, 53 இடங்களை கைப்பற்றும். மகாராஷ்டிராவில், 36 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில், 25 இடங்களிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில், பா.ஜ., 22 இடங்களில் வெற்றி பெறும். பீகார், ராஜஸ்தானில், தலா, 21; கர்நாடகாவில், 16; டில்லியில், நான்கு இடங்களையும் பா.ஜ., கைப்பற்றும்.

காங்கிரசின் கோட்டையாக திகழும் அசாமில், பா.ஜ.,வுக்கு, நான்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இந்த எண்ணிக்கை, மத்தியில், ஆட்சி அமைக்க தேவையான, 272 இடங்களுக்கு, வெறும், 13 இடங்கள் மட்டுமே குறைவாக இருப்பதால், மாநில கட்சிகளின் துணையுடன், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகும்.மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சி, 28 இடங்களிலும், தமிழக முதல்வர் ஜெயலிலாதாவின் அ.தி.மு.க., 25 இடங்களிலும் வெற்றி பெற வாயப்பு உள்ளது. எனவே, மத்தியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைவதில், இந்த இரு கட்சிகளும் முக்கியப் பங்காற்றும்.

இந்த தேர்தலில் காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தோல்வியை சந்திக்கும். காங்., 104 இடங்களிலும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 123 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். இது காங்., கட்சிக்கு இதுவரை இல்லாத, பெரும் தோல்வியாக அமையும்.

புதுடில்லி:'லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 259 இடங்களில் வெற்றி பெறும். காங்., படுதோல்வியைத் தழுவும்' என, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எப்படி?



என்.டி.டி.வி., நடத்திய, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், தமிழகத்தில், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விவரம்:
அ.தி.மு.க., 25
தி.மு.க., கூட்டணி 11
பா.ஜ., கூட்டணி 3
காங்., 0

நன்றி-தினமலர்.

ஐக்கிய முற்போக்கு ( காங்கிரஸ்) கூட்டணி அரசில், இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது. இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த, முந்தைய தேசிய ஜனநாயக ( பா.ஜ.,) கூட்டணி கடுமையாக உழைத்ததை அனைவரும் மறந்து விட்டனர். இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த பா.ஜ., அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் பலனை, அடுத்து வந்த காங்கிரஸ் அரசு தனக்குச் சாதகமாக்கி கொண்டது. இதனால் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டது போல் தோன்றினாலும், உண்மையில், காங்கிரஸ் அரசின் கடந்தகால செயல்பாடு மற்றும் செய்யத் தவறியவைகளால், அடுத்து வரும் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்; புதிய அரசு எதையும் செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டைச் சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 6 ஆண்டுக்கும் மேலாக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமே இந்த சீரழிவுக்கு முழு பொறுப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.


அரசின் கடன்கள்


: மத்திய அரசின் கடன்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு இடையேயான விகிதம், பா.ஜ., அரசின் காலத்தில் 60 சதவீதத்தை விட சற்றே கூடுதலாக இருந்தது. ஆனால் மாநில அரசுகளின் கடன்களையும் சேர்த்து பார்க்கும்போது இந்த விகிதம் 80 சதவீதத்தையும் தாண்டியது. தற்போது இந்த விகிதம், ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 70 சதவீதமாக உள்ளது. பா.ஜ., அரசின் காலத்தில் 5வது சம்பள கமிஷன் அமல் செய்யப்பட்டதால், அப்போது கடன் அளவு அதிகரித்து காணப்பட்டது.


பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்கள்:


பா.ஜ., அரசுக்கும் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதம்தான். ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகித வித்தியாசம் 4.6 சதவீதமாக இருந்தது. அதேபோல், பணவீக்க விகிதமும் காங்கிரஸ் அரசின் காலத்தில் அதிகமாக ( 7.4 சதவீதம்) இருந்தது; ஆனால் பா.ஜ., அரசின் காலத்தில் 4.5 சதவீமாகவே இருந்தது. அதிக அளவிலான பணவீக்கம், உண்மையான கடன் மதிப்பைக் குறைத்து காட்டும்; இதனால் காங்கிரஸ் அரசின் காலத்தில் கடனுக்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கும் இடையேயான விகிதம் குறைவாக காணப்பட்டது.


வட்டி சுமைகள்:


பா.ஜ., அரசின் காலத்தில் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் பட்ஜெட் வருவாய்க்கு இடையேயான விகிதம் 40 சதவீதத்தைத் தாண்டவில்லை. மேலும் பா.ஜ., அரசு பொறுப்பேற்றபோது வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது, குறைவான வட்டி விகிதமே இருந்தது; அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது; ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அரசின் பத்திரங்கள் மூலம் வருவாய் அதிகரிப்பது மற்றும் குறைவதன் பின்னணி ரகசியங்கள் குறித்து சாதாரண பொருளாதார மாணவர் கூட கூறமுடியும்; அதற்கு பொருளாதார நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. அரசு கடன் வாங்குவதும் பணவீக்கமும் இருமுக்கிய அம்சங்கள்; எனவே எந்த அரசு பொருளாதார சுமையை அதிகரித்துள்ளது என்பதை, அது வாங்கிய கடனை வைத்தே மதிப்பிடலாம்.


பா.ஜ., பட்டபாடு; காங்கிரசுக்கு சாதகம்:


பா.ஜ., அரசின் காலத்தில், சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது உள்நாட்டு வட்டி விகிதங்களில் பெருத்த விளைவை ஏற்படுத்தியது. ஆனால் இதன் பெரும்பாலான பலன்கள் அடுத்து வந்த காங்கிரஸ் அரசுக்கே சாதமாக அமைந்தன. மேலும் கா்ஙகிரஸ் அரசின் துவக்கத்தில் உலக வளர்ச்சி, பணவீக்க மற்றும் வட்டி விகித நிலைமைகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தாத நிலைக்கு மாறின.

எனவே பா.ஜ., அரசின் காலத்தில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட அதிக அளவு வட்டி செலுத்தியது அவர்களின் தவறா? அல்லது காங்கிரஸ் அரசின் கால்ததில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட குறைவான அளவு வட்டி செலுத்தியது அவர்களின் சாதனையா என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.


மத்திய அரசின் மார்க்கெட் கடன்:


பணவீக்கம் அதிகரித்து இருந்ததால், காங்கிரஸ் அரசின் காலத்தில் கடன் விகிதம் குறைவாக காணப்பட்டது. காங்கிரஸ் அரசின் காலத்தில் மத்திய அரசு வாங்கிய மார்க்கெட் கடன் அபாயகரமான அளவுக்கு அதிகரித்தது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் 2வது ஆட்சிக் ( 2009- 14) காலத்தில், அரசின் மொத்த கடனுக்கும் பட்ஜெட் செலவுக்குமான விகிதாச்சாரம் அதிக அளவுக்கு இருந்தது. மார்க்கெட்டில் அதிக அளவுக்கு கடன் வாங்க வாங்க, உற்பத்திக்கான ஒதுக்கீடு குறைய ஆரம்பிக்கும்.

பா.ஜ., அரசின் காலத்தில் மத்திய அரசின் மொத்த மார்க்கெட் கடன் மற்றும் பட்ஜெட் செலவுக்கு இடையேயான விகிதாச்சாரம் மிகக் குறைவான அளவான 18.8 சதவீதத்தைத் தொட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு தனது வீணான செலவுத் திட்டங்களைத் துவக்கும் முன், இது 10 சதவீதமாக குறைந்திருந்தது. ஆனால்அதற்குப் பின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.

காங்கிரஸ் அரசின் அபரிமிதமான மார்க்கெட் கடன் மற்றும் ரிசர்வ் பாங்கின் மறைமுகமான நிதி உதவி எதிரொலியாக மக்களின் வாழ்க்கைச் செலவு 2008- 2011ல் 63 சுதவீம் அதிகரித்தது.

சுருக்கமாக கூறுவதென்றால், காங்கிரஸ் பதவி ஏற்ற காலத்தில்நிலவிய உலக மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, இந்திய பொருளாதாரத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வி்ட்டது.

நன்றி-தினமலர்.
         v.kalathur வ.களத்தூரில் இன்றுமாலை பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் IJK வேட்பாளரான பாரிவேந்தருக்கு ஆதரவாக பேரணி நடத்தப் பட்டது. இதில் பா.ஜ.க , பா.ம.க மற்றும் தே.மு.தி.க தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு வாக்கு செகரிப்ப்பில் ஈடுபட்டனர்.


பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பாரிவேந்தர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை  பெரம்பலூர் தொகுதி இளைஞர்களை குறிவைத்து அவர்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்..
          கல்விக்கடன் வட்டியில்லாமலும் அதனை வேலை கிடைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே கட்டவேண்டும் என்று ஆரம்பிக்கும் தேர்தல் அறிக்கை , பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற பகுதிகளிலும் தலைசிறந்த நூலகங்கள் அமைக்கப்படும் என்பதோடு  கல்வியில் பின்தங்கிய பெரம்பலூர் மக்களவை தொகுதியில் சர்வதேச பள்ளிகள் (International School) நிறுவப்படும் என்று சூடுபிடிக்கிறது.

        மாணவர்களின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு சட்டமன்ற பகுதிகளுக்கும் ஒரு மாணவர் பிரதிநிதி (Student Representative) ஒருவர் நியமனம் செய்யப்படுவார், அவர்மூலம் மாணவர்கள் குறை களையப்படும், அப்படியும் தீரவில்லைஎன்றால் "உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தியுங்கள்" என்ற சிறப்பு குறை தீர்கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை   நடைபெறும் அதில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து நிவர்த்திபெறலாம்.

    பெரம்பலூர்தொகுதிக்குஉட்பட்டபகுதி மக்களுக்குநீண்ட நாள் கனவாக இருந்து வருவது பொழுதுபோக்கு மற்றும் மாலை நேரங்களில் இளைப்பாறுவதற்கு கூட ஒரு தரமான பூங்காவோ.. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்காவோஇல்லை என்பதுதான். மேலும்மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த சிறந்த விளையாட்டு திடல் கட்டமைப்போ நீச்சல் குளமோ இல்லை. இக்குறையை களைய சர்வதேச தரத்திலான உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம் , தடகள போட்டி மைதானம் மற்றும் சிறந்த பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்க இந்த தேர்தல் அறிக்கை உறுதிகூறுகிறது..

       நமது மாவட்டத்திற்கு மாணவர் மற்றும் இளைஞர்களின் நலனில் அக்கறைகாட்டும் வேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்பதை இனி நாம் தான் முடிவு செய்யவேண்டும்.........