Saturday, 1 March 2014

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் கள் முண்டியடித்தபடி நெருங்கினர். அப்போது பெண்  கவுன்சிலர் போண்டி திடீரென ராகுலை நெருங்கி தலையில் முத்தம் கொடுததார். இன்னொரு இளம்பெண் ராகுலை நெருங்கி வந்து  கன்னத்தில் முத்தமிட்டார்  காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்நிலையில் முத்தமிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து  செய்திதாள்களிலுமி வெளியானது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ,இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் கவுன்சிலர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர், :  இன்று (1ம்தேதி) முதல் ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தில் மண்ஆய்வுக் கூடங்கள் செயல்படும். உரிய ஆய்வுக்கட்டணத்தை செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணைஇயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பாக மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடம், கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தின் அருகே புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 இந்த வளாகத்தில் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, விதைச் சான்றுத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் மண் ஆய்வுக்கூடங்கள் ஆகியவை செயல் பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மண் மற்றும் பாசனநீரை உடனுக்குடன் ஆய்வு செய்து, ஆய்வு முடிவுகளை வழங்கும் வகையில் மண் ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ம்தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தின் தென்புறமுள்ள ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தி லுள்ள மண்ஆய்வுக்கூடம் மற்றும் நடமாடும் மண் ஆய்வுக்கூடத்தில் தங்கள் மண் மற்றும் பாசனநீரை உரிய ஆய்வுக்கட்டணம் செலுத்தி ஆய்வுமுடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த அனைத்து துறைகளும் ஒரே வளாகத்தில் செயல் பட இருப்பதால், விவசாயிகள் விவசாயம்  தொடர் பாக தங்களுக்குத் தேவை யான அனைத்துதுறை மானியத் திட்டங்களை பெறும்வகையில் மண் ஆய்வுக் கூடம் மற்றும் நடமாடும் மண்ஆய்வுக்கூடம் இந்த ஒருங்கிணைந்த வேளாண்மைத்துறை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இதனைப் பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி-தினகரன்.
 குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்குக்கான சிறப்பு தொலைபேசி உதவி அழைப்பு எண் 1௦98. இந்த எண்ணில் இருபத்துநான்கு மணிநேரமும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு முகாம் குன்னத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

குன்னம், : பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் 1098 (அனைத்து மகளிர் காவல்நிலையம்) மூலம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் என்பவர்கள் எவர்கள்? 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சந்திக்கின்ற பிரச்சனைகள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, இன்னும் பிற குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள், குழந்தைகள் உரிமை கள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி அழைப்பு சைல்டு லைன் 1098 ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், பள்ளி தலைமையாசிரியை ப்ரியா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் விமலா, ஆற்றுப்படுத்துநர் சாந்தி, சமூகப்பணியாளர் ரேகா, புறத்தொடர்பு பணியாளர் அனுரேகா, குன்னம் கிராம சுகாதார செவிலியர் ஆர்த்தி மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினகரன்.

Friday, 28 February 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 காசும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலை
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. டீசல் விலையை நிர்ணயிக்க சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.கடைசியாக பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 4–ந் தேதி லிட்டருக்கு 91 காசு உயர்த்தப்பட்டது.
77 காசு உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. அதன்படி வரிகள் நீங்கலாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, வரியுடன் சேர்ந்து சென்னை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 காசு உயர்ந்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 ரூபாய் 71 காசில் இருந்து 76 ரூபாய் 48 காசாக அதிகரித்தது.இதேபோல் வரியுடன் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 61 காசு உயர்ந்தது. இதனால் நகரில் ஒரு லிட்டர் டீசலின் விலை 58 ரூபாய் 56 காசில் இருந்து 59 ரூபாய் 17 காசாக அதிகரித்தது.
டெல்லி
இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73 காசு அதிகரித்து 73 ரூபாய் 16 காசாகவும், டீசல் விலை 57 காசு உயர்ந்து 55 ரூபாய் 48 காசாகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 80 ரூபாய் 96 காசாகவும், டீசல் விலை 59 காசு அதிகரித்து 60 ரூபாய் 9 காசாகவும் உயர்ந்தது.மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசு அதிகரித்து 82 ரூபாய் 7 காசாகவும், டீசல் விலை 63 காசு அதிகரித்து 63 ரூபாய் 86 காசாகவும் உயர்ந்தது.
அமலுக்கு வந்தது
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

நன்றி-தினத்தந்தி.

நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
தரம் உயர்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட நொச்சியம் ஊராட்சியில் நொச்சியம், நெய்க்குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை கிளை நிலை யங்களை தரம் உயர்த்தி கால்நடை மருந்தகங்களாக கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
தமிழக முதல்–அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய பால் பண்ணை அமைக்க ஏற்கனவே உத்தர விட்டி ருக்கிறார். எனவே பெரம்பலூர் பகுதி மக்கள் பால் உற்பத்தியை அதிகப் படுத்த வேண்டும். அதற்கேற்ப கால்நடைகளை ஆரோக்கியமாக்கி பரா மரிக்க ஏதுவாக மானிய விலையில் உலர் தீவனங்களை தமிழக அரசு வழங்கி வரு கிறது
மேலும் நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கால்நடை கிளை நிலை யங் களை கால்நடை மருந்தகங் களாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தர விட்ட தன் அடிப்படையில் இன்று கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது
அரசின் அறிவுரை
உங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்நடைகளையும் இந்த கால்நடை மருந்தகங் களுக்கு அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள லாம். மேலும் மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கு தமிழக அரசின் அறிவுரையின்படி நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தமிழக முதல்–அமைச்சரின் இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திகொள்ள வேண் டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் .மருதைராஜா, கிருஷணகுமார், வெண்ணிலாராஜா, மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் சேகர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகர், உதவி இயக்குனர் மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.
இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம் சென்று முறையிட்டனர். தலைமை ஆசிரியையோ மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியே இதைச் செய்கிறோம் என்று கூறியதாக சொல்கிறார் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற மாணவரின் தந்தை. இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் , இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு. பிராபகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்களை சந்தித்து இச் சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நந்தகுமார் அவர்கள், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னதாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 21/01/2014 செவ்வாய் கிழமை மாலை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெரினா லோட்டஸ் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். இந்த உரையாடலில் ஜெரினா லோட்டஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படித்தான் நடந்து கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, மதங்களைக் குறிக்கும் வகையில் உள்ள விஷயங்கள் வேண்டாம் என்று மாணவர்களை அறிவுறுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் சொன்னதாக சொன்னார். இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

//பள்ளி வளாகங்களில் மதச்சின்னங்கள் அணிந்து கொண்டு மாணவர்கள் வருவதால் சண்டை ஏற்படுகிறது, இதனால் பல மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பட்டுள்ளனர். இந்த சண்டைக்கு காரணம் மதச்சின்னங்கள் தான் என்று மப்டியில் கண்காணிக்கும் போலீசார் தெரிவித்ததாகவும், மேலும் எந்தெந்த பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் பட்டியலிட்டார்.// என்றார் ஜெரினா லோட்டஸ் அவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நந்தகுமார் அவர்களுக்கு புதன்கிழமை (22/01/2014) அன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுவரை பதில் இல்லை. ஆட்சியரின் உதவியாளர் திரு தருமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் பிசியாக உள்ளேன் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்த போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சில கேள்விகளை எழுப்புகிறது.
  • மதச்சின்னங்கள் அணியும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இராமநாதபுரம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதா?
  • மதச்சின்னங்கள் என்றால் குல்லாவும், பர்தாவும் அடங்குமே! இவைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை?
  • மதச்சின்னங்களை அணிந்துகொள்வது அடிப்படை உரிமை. இந்த உரிமையை பறிக்கும் உரிமத்தை மாவட்ட ஆட்சியருக்கு யார் கொடுத்தார்கள்?
  • எந்தெந்தப் பள்ளிகளில் மதச்சின்னங்களை மையமாகக் கொண்டு சச்சரவுகள் ஏற்பட்டன? இதைத் தூண்டியவர்கள் யார்? சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் யார்?
  • இந்தச் சூழ்நிலை நிலவும் பள்ளிகளில் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் எவரேனும் உள்ளனரா?
  • இவ்வளவு மோசமான நிலை இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவுகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் திரு. நந்தகுமார் அவர்கள், மத பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும்
  • தூண்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறாரா?
  • கலவரங்கள் ஏற்படாமலிருக்க இந்துப் பெண்களை தாலி அறுக்க திரு. நந்தகுமார் அவர்கள் உத்திரவிடுவாரா?
  • தண்ணீர் பஞ்சம் நிலவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகங்களை அழிக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் கொண்டுவர சிறப்புக் கோரிக்கை விடுவாரோ!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாத ஆட்சி நிலவும் பகுதிகளில் தாலிபான்கள் விதிக்கும் சட்டதிட்டத்தை இராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, இந்த பயங்கரவாதத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய அரசு இந்த ஜிகாதி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது.
  • அம்மன் கோவில்களில் மேளம் அடிக்கத் தடை
  • பாரம்பரிய கோவில் ஊர்வலப் பாதைகளை மாற்றுதல்
  • அழகன் குளம் என்ற கிராமத்தில் கோவில் அருகாமையில் பசு மாட்டை வெட்டிய முஸ்லீம்களின் மீது புகார் கொடுத்த இந்துக்கள் மீது வழக்கு
  • சுவாமி விவேகானந்தரின் நினைவுத்தூணை உடைத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
  • புதுமடம் கிராமத்தில் செருப்புடன் தேசிய கொடியை ஏற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
  • முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்தும், பொது சாலைகளில் வாகனங்களில் பாட்டு போடுவதைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்து பலகை வைப்பதையும்
  • தடுப்பதில்லை.
  • பெரியபட்டணத்தில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சம்பவங்களின் பின்ணனியில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்து மாணவர்கள் அணிந்த தாயத்து/ இரட்சை கயிறு மற்றும் சாமி டாலர்களை அறுத்தல், செந்தூரங்களை அழித்தல் போன்றவை இராமநாதபுரம் ஒரு குட்டி காஷ்மீராக மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணைபோவதே!

இராமநாதபுரத்தை பிரிவினைவாத, பயங்கரவாத நாசகார சக்திகளிடமிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இராமநாதபுரத்தில் இந்துக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். 

நன்றி-http://www.vsrc.in/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/item/173-hindu-sinnagalukku-thadai-ramanathapuram-collectorin-thalipanisam/itemid-224

Thursday, 27 February 2014

மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.  இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க அநநிறுவனம் பேஸ்புக் முடிவு செய்துள்ளது,
தற்போது வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் ஆனால்பேசிக்கொள்ள முடியாது. இந்நிலையில் பேசும் வசதியையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனம் அளிக்கவுள்ளது.
ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ள இந்த சேவை முதற்கட்டமாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட், ஜஓஎஸ் மொபைல்களிலும், பின்னர் மற்ற மொபைல்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நன்றி-தினமணி.
வெளிநாடுகளைப்போல விண்ணப்பித்த நாளிலேயே பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் நமது நாட்டிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு, பயிற்சி உள்ளிட்ட தொடர்புடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பு, கல்வி, சுற்றலா, மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பிற காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தினசரி வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாகும். அதனைக்கொண்டுதான் விசா, விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பிற பயண ஆவணங்கள் பெற முடியும்.
இந்தியா முழுவதும் மொத்தம் 37 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் 77 பாஸ்போர்ட் சேவை மையங்களும் பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் சிலவற்றை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சென்னை, திருச்சி, மதுரை,கோவை ஆகிய 4 இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும், அவற்றின் கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் என 8 பாஸ்போர்ட் சேவை மையங்களும் (பி.எஸ்.கே) உள்ளன.
ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவை மையத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவகத்தின் கண்காணிப்பில் பரிசீலிக்கப்பட்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலரின் ஒப்புதலின் பேரில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதாரண முறையிலும், ஒரு வாரத்தில் தட்கல் முறையிலும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் சில பாஸ்போர்ட் அலுவலகங்களில் 2 மாதங்களாகியும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் இருந்து வருகின்றன. இதற்கு, போலீஸ் விசாரணை அறிக்கை வருவதில் ஏற்படும் தாமதமே முக்கியக் காரணம் என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதனை காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.
இந்த தாமதத்தை போக்கவே மத்திய அரடு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விண்ணப்பித்த அன்றே, விண்ணப்பத்தை பரிசீலித்து, போலீஸ் விசாரணை அறிக்கையையும் ஆன்லைன் மூலம் முடித்து பாஸ்போர்ட் வழங்க வழிவகையுள்ளது. தற்போது இத்திட்டம் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் சிலவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பாஸ்போர்ட் வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 3 நிமிடங்களில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நிர்வாகப்பணிகள் அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் ஆன் லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் எண்ணை கணினியில் தட்டினாலே குறிப்பிட்ட நபருடைய விபரங்கள் அனைத்தும் தெரியும் வகையில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர்கள் குறித்த அனைத்து விபரங்களும் கணினியில் அவ்வப்போது பதிவு செய்யப்படும். அதாவது நடந்த குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றில் தொடர்புடையவர்கள் குறித்தும் இடம்பெற்றிருக்கும். அதனைக்கொண்டு யார் யாருக்கெல்லாம் பாஸ்போர்ட் வழங்கத் தடைவிதிக்கலாம் என உடன் முடிவெடுக்க முடியும்.
எனவே பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் பரிசீலனை, மற்றும் போலீஸ் விசாரணை ஆகியவை விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அடுத்த கட்டமாக ஏ.டி.எம். இயந்திரம்போல பாஸ்போர்ட் பிரிண்ட் செய்வதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரத்தின் உதவியுடன், பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து  வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் முடிந்து விடுகின்றன.
எனவேதான் இத்திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் அதற்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுவது அவசியம். எனவே மாநில அரசுகளின் துணையோடு அதற்கான பணியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக என்.ஐ.எஸ்.ஜி ( நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்மார்ட் கவர்ன்மென்ட் )என்ற மத்திய அரசு நிறுவனம் முழு வீச்சில் இயங்கி வருகின்றது. இந்த அமைப்பின் முக்கியப் பணி யாதெனில் அரசுத்துறைகளையும் தனியார் துறைகளைப்போல் சிறப்பாக இயங்க வைப்பதேயாகும்.
இத்திட்டம் வெற்றி பெறுவது மாநில அரசுகளின் கைகளிலும், குறிப்பாக காவல்துறையினர் வசமும்தான் உள்ளது என்கின்றனர். காரணம் அனைத்து காவல் நிலையங்களையும் ஆன் லைனில் இணைக்க மாநில அரசுகள் உத்தரவிட்டு, அதனை காவல் துறை அதிகாரிகள்  நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் நாடுமுழுவதும் நடந்த குற்றச் சம்பவங்களையும், அதன் தொடர்புடையோரையும் அந்தந்த பகுதி காவல் நிலைய கணினியில் பதிவு செய்து, ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு சி.சி.டி.என்.எஸ் ( கிரைம் மற்றும் கிரிமினல் ட்ராக்கிங் நியூ ஒர்க் சிஸ்டம் )என பெயரியப்பட்டு அதற்காக ரூ.40 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியும் உள்ளது.
அதனையொட்டி மாநிலங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் குற்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன திட்டம் குறித்து ஆய்வு மற்றும் பயிற்சிகளுக்காக நாடு முழுவதிலிமிருந்து முக்கிய அலுவலர்கள் 23 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதில் பாஸ்போர்ட் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், நிர்வாகம், தகவல் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், கணினி துறை வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழகத்திலிருந்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ரூபேஸ்குமார்மீனா (தற்போது வேறு மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்)ஆகிய இருவரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சிறப்புக் குழுவினர் கடந்தாண்டு இறுதியிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கு 3 நிமிடத்தில் பாஷ்போர்ட் வழங்கும் முறையை ஆய்வு மேற்கொண்டு அவை குறித்து தெரிந்து கொள்ள ஒருவாரம் பயிற்சியும் பெற்று திரும்பியுள்ளனர். இந்தியாவில் பெங்களூர், புது தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்கும் சென்று நாடு முழுவதும் இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், செயல்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.என்.ஐ.எஸ்.ஜி அமைப்பானது மாநிலங்கள் தோறும் சென்று, காவல் துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து விளக்கி அதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் க. பாலமுருகன் கூறுகையில்,
இத்திட்டம் மிகவும் அற்புதமானது. நாளுக்கு நாள் பாஸ்போர்ட் தேவை அதிகரித்து வருகின்றது. அவசர தேவைகளுக்காக தட்கல் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தாலும்  இடைத்தரகர்கள் அப்பாவிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிóன் தேவையை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் தகுதியுடையவர்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் வழங்க முடியும் என்றார்.
காவல்துறை கண்காணிப்பாளர் ரூபேஸ்குமார்மீனா கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் பெருமளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவேதான் தமிழகம் சார்பில் என்னை அழைத்திருந்தனர். விரைவில் சி.சி.டி.என்.எஸ். திட்டம் வெற்றி பெற்றால் விரைவில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

நன்றி-தினமணி
vkalathur வ.களத்தூரில் வன்னிய சங்க கிளையின் சார்பாக வன்னியர் சங்க கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, 26 February 2014

சிவன் சந்நிதியில் அமர்ந்து பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் எல்லா நலங்களும் உண்டாகும்.

* தேவர்கள் போற்றும் மகாதேவனே! பரமசிவனே! கவுரி மணாளனே! பஞ்சமுகம் கொண்டவனே! நெற்றிக்கண் உடையவனே! கங்கையைத் தலையில் தாங்கியவனே! எப்போதும் என்னைக் காத்தருளவேண்டும்.

* பிறைநிலவைச் சூடிய பெருமானே! மன்மதனை எரித்தவனே! திரிபுரங்களைச் சம்ஹாரம் செய்தவனே! நாகாபரணம் அணிந்தவனே! நீலகண்டனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

* கைலாய நாதனே! பஞ்ச பூதங்களைப் படைத்தவனே! அண்ணா மலையானே! தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவனே! சங்கரனே! சதா சிவனே! நோயற்ற வாழ்வைத் தந்தருளவேண்டும்.

* காலனை உதைத்தவனே! சம்சாரக் கடலில் இருந்து காப்பவனே! நள்ளிருளில் சுடலையில் ஆடுபவனே!. கங்காதரனே! ஜடாபாரம் கொண்டவனே! திரிசூலம் தாங்கியவனே! வாழ்வில் எல்லா நன்மையும் பெருகட்டும்.

* மங்கல மூர்த்தியே! காளை வாகனனே! புலித்தோலை ஆடையாக உடுத்தவனே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவனே! நமசிவாயனே! அபிஷேகப் பிரியனே! ஆதியந்தம் இல்லாதவனே! உன்னருளால் உலகில் எல்லா வளமும் செழிந்தோங்கட்டும்.
கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் மசூதிகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது.
இரவு பத்துமணிக்கு மேல் ஒலிபெருகிகளை உபயோகபடுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை, ஆனால் ரமலான் மாதங்களில்வ.களத்தூரில் விடிய, விடிய  இறைவழிபாடு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்துக்களின் விழாக்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இஸ்லாமியர்களின் விழாக்களுக்கு இதுபோருந்தாது என்பது எழுதப்படாத விதியாக காவல்துறையும் , பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் இரவு பத்துமணிக்குமேல் ஒளிபருகிகளை உபயோக படுத்துவதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என நன்கு அறிந்திருந்தும் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

சமீபத்திய உயர்நீதிமன்ற உத்தரவு :

மதுரை: மனிதன், இரவில் தூங்குவது என்பது, அடிப்படை உரிமை. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு, அனுமதிக்க முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அறந்தாங்கி அருகே, அய்யன்குடி குழந்தைவேல் தாக்கல் செய்த மனுவில், "அய்யன்குடி, அங்காள பரமேஸ்வரி கோவில், மாசித் திருவிழாவை ஒட்டி, பிப்., 28ம் தேதி, இரவு 10:00 மணி முதல், காலை 2:00 மணி வரை, ஆடல், பாடல் நடத்த, போலீசில் அனுமதி கோரினோம். மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள், ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: "மக்களுக்கு, பேச்சு, கருத்து சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை. அதுபோல், தூங்குவதும் அடிப்படை உரிமை தான்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆடல், பாடல் என்ற பெயரில், இரவில் தூங்கும் மக்களுக்கு, இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. ஆடல், பாடலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர் மீண்டும், அறந்தாங்கி போலீசில் மனு அளிக்க, உரிமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

நன்றி-தினமலர்
 திருமாந்துறை சுங்கச் சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் 4 சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுங்கச்சாவடி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் சுங்கச்சாவடி உள்ளது.
இந்த நிறுவனத்தில் சுங்க வரி வசூல் செய்யும் பணியில் 36 பேரும் காவலர் பணியில் 35 பேரும் ஹெல்ப்லைன் பணியில் 35 பேரும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் 35 பேரும் எலக்ட்ரீசியன் பணியில் 15 பேரும் துப்புரவு பணி யாளர்கள் பணியில் 35 பேரும் என 175க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
பணி மாற்றம்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியார் நிறுவனம் ஒப்பந்தப் பணியாளர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் செய்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முடிய ஒப்படைவு தொகையை சுங்கவரி கட்டணம் வசூலிப்ப வர்களுக்கு மட்டும் 45 ஆயிரம் வரை வழங்கி உள்ளது.
திடீர் வேலை நிறுத்தம்
சுங்கவரி கட்டணம வசூலிப்பவர்களுக்கு வழங்கி யதை போல பாரபட்சம் காட்டாமல் தங்களுக்கும் ஒப்படைவு தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி காவலர், உதவியாளர் நெடுஞ்சாலை கண்காணிப் பாளர் வாகன ஓட்டுநர் மேற் பார்வையாளர் எலக்ட்ரீசியன் மற்றும் துப்புரவு பணி யாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு ட்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து சுங்க வரி கட்டணம் வசூல் மையத்திற்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனங்கள் வந்து செல்லும் பாதையில் திரண்டனர். அவ்வழியில் உள்ள தானியங்கி தடுப்பு பலகையை சுங்கவரி நிறுவன அதிகாரிகள் அகற்றி அனைத்து வாகனங்களையும் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
இலவசமாக சென்றன
இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்கவரி கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு சரக உதவி கண்காணிப்பாளர் கோவிந்தராசு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து சென்று தனியார் சுங்க வரிச்சாவடி நிறுவன அலுவலர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓப்பந்த தொழிலாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து 3 வது முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினத்தந்தி.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ரஞ்சன்குடி என்ற பகுதியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு இறங்கிய கும்பல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளை வேனில் தூக்கிபோட்டனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதை கண்ட சிலர் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், மற்றும் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்று திருமாந்துறை அருகே டோல்கேட்டில் வைத்து வேனை மடக்கி பிடித்தனர். வேனில் இருந்த ஆடுகளை மீட்ட போலீசார் கும்பல் 4 பேரை பிடித்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாபு (வயது 20) ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த தினேஷ், தஞ்சை, வல்லத்தை சேர்ந்த கார்த்தி (28) மணிகண்டன் (23) என்று தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் மது போதையில் ஆடுகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.

நன்றி-மாலைமலர்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் (வயது 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் (37), மாணவரை பார்த்து மயங்கியது போல் நடிக்கிறாயா எனக்கேட்டு கன்னத்தில் அடித்து காலால் மிதித்துள்ளார். இதனால் அழுத படி வீட்டுக்கு வந்த மிதின் குமார் இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியர் வெங்கடேசனிடம் மாணவன் தாக்கப்பட்டது குறித்து அவனது பெற்றோர்கள் விசாரித்தனர். அவர்களையும் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.
இதுகுறித்து மிதின்குமாரின் பெற்றோர் பாடாலூர் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆசிரியர் வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து அவர் பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி-மாலைமலர்.
பெரம்பலூர்,: பெரம்பலூரில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக எஸ்பி சோனல் சந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் தண்ணீர் பந் தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்தில் இப்போட்டிகள் மார்ச் 2ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடை பெறும்.
இதில் ஆண்களுக்கான வாலிபால், கபடிப் போட் டிகள் மற்றும் 400 மீட்டர்,  1500 மீட்டர் ஓட் டம் உள்ளி ட்ட போட்டிகள் நடை பெறும். இதே போல், இருபாலருக்கும் நீளம் தாண் டுதல், குண்டு எறிதல் உள் ளிட்ட பல்வேறு போட் டிகள் நடத்தப்படும்.பங் கேற்க விரும்புவோர் தங் கள் பெயர் மற்றும் விவ ரத்தை 04328-291013 என்ற தொலைபேசி எண் ணிலோ அல்லது  94878-97706, 95975-56678 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். இப் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 3 போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எனவே, காவல் துறை மற்றும் பொது மக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தி டும் விதமாக நடை பெறும் இந்த விளையாட் டுப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர் ந்த பொதுமக் கள் அனை வரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.

நன்றி-தினகரன்.

Tuesday, 25 February 2014

தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா இன்று பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14 வது பட்டமளிப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் Dr  .தரேஷ் அஹேமத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி MLA மற்றும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வரும் பிப்ரவரி -27 அன்று வ.களத்தூருக்கு வருகிறார். ப.ம.க கொடி ஏற்றி, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
                 அன்றுமாலை வ.களத்தூர் கிராமத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

Monday, 24 February 2014

பெரம்பலூர், : மக்களவைத் தேர்தல் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத் தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் அதிரடியாக தொகுதி விட்டு தொகுதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாமதமின்றி பணியேற்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெற இருந்தாலே, மாவட்ட அளவி லான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் டிஆர்ஓ, பிஆர்ஓ, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்த 20 பேரை கலெக்டர் தரேஸ் அஹமது அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி, 2014 மக்களவைத் தேர்தலுக்காக சொந்த ஊர் உள்ளடங்கிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட்டாரங்களில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேறு தொகுதிகளில் உள்ள வட்டாரங்களுக்கு பணிமாறுதல் செய்து கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆலத்தூர் ஒன்றியத்தில் தணிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஆலயமணி, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு சஉதி பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஏற்கனவே அப் பணியில் இருந்த அசோகன், வேப்பூர் ஒன்றியத்துக்கு ஆதிதிராவிடர் நலப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இப் பணியில் இருந்த செல்வமணியன் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு திட்டப்  பணிக்கு மாற்றப்பட்டு ள்ளார். முன்னர் இங்கு பணியில் இருந்த தயாளன், வேப்பந்தட்டை ஒன்றிய தணிக்கை பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னர் இப்பணியில் இருந்த  சம்பத்குமார், ஆலத்தூர் ஒன்றிய தணிக்கை பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல், பெரம்பலூர் ஒன்றிய சிறுசேமிப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த நடராஜன், வேப்பூர் ஒன்றிய நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இப் பணியில் இருந்த இளங்கோவன், பெரம்பலூர் ஒன்றிய நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் இங்கு பணியிலிருந்த சின்னப்பையன் வேப்பந்தட்டை ஒன்றிய திட்டப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த செந்தில்குமார், வேப்பூர் ஒன்றிய சிறுசேமிப்பு திட்டப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பெரம்பலூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த செல்வக்குமார், வேப்பூர் ஒன்றியத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முனனர் இப்பணியில் இருந்த சரவணன் பெரம்பலூர் ஒன்றிய தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு பணியில் இருந்த பூங்கொடி வேப்பூர் ஒன்றிய திட்டப் பணிக்கும், ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஸ்டீபன் அந்தோணிசாமி, வேப்பூர் ஒன்றியத்துக்கு சஉதி பணிக் கும், ஏற்கனவே இங்கு பணியில் இருந்த முரளிதரன், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள ஆதிதிராவிடர் நலப் பணியிடத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
வேப்பூர் ஒன்றியத்தில் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளை கவனித்து வந்த மோகன், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் இப்பணியில் இருந்த மரியதாஸ் வேப்பூர் ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் இருந்த ரங்கநாதன், வேப்பூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடத்துக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சிறுசேமிப்பு திட்டப் பணியில் இருந்த ராமாயி, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கணக்குகள் பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் உடனடியாக அந்தந்தப் பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கான பணியிடங்களில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார் கலெக்டர்.

நன்றி-தினகரன்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்தார். இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில்,
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2014 போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் :
திருவள்ளூர் (தனி) (1) : டாக்டர் ஞ. வேணுகோபால், மருத்துவ அணிச் செயலாளர், மக்களவை குழுச் செயலாளர்
சென்னை வடக்கு (2) :  வெங்கடேஷ் பாபு, வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
சென்னை தெற்கு (3) : டாக்டர்  ஜெயவர்தன், தெற்கு லீத் கேஸ்டில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்
மத் ய சென்னை (4) : விஜயகுமார்,  மாணவர் அணிச் செயலாளர் தலைவர், சிந்தாமணி கூட்டுறவு  மொத்த விற்பனை பண்டகசாலை
ஸ்ரீபெரும்புதூர் (5) : இராமச்சந்திரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவர்
காஞ்சிபுரம் (தனி) (6) :  மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
அரக்கோணம் (7) : திருத்தணி கோ. அரி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
வேலூர் (8) : பா. செங்குட்டுவன், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட     வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
கிருஷ்ணகிரி (9) : மு. அசோக்குமார் கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
தருமபுரி (10) : மோகன், தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
திருவண்ணாமலை (11) : சு. வனரோஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
ஆரணி (12) : செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் (தனி) (13) : எஸ். இராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்
கள்ளக்குறிச்சி (14) : டாக்டர்  காமராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்,
சேலம் (15) :  ஏ. பன்னீர்செல்வம், சேலம் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
நாமக்கல் (16) : சுந்தரம், நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஈரோடு (17) : செல்வக்குமார சின்னையன், ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
திருப்பூர் (18) : சத்தியபாமா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
நீலகிரி (தனி) (19) : கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர மன்றத் தலைவர்
கோயம்புத்தூர் (20) :  நாகராஜன், கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகு க் கழகச் செயலாளர்
பொள்ளாச்சி (21) :  மகேந்திரன், திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்
திண்டுக்கல் (22) : உதயகுமார், நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்
கரூர் (23) : டாக்டர் மு. தம்பிதுரை, கழக கொள்கை பரப்புச் செயலாளர், கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் கழக மக்களவை குழுத் தலைவர்
திருச்சிராப்பள்ளி (24) : ப. குமார், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
பெரம்பலூர் (25) : மருதைராஜ் (எ) மருதராஜா, பெரம்பலூர் ஒன்றியக் கழகச் செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
கடலூர் (26) : ஆ. அருண்மொழிதேவன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சிதம்பரம் (தனி) (27) : மா. சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை (28) : பாரதிமோகன், திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
நாகப்பட்டினம் (தனி) (29) : டாக்டர் மு. கோபால்,திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தஞ்சாவூர் (30) : பரசுராமன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற  இணைச் செயலாளர் நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்
சிவகங்கை (31) :  செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
மதுரை (32) : கோபாலகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி துணை மேயர்
தேனி (33) :  பார்த்திபன், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
விருதுநகர் (34)  : ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
ராமநாதபுரம் (35) :  அன்வர்ராஜா, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
தூத்துக்குடி (36) : ஜெயசிங்  யாகராஜ் நட்டர்ஜி, தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
தென்காசி (தனி) (37) :  வசந்தி முருகேசன், திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்
திருநெல்வேலி (38) : பிரபாகரன், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளர்
கன்னியாகுமரி (39): ஜாண்தங்கம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம்
புதுச்சேரி (40) : ஓமலிங்கம், காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி  உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொகுதி  உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இவ்விரு கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள்  திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

Sunday, 23 February 2014

சென்னை முத்தயால்பேட்டை பகுதியில் அப்பாவி இந்துப்பெண்ணை முஸ்லீம்கள் வீதியில் மானபங்கம் செய்தனர். இந்த அப்பாவிப் பெண்ணின் பாதுகாப்புக் கோரி, இந்து முன்னணி மாநகரச் செயலாளர் திரு.இளங்கோ காவல் நிலையத்திற்குச் சென்றார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றவர் மீதும் அவர் கார் மீதும் காவல்நிலையத்தின் வாசலில் காவலர்கள் முன்னிலையில் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சமீபத்தில், 02/02/2014 அன்று இராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். இப்படி, காவல் நிலையங்களும், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முஸ்லீம் தீவிரவாதிகளால் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து முத்தையால் பேட்டை, சௌக்கார்பேட்டை, பிராட்வே பகுதிகளில் பந்த் நடத்த இந்து அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன.தமிழகத்தைப் படிப்படியாக்க் காஷ்மீராக மாற்றிவரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து, இந்தப் பகுதிவாழ் மக்கள் இந்த பந்தில் முழுமையாகப் பங்கெடுத்து ஆதரவு தரவேண்டுமென்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வேண்டுகிறது. இந்தத் தாக்குதலை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரியும் இப்பகுதி மக்கள் அரசை வற்புறுத்தி ஜனநாயக முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டுகிறோம்.

இந்தக் கொலைவெறித் தாக்குதல் பற்றி திரு.இளங்கோ அவர்கள் நமக்கு அளித்த பேட்டி:
மதியம் 3 மணியளவில் ஒரு மார்வாடி சமூகப் பெண்மணி வேலைக்குச் சென்றுவிட்டுத் தனியாக ரோட்டில் நடந்து போய்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியிலிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அந்தப் பெண்மணியை மானபங்கப் படுத்திவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துத் தன் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், தன் சகோதரரிடம் நடந்ததைச் சொல்கிறார். உடனே அந்தச் சகோதரர் வந்து, “யார் நீங்கள்? எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டதற்கு, அவரை 30, 40 பேர் சேர்ந்து அடித்து அவர் மண்டையை உடைத்து விடுகிறார்கள். இப்படிக் காயம் அடைந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு மருத்தவமனைக்குச் செல்கிறார்கள். தாக்கப்பட்டு காயமடைந்த இளைஞரின் உறவினர்களும் மற்றும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களும் கூடி, காவல் நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளிக்கிறார்கள். புகார் மனு அளித்தவுடன் காவல்துறை ஷாஜஹான் என்பவரைக் கைது செய்து கூட்டிக் கொண்டு வருகிறார்கள். உடனேயே, கைது விவரம் தெரிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் வேறு சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கூட்டமாக காவல்நிலையம் முன்பாக வந்து “கைது பண்ணியவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது” என்று முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராக நிற்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் இந்து முன்னணியினர்கள் மற்றும் பகுதிவாழ் இந்துப் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் காவல்நிலையத்திற்குச் சென்றனர். நானும் இந்தத் தகவலறிந்து காரில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றேன். காவல்நிலையம் முன்பாக சென்று என்னுடைய காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கும்போது, பின்பக்கம் இருந்து என் காரைத் தாக்குகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் அதற்குள் இந்தக் காரை எரிப்போம். உள்ளே ஆளோடு வைத்து எரிப்போம் என்று சொல்லி விட்டு அடிக்கிறார்கள். போலீஸ் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு காரை அங்கிருந்து எடுத்து சென்றார் என் ஒட்டுனர்.

இது நடந்த பிறகு, அங்கு கூடியிருந்த நம் மக்கள் இது சம்பந்தமாகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த JC (Joint Commissioner) என்ன சொல்கிறார் என்றால், “நடவடிக்கை எடுக்கிறேன் நீங்கள் அமைதியாக்க் கிளம்பிச் செல்லுங்கள்” என்று கூறுகிறார். நாம் அப்பகுதி மக்களிடம் பேசி அங்கிருந்து அனுப்புவோம் என்று அவர்களை நெருங்கும் சமயத்தில், “அல்லாஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் முஸ்லிம்கள். காவல்துறையினர் அவர்களை எதுவும் சொல்லாமல், நம்மிடம் வந்து, “நீங்கள் செல்லுங்கள்” என்று எங்களைத் துரத்துகிறார்கள். சரி நாம் கூட்டத்தை கலைந்து போகச் சொல்லாம் என்று முயற்சிக்கையில் நம் இந்து சகோதரர்கள் அங்கே நிறுத்தி வைத்து இருந்த தங்களுடைய இரு சக்கர மோட்டார் வாகனத்தை எடுக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் அவர்களை அடிக்கிறார்கள். ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கச் சென்ற நம் இந்து சகோதரர்களை மடக்கிப் பிடித்து, அடித்து, சட்டையைக் கிழித்து, தடியடி நடத்துகிறது 40 50 பேர் சேர்ந்த கும்பல். இதெல்லாம் நடந்த பிறகு நாம் திரும்பவும் போலீஸ்காரர்களிடம் பேசுகிறோம். நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று சொல்லி நம்மைச் சமாதனப்படுத்துகிறார்கள்.

பிறகு நம் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் பொது மக்களையும் கலைந்து போகச் சொல்லி அனுப்பி விட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம். இதையெல்லாம் கண்டித்து நாளை (24/02/2014) பிராட்வே, முத்தியால்பேட்டை, சவுகார்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பந்த் அறிவித்துள்ளோம். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் நம்மிடையே தெரிவித்தார். 

நன்றி-VSRC
அத்வானி சென்ற பாதையில் பைப் வெடி குண்டு வைத்தது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பறவை பாஷா இன்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இவர் கேரள மாநிலம் புனலூரில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தவலை அடுத்து கேரளா சென்ற சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பறவை பாஷாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பறவை பாஷா விசாரணைக்காக நெல்லை கொண்டு வரப்படுகிறாரர்.
மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் அத்வானி சென்ற பாதையில், பைப் குண்டுக்கு வெடி பொருள் தந்ததாகவும் இவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
வேலூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நன்றி-தினமணி.

விழுப்புரம்த்தில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பன தினம் இன்று நடந்தது. இதில் எம்.எல்.டி சங்கர்  தலைமை பொறுப்பேற்றார்.
சிறப்பு விருந்திரனராக ராம கோபாலன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கோயில்கள் மோசம் அடைந்து வருவதற்கு அரசு தான் காரணம்  கோயில்களின் வரவு செலவு கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கோயில்களை அறநிலையத்துறையின்  கட்டுப்பாடில் இருந்து மாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி மடாதிபதிகள், சமுதாய ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களைக்கொண்டு சுயேட்சையான வாரியம் ஒன்று அமைக வேண்டும் சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கதக்கது. என்று கூறினார்.
மேலும் வரும் நாடாளும்னற தேர்தலில் இந்துக்கள் மீது யார் அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். நாங்கள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிப்போம் என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து கேட்டபோது கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

நன்றி-தினமணி.
சிறுபான்மையினர் ஓட்டுக்காக முஸ்லீம்களின் இயல்பான அடிப்படைவாத பிரிவினைவாத செயல்களுக்கும் நோக்கங்களுக்கும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். இதன் விளைவாக நம் நாட்டில் இன்று குண்டுவெடிக்காத இடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் முதல் பாராளுமன்றம் வரை ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் கூட இந்து இயக்க சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீகள் நினைத்தால் அரசு இயந்திரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியம் என்று பலமுறை முஸ்லீகள் நிரூபித்துள்ளனர். இப்படி கட்டுகடங்காமல் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தின் மூலைமுடுக்களில் எல்லாம் பரவி இம்மாநிலத்தை காஷ்மீராக்கி கொண்டிருக்கிறது.

ஜனவரி 1 ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தகர்ப்போம், இந்து முன்ணனி தலைவர்களை கொல்வோம் என்ற மிரட்டல் கடிதம் இராஜபாளையத்திலிருந்து இந்து முன்ணணி அலுவலகத்திற்கு வந்தது. உடனடியாக இந்த மிரட்டல் கடிதம் காவல்துறையின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தக்க பாதுகாப்பு ஆலயத்திற்கு அளிக்கப்பட்டு எந்த அசம்பாவிதமான சம்பவமும் நேராமல் கோவில் கோபுரம் காக்கப்பட்டது. இப்போது இந்து முன்ணனி அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த கடிதம் இந்து முன்ணனி அமைப்பைச் சார்ந்தவரை கொல்ல செய்யப் போவதாகவமும் ஆடிட்டர் ரமெஷ், வெள்ளைய்யன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுவிக்க இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு மனம் திருந்திய முஸ்லீம் பயங்கரவாதி என்ற பெயரில் வண்ணராப்பேட்டை பகுதியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
letterstamp
இந்த கடிதம் போலியான மிரட்டலா அல்லது உண்மையான மிரட்டலா அல்லது உண்மையிலேயே மனம் திருந்திய முஸ்லிமின் கடிதமா என்ற ஆய்வு ஒருபுறம் இருந்தாலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் சில எச்சரிக்கைகளை நமக்கு விடுக்கிறது.

letterscan

//ஸல் மீது ஆணையாக
எனது பெயர் பாஷா சில தீவிரவாத அமைப்புகளால் பயிற்சி பெற்று மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்கையை தொலைத்தவன் உணர்வு காரணமாக சில இஸ்லாமிய அமைப்பு பயிற்சி பெற்றவன் வெள்ளையன், ரமேஷ் கொலையில் சிறையில் உள்ள நபர்களை விடுதலை செய்ய மேலும் 9 இந்து அமைப்பு தலைவர்களை கடத்த திட்டம் திட்டபட்டுள்ளது. சென்னையில் சுமார் 27பேர் இதற்காக வந்து சேர்ந்து உள்ளனர். சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கி உள்ளார். இந்த பகுதியில் உள்ள இந்து இயக்க தலைவர்களை கடத்தி கொலை செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. நான் இன்று திரிந்து வாழ ஆசைபடுகிறேன். இந்த கடிதத்தை நீங்கள் தயவு செய்து அலட்சிய படுத்த வேண்டாம். வரும் மார்ச் 19 தேதிக்குள் இவர்களை முடிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் உள்ள தலைவரை பின் தொடர மட்டும் 5 பேர் அங்கு தங்கியுள்ளார். இது இந்த கடிதம் உங்களுக்கு சாதரணமாக தெரியலாம் நான் வாழ விரும்புவதால் இதை கடிதம் மூலம் தெரிவிக்கிறேன் எங்கள் இறைதூதர் ஸல் மீது ஆணையாக இது நடக்கப்போகிறது. மேலும் இஸ்மாயில், பக்ருதின், மாலிக் ஆகியோர்க்காக சென்னையில் சில இடங்களில் குண்டு வைக்கவும் திட்டம் உள்ளது. நான் செய்த தவறுகளுக்கு இதன் மூலம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மேலும் இவர்களுக்கு எங்கள் மத தலைவர்கள் பண உதவி செய்து தங்க வைத்துள்ளனர். சொல்ல நினைத்தை தெரிவித்துவிட்டேன். முடிவு உங்கள் கைகளில் இவர்கள் நன்கு பயிற்சி நபர்கள் இந்த மாவட்டத்தில் இத்தனை பேர் என்று பட்டியல் வைத்துள்ளனர். நான் இதை சொன்னால் நம்ப போவதில்லை நடக்கப்போவது இது தான். நான் செய்த பாவத்திற்கு இதன் மூலம் அல்லாவிடம் மன்னிப்பு பெறுவேன். மேலும் இவர்கள் இந்த மூன்று மாவட்டத்திலும் சுமார் 1 மாதகாலமாக இவர்களின் செயல்பாடுகள் செல்லும் இடம் போன்றவற்றை அறிந்துவிட்டோம் பின் தொடர்பதன் மூலம். குறிப்பாக சென்னை புறநகரில் உள்ள பகுதிய தான் இவர்களை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மனம் திரிந்து வாழ நினைக்கும் இந்திய முஸ்லிம்//

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் மூளைச்சலவை செய்து இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விசயமாகி விட்டது. இதை ஏற்றுக்கொண்டு இந்த அமைப்புகளை தடை செய்ய அரசாங்கம் தயங்குவது முஸ்லீம் ஓட்டுக்காக தேச ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் காவுக்கொடுக்கும் ஈனச்செயல் தானே. இந்தக் கடிதத்தில் பல ஊர்களிலிருந்து பயிற்சி பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றால் இவர்களுக்கு எங்கு பயிற்சி அளிக்கப்பட்டது? யார் பயிற்சி கொடுத்தார்கள்?

தாம்பரம் ஏறத்தாழ 20 ஆண்டுகாலமாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்து அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த திரு. இராம்ஜி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது இதற்கு ஒரு சான்று. மௌண்ட்ரோட்டை சுடுகாடாக்கிய செப்டம்பர் 2012 14 முதல் 18 வரை தேதிகளில் நடந்த அடாவடியில் பெருமளவில் கலந்து கொண்டவர்கள் தாம்பரம், பல்லாவரம் முஸ்லீம்கள். மனித நேய மக்கள் கட்சியின் தொடக்கவிழா தாம்பரத்தில் தான் நடைப்பெற்றது.

லவ்ஜிகாத் மூலம் கவரப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் அடிப்படைவாத மையம் திருவள்ளூர் மாவட்டத்திலும், சென்னையிலும் அமைந்துள்ளன. மண்ணடி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகளும் அடிப்படைவாத இஸ்லாமிய செயல்பாடுகளும் பெருகியுள்ளன. இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட வண்ணராப்பேட்டை பகுதியில் ஜனவரி 26ம் தேதியன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திரு. வேதாந்தம் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.


அது மட்டுமின்றி தங்க கடத்தல் , போதைப்பொருட்கள் கடத்தல், கள்ள நோட்டு போன்ற குற்றங்களில் அனேகமாக முஸ்லீம்கள் மட்டுமே ஈடுபடுவதை பத்திரிக்கைகள் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இந்து முன்ணணி அலுவலகத்திற்கு வந்த இந்த கடிதத்திலும் கூட முஸ்லீம் தலைவர்கள் மார்ச 19 முன் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவங்களுக்கு முஸ்லீம் தலைவர்கள் பண உதவி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல் கடிதம் குறித்து பத்திரிகைகளில் வெளியாகி உள்ள செய்தி

news cutting

இந்தக் கடிதத்தின் தன்மை எத்தகையதோ ஆனால் இந்தக் கடிதம் தமிழ்நாட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரதிபலிக்கிறது என்பதில் ஐயமில்லை. இனியாவது மத்திய மாநில அரசுகள் நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்தை புரிந்து கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்களா? அல்லது சுயநல ஓட்டு அரசியலுக்காக மற்றும் ஒரு பிரிவினைக்கு தள்ளப்போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கும் அவகாசம் நமக்கு இல்லை.

இந்துக்களே விழித்து எழுங்கள் தமிழகத்தை காஷ்மீராகாமல் காக்க முன்வாருங்கள்!