Sunday, 23 February 2014

அத்வானி சென்ற பாதையில் பைப் வெடி குண்டு வைத்தது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பறவை பாஷா இன்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இவர் கேரள மாநிலம் புனலூரில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தவலை அடுத்து கேரளா சென்ற சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பறவை பாஷாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பறவை பாஷா விசாரணைக்காக நெல்லை கொண்டு வரப்படுகிறாரர்.
மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் அத்வானி சென்ற பாதையில், பைப் குண்டுக்கு வெடி பொருள் தந்ததாகவும் இவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
வேலூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment