Saturday, 18 January 2014

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு 1800 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல். 



தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய 3-ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் குழுவில் சேராத இலக்கு மக்களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளி குழு அமைப்பது, திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவது 18-வயது முதல் 35-வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுநர் பயிற்சி, JCB ஆப்ரேட்டர், CNC ஆப்ரேட்டர், வெல்டிங், சமையல் கலை, அழகு கலை போன்ற தொழிற்திறன் பயிற்சி வழங்குவது மேலும்,  பிரபல நிறுவனங்களான TVS, L&T, MRF, கார்மென்ட்ஸ் கம்பெனிகளில்  நேரடி வேலை வாய்ப்பையும் பெற்று தருவது மட்டும்  அல்லாமல் ஒத்த தொழில் குழுக்களை உருவாக்குதல் போன்ற பணிகள்  சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இலக்கு மக்கள் குடும்பங்கள் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அரசு நலதிட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தலுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயல்பாடுகளுக்காக 103 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான மொத்த நிதியாக ரூ.16.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதில் முதல் தவணையாக, 6.75/-கோடி வழங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதியில் 2872 மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர்களுக்கு அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் நடவடிக்கைகளுக்காக ரூ.251/-இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையாக 6.75/-கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மண்டல மதிப்பீட்டு அணியினர் ஆய்வு செய்த பின்னர் 25 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 1.71/-கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 934-மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 17/-கோடி வங்கி இணைப்பையும் சுமார் 2700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1800 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள நபர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுதருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு    3-ம் தவணை நிதி மற்றும் அமுதசுரபி நிதிகள் பெற தற்சமயம் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், மாற்றுத்திறானாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புதுவாழ்வுதிட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

Friday, 17 January 2014

         வ.களத்தூர் கிராமத்தில் கானும் பொங்கல் அன்று எருது ஆட்டம் ஒரு முக்கியமான  நிகழ்வாகும். பல வருடங்களாக  இந்த பண்பாட்டு நிகழ்வு எவ்வித தடையும் இல்லாமல் நடந்துவந்தது . உயர் நீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என சிலர் மனுசெய்தபோது , உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த பல கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த  நேரத்தில் ஜல்லிக்கட்டையும் , எருது ஆட்டத்தையும் சேர்த்து குழப்பி, எருது ஆட்டத்தை தடைசெய்யும் நிலைக்கு அரசும் அதன் எந்திரமும்  கொண்டுவந்து சேர்த்தன. இந்த குழப்பம் வ.களத்தூரில் மட்டுமல்லாமல் , பல ஊர்களில் பலவிதமாக நடந்து வந்த இந்த மாடுபிடி நிகழ்வுகளை  , ஜல்லிக்கட்டு என்ற ஒரு வரையறைக்குள்  அடக்கி,  அனைத்துவிதமான மாடுபிடி நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கும் முடிவுக்கு அரசு வந்துநின்றது. இதனால்தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மாடுபிடி நிகழ்வுகள் நடைபெறமுடியாத அளவுக்கு அரசு கெடுபிடிகளை அதிகமாக்கியது.

         நமது ஊர் முக்கிய பிரமுகர்களின் முன்முயற்சியின் காரணமாக, மாடு பிடி நிகழ்வு முழுவதுமாக தடைசெய்யப்படமால், மாடுகளை பிள்ளையார் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிகளில் தீப ஆராதனை காட்டி , வ.களத்தூர் தேரடி திடலில் அனைத்து மாடுகளையும் கொண்டு வந்து நிறுத்தி,  தீப ஆராதனை காட்டி அவரவர் வீடுகளுக்கு திரும்ப ஓட்டிச்செல்லும் ஒரு புதிய நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக அரசின் அனுமதியுடன் காவல்துறையின் முழு  பாதுகாப்புடனும்  நடைபெற்று வந்தது.

vkalathur வ.களத்தூர் தேரடி திடல்  

         வ.களத்தூர் தேரடிதிடல் நமது உரிமைக்கான ஒரு அடையாளம் . அதில் நமது உரிமையை நிலைநாட்ட, வருடம்தோறும் விழாக்களை கோலாகலமாக நாம் இத்திடலில் நடத்திவருகிறோம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக, மாட்டுக்கு  தீப ஆராதனை காட்டும் நிகழ்வு, காணும் பொங்கல் அன்று நம் ஊரில் ஏற்பட்ட சில இறப்பு காரணமாக  நடத்தப்படவில்லை .
      இந்த வருடம் கண்டிப்பாக மாடுகளுக்கு தேரடி திடலில் தீபாரதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே பதிலாக இருந்தது . இந்த வருடம் மாடுகளுக்கு தீபாராதனை காட்டும் நிகழ்வு நடத்தப்படாததற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன . மாடுகளுக்கு  கோமாரி நோயினால் நடத்தப்படவில்லை என்றார்கள், நமது ஊரில் குழந்தை இறந்ததுதான் காரணம்  என்றார்கள். மக்கள் ஆளாளுக்கு ஒரு பதிலை தந்துகொண்டிருந்தார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரும் பதில் சொன்னதாக தெரியவில்லை .

      வருடம் தோறும் மாடு பிடி நிகழ்வுகளுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதிக்கான விண்ணப்பம் ஊர் மக்களின் சார்பாக, ஊர் முக்கியஸ்தர்களால் காவல்துறையிடமும் , மாவட்ட நிர்வாகத்திடமும்  கொடுக்கப்பட்டுவிடும். மேலும் ஊர் பொதுக்கூட்டமும் இது தொடர்பாக பிள்ளையார் கோவிலில் நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

             மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு பொங்கல் கூவிய பிறகு பிள்ளையார் கோவிலுக்கு மாடுகளை கொண்டு வந்து தீப ஆராதனை செய்யும் நிகழ்வும் நடைபெறவில்லை. ஊரில் ஆளாளுக்கு ஒன்றாக பேசினார்களே ஒழிய கேட்க வேண்டியவர்களிடம் யாரும் கேட்டதாக தெரியவில்லை .

vkalathur மேட்டுச்சேரியில் மாடுபிடி நிகழ்ச்சி
      சரி எப்படியாவது மாடு பிடி நடக்கும் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே கிட்டியது. ஆனால் அதே வேளையில் மேட்டுச்சேரி , வன்னாரம்பூண்டி மற்றும் ராயப்பா நகரில் மாடுபிடி நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதனை கண்டு வ.களத்தூர் இளைஞர்கள் , சுற்றுவட்டார கிராமங்களுக்கு முன்மாதிரியாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவந்த மாடு பிடி நிகழ்வு வ.களத்தூரில் நடைபெறாதது குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். இப்படியே விட்டால் நமக்கென எந்த  ஒரு பண்பாட்டு பாரம்பரியமும் மிஞ்சாது என்ற மனக்குமுறலில், பொங்கல் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்த்தை கண்கூடாக காணமுடிந்தது. இளைஞர்களின் மன எரிமலை எப்போது வெடிக்கும் என்பது விரைவில் நடக்கும் ஊர் பொதுக்கூட்டத்தில் தெரியும்.

இவண்-வ.களத்தூர் நலவிரும்பி.

குறிப்பு-( இது கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும் வ.களத்தூர் செய்தி இதற்கு பொறுப்பல்ல.)
     

Thursday, 16 January 2014

Wednesday, 15 January 2014


vkalathur பொங்கல் விளையாட்டுப்போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது............ சில துளிகள்.



Monday, 13 January 2014

விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிறார்களுக்கான டியூஷன் செண்டர் விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 அன்று காலை ஊர்முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் இனிதே துவக்கம் கண்டது. 

LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும்  பயிற்சி அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
         வாரம் ஒருமுறை, இன்று பள்ளிகளில் கற்றுகொடுக்க மறந்த பண்பாட்டு கல்வி கற்றுகொடுக்கப்படும். மாதம் ஒருமுறை ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நடத்தட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.
       வ.களத்தூர் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு- 99484 46709, 80152 55587, 97867 62199.

 












Sunday, 12 January 2014


vkalathur பிள்ளையார் கோவில்

எம் அன்பான வ.களத்தூர் உறவுகளே...........

ஒரு நாள் மட்டும் வ.களத்தூர் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட பொங்கல் விளையாட்டு விழா, நாம் தொடர்ந்து நம் உரிமைக்காக போராடியதன் விளைவாக  நான்கு நாட்களாக அனுமதி வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.......

நாம் போராடி வாங்கிய பொங்கல் விளையாட்டுப்போட்டி நாளை , போகிப்பண்டிகை அன்று காலை பிள்ளையார் கோவில் திடலில் இனிதே துவங்குகிறது.......

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  நடத்தப்பட உள்ள இந்த விளையாட்டுப்போட்டிகளில் அனைவரும் கலந்துகொண்டு போட்டியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..........