விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிறார்களுக்கான டியூஷன் செண்டர் விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 அன்று காலை ஊர்முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் இனிதே துவக்கம் கண்டது.
LKG முதல் எட்டாம்
வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு
இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும் பயிற்சி
அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். கற்றல்
குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
வாரம் ஒருமுறை, இன்று பள்ளிகளில் கற்றுகொடுக்க மறந்த பண்பாட்டு
கல்வி கற்றுகொடுக்கப்படும். மாதம் ஒருமுறை ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு
நடத்தட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.வ.களத்தூர் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு- 99484 46709, 80152 55587, 97867 62199.
0 comments:
Post a Comment