Saturday, 19 April 2014

மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து.
v.kalathur வ.களத்தூரில் பாரிவேந்தர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட அனுக்கூர், அ.குடிக்காடு, வி.ஆர்.எஸ். புரம், வல்லாபுரம், தேவையூர், ரஞ்சன்குடி, மங்கலம், சின்னாறு, எறையூர். நெறிக்குறவர் காலனி, அயன்பேரையூர், தைக்கால், திருவாளந்துறை, அகரம், மில்லத் நகர், வண்ணாரம்பூண்டி, வி.களத்தூர், பசும்பலூர், வெள்ளுவாடி காலனி, காரியானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை அதிகளவில் திறந்து வைத்ததே திராவிடக் கட்சிகளின் சாதனையாகும்.
 மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விவசாயிகள், இளைஞர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுத்துவிட்டனர்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும். திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி இல்லாமல், அவர்களுக்கே மாறி,மாறி வாக்களித்த வாக்காளர்கள், இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
மத்தியில் நிலையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றவும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், பாமக மாவட்டச் செயலர் செந்தில்குமார், பாஜக மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், தேமுதிக வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் துரை. சிவாஐயப்பன், மாவட்டத் துணைச் செயலர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் அழகுதுரை, செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, அணி செயலர்கள் இளையராஜா, சிதம்பரம், மாவட்டப் பொருளாளர் சீனி. வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலர் கண்ணுசாமி, ஐஜேகே மாநில அமைப்பு செயலர் காமராஜ், வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் பி. அன்புதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
v.kalathur வ.களத்தூர் பகுதிகளில் பெரம்பலூர் மக்களவை பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் இன்று வாக்குசேகரிப்பில்  ஈடுபட்டார்.

v.kalathur பாரிவேந்தரின் வ.களத்தூர் பரப்புரை.
v.kalathur மக்கள் மத்தியில் பாரிவேந்தர்.
v.kalathur வன்னாரம்பூண்டியில் பாரிவேந்தர்.

Friday, 18 April 2014

பெரம்பலூர் மக்களவை தேர்தல் களத்தில்நேரு-ராசாவின் ஆசியோடு களமிறங்கியிருக்கும் சீமானூர் பிரபு,அம்மாவின் மருதைராஜா மற்றும் காங்கிரசின் ராஜசேகரன் ஆகியோருடன் IJK நிறுவன தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியில் உள்ளார்.

சமீபத்தில் காலைகதிர் மற்றும் தினமலர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி போட்டி என்பது பிரபுவுக்கும், பாரிவேந்தருக்கும் இடையில்தான் கடுமையாக உள்ள நிலையில் பாரிவேந்தர் வெற்றிபெற பிரகாசமான் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தினமலர் செய்தி

காவிரி ஆறு ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாட்டில் நுழைகிறது... ஒகேனக்கல் - அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் படி ஒகேனக்கல் முதல் மேட்டூர் அனைக்கட்டுவரை காவிரி ஆற்றின் வடகரையில் கான்கிரிட் சுவர் எழுப்பி 15௦௦௦ கான அடி வெள்ளநீரை கொண்டுவந்து மேட்டூர் அணையில் மின்சாரம் தயாரிக்கமுடியும். இதற்கென 1௦௦௦௦ கன அடிநீர் செலவாகும்.

மீதமுள்ள 5௦௦௦ கன அடி நீரை மேட்டூர் அருகில் கால்வாய் வெட்டி குஞ்சாண்டியூர், ஜலகண்டபுரம், எடப்பாடி, சின்னப்பம்பட்டி, வைகுந்தம் வழியாக மகுடஞ்சாவடியில் சரபங்கா உப நதியில் கொண்டுவந்து இணைக்கப்படும்.

சரபங்கா நதியிலிருந்து மோர்ப்பாலயம், ஆட்டையாம்பட்டி,காளிப்பட்டி, வெண்கலம் மற்றும் முன்றடைப்பு வழியாக கால்வாய் அமைத்து சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாவை பொறியியல் கல்லூரியின் மேற்கே திருமலைப்பட்டிற்கு கொண்டு சென்று ஐயாற்றில் இணைக்கப்படும்.

ஒகேனக்கல் அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டத்தின் மூலம் திருச்சி- பெரம்பலூர் மாவட்ட வட பகுதிகளும், கொல்லிமலைக்கு தெற்கே உள்ள பகுதிகளும் பயனடையும்... குறிப்பாக தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி ஒன்றியங்களின் ஏரி மற்றும் குளங்கள் இத்திட்டத்தின்மூலம் நிரம்புவதோடு, ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்யும் இப்பகுதி மக்களுக்கு நிலத்தடிநீர் மட்டம் உயர வழிவகுக்கும்.

பா.ஜ.க வின் தேத்தல் அறிக்கையிலேயே நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் என்ற பச்சமுதுவால் ஒகேனக்கல்-அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்புத்திட்டம் நிறைவேற்றமுடியாத ஒன்றல்ல... பெரம்பலூர் மக்களவை தொகுதி மக்களாகிய நாம் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய தருணம் இது...

 
IJK வின் தேர்தல் அறிக்கை

பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பச்சமுத்து, தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். துறையூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் உப்பிலியபுரம் சோபனபுரம் கொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். கட்சியின் நிர்வாகிகள் பூசணிக்காயை சுற்றி வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் பின்தங்கிய தொகுதி என்று அனைவரும் பேசி வருகின்றனர். இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை. தொகுதியில் குடிநீர், வேலை வாய்ப்பு என எதையும் செய்யவில்லை. பெரம்பலூர் மக்களின் 20 ஆண்டு கால கனவு திட்டமான அரியலூர் முதல் நாமக்கல் வரையிலான ரெயில் பாதையை இதுவரை நிவேற்றவில்லை என்றும் கூறினார்.
தற்போது ஊடகங்களின் வரும் கருத்துக்கணிப்புகளின் படி பாரதீய ஜனதா கட்சி 275 இடங்களை பெறும் என்றும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 350 இடங்களை பெறும் என்றும் கூறினார். இது வரை பாஜகவை பற்றி எதுவும் பேசாமல் இருந்த தமிழக முதல்வர் தற்போது மோடியையும் பா.ஜ.க.வையும் குறைகூறி பேசி வருகிறார். தங்களின் தொகுதி பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி நிதியை பெற்று தொகுதிக்கு வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.
ஐ.ஜே.கே. மாநிலப்பொதுச் செயலாளர் ஜெசீலன், மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேஸ், மாவட்ட தலைவர் பரந்தாமன், மாவட்ட செயலாளர் துரைபாரதி, பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் மாராடிநடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராஜு, துரை முருகன், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரஜோதி தே.மு.தி.க. பழனிவேல், நகர தலைவர் சுப்புகுரு, சபாபதி, மானோகர், ராஜன், பா.ம.க. மாவட்ட தலைவர் தங்கராசு உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி-மாலைமலர்.

Thursday, 17 April 2014

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு 5 மகள்கள். இவரது இரண்டாவது மகள் விஜயகுமாரி. இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். விஜயகுமாரி ஷீ கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த தோழியின் மூலம் சர்ச் தொடர்பு கிடைக்கப்பெற்று அடிக்கடி சர்ச் சென்றுவந்துள்ளார். இது அவரது அம்மாவிற்கு தெரியவந்த போது அவர்கள் விஜயகுமாரியை கண்டித்துள்ளார். இதன் பிறகு விஜயகுமாரி தன் வீட்டிற்கு தெரியாமல் போய்வருவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 12.03.2014 அன்று வேலைக்குச்செல்வதாக கூறிச் சென்ற விஜயகுமாரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி அலைந்தபெற்றோர்கள் விஜயகுமாரிக்கு உள்ள சர்ச் தொடர்பால் அங்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது சர்ச்சில் உள்ளவர்கள் விஜயகுமாரியை சென்னை தாம்பரம் பெந்தகோஸ்தே சபை சர்ச்க்கு அனுப்பியுள்ளோம், 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால் 13 நாட்கள் கழித்தே விஜயகுமாரி வேலூர் திரும்பியுள்ளார். வேலூர் வந்தபின்பும் சர்ச்சிலியே இருந்துள்ளார். குடும்பத்தினர் சென்று அழைத்தும் விஜயகுமாரி வர மறுத்துவிட்டார். சர்ச் நிர்வாகத்தினரும் அராஜகப்போக்குடன் விஜயகுமாரியை வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இச்சூழ்நிலையில் விஜயகுமாரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அங்கு விஜயகுமாரியின் குடும்பத்தினரை அலட்சியப்படுத்தி அதே சமயத்தில் கிறிஸ்தவர்களை மிகவும் மரியாதையாக நடத்தி அவர்கள் சார்பாக காவல் துறையினர் பேசியதாகவும் விஜயகுமாரியின் சகோதரி நம்மிடையே கூறினார்கள். காவல்நிலையத்தில் விஜயகுமாரியின் குடும்பத்தினர் சொல்வதற்கு செவி மடுக்காமல் “விஜயகுமாரி மேஜர் ஆனதால் அவர்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை உள்ளது” என்ற பாதிரியின் வாதத்தை ஏற்று விஜயகுமாரியை மீண்டும் கிறிஸ்தவர்களுடன் அனுப்பி விட்டனர். இச்சம்பவம் அறிந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் திரு. மகேஷ் காவல்நிலையம் வந்து விஜயகுமாரியின் குடும்பத்தினருக்காக வாதிட்டுள்ளார். பிரச்சினையை சமாளிக்கவேண்டும் என்பதற்காக புகார் மனு மீது பெண்ணை காணவில்லை என்று ஒரு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அனுப்பிவிட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் சர்ச் முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தாக என்று திரு. மகேஷ் கூறினார்.
vellore christ small
26.03.2014 அன்று இந்து முன்னணி அமைப்பினர், விஜயகுமாரியின் குடும்பத்தினருடன் சேர்ந்து சர்ச் முற்றுகை போராட்டம் நடத்தினர். பிரச்சினை தீவிரமடைவதை கண்ட காவல்துறை ஆய்வாளர், விஜயகுமாரியை 26.03.2014 மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக வாக்குறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இப்போராட்டத்தின் போது பெந்தகோஸ்தே சர்ச்சின் ஊழியரான ஜேக்கப் “நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும், யாரிடம் சென்று புகார் கொடுத்தாலும் உங்களால் விஜயகுமாரியை இங்கிருந்து அழைத்து செல்ல முடியாது. இதே போல், இங்கு வந்த யாரும் இதுவரை திரும்பி சென்றதில்லை” என்று கூறி விஜயகுமாரியின் குடும்பத்தினரை பயமுறுத்தியதாக விஜயகுமாரியின் சகோதரி கூறினார்.

இதற்குள் விஜயகுமாரியை கிறிஸ்தவர்கள் சென்னைக்கு அனுப்பிவிட்டிருந்தனர். இதனால் காவல்துறையினரால் அவர்கள் கூறியபடி மதியத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. காவல்துறையினர் ஒரு குழுவை சென்னைக்கு அனுப்பி விஜயகுமாரியை வேலூருக்கு அழைத்து வந்து 26.03.2014 இரவு JM2 வது மாஜிஸ்ரேட் திரு.மும்மூர்த்தி அவர்களின் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ரேட் விஜயகுமாரியை அரசு காப்பகத்தில் வைத்து பாதுகாத்து 27.03.2014 அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஆனால் விஜயகுமாரியை அரசு காப்பகத்திற்கு அனுப்பாமல் காவல்துறையினரின் உதவியுடன் கிறிஸ்தவர்கள் நீதிபதியின் உத்தரவையும் பொருட்படுத்தாமல் சர்ச்சுக்கே அழைத்துச் சென்றதாக என்று திரு. மகேஷ் கூறினார்.

vellore christ police
27.03.2014 அன்று விஜயகுமாரி JM2 வது மாஜிஸ்டிரேட் திரு.மும்மூர்த்தி அவர்கள் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் முழுவதுமாக மதம் மாற்றப்பட்டதற்கு அடையாளமாக வெள்ளை சேலையில் கைகளில் பைபிளுடன் வந்தார். விஜயகுமாரியின் குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் விஜயகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவச் சான்றுகளை சமர்ப்பித்து, விஜயகுமாரியின் உடல் மற்றும் மன நிலை கருதி அவரை தங்களுடன் அனுப்ப வேண்டியதாக திரு. மகேஷ் கூறினார். நீதிபதி விஜயகுமாரியின் குடும்பத்தினர் கோரிக்கைகளை புறந்தள்ளி, விஜயகுமாரியிடம் நான்கைந்து கேள்விகள் கேட்டு விட்டு அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரியவில்லை என்பதால் அப்பெண்ணின் முடிவே இறுதியானது என்று சொல்லி விஜயகுமாரியின் விருப்பதை கேட்டார். அதற்கு விஜயகுமாரி தான் மதம் மாறிவிட்டதாகவும் மீண்டும் தன் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று சொன்னவுடன் அதை விஜயகுமாரியின் விருப்பமாக பதிவு செய்துவிட்டு, குடும்பத்தினர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.

விஜயகுமாரியின் பெற்றோர்கள் விஜயகுமாரியின் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுதும், கிறிஸ்தவ சர்ச்சுக்குச் செல்லும் முடிவில் விஜயகுமாரி பிடிவாதமாக இருந்தார் என்றார் விஜயகுமாரியின் சகோதரி.

இப்படி, அப்பாவிப் பெண்களின் மனநிலையை பாதிப்படையச் செய்து, அதையே சாதகமாக்கி மதமாற்றும் செய்யும் அளவுக்கு இந்த கிறிஸ்தவர்கள் இறங்கியிருப்பது இந்த நாட்டிற்கும், நம் சமயத்திற்கும், பண்பாட்டிற்கும் பேராபத்தை விளைவிக்கும். எனவே மதமாற்றத் தடைச் சட்டத்தை அரசு விரைவில் இயற்றி, இந்தப் பேராபத்திலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு டிபன்பாக்ஸ் உடன் ஆயிரம்ரூபாய் பணமும் விநியோகிக்கப்பட்டது. வினியோகித்தவர்களை அதிமுக ஆதரவாளர்கள் கையும்களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சாகித்ய அகடமி விருதுபெற்ற நாவல் ஆசிரியர் ஜோ டி குரூஸ், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவரது, 'ஆழி சூழ் உலகு' நாவலை, ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய முன்வந்த பதிப்பகமும், மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட முடித்து விட்ட மொழிபெயர்ப்பாளரும், அந்த பணியை கைவிட்டு விட்டதாக அறிவித்தனர்.

இதற்கு எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. தமிழ் எழுத்தாளர்கள், 'தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:
ஜெயமோகன், எழுத்தாளர்:
எழுத்தாளர்களுக்கு இடதுசாரி பதிப்பகத்தார் விடுக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். இது அவர்களின் பாசிச போக்கை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பகங்களில், 90 சதவீத பதிப்பகங்கள், இடதுசாரி கொள்கையைக் கொண்டதாகவே உள்ளன.
இவர்களுக்கு, வெளிநாட்டு பணம் வருகிறது. பணம் கொடுக்கும் நாடுகள், மோடி பிரதமராவதை ஏற்கவில்லை. அதனால், மறைமுகமாக இதுபோன்ற காரியங்களை, இந்தியாவில் உள்ள பதிப்பகங்கள் மூலம், எழுத்தாளர்களுக்கு எதிராக செய்கின்றனர்.
சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களில் கூட கருத்துக்களை வெளியிட்டு, சிறைக்கு சென்ற எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜோ டி குரூசின் புத்தகத்தை வெளியிட மறுப்பது அராஜகப் போக்கையே காட்டுகிறது.
நாஞ்சில்நாடன், எழுத்தாளர்:
ஜோ டி குரூஸ் ஒரு படைப்பாளி. அவருக்கு அரசியல் கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது. அவரது அரசியல் நிலைப்பாட்டுக்காக, அவரது படைப்பை நிராகரிப்பது நியாயமற்றது. குரூஸ் எழுதிய, 'ஆழி சூழ் உலகு' மிகச் சிறந்த படைப்பு. ஐந்தாண்டுகளுக்கு முன், அந்த நாவல் வெளிவந்தபோது, அதை போற்றியவர்கள் தான் இப்போது நிராகரிக்கின்றனர்.
ஒரு படைப்பாளி, தன் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் பெற்றவன். ஆனால், அவனது அரசியல் கருத்து, இப்படித் தான் இருக்க வேண்டும் என சொல்வது அராஜகம். இந்த போக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. அதேநேரத்தில், ஒரு புத்தகத்தை வெளியிடவும், அதை மொழிபெயர்க்கவும், பதிப்பாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் முழு உரிமை உண்டு.
பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்: ஜோ டி குரூசின் தமிழ் நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதை, 'நவயானா' பதிப்பகம் மறுத்துள்ளதை ஏற்க முடியாது. இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் நிலைப்பாட்டுக்காக, இப்படியொரு முடிவை அந்த பதிப்பகம் எடுத்திருக்கக் கூடாது.
ஆனால், ஒவ்வொரு பதிப்பகமும் தனக்கென சில கொள்கைகளை வைத்துள்ளது. அவர்களது கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்களை, எதிர் கொள்கை உடையவர்களின் புத்தகங்களை வெளியிடக் கூடாது என, முடிவு செய்திருப்பர். அந்த வகையில், மோடியை ஆதரிக்கும், ஜோ டி குரூஸ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர்கள் வெளியிடாமல் இருக்கலாம்.
இதுபோன்ற முடிவுகள், பதிப்புலகில் வழக்கமான ஒன்று தான்.
சாருநிவேதிதா, எழுத்தாளர்:
இந்தியாவில் எழுத்தாளராக இருக்க வேண்டுமானால், அவர் இந்துத்துவா எதிர்ப்பாளராகவும், மோடி எதிர்ப்பாளராகவும் இருக்க வேண்டும் என, பதிப்பாளர்கள், 'பிளாக் மெயில்' செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோ டி குரூசின், நாவலை மொழிபெயர்த்து, ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம் என, பதிப்பாளர் தான், அவரை நாடி சென்றார். அப்படியிருக்கையில், குரூசின் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு, அவரது புத்தகத்தை வெளியிட மாட்டோம் என்று, சொல்வது, எழுத்தாளர்களை அச்சுறுத்துவதாகும்.
இது, உளவியல் ரீதியாக, எழுத்தாளர்களுக்கு, மிரட்டல் விடுப்பதற்கு சமம். 1947ம் ஆண்டு, பாகிஸ்தான் பிரிந்தபோது நடந்த இனப்படுகொலையையும், இந்திரா இறந்தபோது நடந்த சீக்கியர் படுகொலையையும் பேச யாரும் தயாராக இல்லை. அப்படியிருக்கையில், பா.ஜ.,வுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் என, படைப்பாளிகள் மீது சிலர் மறைமுக தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
ஜோ டி குரூஸ் இந்த தாக்குதலுக்கு இப்போது இரையாகியுள்ளார். மோடியை பல ஆண்டுகளாக ஆதரித்து வரும் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை, பதிப்பாளர்கள் இனி வெளியிடுவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வா.மு.கோமு, எழுத்தாளர்:
ஒரு படைப்பாளிக்கு சொந்த கருத்துக்கள் ஆயிரம் இருக்கும். அதில், அரசியல் கருத்தும் ஒன்று. ஆனால், ஒரு படைப்பை உருவாக்கும்போது, படைப்பாளி கட்சிக்காரனாக இருப்பதில்லை. எனவே, படைப்புக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அரசியல் இல்லாமல், முழுக்க முழுக்க மக்கள் ஏற்கும் படைப்பாக இருந்தால் தான், ஒருவரின் படைப்பு பாராட்டப்படும்.
அப்போதுதான், அந்த படைப்பை, மொழிபெயர்ப்பு செய்கிறோம் என, பதிப்பகங்கள் முன்வருகின்றன. அதன்பின், அவர் இந்த கட்சியை சேர்ந்தவர் என, சொல்லி புத்தகத்தை வெளியிடமாட்டோம் என, சொல்வதில் நியாயமில்லை. அவர்கள் வெளியிடாவிட்டால், இன்னொரு, பதிப்பகம் வெளியிடும்.
வா.மணிகண்டன், எழுத்தாளர், (வலைப்பூவில் எழுதியிருப்பது):
மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அதை தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார்.
தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ டி குரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், கிரீஷ் கர்னாடும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ டி குரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.
இங்கு மோடி ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம்.
அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறுபோட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகின்றனர்.
தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகின்றனர். ஆனால் மோடிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்து விடுகிறார்கள்.

'கருத்தில் மாற்றம் இல்லை:
அதனால் கவலையும் இல்லை'
இதுகுறித்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கூறியதாவது:
டில்லியைச் சேர்ந்த, குறிப்பிட்ட பதிப்பகம், என் மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டை ரத்து செய்துள்ளதை, தனது இணையதளத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எழுத்தாளனுக்கு, சமூக பொறுப்பு அவசியம்.
கடந்த, 12 ஆண்டுகளாக, குஜராத்துக்கு தொழில்ரீதியாக சென்று வருகிறேன். அந்த அனுபவத்தில், என்னுடைய கருத்தை வெளியிட்டேன். இது, ஒருநாள் இரவில், எடுக்கப்பட்ட முடிவல்ல. எனது கருத்தில், எந்த மாற்றமும் இல்லை. எனது புத்தகத்தின், ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடும் திட்டம் ரத்தானதால், கவலை இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.


நன்றி-தினமலர்.

Wednesday, 16 April 2014

கிருஷ்ணகிரியில் மோடி.. 
அன்புமணியுடன்..
சேலத்தில் மோடி..
விஜயகாந்துடன்..




மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற கருத்தை பாமக அடியோடு எதிர்க்கும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு, சாதி மேம்பாட்டுக் குறியீடு, நடுவண் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, நீதித் துறையில் இட ஒதுக்கீடு
கல்வியை அரசுடைமை ஆக்குதல், தமிழ் மொழியில் பள்ளிக் கல்வி முறை, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி.
தெளிவான மருந்துக் கொள்கை உருவாக்கம், அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தொற்றா நோய்கள் தடுப்புச் சட்டம்.
மது மற்றும் புகையிலை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து, அணு உலைகள் மூடல், மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி ரத்து.
தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்து, வன்கொடுமைச் சட்டம் திருத்தம், மாற்றுத் திறனாளிகள் உரிமை காக்க, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாக்க நடவடிக்கை.
வருமான வரி விலக்கு அதிகரிப்பு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவை பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன

நன்றி-தினமணி.
பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் மததிய அமைச்சர் மு.க.அழகிரி  உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.. அழகிரி மதுரையில் நேற்றிரவு  ரகசியக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டத்தில் அழகிரி பேசியது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
எந்த தவறும் செய்யாத மதுரை மாநகர் திமுக நிர்வாகிகளை  கூண்டோடு கலைத்தனர். அவர்களுக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன். என் மீது அபாண்டமான பழி போட்டனர்.. 'கட்சியையும், கட்சி தலைவரையும் மீட்டெடுப்போம்' அதற்கு இனி நாம் தயாராக வேண்டும். என் ஆதரவாளர்களான, உங்களுக்காக, மன்னிப்பு கேட்கவும் தயார் என்றேன். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. திட்டமிட்டும், சதி செய்தும், நம்மை பழிவாங்கி விட்டனர். நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
தேர்தலில் நம் ஆதரவாளர்கள் எல்லோரிடம் நான் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டேன். அதன் அடிப்படையில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இரவோடு இரவாக வைகோ போன்றவர்களுக்கு சாதகமாக உடனே தேர்தல் பணியாற்ற வேண்டும். மதுரையில் தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஆதரிப்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் ஆதரவால் தான் தி.மு.க., தென் மண்டலத்தில் 9 எம்.பி., க்கள் வெற்றி பெற்றனர். தற்போது தென் மண்டலத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடையும் போது நம்முடைய சக்தி தெரியும்.
குஜராத்தில்  சிறப்பாக ஆட்சி செய்யும் மோடி, பிரதமரானால், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்.; அவர் ஒரு சிறந்த நிர்வாகி. குஜராத் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே குஜராத் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினர், அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தான் அர்த்தம். இவ்வாறு அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். மேலும் விரைவில் அழகிரி-மோடி சந்திப்பு நடக்கவுள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
  

நன்றி-தினமணி.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வழக்கம்போல தபால் துறை ஊழியர் ஒருவர், கடிதங்களைக் கொண்டு வந்துக் கொடுத்துள்ளார். அதில் ஒரு கடிதத்தில், டீக் கடை நரேந்திர மோடி பாரதப் பிரதமரானால் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில், மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம். இப்படிக்கு, பன்னா இஸ்மாயில், தமுக, திருவண்ணாமலை என்று எழுதப்பட்டு இருந்ததாம்.
இதைப் படித்து அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக கோயில் இணை ஆணையரும், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையருமான ந.திருமகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மிரட்டல் கடிதம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இணை ஆணையர் புகார் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள ஏதோ ஒரு தபால் பெட்டியில் போடப்பட்டு, கோயிலுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு:
மிரட்டல் கடிதத்தையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தேர்தலையொட்டி கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுள்ளோம். மற்றபடி வேறொன்றும் இல்லை என்றார்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி 61 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் எனப்படும் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு, கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,29,580 ஆண் வாக்காளர்களும், 1,34,384 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 10 பேர் என மொத்தம் 2,63,974 வாக்காளர்களும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 1,21,623 ஆண் வாக்காளர்களும், 1,23,319 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 17 பேர் என மொத்தம் 2,43,959 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,51,203 ஆண் வாக்காளர்களும், 2,56,703 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 27 பேர் என, மொத்தம் 5,07,933 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு கடந்த 9ம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் வழங்கப்பட்டு வருகிறது. 14ம் தேதி வரை 3 லட்சத்து 11 ஆயிரம் நபர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளர் சீட்டு வழங்கும் பணிகள் 61 சதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு 19-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

நன்றி-தினமணி

 பெரம்பலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்கள் வாகன தணிக்கை என்ற பெயரிலும் செலவினகணக்கை கண்காணிக்கிறோம் என்ற பெயரிலும் அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சிறு உதாரணம் இந்த இரு நிகழ்வுகள்..

பெரம்பலூர் சப்-கலெக்டரின் சண்டித்தனம்.....
முசிறியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் RTR
முசிறியில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார நிகழ்ச்சிக்குசென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பெரம்பலூர் சப்-கலெக்டருடன் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா கடந்த 13ம் தேதி திருச்சி மாவட்டம், முசிறியில் பிரசாரம் செய்தார். இதற்காக பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பெரம்பலூர் துறையூர் சாலையில் காலை 9 மணி முதல் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே ஆய்வுக்காக சென்ற பெரம்பலூர் உதவித் தேர்தல் அலுவலரான சப்-கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, நக்கசேலம் பகுதி வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆட்களை ஏற்றிக்கொண்டு சாரை, சாரையாகச் செல்வதை கண்டு தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். இதனால் பிரசாரத்துக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து 1 மணி நேரத்துக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகரச் செயலாளர் ஆர்.டி. ராமச் சந்திரன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுக்கூட்டத்துக்கு செல்வதில் என்ன தேர்தல் விதிமீறல் உள்ளது எனக் கூறி சப்-கலெக்டரிடம¢ கேள்வி கேட்டனர். ஆனால், தேர்தல் விதிமீறல் இருக்கிறதா என சோதனை செய்யவேண்டியது எனது கடமை என்றும், தேர்தல் கால அரசுப் பணிகளை தடுத்து நிறுத்தாதீர்கள் என்று பதிலளித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அப்படியென்றால் அதிமுகவினர் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு, வாகனங்களை அனுப்புங் கள்.
அல்லது வீடியோவில் பதிவுசெய்து விட்டு அனுப்புங்கள். கூட்டத்திற்கு சென்று திரும்பிய பின்னர் முழுமையாக விசாரணை நடத்தலாம் என்று அவருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் நக்கசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  இதை ஏற்றுக்கொண்ட சப்-கலெக்டர், வாகனங்களை வீடியோ மூலம் பதிவுசெய்த பின்னர் முசிறிக்கு புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இந்த வாக்குவாதத்தின் போது அருகில் இருந்த போலீசார் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். பிரச்னை முடிவுக்கு வந்த பிறகே ஓடிச் சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.

 இதுகுறித்து ஆலத்தூர் வட்டாட்சியர் மகாராஜா (37) பாடாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் நகரச் செயலர் ராமசந்திரன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், இளங்கோவன், சுப்பையா ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். 

தேர்தல் செலவின பார்வையாளரின்சேட்டை...
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், முசிறி- துறையூர் சாலையில் இந்திய ஜனநாயக கட்சி கொடியுடன் சென்ற வாகனத்தை வழிமறித்து தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், செவ்வாய்க்கிழமை தணிக்கை மேற்கொண்டார். அப்போது, உரிய அனுமதியின்றி அந்த வாகனம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து 15 நாள்களுக்கு வாகன உரிமையை ரத்துசெய்ய சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார். மேலும், அந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி கிராமப் பகுதியில் சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த அவர், அதே பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும், தேர்தல் அலுவலகத்தை உடனடியாக அகற்றவும் தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார்.



நன்றி-பங்களிப்பு தினகரன், தினமணி.

Monday, 14 April 2014

தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் வாக்கு சேகரிப்பதிப்பதற்காக மல்லிப்பட்டினத்திற்கு சென்றார். ஊரின் வழியில் நூறுக்கும்மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழிமறித்து எங்கள் ஊருக்குள் வாக்குசேகரிக்கவரக்கூடாது எனக்கூறி கற்களால் சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முருகானந்தம் உட்பட பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் . துப்பாக்கியுடன் கூடிய காவல்துறை பாதுகாவலர் அரசால் நியமிக்கப்பட்டிருந்தும் இந்த கொலைவேறிதாக்குதல் நடந்துள்ளது.அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் செதுபாவச்சத்திரம் காவல்நிலையத்தில்புகார் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்து அருகிலுள்ள கிராமங்களில்பதற்றம்நிலவுகிறது.
துப்பாக்கியுடன் பாதுகாவலர் இருந்தும் முருகானந்தத்தை தாக்கிய பயங்கரவாதிகள்.
 

Sunday, 13 April 2014

திண்டுக்கல், பேகம்பூர் எருமைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் காளியம்மன் கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. சமீபத்தில் விநாயகர் கோவிலுக்காக காளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலம் ஒன்றினை தானமாகத் தர பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏற்கனவே இருந்த மண்ணிலான விநாயகர் சிலையை அகற்றிவிட்டு புதிய கற்சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
 policestation
ஆண்டுதோரும் பங்குனி மாதத்தில், காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.இந்தாண்டும் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12.04.2014 அன்று பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி விநாயகர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடம் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது அதனால் உடனடியாக விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்காக இருதரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். காவல்துறை ஆய்வாளர் பரவாச்சிதேவன், காவல்துறை துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் நசீம்பாஷா முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்துக்கள் நிலப் பத்திரங்களை போலீசாரிடம் காட்டி வாதாடியுள்ளனர். ஆனால் இந்த ஆவணங்களை ஏறெடுத்தும் பார்க்காத போலீசார் இஸ்லாமியர்கள் சார்பாகவே பேசி விநாயகர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இந்துக்களை விரட்டியடித்தனர்.

dinidigual protest3
இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகரப் பொறுப்பாளர் திரு.சஞ்சீவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சிலரும் உடனடியாக காவல் நிலையம் சென்று மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்களுடன் அப்பகுதி கவுன்சிலர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்துக்கள் தரப்பு வாதம் எதையும் ஏற்காமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்ட காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் உடனடியாக விநாயகர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அப்பகுதி வாழ் இந்து மக்கள் சம்மதிக்காமல் எங்கள் கோவிலை விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் விநாயகர் சிலையை நெருங்க முடியாத வாறு மறித்து நின்று கொண்டனர். இச்சமயத்தில் பயங்கரவாத முஸ்லீம்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் கம்புகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கலவரச் சூழலை ஏற்படுத்தினர். அச்சமயத்தில் அங்கு கூடியிருந்த பயங்கரவாத முஸ்லீம்கள் திரு.சஞ்சீவி மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களிடம் உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டியதாக திரு. சஞ்சீவி கூறினார்.
 dinidigual protest1
பின்னர், உடனடியாக பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அடித்து உதைத்து கூட்டத்தை கலையச் செய்து விநாயகர் சிலையை அவ்விடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 45 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கும் தொடுத்து நிபந்தனை ஜாமீனில் இரவு 11:00 மணிக்கு விடுவித்தனர். தற்சமயம் விநாயகர் சிலை போலீசார் வசம் உள்ளது.

இந்துக்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் வழிபடுவதற்காக ஒரு கோவிலை புனரமைத்ததைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத பயங்கரவாத இஸ்லாமியர்கள் காவல்துறையினரைத் தங்கள் வசப்படுத்தி இந்த அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் பயங்கரவாத சக்திகள் நம் நாட்டில் எந்தளவிற்கு பலம் பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. நடுநிலைத் தன்மையுடன் செயல்பட வேண்டிய காவல் துறையும், அரசு அதிகாரிகளும் அராஜகத்திற்குத் துணைப்போய் இந்துக்களுக்கு அநீதி இழைத்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. கோவிலை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் போலீசார் மற்றும் பயங்கரவாத இஸ்லாமியர்களின் மிரட்டல்களை சிறிதும் பொருட்படுத்தாமல் போராடிய அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

நன்றி-http://vsrc.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/item/230-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/itemid-174?fb_action_ids=298002200355367&fb_action_types=og.likes