பெரம்பலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்கள் வாகன தணிக்கை என்ற பெயரிலும் செலவினகணக்கை கண்காணிக்கிறோம் என்ற பெயரிலும் அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சிறு உதாரணம் இந்த இரு நிகழ்வுகள்..
பெரம்பலூர் சப்-கலெக்டரின் சண்டித்தனம்.....
முசிறியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் RTR |
பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா கடந்த 13ம் தேதி திருச்சி மாவட்டம், முசிறியில் பிரசாரம் செய்தார். இதற்காக பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பெரம்பலூர் துறையூர் சாலையில் காலை 9 மணி முதல் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே ஆய்வுக்காக சென்ற பெரம்பலூர் உதவித் தேர்தல் அலுவலரான சப்-கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, நக்கசேலம் பகுதி வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆட்களை ஏற்றிக்கொண்டு சாரை, சாரையாகச் செல்வதை கண்டு தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். இதனால் பிரசாரத்துக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து 1 மணி நேரத்துக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகரச் செயலாளர் ஆர்.டி. ராமச் சந்திரன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுக்கூட்டத்துக்கு செல்வதில் என்ன தேர்தல் விதிமீறல் உள்ளது எனக் கூறி சப்-கலெக்டரிடம¢ கேள்வி கேட்டனர். ஆனால், தேர்தல் விதிமீறல் இருக்கிறதா என சோதனை செய்யவேண்டியது எனது கடமை என்றும், தேர்தல் கால அரசுப் பணிகளை தடுத்து நிறுத்தாதீர்கள் என்று பதிலளித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அப்படியென்றால் அதிமுகவினர் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு, வாகனங்களை அனுப்புங் கள்.
அல்லது வீடியோவில் பதிவுசெய்து விட்டு அனுப்புங்கள். கூட்டத்திற்கு சென்று திரும்பிய பின்னர் முழுமையாக விசாரணை நடத்தலாம் என்று அவருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் நக்கசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட சப்-கலெக்டர், வாகனங்களை வீடியோ மூலம் பதிவுசெய்த பின்னர் முசிறிக்கு புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இந்த வாக்குவாதத்தின் போது அருகில் இருந்த போலீசார் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். பிரச்னை முடிவுக்கு வந்த பிறகே ஓடிச் சென்று வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதுகுறித்து ஆலத்தூர் வட்டாட்சியர் மகாராஜா (37) பாடாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் நகரச் செயலர் ராமசந்திரன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், இளங்கோவன், சுப்பையா ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளரின்சேட்டை...
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், முசிறி- துறையூர் சாலையில் இந்திய ஜனநாயக கட்சி கொடியுடன் சென்ற வாகனத்தை வழிமறித்து தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ், செவ்வாய்க்கிழமை தணிக்கை மேற்கொண்டார். அப்போது, உரிய அனுமதியின்றி அந்த வாகனம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து 15 நாள்களுக்கு வாகன உரிமையை ரத்துசெய்ய சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார். மேலும், அந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி கிராமப் பகுதியில் சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த அவர், அதே பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யவும், தேர்தல் அலுவலகத்தை உடனடியாக அகற்றவும் தேர்தல் செலவின பார்வையாளர் சித்தலிங்கேஷ் உத்தரவிட்டார்.
நன்றி-பங்களிப்பு தினகரன், தினமணி.
0 comments:
Post a Comment