பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற
பாடுபடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் மததிய அமைச்சர்
மு.க.அழகிரி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.. அழகிரி மதுரையில் நேற்றிரவு ரகசியக் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டத்தில் அழகிரி பேசியது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
எந்த தவறும் செய்யாத மதுரை மாநகர் திமுக நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தனர். அவர்களுக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன். என் மீது அபாண்டமான பழி போட்டனர்.. 'கட்சியையும், கட்சி தலைவரையும் மீட்டெடுப்போம்' அதற்கு இனி நாம் தயாராக வேண்டும். என் ஆதரவாளர்களான, உங்களுக்காக, மன்னிப்பு கேட்கவும் தயார் என்றேன். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. திட்டமிட்டும், சதி செய்தும், நம்மை பழிவாங்கி விட்டனர். நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
தேர்தலில் நம் ஆதரவாளர்கள் எல்லோரிடம் நான் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டேன். அதன் அடிப்படையில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக வைகோ போன்றவர்களுக்கு சாதகமாக உடனே தேர்தல் பணியாற்ற வேண்டும். மதுரையில் தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஆதரிப்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் ஆதரவால் தான் தி.மு.க., தென் மண்டலத்தில் 9 எம்.பி., க்கள் வெற்றி பெற்றனர். தற்போது தென் மண்டலத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடையும் போது நம்முடைய சக்தி தெரியும்.
குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்யும் மோடி, பிரதமரானால், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்.; அவர் ஒரு சிறந்த நிர்வாகி. குஜராத் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே குஜராத் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினர், அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தான் அர்த்தம். இவ்வாறு அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். மேலும் விரைவில் அழகிரி-மோடி சந்திப்பு நடக்கவுள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment