Saturday, 8 February 2014



பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், சேலைகளில் வேலைப்பாடு செய்ய பெண்களுக்கான இலவசப் பயிற்சி பெறலாம். இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 12 முதல் சேலைகளில் வேலைப்பாடு பயிற்சி பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும் பயிற்சியானது, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி.  கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி. சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்)
ஆத்தூர் சாலையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.


தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் அளிக்க வருபவர்களை பொதுமக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பாமகவின் மகளிரணி அரசியல் எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிரணி செயலர் செல்வி செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் மேலும் பேசியது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஒரு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள்.
பாமகவினர் மீது மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது, ஆவதும் பெண்ணாலே; ஆவதெல்லாம் பெண்ணாலே. அழிவது ஆண்களாலே. படைக்கும் ஆற்றல் பெண்களுக்குதான் உள்ளது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதிவைத்து மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.  பணக்காரர்களின் குழந்தைகளின் கிடைக்கும் கல்வி ஏழைகளின் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.  குன்னம் பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜே. குரு, மாநில துணைச் செயலர் பாலு, பெரம்பலூர் மாவட்டச் செயலர் செந்தில்குமார், அரியலூர் மாவட்டச் செயலர் வைத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்

 இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் அமைந்துள்ளது கேணிக்கரை காவல் நிலையம். இந்தக் காவல்நிலையம் மீது 02/02/2014 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய வன்முறைத் தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குக் காரணமென்ன? இந்தக் காவல்நிலையத்திற்கு எதிரில்தான் காவலர் குடியிருப்பு மற்றும் காவலர் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது!


ramanathapuram kenikarai policestation
சில நாட்களுக்கு முன் இந்த இராமநாதபுரத்தின் மாவட்ட ஆட்சியர் திரு நந்தகுமார் அவர்கள், இந்து மாணவர்கள் ரட்சை, காப்புக் கயிறு, செந்தூரம் போன்ற இந்துமதச் சின்னங்களை பள்ளிகளுக்கு அணிந்து வர தடை விதித்தார். இது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த செய்தியின் இணைப்பு இதோ: 

இப்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வந்த பயங்கரவாதத்திற்கு அடிப்பணிந்து, அரசு அதிகாரிகளே துணைப்போனதின் விளைவாக இன்று இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்நிலையத்தைத் தாக்கி காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி முன்னணித் தமிழ் நாளிதழ்களான தினமலர், தினமணி, தினத்தந்தியில் பிரசூரிக்கப்பட்டன. இதை, செய்தி விமர்சகர் திரு.நம்பிநாராயணன் அவர்கள் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் கவனத்திற்குக் கொண்டுவர, அப்பகுதியில் வசிக்கும் திரு.சுதாகர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். திரு. சுதாகர் அவர்கள் அங்கு நடந்த சம்பவத்தை பின் வருமாறு விவரித்தார்

இந்த சம்பவம் மோட்டார் சைக்கிளைத் தெருவில் வேகமாக ஒட்டுவது, மற்றும் இருசக்கரவாகனத்தில் பயங்கர ஒலி எழுப்பும் ஹாரன் அடிப்பதை மையமாகக் கொண்டு தொடங்கியது. ஷேக் என்பவர் தனது இருசக்கரவாகனத்தில் மிக அதிவேகமாக, அடிக்கடி புளியக்காரத் தெருவை கடந்து சென்றுள்ளார். இதை புளியக்காரத் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இருவர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்கள். இச்சம்பவம் நடந்த இரண்டாம் நாள் அதாவது 2/2/2014 அன்று மணிகண்டனையும் மற்றவரையும் தாக்கும் நோக்கத்துடன் ஷேக் ஒரு ஐந்து ஆறு பேரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே சமயத்தில் மணிகண்டன் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் இருந்துள்ளார். ஷேக் மற்றும் அவருடன் வந்தவர்கள் மணிகண்டனை வாளால் காலில் தாக்கினர். இதைத் தடுக்க முற்பட்ட மணிகண்டனின் கூட்டாளிகளையும், ஷேக்குடன் வந்த முஸ்லீம்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்து மக்கள் கூட்டம் கூடியவுடன், ஷேக் குழுவினர் தப்பிச்சென்று 1000 பேருக்கு மேல் அழைத்துக் கொண்டு வந்தார்கள். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்து, ஷேக் மற்றும் அவர் குழுவினரை கைது செய்ய முயலும்போது அவர்களை கைது செய்ய விடாமல் முஸ்லீம்கள் தடுத்தார்கள். மேலும், அவர்கள் போலீஸ் வண்டியை அடித்து நொறுக்கிவிடுவோம், கொளுத்திவிடுவோம் முடிந்தால் எங்களைக் கைது செய்து பார் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகளை மிரட்டினர். போலீஸ் அதிகாரிகள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, அவ்விருவரை விரட்டி சென்று பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு செல்வதற்குள், 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், இவர்கள் போலீஸ் அதிகாரிகளை தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதோடு, காவல்நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்தக் கலவரச் சூழலை பயன்படுத்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷேக்கும் அவன் கூட்டாளியும் தப்பமுயன்றனர். அதை தடுத்து நிறுத்த சென்ற உதவி ஆய்வாளர். ஜெயபாலை முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கினர். இச்சம்பவமறிந்த மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) திரு. வெள்ளத்துரை, விரைந்து சென்று, போலீசாரைக் காப்பாற்றி, தாக்குதலில் ஈடுபட்ட ஏழு இஸ்லாமிய வெறியர்களைக் கைதுச் செய்தார்.

இந்தச் சம்பவத்தை பத்திரிகைகள் பலவிதமாக வெளியிட்டுள்ளன.

கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உதவி ஆய்வாளர் ஜெயபால் புகாரை ஏற்று, ஆய்வாளர் கிருஷ்ணகுமார் , பாசிப்பட்டறை தெரு இர்ஷன், அகமது அலி, மை கொல்லர் தெரு முகமது அலி, பாம்பூரணி முகமது ரியாஸ், தெற்குதரவை தாரிக்கான், பரமக்குடி சிக்கந்தர் அலி, வாணி சகுபர் சாதிக் ஆகிய ஏழுபேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இன்னும் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த ஏழு நபர்களும், சம்பவம் நடந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரமக்குடி, வாணி, பாம்பூரணி, புதுமடம் போன்ற வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள், அடையாளம் தெரியாமல் இங்குவந்து கலவரம் செய்துவிட்டுப் போகிறார்கள். இதற்கு முன்பு நடந்த பிரச்சனைகளின் போதும் இப்படித்தான் அடையாளம் காணமுடியாதபடி வெளியூர்கார்களைக் கொண்டு உள்ளூர் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் 5, 6 மாதங்களுக்கு முன் கலவரம் நடந்துள்ளது. சின்னக்கடை பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள், ஒரு இந்துவின் வாகனப்பட்டறையில்(workshop) இருந்த 15 வண்டிகளை அடித்து உடைத்தனர். மேலும், இங்குள்ள கண்ணண் கோயிலில் , முஸ்லீகள் இளைஞர்கள் சிறுநீர் கழித்து, கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தினர்.

சிலகாலமாகவே, இராமநாதபுரம், புளியக்காரத் தெருவில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சின்னக்கடைப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வசித்துவரும் முஸ்லீம்கள், இத்தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லீம்களின் வன்முறைக்குப் பயந்த நிர்வாகமும், காவல்துறையும் இக்கலவரங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் திரு.சுதாகர் அவர்கள் நம்மிடையே கூறும் போது, விநாயகர் சதுர்த்தி விழாவின் போது எவ்வித காரணமுமின்றி 17வயது இந்து வாலிபனை காவல் துறையினர் கைது செய்தனர். அது குறித்து காவல்நிலையத்திற்கு சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவரிடம் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில் “நீங்களும் முஸ்லீம்கள் போல் 100பேரை அழைத்து வாருங்கள் அப்போது தான் விடுவார்கள்” என்று கூறினார்.

இப்படி 100 பேர், 50 பேர் கூட்டம் கூடினால் அவர்கள் மிரட்டல்களுக்கு அடிபணிந்த காவல்துறையின் கோழைத்தனம், இன்று காவல்நிலையத்தையே தாக்கும் அளவுக்கு முஸ்லீம் பயங்கரவாதம் கோலோச்சிவிட்டது. கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்து மாணவர்களின் மதச் சின்னங்களை அகற்ற ஆணையிட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) அமைப்பினர், கண்ணண் கோவில் அருகே நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை இந்துக்கள் அடித்து உடைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த வண்டி பலகாலமாக பழுதடைந்து ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை என்றார் சுதாகர்.
ambulance small

இந்தச் சம்பவம் எழுப்பும் கேள்விகளென்ன:
  • சட்ட ஒழுங்கு என்பது அப்பாவி இந்துக்களுக்கு மட்டும் தானா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கிடையாதா?
  • இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதபோக்கிற்கு துணை போய் பள்ளிகளில் இந்து மாணவர்கள் அணிந்து வரும் மதச்சின்னங்களுக்கு தடை விதித்த கலெக்டர் திரு. நந்தகுமார் அவர்கள் இச்சம்பவம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
  • ஒரு சட்டவிரோத செயலை தண்டித்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முயலும் போலீஸ்காரர்களுக்கே குற்றவாளி கொலை மிரட்டல் விடுக்கிறான் என்றால் இராமநாதபுரம், தாலிபான் தலைநகரம் ஆகிவிட்டதா?
  • இராமநாதபுரத்தில் போலீஸ்கார்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அப்பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் கதி என்ன?
  • இச்சம்பவம் குறித்து செய்திதாள்களும் தங்கள் நடுநிலைமையை விடுத்து வெவ்வேறு மாதிரியான செய்திகளை வெளியிட்டு உள்ளது என்பது இஸ்லாமிய பயங்கரவாதத்தினுடைய அச்சம் காரணமாகவா? அல்லது பத்திரிக்கைகளும் இந்த ஜிகாதிகளுக்கு துணைபோகிறார்களா?  எப்படி இச்சம்பவத்தை பத்திரிகைகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:
    Dinamalar
    dinamalar
    Dinamani
    dinamani
    Daily Thanthi
    dailythanthi
  • போலிமதச்சார்பின்மை பேசி தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

கேணிக்கரை காவல்நிலைய புகைப்படம் இதோ:
 ramanathapuram kenikarai policestation
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இது போல் பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால் பயங்கரவாதத்தை வேரொடு அறுத்து எறிந்து மக்களின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் உறுதி கொடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளே செயழிலந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைப்பாவையாக செயல்படுவதான். இந் நிலைமை இப்படியே நீடித்தால் இராமநாதபுரம் மாவட்டம் ஒரு தென்காஷ்மீராக மாறிவிடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத்தேவையில்லை. இப்பொழுது நடந்துள்ள இந்த காவல்நிலைய முற்றுகை என்பது பயங்கரவாதிகள் அரசுக்கு விடுத்துள்ள சவால். இந்த சம்பவத்தை ஒரு அபாய ஒலியாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு உடனடியாக தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து செயல்படவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இம் மாதிரியான பயங்கரவாத சம்பவங்களை தடுத்து நிறுத்தி இராமநாதபுரத்தை தாலிபான்களிடமிருந்து மீட்க தமிழக அரசு உடனடியாக ஆவணசெய்யும் என்று நம்புவோமாக!. 

Friday, 7 February 2014

சரவணன்
வ.களத்தூர் கிராமத்தைச்சேர்ந்த நண்பர் சரவணன் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் நான்கில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.


பத்திரிக்கைச் செய்தி 

 வாலிபால் மற்றும் இறகு பந்து போட்டிகளில் முதல்பரிசும், நீளம் மற்றும் உயரம் தாண்டும் போட்டிகளில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவருக்கு நமது வாழ்துக்கள்.
வண்ணராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த E.B ரவி அவர்களின் மகன் சபரி என்கிற சபரிகிருஷ்ணன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்....

இன்று மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்........

சபரியை பிரிந்து வாடும் அக்குடும்பத்தினற்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழந்தஅனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்....

சபரியின் ஆத்மா சாந்த்தியடைய மனமாற வேண்டுகிறோம்.... 





தோற்றம்:19.11.1990 மறைவு:06.02.2014

vannaramboondi.kalathur

Thursday, 6 February 2014



அரசு கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. கருப்பசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த மாத சந்தா தொகையான ரூ. 70 மட்டுமே சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை உறுதி செய்யும் வகையில், ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, பிப்ரவரி மாதம் முதல் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள ரசீது புத்தகத்தை கொண்டு, சந்தாதாரரிடமிருந்து மாதாந்திர சந்தா தொகை  வசூலிக்க வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றாத உள்ளுர் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இணைப்பு
பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும், சந்தா தொகையாக ரூ. 70 மடடும் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள சந்தா தொகையைவிட, கூடுதலாக வசூல் செய்வது அல்லது உரிய ரசீது வழங்க மறுத்தால், பெரம்பலூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியரை 9498002581, அல்லது சென்னை அலுவலகத்தை 044-28221233 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிப். 8-ல் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.  
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் செ. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூர் வட்டம் திருப்பெயர், வேப்பந்தட்டை வட்டம் கை. களத்தூர், குன்னம் வட்டம் பெண்ணக்கோணம், ஆலத்தூர் வட்டம் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பிப். 8-ம் தேதி காலை நடைபெற உள்ளது.இதில், சம்பந்தப்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

நன்றி-தினமணி.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களில் வியாழக்கிழமை (பிப். 6) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2013-14-ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குள்பட்ட ஒகளுர், நன்னை ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட இனாம் அகரம் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல் கிரேடு "ஏ' குவிண்டால் ஒன்றுக்கு, கொள்முதல் விலையாக ரூ. 1,345, ஊக்கத் தொகையாக ரூ. 70 என, மொத்தம் ரூ. 1,415, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ. 1,310, ஊக்கத்தொகையாக ரூ. 80 என மொத்தம் ரூ. 1,360 குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவைடையான நெல்லை விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-தினமணி.

Wednesday, 5 February 2014

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏ.சி.யில் இருந்து விஷவாயு கசிந்ததினால் அதை சுவாசித்த தொழிலதிபர் இறந்தார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் தாயார் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையறிந்த அவர் உறவினரும், தொழிலதிபருமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் காந்திலால் (55) துக்கம் விசாரிக்க இரண்டு நாள்களுக்கு முன்பு இங்கு வந்தார். ஏற்கனவே காந்திலால் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததினால், சென்னையில் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார்.
 மோகன்லால் வீட்டில் உள்ள ஒரு ஏ.சி.அறையில் காந்திலால் செவ்வாய்க்கிழமை தூங்கினார். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அவர் அறை கதவு திறக்காததால், மோகன்லால் குடும்பத்தினர் அந்த கதவு பூட்டை உடைத்து திறந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காந்திலாலை மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு காந்திலாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
 இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
 விசாரணையில் ஏ.சி. யில் மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டதினால் ஏற்பட்ட சிறிய தீ விபத்தின் விளைவாக, அதில் இருந்து வந்த விஷவாயுவை காந்திலால் சுவாசித்திருப்பதும், இதில் மூச்சுத் திணறலில் காரணமாக காந்திலால் இறந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.
சென்னை குன்றத்தூரில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு முன் காதலன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 பெரம்பலூர் சின்னகடை வீதியைச் சேர்ந்தவர் இளையராஜா (24). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் தங்கியிருந்து, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இளையராஜாவும், அந்த பெட்ரோல் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த குன்றத்தூர் அருகே உள்ள தெற்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யாயாவும் (21) காதலித்து வந்தாராம்.
 இதற்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, கார்த்திக் என்பவருக்கு சுகன்யாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே சுகன்யாவின் கணவர் கார்த்திக் ஒரு சாலை விபத்தில் 5 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதன் பின்னரும் இளையராஜா, சுகன்யாவை காதலிப்பதாக கூறி வந்தாராம்.
 இதையடுத்து சுகன்யாவின் பெற்றோர் இளையராஜாவுக்கு அவரை திருமணம் செய்து சம்மதம் தெரிவித்தனராம். இதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
 இதனிடையே சுகன்யாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு இளையராஜா பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். மேலும் சுகன்யா, தான் இளையராஜாவை திருமணம் செய்ய முடியாது என கூறிவிட்டாராம்.
 இதனால் மன வெறுப்படைந்த இளையராஜா, செவ்வாய்க்கிழமை இரவு சுகன்யா வீட்டுக்குச் சென்றார். அங்கு சுகன்யாவிடம் சிறிது நேரம் இளையராஜா தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
 பினனர் சுகன்யா வீட்டு முன் வந்த இளையராஜா, தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 அங்கு அவர் சிறிது இறந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி-தினமணி.

Tuesday, 4 February 2014


" காவி பயங்கரவாதம்" .... இந்த வார்தை பதம் இஸ்லாமிய தீவிரவாத கைக்கூலிகளாலும், ஒரு சார்பு ஊடகங்களாலும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும்அரசியல் வியாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகளை இழிவு படுத்தும் நோக்கத்துடன் இதனை செய்துவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சம்ஜாதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அமைப்புகளால் , அவர்களின் எசமானர்களை திருப்திபடுத்த நடத்தப்பட்டு வருகிறது . அதன் உண்மை பின்னணி என்ன.....?

வழக்கின் பின்னணி: 

இந்தியாவின்   டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்கும்  இடையே வாரம் இருமுறை சம்ஜாதா எனும் பெயர் கொண்ட  ரயில் விடப்பட்டது. 2௦௦7 பிப்ரவரி 18 ம் தேதி இரண்டு குண்டுகள் வெடித்ததில் 68 பயணிகள் பலி ஆனார்கள்.

   இவ்வழக்கு முதலில் ராஜஸ்தான் சிறப்பு புலனாய்வு அமைப்பினால் விசாரிக்கப்பட்டது. பிறகு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA)  இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.


   சுவாமி அசிமானந்தின் வாக்குமூலம்: 

 2௦1௦ டிசம்பர் வரை இவ்வழக்கில் பல திசைகளில் சென்ற இவ்வழக்கு, சுவாமி அசீமானத் தான் முக்கிய குற்றவாளி என NIA வினால் அறிவ்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். அவருடன் மேலும் மூவர் கைது செய்யப்படுகின்றனர். 2௦11 ஜனவரியில் " காவி தீவிரவாதி" என்ற முத்திரை குத்தப்பட்டு சுவாமி அசிமானந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அரசு தரப்பு அப்ரூவராக மாறுவதாக ஒப்புக்கொண்டதாக  NIA வினால், இந்து அமைப்புகள் மீது அவதூறு  ஊடகங்களில் பரப்பபடுவதோடு அவர் கொடுத்த ஒப்புதல்  வாக்குமூலம் என NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

    காங்கிரசின் கைப்பாவையாக செயல் படும் புலனாய்வுத்துறை அமைப்புகள் விசாரணை வாக்குமூலத்தை வேண்டுமென்றே ஊடகங்களில் கசியவிட்டு இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்ப முயன்றது இதன் மூலம் தெரிய வந்தது. இது தொடர்பாக RSS செய்திதொடர்பாளர் ராம்மாதவ் வெளியிட்ட அறிக்கை....

//////////////இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறியதாவது:சுவாமி அசிமானந்த் அளித்த வாக்குமூலம், வேண்டுமென்றே சி.பி.ஐ., யால் மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சி.பி.ஐ.,மீண்டும் ஒருமுறை "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' ஆக செயல்பட்டுள்ளது. முறைப்படி கோர்ட் ஆவணமாகி அங்கு நடக்கும் விசாரணைக்குப் பின் தெரிய வேண்டிய தகவல் முன்கூட்டியே எப்படி வெளியானது?இவ்வாறு ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.//////

http://www.dinamalar.com/news_detail.asp?id=161570.

   இது தொடர்பாக வக்கீல் நோட்டீசு RSS,  சிபிஐ க்கு அனுப்பபுகிறது .......

////////////// “You are not only in breach of law and your own manual but are liable in addition under the Contempt of Court’s Act, 1971 “as the exercise intended to prejudice the minds of the public by deliberately presenting a statement the truth of which is not established as a fact.”////////////

http://www.hindustantimes.com/india-news/newdelhi/indresh-was-rss-key-to-minorities/article1-647916.aspx 


   சுவாமி அசிமானந்தின் மறுப்பு வாக்குமூலம் :

         2௦11 ஜூலை மாதம் அசிமானந்த் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்கிறார். அதில் NIA தன்னை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தன் குடும்பத்தை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டியதாக கூறுகிறார். ஜனாதிபதிக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

///////////////"I was forced by the NIA to confess that I was involved in the blast...I am not involved in the case.... The proof against me is also fabricated by the NIA," Aseemanand told reporters outside the special court hearing the case///////// http://zeenews.india.com/news/himachal-pradesh/swami-aseemanand-claims-nia-fabricated-evidence_720480.html

////////////He is said to have pleaded before the court to reject his previous application in which he had wished to become a witness in the Ajmer blast case, while deposing that he had no intentions whatsoever to turn approver in the case.
 “Aseemanand told the court that the CBI and NIA put pressure on him to confess his role in the blasts, and allegedly threatened to “fix” him in false cases and put his “family in jail”, some senior lawyers were quoted as saying.///////////// http://hinduexistence.org/tag/swami-aseemanand/

       தற்போது  caravanmagazine.in என்ற இணையதள செய்தி பத்திரிகை 2௦11 முதல் பல்வேறு சூழ்நிலைகளில் சுவாமி அசிமானந்த் அவர்களை  நான்கு முறை சந்தித்து பேசியதாகவும் , அப்போது RSS தலைவர் தூண்டுதலின் பேரில்தான் குண்டுவெடிப்புகளை நடத்தினோம் எனக்கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாமி அசிமானந்த் அவர்களின் வழக்கறிஞர் இது தொடர்பாக மறுப்பு கடிதம் வெளியிட்டதோடு அல்லாமல் மன்னிப்பு கேட்கவில்லை எனில் பத்திரிகை மீது  மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக கூறியுள்ளார். http://samvada.org/files/2014/02/scan0116.pdf

/////////////Swamy Aseemanandji’s lawyer has denied any such interview given by Swamiji to the media which claims the interview. He has threatened a legal action against the magazine.///////// 
http://samvada.org/2014/news/press-release/ 


சுவாமி அசிமானந்த் மறுப்பு கடிதம்


 சுவாமி அசிமானந்த் வழக்கறிஞரின் பத்திரிகை செய்தி
http://samvada.org/files/2014/02/scan0116.pdf
மோடி நாட்டின் பிரதமராகும் சூழ்நிலை கனிந்துவரும் நிலையில் தேசவிரோத சக்திகள்  RSS மற்றும் சங்க பரிவாரங்கள் மீது சேறு வீசி ஆதாயம் தேட முயலுகின்றன.  ஆனால் வாய்மையே என்றும் வெல்லும்........

ஜனவரி2௦14 ல் இவ்வழக்கு தொடர்பாக NIA/CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கை நீதிமன்றம் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளது.

Monday, 3 February 2014

மலேசிய சிறையில் உள்ள மகனை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அவரது தாய் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மனைவி பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் அளித்த மனு:
அயன்பேரையூர் கிராமத்தில் வசித்து வரும் எனது மகள் சுதாவை (25), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையாவுக்கு திருமணம் செய்து கொடுத்தேன்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் செல்லையா தோட்டவேலை செய்தார். இதனிடையே கடந்த சுமார் 2 மாதங்களுக்கு முன், ஆண்டுக்கு ஒருமுறை அந்நாட்டில் புதுப்பிக்கப்படும் நடைபாஸ் இல்லாமல் சென்றபோது, மலேசியா போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர் எனவும், ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் சிறையிலிருந்து விடுவிப்பர் எனவும், அவருடன் வேலைபார்த்து வருபவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இத்தகவலையறிந்த எனது மகள் சுதா, மனமுடைந்து கடந்த 27-ம் தேதி மாலை விஷம் குடித்தார்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் திங்கள்கிழமை (பிப். 3) அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கை மேற்கொள்ள மருமகன் செல்லையா மலேசியா நாட்டிலிருந்து வர வேண்டும். எனவே, மலேசிய நாட்டு சிறையில் உள்ள செல்லையாவை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

நன்றி-தினமணி.



மூலவர்:மாரியம்மன்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:வேம்பு
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கண்ணபுரம்
ஊர்:சமயபுரம்
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு


 திருவிழா:

சித்திரைத்தேர் திருவிழா - ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர். பூச்சொரிதல் - மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர். பஞ்சப்பிரகாரம் - வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.தைப்பூசம் - 11 நாள் திருவிழா : தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.

தலசிறப்பு:

பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது

பொதுதகவல்:

இக்கோயிலில் விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளது. நாககன்னி சன்னதி முன்புள்ள வேப்ப மரத்தில் குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து மரத்தில் கட்டி ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைபேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் இங்கு வந்து தொட்டிலை அவிழ்த்துவிட்டு அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர்

பிரார்த்தனை:

இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.

குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயில் ஊழியம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர், வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்

நேரிதிக்கடன்:

மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்தல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்தல் தீச்சட்டி எடுத்தல் அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, தைப் பூசம் - 11 நாள் திருவிழா மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு மாடு கோழி தானியங்கள் செலுத்தல் இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்

தலபெருமை:

பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள தன் தாய் ஆதிமாரியம்மனைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர்.

பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. ஆனால் கண்ணனூரில் உள்ள தாய் ஆதிமாரியம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாரியம்மன் பிறந்த இடமாகவும்  கருதப்படுகிறது. விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் மாரியம்மன் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.

தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில். தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.  கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம். (காரணம் இத்தலத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால்) ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது

தலவரலாறு:


இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.

இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்கு பூஜை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்ற போது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மக்கள் பூ கட்டி பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்து பூஜை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள். இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டு வரப்படுகிறாள்

சிறப்பு:

அதிசயத்தின் அடிப்படையில்: பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது 

நன்றி-தினமலர்.