மலேசிய சிறையில் உள்ள மகனை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி
அவரது தாய் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம்
திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மனைவி பாப்பாத்தி மற்றும் அவரது உறவினர்கள் அளித்த மனு:
அயன்பேரையூர் கிராமத்தில் வசித்து வரும் எனது மகள் சுதாவை (25), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையாவுக்கு திருமணம் செய்து கொடுத்தேன்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் செல்லையா தோட்டவேலை செய்தார். இதனிடையே கடந்த சுமார் 2 மாதங்களுக்கு முன், ஆண்டுக்கு ஒருமுறை அந்நாட்டில் புதுப்பிக்கப்படும் நடைபாஸ் இல்லாமல் சென்றபோது, மலேசியா போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர் எனவும், ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் சிறையிலிருந்து விடுவிப்பர் எனவும், அவருடன் வேலைபார்த்து வருபவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இத்தகவலையறிந்த எனது மகள் சுதா, மனமுடைந்து கடந்த 27-ம் தேதி மாலை விஷம் குடித்தார்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் திங்கள்கிழமை (பிப். 3) அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கை மேற்கொள்ள மருமகன் செல்லையா மலேசியா நாட்டிலிருந்து வர வேண்டும். எனவே, மலேசிய நாட்டு சிறையில் உள்ள செல்லையாவை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
நன்றி-தினமணி.

RSS Feed
Twitter
Monday, February 03, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment