கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் அமைந்துள்ளது கேணிக்கரை காவல் நிலையம். இந்தக் காவல்நிலையம் மீது 02/02/2014 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய வன்முறைத் தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குக் காரணமென்ன? இந்தக் காவல்நிலையத்திற்கு எதிரில்தான் காவலர் குடியிருப்பு மற்றும் காவலர் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது!
சில நாட்களுக்கு முன் இந்த
இராமநாதபுரத்தின் மாவட்ட ஆட்சியர் திரு நந்தகுமார் அவர்கள், இந்து
மாணவர்கள் ரட்சை, காப்புக் கயிறு, செந்தூரம் போன்ற இந்துமதச் சின்னங்களை
பள்ளிகளுக்கு அணிந்து வர தடை விதித்தார். இது குறித்து வேத விஞ்ஞான
ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த செய்தியின் இணைப்பு இதோ:
இப்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து
வந்த பயங்கரவாதத்திற்கு அடிப்பணிந்து, அரசு அதிகாரிகளே துணைப்போனதின்
விளைவாக இன்று இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்நிலையத்தைத் தாக்கி
காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி முன்னணித்
தமிழ் நாளிதழ்களான தினமலர், தினமணி, தினத்தந்தியில் பிரசூரிக்கப்பட்டன.
இதை, செய்தி விமர்சகர் திரு.நம்பிநாராயணன் அவர்கள் வேத விஞ்ஞான ஆராய்ச்சி
மையத்தின் கவனத்திற்குக் கொண்டுவர, அப்பகுதியில் வசிக்கும் திரு.சுதாகர்
அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். திரு. சுதாகர் அவர்கள்
அங்கு நடந்த சம்பவத்தை பின் வருமாறு விவரித்தார்
இந்த சம்பவம் மோட்டார் சைக்கிளைத்
தெருவில் வேகமாக ஒட்டுவது, மற்றும் இருசக்கரவாகனத்தில் பயங்கர ஒலி
எழுப்பும் ஹாரன் அடிப்பதை மையமாகக் கொண்டு தொடங்கியது. ஷேக் என்பவர் தனது
இருசக்கரவாகனத்தில் மிக அதிவேகமாக, அடிக்கடி புளியக்காரத் தெருவை கடந்து
சென்றுள்ளார். இதை புளியக்காரத் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இருவர்
தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்கள். இச்சம்பவம் நடந்த இரண்டாம் நாள்
அதாவது 2/2/2014 அன்று மணிகண்டனையும் மற்றவரையும் தாக்கும் நோக்கத்துடன்
ஷேக் ஒரு ஐந்து ஆறு பேரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே சமயத்தில்
மணிகண்டன் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் இருந்துள்ளார். ஷேக் மற்றும்
அவருடன் வந்தவர்கள் மணிகண்டனை வாளால் காலில் தாக்கினர். இதைத் தடுக்க
முற்பட்ட மணிகண்டனின் கூட்டாளிகளையும், ஷேக்குடன் வந்த முஸ்லீம்கள்
தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்து மக்கள் கூட்டம் கூடியவுடன்,
ஷேக் குழுவினர் தப்பிச்சென்று 1000 பேருக்கு மேல் அழைத்துக் கொண்டு
வந்தார்கள். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து
சென்று விசாரித்து, ஷேக் மற்றும் அவர் குழுவினரை கைது செய்ய முயலும்போது
அவர்களை கைது செய்ய விடாமல் முஸ்லீம்கள் தடுத்தார்கள். மேலும், அவர்கள்
போலீஸ் வண்டியை அடித்து நொறுக்கிவிடுவோம், கொளுத்திவிடுவோம் முடிந்தால்
எங்களைக் கைது செய்து பார் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகளை மிரட்டினர்.
போலீஸ் அதிகாரிகள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, அவ்விருவரை
விரட்டி சென்று பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர்களை
கைது செய்து காவல்நிலையத்திற்கு செல்வதற்குள், 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்
இளைஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், இவர்கள் போலீஸ்
அதிகாரிகளை தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதோடு,
காவல்நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்தக் கலவரச் சூழலை பயன்படுத்தி
போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷேக்கும் அவன் கூட்டாளியும் தப்பமுயன்றனர்.
அதை தடுத்து நிறுத்த சென்ற உதவி ஆய்வாளர். ஜெயபாலை முஸ்லீம்கள் கடுமையாகத்
தாக்கினர். இச்சம்பவமறிந்த மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)
திரு. வெள்ளத்துரை, விரைந்து சென்று, போலீசாரைக் காப்பாற்றி, தாக்குதலில்
ஈடுபட்ட ஏழு இஸ்லாமிய வெறியர்களைக் கைதுச் செய்தார்.
இந்தச் சம்பவத்தை பத்திரிகைகள் பலவிதமாக வெளியிட்டுள்ளன.
கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது
நடவடிக்கை எடுக்கக் கோரிய உதவி ஆய்வாளர் ஜெயபால் புகாரை ஏற்று, ஆய்வாளர்
கிருஷ்ணகுமார் , பாசிப்பட்டறை தெரு இர்ஷன், அகமது அலி, மை கொல்லர் தெரு
முகமது அலி, பாம்பூரணி முகமது ரியாஸ், தெற்குதரவை தாரிக்கான், பரமக்குடி
சிக்கந்தர் அலி, வாணி சகுபர் சாதிக் ஆகிய ஏழுபேர் மீது வழக்கு பதிவு
செய்துள்ளார். இன்னும் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த ஏழு
நபர்களும், சம்பவம் நடந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. பரமக்குடி, வாணி, பாம்பூரணி, புதுமடம் போன்ற வெவ்வேறு
பகுதிகளைச் சார்ந்தவர்கள், அடையாளம் தெரியாமல் இங்குவந்து கலவரம்
செய்துவிட்டுப் போகிறார்கள். இதற்கு முன்பு நடந்த பிரச்சனைகளின் போதும்
இப்படித்தான் அடையாளம் காணமுடியாதபடி வெளியூர்கார்களைக் கொண்டு உள்ளூர்
முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இந்த பகுதியில் 5, 6 மாதங்களுக்கு
முன் கலவரம் நடந்துள்ளது. சின்னக்கடை பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள், ஒரு
இந்துவின் வாகனப்பட்டறையில்(workshop) இருந்த 15 வண்டிகளை அடித்து
உடைத்தனர். மேலும், இங்குள்ள கண்ணண் கோயிலில் , முஸ்லீகள் இளைஞர்கள்
சிறுநீர் கழித்து, கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தினர்.
சிலகாலமாகவே, இராமநாதபுரம், புளியக்காரத்
தெருவில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
சின்னக்கடைப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வசித்துவரும் முஸ்லீம்கள்,
இத்தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லீம்களின் வன்முறைக்குப் பயந்த
நிர்வாகமும், காவல்துறையும் இக்கலவரங்களைக் கட்டுப்படுத்த எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் திரு.சுதாகர் அவர்கள் நம்மிடையே
கூறும் போது, விநாயகர் சதுர்த்தி விழாவின் போது எவ்வித காரணமுமின்றி 17வயது
இந்து வாலிபனை காவல் துறையினர் கைது செய்தனர். அது குறித்து
காவல்நிலையத்திற்கு சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவரிடம் ஒரு போலீஸ்
அதிகாரி கூறுகையில் “நீங்களும் முஸ்லீம்கள் போல் 100பேரை அழைத்து வாருங்கள் அப்போது தான் விடுவார்கள்” என்று கூறினார்.
இப்படி 100 பேர், 50 பேர் கூட்டம்
கூடினால் அவர்கள் மிரட்டல்களுக்கு அடிபணிந்த காவல்துறையின் கோழைத்தனம்,
இன்று காவல்நிலையத்தையே தாக்கும் அளவுக்கு முஸ்லீம் பயங்கரவாதம்
கோலோச்சிவிட்டது. கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்து மாணவர்களின் மதச்
சின்னங்களை அகற்ற ஆணையிட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள், இந்தச்
சம்பவம் தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML)
அமைப்பினர், கண்ணண் கோவில் அருகே நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை
இந்துக்கள் அடித்து உடைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால்
அந்த வண்டி பலகாலமாக பழுதடைந்து ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தான்
உண்மை என்றார் சுதாகர்.
இந்தச் சம்பவம் எழுப்பும் கேள்விகளென்ன:
- சட்ட ஒழுங்கு என்பது அப்பாவி இந்துக்களுக்கு மட்டும் தானா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கிடையாதா?
- இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதபோக்கிற்கு துணை போய் பள்ளிகளில் இந்து மாணவர்கள் அணிந்து வரும் மதச்சின்னங்களுக்கு தடை விதித்த கலெக்டர் திரு. நந்தகுமார் அவர்கள் இச்சம்பவம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
- ஒரு சட்டவிரோத செயலை தண்டித்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முயலும் போலீஸ்காரர்களுக்கே குற்றவாளி கொலை மிரட்டல் விடுக்கிறான் என்றால் இராமநாதபுரம், தாலிபான் தலைநகரம் ஆகிவிட்டதா?
- இராமநாதபுரத்தில் போலீஸ்கார்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அப்பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் கதி என்ன?
- இச்சம்பவம் குறித்து செய்திதாள்களும் தங்கள் நடுநிலைமையை விடுத்து
வெவ்வேறு மாதிரியான செய்திகளை வெளியிட்டு உள்ளது என்பது இஸ்லாமிய
பயங்கரவாதத்தினுடைய அச்சம் காரணமாகவா? அல்லது பத்திரிக்கைகளும் இந்த
ஜிகாதிகளுக்கு துணைபோகிறார்களா?
எப்படி இச்சம்பவத்தை பத்திரிகைகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:
DinamalarDinamaniDaily Thanthi
- போலிமதச்சார்பின்மை பேசி தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?
கேணிக்கரை காவல்நிலைய புகைப்படம் இதோ:
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள
பகுதிகளில் இது போல் பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது என்பது
வாடிக்கையாகிவிட்டது. இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால்
பயங்கரவாதத்தை வேரொடு அறுத்து எறிந்து மக்களின் பாதுகாப்புக்கும்,
அமைதிக்கும் உறுதி கொடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளே செயழிலந்து இஸ்லாமிய
பயங்கரவாதிகளின் கைப்பாவையாக செயல்படுவதான். இந் நிலைமை இப்படியே
நீடித்தால் இராமநாதபுரம் மாவட்டம் ஒரு தென்காஷ்மீராக மாறிவிடும் என்பதில்
எந்தவித ஐயப்பாடும் கொள்ளத்தேவையில்லை. இப்பொழுது நடந்துள்ள இந்த
காவல்நிலைய முற்றுகை என்பது பயங்கரவாதிகள் அரசுக்கு விடுத்துள்ள சவால்.
இந்த சம்பவத்தை ஒரு அபாய ஒலியாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு உடனடியாக தன்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து செயல்படவேண்டும் என்பதே நம்
எதிர்பார்ப்பு. இம் மாதிரியான பயங்கரவாத சம்பவங்களை தடுத்து நிறுத்தி இராமநாதபுரத்தை தாலிபான்களிடமிருந்து மீட்க தமிழக அரசு உடனடியாக ஆவணசெய்யும் என்று நம்புவோமாக!.
0 comments:
Post a Comment