Wednesday, 5 August 2015


வ.களத்தூர் கிராமத்தை சுற்றி வாழும் அன்பார்ந்த சொந்தங்களே…
வ.களத்தூரில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்துக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கண்டும், கேட்டும் சில நேரங்களில் பாதிக்கப்பட்டும் வந்துள்ளீர்கள். தொன்னூறுகளில் நடந்த கலவரத்தில் நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பாக நின்றதால்தான் வ.களத்தூர் இந்துக்களாகிய நாங்கள் இன்றும்  சுய மரியாதையோடு வாழ்ந்துவருகிறோம். வ.களத்தூர் இந்துக்களின் பிரச்சினை என்பது வ.களதுருக்கு மட்டுமான பிரச்சினை என்று நீங்கள் கருத முடியாது, ஏனெனில் நீங்களும் உங்கள் குடும்ப பெண்கள் உட்பட அனைவரும் வ.களத்தூரை சார்ந்துதான் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்ற நிதர்சனமான உண்மையை உணரும் நேரம் இது.
ஏனெனில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வரை வ.களத்தூருக்கு வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. நாளை உங்களுக்கோ , உங்கள் குழந்தைகளுக்கோ ஏதேனும் பிரச்சினை என்றாலும் முதலில் உதவுவது நாங்களாகத்தான் இருக்க முடியும். இந்த பிரச்சினையை 113 அகரம் கிராமத்தினர் உணர துவங்கி விட்டனர்… நீங்களும் இதனை உணரும் காலம் வெகு தொலைவு இல்லை.
நம் இந்து சமுதாயத்த்தில் இருக்கும் முகப்பெரிய ஓட்டை நம்மிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதுதான். சுற்றிலும் நம் சமுதாய மக்கள் இருந்தும் வ.களத்தூர் இந்துக்களாகிய எங்களால் எங்கள் தேர் திருவிழாவை சுதந்திரமாகவும் , சுயமரியாதையோடும் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஒவ்வொரு முறையும் தேர் திருவிழாவை நடத்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம். எண்ணிக்கையில் சிறிய அளவில் உள்ள ஒரு சமுதாயத்தின் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அரசாங்கம், பெரும்பான்மை சமுதாய மக்களின் குரலை மதிப்பதில்லை. ஏனெனில் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்ற ஒரு விஷயத்தை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதுதான் காரணம்.
எம் இந்து சொந்தங்களே எவ்வளாவு காலம் இப்படியே சாதியின் பின்னால் செல்லப்போகிறோம்.  சாதியால் நாம் பிளவு பட்டிருந்தாலும் நமக்கான பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுதானே… எல்லா சாதியை சேர்ந்த மக்களும் மாரியம்மனை வழிபடவில்லையா..? தாலி கட்டிக்கொள்வதில்லையா…? இப்படியே பிரிந்து நின்றால் என்றாவது ஒருநாள் உங்கள் ஊரும் வ.களத்தூராகும் நிலை வெகு தொலைவில் இல்லை.
கடந்த உள்ளாட்சித்தேர்தலில் வ.களத்தூரில் இந்துக்களின் சார்பாக நின்றவர் தோற்க பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் நாங்கள்  சாதி ரீதியாக பிளவு பட்டு நின்றதுதானே… வ.களத்தூர் இந்து சமுதாயத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களில் சிலர் மாறி வாக்களித்ததுதான் காரணம் என்று தெரிந்திருந்தும் இன்னமும் சாதி ரீதியாக பிளவு பட்டுத்தானே நிற்கிறோம்.
வழிபடும் தெய்வம் ஒன்றான பிறகு உயர்சாதி இந்துக்களாகிய நாம்,  நம் சகோதரர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களை இன்னமும் நம் கோவில் உள்ளே நுழையவிட வில்லை எனும்போது எப்படி அவர்கள் நம்மோடு ஒற்றுமையாக இருப்பார்கள். திருவலந்துரை சிவன் கோவிலில் நுழைய அனுமதிக்கும்போது  நம் வ.களத்தூர் கோவில்களில் நம் தாழ்த்தப்பட்ட சகோதர்களை எப்போது உள்ளே நுழைய விடப்போகிறோம்..?

இந்த பிரச்சினைக்கு இடையில் கிறித்தவ சமயத்தை சேர்ந்த சிலர் நம்மிடையே  ஏற்றத்தாழ்வை பயன்படுத்திக்கொண்டு மேட்டுச்சேரி, ராயப்பா நகர் போன்ற இடங்களில் மதம் மாற்றும் வேளைகளில் வேறு ஈடுபட்டு வருகின்றனர். வாரம் தோறும் நம்மில் சிலரும், நமக்கு தெரிந்தவர்களும் அயன் பேரையூர் கைகாட்டி யிலுள்ள கிறித்தவ ஆலயத்திற்கு சென்று வருவதும், சிலர் மதம் மாறி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
முடிவாக ஒன்றே ஒன்றுதான் இந்து சொந்தங்களே… ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் வாக்கு பொய்க்காத வாக்கு. வ.களத்தூரின் இந்துக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பது எங்களை மட்டும் சார்ந்தது அல்ல… வ.களத்தூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினை என்று உணர்ந்தால் மட்டுமே இனி நம் பகுதியில் சுய கவுரவத்துடன் வாழ முடியும். அதற்க்கு நம் ஒற்றுமை ஒன்றுதான் வழி…
நமக்கிடையே ஒற்றுமையை முன்னெடுக்க நாங்கள் தயாராகிவிட்டோம்… ஆம் எம் இந்து சொந்தங்களே வ.களத்தூரில் இன்னும் சில மாதங்களில் அனைத்து கோவில்களுக்கும் சேர்த்து குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு ஆகியுள்ளது. இந்த விழாவிற்கு வ.களத்தூரை  சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர்… நம் ஒன்று பட்ட இந்து சக்தியை நாம் உணரும்,,, உணர்த்தும் நேரமிது..