Wednesday, 18 February 2015


வ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமல்ல மத்திய அரசால் கூட மதரீதியாக பதற்றமான ஊர் என்று அறியப்பட்டது என்பது நாம் அறிந்த ஒன்று.

நம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே மதரீதியான மோதல்கள் வ.களத்தூரில் நடந்து வருவதும் நாம் அறிந்ததே. கடந்த 2013’ல் கூட இரு வகுப்பினரிடையே இந்துக்களின் திருமண ஊர்வலம் தொடர்பாக மோதல்கள் நடைபெற்றதும், அதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

வ.களத்தூரில் மதரீதியான மோதல்களுக்கு அடிப்படையாக இருக்கும் காரணங்களில் முக்கியமானது இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்துவரும் “தேரோடும் ராஜ வீதி” வழியே இந்து மத ஊர்வலங்கள் வரக்கூடாது என்பதுதான். காலம் காலமாக தேரோடும் ராஜவீதியாக இருந்து வரும் தெருக்களில் சமீப காலமாக இஸ்லாமிய சமூகத்தவர் அதிகம் வசிக்கின்றனர் என்ற காரணம் காட்டி இந்து மத ஊர்வலங்களை தடை செய்யகூடாது என்பது இந்துக்களின் வாதம்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்பு, வ.களத்தூரில் தேரோடும் ராஜவீதியின் வழியாக இந்து மத ஊர்வலங்கள் செல்ல தடை செய்யக்கோரிய மனுவும் சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு வ.களத்தூரில் வகுப்பு மோதல்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்துவரும் தேரோடும் ராஜ வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றபப்டவில்லை என்பது இந்துக்களின் குமுறலாக உள்ளது. 

2013ம் ஆண்டு நடைபெற்ற மத மோதல்களின் போது உண்மை கண்டறியும் குழு என்றபெயரில் வ.களத்தூர் கிராமத்திற்கு கூலிக்கு மாரடிக்க வந்த மார்க்ஸ் அந்தோணிசாமியின் குழுவினர் முன்வைத்த முக்கியமான வாதம் தேரோடும் ராஜவீதியை “இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குறுகலான வீதி” என்பதுதான். தேரோடும் ராஜவீதியை குறுகலான தெருவாக மாற்றியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவ்வளவு முக்கியமான தெருவை இதுவரை பெரம்பலூர் மாவட்ட நில அளவை துறையைக்கொண்டு அளந்து ஆக்கிரமிப்பை ஆகற்றி இருந்தால் வகுப்பு மோதல்கள் நடைபெறுவதை முகூட்டியே தடுத்திருக்க முடியும்.

சரி தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்... 

இன்று வரை தேரோடும் ராஜவீதியின் ஆகிரமிப்பை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்காத வ.களத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகம், தன் பங்கிற்கு ஆக்கிரமிப்பு வேலைகளில் இறங்கியுள்ளது. 

நேற்று இரவோடு இரவாக, வ.களத்தூர் வகுப்பு மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்துவரும் ராஜ வீதியில், இரு இடங்களில், நடுத்தெருவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள பெரியகடை வீதி. வ.களத்தூர்.

சென்ற வாரம்தான் வ.களத்தூர் பெரிய தேருக்கு இரும்பாலான அச்சும், சக்கரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு தேரடித்திடலில் வந்து இறங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
இன்னும் சில வாரங்களில் பெரிய தேரில் அச்சும், சக்கரமும் பொருத்தி முடிக்கப்பட்டுவிடும். அதனைத்தொடர்ந்து தேரின் வெள்ளோட்டம் விடப்படும் என்பது வ.களத்தூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒன்றும் தெரியாதது அல்ல. அவ்வாறு வெள்ளோட்டம் விடப்படும் போது நேற்று அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்திருந்தும் அவசர அவசரமாக தோண்டவேண்டிய அவசியம் என்ன...? என்பது வ.களத்தூர் இந்துக்களின் கேள்வியாக உள்ளது.
வ.களத்தூர் பெரிய தேருக்கு அரசு வழங்கியுள்ள சக்கரம் மற்றும் அச்சு... வ.களத்தூர் தேரடித்திடலில்.

வ.களத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் நிர்வகிப்படும் நிலையில் , பிரச்சினைக்கு உரிய தேரோடும் ராஜவீதியில் சாலையை ஆக்கிரமித்து ஆழ்குழாய் கிணறு அமைப்பதன்மூலம் வ.களத்தூர் பெரிய தேரின் தேரோட்டத்தை தடுக்க முயலும் செயலாகவே கருதவேண்டியுள்ளது. 
ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் நோக்கம் அவ்வாறு இருக்கும்போது வ.களத்தூரில் மத நல்லிணக்கத்தை பேணவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை... என்ன செய்யப்போகிறார்கள் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் எதிர்பார்ப்பு...

Sunday, 15 February 2015


வன்னாரம்பூண்டி களத்தூர் என்ற வ.களத்தூர் பெரிய தேர் திருவிழா நடைபெற்று இருபது வருடம் ஆகப்போகிறது… புதிதாக செய்த தேரை வெள்ளோட்டம் விட்டதோடு சரி…. தேரை நாகர்த்துவதர்க்கான எந்த செயலையும் யாரும் செய்யவில்லை என்பதே உண்மை.
தற்பொழுது அரசே முன்வந்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோவில்களின் தேரையும் சீரமைத்து திருவிழா நடத்த முன்வந்துள்ளது. அந்த வகையில் நம் ஊரின் பெரிய தேருகான செப்பனிடும் வேலைகள் விரைவில் நடைபெறும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு இதோ வருகிறது….. இதோ வருகிறது…. என்று சில வருடங்களாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில் சென்ற வாரம் தேருக்கான இரும்பாலான சக்கரம் மற்றும் அச்சு வந்திறங்கியுள்ளது.
இதை அறிந்த நம் சுற்று வட்ட கிராம மக்கள் பெருமளவில் வந்து ஆச்சர்யமுடன் பார்த்தனர் என்பது மட்டுமல்லாமல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டு தேரில் சக்கரம் மற்றும் அச்சு பொருத்தும் வேலைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்பார்பெல்லாம் எப்பொழுது தேரின் வெள்ளோட்டமும் திருவிழா என்பதுதான்…