Saturday, 11 January 2014

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் விபரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விபரம்...

Friday, 10 January 2014

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது. பசும்பலூரிலிருந்து கொரக்காவாடி செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வெள்ளாற்றங்கரையில் சுமார் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் பசும்பலூர் வடக்கு (பொ) கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில்,...
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர் தரேஸ்அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நல திட்டங்களின் விவரத்தை மகளிரிடையே தெரிவிக்க வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள்,...
     RSS  ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாக கடந்த 1925 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று ஆலமரமாக விரிவடைந்து பத்தாயிரத்திர்க்கும் மேற்பட்ட சமூக சேவை பணிகளை ஆற்றி வருகிறது. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் , நமது சானதான தர்மத்தை காக்க பாடுபடும் RSS இயக்கத்தின் தொடர்பு ஊடகமான விஜபாரதம் அரங்கிற்கு வருகை தாருங்கள் உறவுகளே... அரங்கு எண் 430 மற்றும் ...
பிரவீன் குமார் CEO TN தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று  (ஜனவரி1௦-2௦14) திருத்தப்பட்ட வாக்காளர்  பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின் அடிப்படையில்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வாக்களிக்கமுடியும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது....
 தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வ.களத்தூர் வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு......... இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்.......... 1.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர். 1-நடுத்தெரு வார்டு...

Thursday, 9 January 2014

பொங்கல் விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்சிகள் நடத்த வ.களத்தூர் காவல்நிலையத்தை அனுமதிக்காக அணுகியபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் என கூறியது நீங்கள் அறிந்ததே............. அனுமதி பெற நாம், தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு செய்ததோடு அல்லாமல் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சோனல் சந்திரா IPS அவர்களிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது.......... நம் தொடர் போராட்டத்தின் காரணமாக இன்று நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான்கு நாட்களும் போட்டிகள் நடத்த வ.களத்தூர்...

Wednesday, 8 January 2014

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் சென்று வரும் வகையில் தமிழகம் முழுவதும் 6,514 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்: தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள்...
பிளஸ் 2 தனித்தேர்வர்களின் சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு பல ஆண்டுகளாக யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த சான்றிதழ்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற விரும்பினால், அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்...
சென்னை;தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்ட, உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், 27 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமகளில், டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டாலும், '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும், உடனடி, '104' மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதன் தலைமையகம், சென்னை கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ளது. '104' என்ற எண்ணுக்கு, 10 இணைப்புகள்...
தேசிய அடையாள அட்டைக்கான இரண்டாம் கட்ட பதிவு நடைபெற்று வருகிறது பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.அ.ப., அவர்கள் தகவல்.                 இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான...
வ.களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் ஒரு நாள் மட்டுமே பொங்கல் விளையாட்டுப்போட்டி நடத்த அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி உள்ள நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .சோனல் சந்திரா IPS அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்........ வாருங்கள் உறவுகளே நம் பண்பாட்டையும் ,உரிமையையும் காக்க போராடுவோம்...... நீங்களும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு செய்யுங்கள் உறவுகளே.... மனு கொடுக்க http://cmcell.tn.gov.i...

Tuesday, 7 January 2014

வ.களத்தூரில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுவிழா நான்கு நாட்கள் நடத்திவருகிறோம்.. ஆனால் இந்தமுறை நடத்த வ.களத்தூர் காவல் நிலையத்தில் ,காவல்துறை அனுமதி வழங்க விண்ணபித்தபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் எனகூறிவிட்டார்கள் . எனவே நமது சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் .............. அதன் விபரம். தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தனிப் பிரிவு ...
கடலூர்:தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிர்வாகமும் இணைந்து துவங்கியுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' கடந்த நவம்பர் 16ம் தேதி மொத்தம் 103 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில் ...
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சந்தித்து தங்களின் அமைப்பில் சேர மூளைச்சலவை செய்ததாக தற்போது திடுக் தகவல் வெளியாகியிருக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பதில் உறுதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த இம்மாநில இளம் முதல்வர் அகிலேஷ் அரசின் சட்டம், ஒழுங்கு மற்றும் போலீசாரின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும்...
செட்டிக்குளத்தில், ஜன. 12-ல் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. பெரம்பலூரில் பொங்கல் சுற்றுலா விழா நடத்துவது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது: ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு அருகில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட...
தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் 2-ம் இடம் பெற்றார். பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கலைச்செல்வன் (29). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மாற்றுத் திறனாளியான இவர்  பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். இவரை மாவட்ட விளையாட்டு அலுவலர்...

Monday, 6 January 2014

அண்ணா பல்கலைகழகம். அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும். இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது. இந்தப்...
தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்...
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை முன்னாள் ...
பெரம்பலூரில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கலை,  இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் நகராட்சி மையானத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை புத்தக திருவிழா - 2014 நடைபெற உள்ளது. அதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜன. 6 காலை பேச்சுப்போட்டி, மாலை கவிதைப் போட்டி, 7-ம் தேதி காலை வினாடி- வினா போட்டி,  மாலை...
மூக்கணாங்கயிறு பெரம்பலூர், : பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகள், பசுக்களுக்கு கட்டும் புத்தம்புது மூக்கணாங் கயிறு மற்றும் சலங்கைகள் விற்பனை களை கட்டியுள்ளது. பொங்கல் என்றதும் செங்கரும்பு, மஞ்சள் நம் நினைவுக்கு வருவது போல், உழவர் திருநாள் என்றால் உழவர்களின் உற்றத் தோழனாகத் திகழும் காளை மாடுகளும், இல்லந்தோறும் உள்ளம் மகிழும் பசுக்களும் கட்டாயம் நம் நினைவுக்கு வரும். பொங்கல்...
பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதை 13ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் (பொ) சுப்பிரமணியன் தெரிவித்தார்.    தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி,...