Wednesday, 8 January 2014



தேசிய அடையாள அட்டைக்கான இரண்டாம் கட்ட பதிவு நடைபெற்று வருகிறது பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.அ.ப., அவர்கள் தகவல்.
               
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2010 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு  தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதி  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் தங்களது தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இம்முகாமிற்கு பதிவு செய்யவரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும்.
 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் விபரங்களை பு+ர்த்தி செய்து தாக்கல் செய்திட வேண்டும். மேற்படி புதிய கணக்கெடுப்பு படிவத்தினை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

0 comments:

Post a Comment