Friday, 24 March 2017

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை,...
பெரம்பலூர் அருகே தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - ரோவர்  கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனியார் கல்லூரிகளின் பஸ்கள் பெரம்பலூர் அருகே துறையூர் மெயின்ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி உள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல்...

Thursday, 23 March 2017

பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். சி, நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையிலுள்ள கையெழுத்து ஒப்பாகவில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது....
பெரம்பலூர்-:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது :நம் அன்றாட வாழ்க்கையில்...
பெரம்பலூர் எசனை கிராமம் அருகே உள்ள கீழக்கரைஏரி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்குள் நேற்று காலை அழகான புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் பாறையில் மோதியதில் அந்த மான் பலத்த காயம் அடைந்தது. மேலும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதை பார்த்து அதிர்ச்சி...

Tuesday, 21 March 2017

பெரம்பலூர் மந்திரவாதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித மண்டை ஓடுகள், சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர். பெரம்பலூர், பெரம்பலூரில் வீடு எடுத்து தங்கி, மகாகாளி உக்கிர பூஜை நடத்த இளம்பெண் உடலை தோண்டி எடுத்து வைத்திருந்ததாக மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மந்திரவாதி கார்த்திகேயன் (வயது 31), அவரது மனைவி நசீமா (21) உள்பட 6 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்....

Monday, 20 March 2017

பெரம்பலூர் 4ரோடு மின்நகரில் வசிப்பவர் துரைசாமி. மின்வாரியத்தில் உதவி நிர் வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் 2வது மகன்தான் சதீஸ்குமார். எம்சிஏ படித்து சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். 2013 ஜூன் 5ம்தேதி கொளத்தூர் பஸ்டாப்பில் நண்பருடன் நடந்து சென்றபோது இருசக் கர வாகனம் மோதி கீழே விழுந்து தலை யில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்...