வ.களத்தூரில் தேரோடும் நான்கு ராஜவீதியின் ஒரு வீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதன் காரணமாக தங்கள் தெரு என உரிமை கொண்டாடி இந்துக்களின் ஊர்வல நிகழ்வுகளை தடுக்க முனைகிறார்கள்.
வ.களத்தூர் இஸ்லாமியர்களால் அப்படி ஒரு இந்து திருமண ஊர்வலம் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டது. அதில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு அத்தெருவில் இந்துக்களின் திருமண ஊர்வலம் நின்று போனது.
இதனை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாம் எதிர்த்தால் எந்த ஊர்வலத்தையும் நிறுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு 2016 ல் இஸ்லாமியர்கள் எதிர்த்த காரணத்தினால் 3 நாட்கள் நடைபெறும் இந்துக்களின் திருவிழா வை ஒரு நாளாக குறைத்தது அப்போதைய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்.
இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு போட்டு 3 நாட்கள் நடத்திக்கொள்ள பாதுகாப்புப கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது .
இப்போது கோர்ட் உத்தரவையும் மதிக்காமல் வ.களத்தூரில் இஸ்லாமியருக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடை செய்திருக்கிறது பெரம்பலூர் மாவட்ட காவல் துறை.கேட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாம். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி இந்துக்களின் 3 நாள் விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்துக்களின் திருவிழாவை தடை செய்துள்ளது.
நியாயத்தின் வழி அமைதியாக சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் வ.களத்தூர் இந்து க்களுக்கு பரிசு இதுதான் போல... V.kalathur vkalathur v kalathur
0 comments:
Post a Comment