Wednesday, 26 September 2018


வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலயத்தில்  (26.09.2018) புதன்  வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற்றது..

வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.

V.kalathur vkalathur




0 comments:

Post a Comment