Saturday, 29 September 2018



வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... பொய்யான காரணத்தை கூறி இந்துக்களின் சுவாமி ஊரவலத்தை தடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

வ.களத்தூரில் இந்துக்கள் திருவிழா நடத்த பாதுகாப்பு தர மட்டுமே கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை 3 நாட்கள் திருவிழாவை நடக்க அனுமதிக்காத காரணத்தால் வ.களத்தூர் இந்துக்கள் கோர்ட் சென்று அனுமதி பெற்ற சூழ்நிலையில் தடை செய்யும் அதிகாரமே காவல் துறைக்கு இல்லை.

 பிரச்சினை செய்யும் சுவாமி ஊர்வலத்திற்கு தடையாக உள்ள நபர்களை தடுப்பு காவலில் கைது செய்து அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பித்து திருவிழா வை தடுத்தோம் என காவல் துறை ஒரு பொய்யான காரணத்தை கூறி  நீதி மன்ற அவமதிப்பு செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

28.09.2018 அன்று இரவு இந்துக்கள் சுவாமி சப்பரத்தை அலங்கரித்து ஊர்வலத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென  காரணமே இல்லாமல் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறி தேரடித்திடலில் இருந்த அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டது. விழா நடத்த கோர்ட் உதரவிட்டுள்ள நிலையில் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது மட்டுமே உங்கள் வேலை , அதை விடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து சுவாமி ஊரவலத்தை நிறுத்துவது கோர்ட் உத்தரவுக்கு எதிரானது என வ.களத்தூர் மக்கள் வாதாடிப்பார்த்த நிலையிலும் , "நீங்கள் கலைந்து செல்ல வில்லை என்றால் கைது செய்வோம்" என கூறி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கூறியது.

வேறு வழியின்றி அமைதியாக கலைந்து சென்று வீட்டில் முடங்கிய நிலையில் , இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது, அதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து விழாவை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளது காவல்துறை. எந்த இடத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத சூழ்நிலையில் ஊர்வலம் வரக்கூடாது என கூறி ராஜவீதியில் கூடிய சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியாத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பொய்யான காரணம் சொல்லி விழாவை தடுத்து நிறுதியுள்ளது நீதி மன்ற அவமதிப்பகும்.

புழல் சிறையில் கையூட்டு பெற்றுக்கொண்டு ராஜவசதி செய்து கொடுத்த காவல்துறை வ.களத்தூரிலும் அதே பாணியை பின்பற்றி இந்துக்களின் திருவிழாவை தடுத்து நிறுதியுள்ளதோ என மக்கள் மனதில் தோன்றியுள்ளது...

கோர்ட் உத்தரவை மதித்து இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையை இந்துக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை வழங்கி 3 நாள் திருவிழாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
V.kalathur vkalathur v kalathur

0 comments:

Post a Comment