Sunday, 30 September 2018


இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுக்குழு 29 மற்றும் 30 செப்டம்பர் 2018 ஆகிய இரு நாட்கள் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 7 வது தீர்மானமாக வ.களத்தூர் இந்துக்களுக்கு உள்ள வழிபாட்டு உரியமையை காக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் சாராம்சம் வருமாறு...

இந்து முன்னணி பெரம்பலூர் கோட்ட பொறுப்பாளர் திரு. குணசேகரன் அவர்கள் முன் மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

"1. வ.களத்தூர் ராஜவீதியில் உள்ள 30 அடி ஆக்கிரமிப்பை அக்கற்றவேண்டும். 

2. ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்பின் காரணமாக கடந்த 25 வருடமாக தடைபட்டு நிற்கும் செல்லியம்மன் தேரினை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வ.களத்தூரில் வழக்கமாக கடந்த நூறு வருடங்களாக நடைபெற்று வரும் 3 நாட்கள் சுவாமி ஊர்வலம் மற்றும் திருவிழாவை வழக்கம் போல் நடத்த அனுமதிக்க வேண்டும் 

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நடைமுறை படுத்தி வ.களத்தூர் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை காத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. V.kalathur vkalathur v kalathur 

0 comments:

Post a Comment