This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 4 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 5 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Friday, 27 June 2014
நம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது சென்று தரிசிப்போம்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.
பஞ்சநத நடராஜர்.
ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.
சிவகாமி அம்மையும் அழகோ அழகு.
ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்).
நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணலாமே.
-அப்பர் சுவாமிகள் தேவாரம்.
இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது
நன்றி- https://www.facebook.com/saravanan.sivathanu
https://www.facebook.com/malar.mannan.923724
Thursday, 26 June 2014
இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.
மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.
எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.
வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன
மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.
கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.
- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
Monday, 23 June 2014
தனிமனித பிரச்சினை காரணமாக செய்யப்பட கொலை போன்ற தோற்றத்தை சுரேஷ்ஜி வரை நிறுவ தமிழ் ஊடகங்களும் தமிழக ஓட்டுபொறுக்கி முதவரும் முயலுகிறார்கள். மக்களை மட்டுமல்லாது பாஜகவினரையும் நம்ப வைக்கும் வேலையில் அவர்கள் ஜெயித்துவிட்டதாகவே தோன்றுகிறது.பாஜகவின் அறிவு கொழுந்துகளில் ஒருவர் எனக்கருதப்படும் தமிழிசை யின் status அதைத்தான் காட்டுகிறது.
அர்ஜுன் சம்பத் கூறுவதுபோல் இது இஸ்லாமிய ஜிகாதிகளின் ஒரு சதிவேலை என்று காவல்துறையும் , காவல்துறைக்கு ஏவலாளியாக இருக்கும் ஆத்தாவுக்கும் தெரியாமல் இல்லை . ஆனால் தமிழக இந்து தலைவர்கள் கொல்லப்படும் விசயத்தை ஜிகாதிகளின் சதிவேலையாக கருதி நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் இஸ்லாமியர்களின் ஒட்டு கிடைக்காது என்று கருதி திசைதிருப்பும் வேலையில் இரங்கியிருக்கிறார்கள் .
இந்த உண்மை தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாமல் போனதா.. அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. சுரேஷ்ஜி படுகொலையை தமிழக பாஜக தலைவர்கள் ஏன் CBI க்கு மாற்றக்கூடாது என்று கேட்கவில்லை.......? சரி அவர்கள்தான் கேட்கவில்லை என்றால் இந்துமுன்னணி போன்ற பாதிப்புக்குள்ளான இந்து அமைப்பு தலைவர்கள்கூட இதுபற்றி வாய் திறக்காது வருத்தமளிப்பதாக உள்ளது.
சுரேஷ்ஜிக்கு முன்னர் கொல்லப்பட்ட வர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பண்ணா இஸ்மாயில் கூட்டத்தினால் என்றால், அவர்கள் சிறையில் இருக்கும்போது யார் சுரேஷ்ஜியை கொன்றிருக்க முடியும்... என்ற வினா நம் மனதில் இயல்பாக எழுவதில் வியப்பில்லை.
நேற்று சேலம் நீதிமன்றத்தில் மூன்று முஸ்லிம்கள் குஜராத்தில் பாஜக கட்சித்தலைவரை கொலை செய்தது தொடர்பாக சரணடைந்தார்கள் என்ற செய்தியை கூர்ந்து கவனிக்கும்போது இந்து தலைவர்கள் கொலைபிரச்சினை என்பது இந்திய அளவிலானது என்பது மட்டுமல்லாது இது மிகப்பெரிய இஸ்லாமிய ஜிகாதிய சதித்திட்டத்தின் ஒரு அங்கம்தான் சுரேஷ்ஜி படுகொலை என்பது தெரியவருகிறது. அதோடு எந்தஒரு அடித்தளமும் இல்லாமல் குஜராத்தில் கொலைசெய்துவிட்டு சேலத்தில் சரணடையவேடிய காரணம் இருப்பதற்கில்லை. ஏற்கனவே கேரளா முஸ்லிம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதையும், இந்து தலைவர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களையும் தொடர்பு படுத்திபார்க்கும்போது இது மிகப்பெரிய ஜிகாதி சதித்திட்டம் என்பதை நாம் அறியலாம்.
சமீபத்தில் உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்திராகண்ட் மாநிலங்களைச்சேர்ந்த பாஜக மற்றும் இந்து மத இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டுவரும் சம்பவங்களை இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாதி சத்திட்டம் என்ற முறையில் அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு காணமுடியும். அகில இந்திய அளவில் விரவிக்கிடக்கும் இந்த ஜிகாதி சத்திட்டங்களை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்போ, தேசிய தீவிரவாத தடுப்பு அமைப்போ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கண்டு களைய முடியும். பண்ணா இஸ்மாயில், போலிஸ் பக்ருதின் கூட்டம் தமிழகத்தில் கொலைகளை நிகழ்த்திவிட்டு ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்ததை நாம் மறந்துவிடலாகாது என்பதோடு அவர்கள் பிடிபட்டதாலேயே இப்படுகொலைகள் நின்றுவிடவில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
தமிழக காவல்துறை உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் என நாம் நம்பவும் முடியாது. அரவிந்த் ரெட்டி கொலையை கூலிப்படை செய்தது என்று கதைகட்டியதோடு கள்ளக்காதல்தான் காரணம் என கூறியவர்கள் தானே இந்த காவல்துறை.
இறுதியாக இந்த ஜிகாதி படுகொலைகளை மத்திய அரசின் புலனாய்வுத்துறைகள் விசாரித்தால் மட்டுமே வரும்காலங்களில் இந்து மத அமைப்பு தலைவர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும். இதை செய்ய தமிழிசை... பொன்னார் போன்ற பாஜகவினர் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள்... இது நடக்காவிட்டால் மறுபடியும் மற்றொரு தலைவர் கொல்லப்படும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கவேண்டியதுதான் .
சென்னையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் குடும்பத்திற்கு, வேலூர் தங்ககோவில் நாராயணி பீடம் சார்பில் ரூ.5 லட்சம் கல்வி நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நாராயணி பீட மேலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் சக்தி அம்மாவால் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களும், வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்வி படிப்பதற்கு நிதிஉதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18–ந் தேதி சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணியின் திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.
அவரின் 2 பெண் குழந்தைகளின் கல்வியை தொடர்ந்து படிப்பதற்கு வசதியாக, வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தை வழங்க ஸ்ரீநாராயணிபீட அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கல்வி நிதியுதவி காசோலையை அடுத்த வாரத்தில் சுரேஷ்குமார் குடும்பத்தினரிடம் சக்தி அம்மா வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் எதிரே ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த மே 4-ம் தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய விழாவையொட்டி, 19-ம் தேதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து முளைப்பாரி ஊர்வலமும், 20-ம் தேதி யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
21-ம் தேதி 2-ம் கால யாகபூஜை, இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் கால பூஜை, தீபாராதனை, காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடு, 10 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஆ. கலியபெருமாள் உள்பட பல்வேறு பகுதிகளின் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.