சென்னையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் குடும்பத்திற்கு, வேலூர் தங்ககோவில் நாராயணி பீடம் சார்பில் ரூ.5 லட்சம் கல்வி நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நாராயணி பீட மேலாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் சக்தி அம்மாவால் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களும், வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்வி படிப்பதற்கு நிதிஉதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18–ந் தேதி சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணியின் திருவள்ளூவர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.
அவரின் 2 பெண் குழந்தைகளின் கல்வியை தொடர்ந்து படிப்பதற்கு வசதியாக, வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தை வழங்க ஸ்ரீநாராயணிபீட அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கல்வி நிதியுதவி காசோலையை அடுத்த வாரத்தில் சுரேஷ்குமார் குடும்பத்தினரிடம் சக்தி அம்மா வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்.
0 comments:
Post a Comment