Monday, 23 June 2014


பெரம்பலூரில் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் எதிரே ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த மே 4-ம் தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய விழாவையொட்டி, 19-ம் தேதி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து முளைப்பாரி ஊர்வலமும், 20-ம் தேதி யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 
21-ம் தேதி 2-ம் கால யாகபூஜை, இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை காலை 4-ம் கால பூஜை, தீபாராதனை, காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடு, 10 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஆ. கலியபெருமாள் உள்பட பல்வேறு பகுதிகளின் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment