Saturday, 29 March 2014

v.kalathur வ.களத்தூர் பெரிய ஏரியில் மீன் பிடி கொண்டாட்டம்..

இன்று வ.களத்தூர் பெரிய ஏரியில் நம்  மக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாகவும் மிக மகிழ்ச்சியாகவும் மீன் பிடித்து அசத்தினர் ....

ஒவொருவரும் சுமார் 10 கிலோவுக்கு அதிக படியான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் இல்லத்திற்கு சென்றனர் ... 


 வ.களத்தூர் லிட்டில் ஆனந்த் மழலையர் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி இனிய நினைவுகளுடன் இன்று மாலை  நிறைவடைந்தது... https://www.facebook.com/ananth.ananth.3781


Friday, 28 March 2014

நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, "பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நூல் எது' என்று கேட்டு, அதற்கு, "ஆப்ஷன்' விடைகளாக, "பகவத் கீதை, நன்னூல், பைபிள்' ஆகியவை தரப்பட்டன. பாடத் திட்டத்தின்படி, "பைபிள்' என்பது சரியான விடை. இந்நிலையில், இந்த கேள்வியும், விடைகளும் சர்ச்சைக்குரியவை என, தெரிவித்து, இந்து முன்னணி, சென்னை மாநகர பொதுச் செயலர், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம், புகார் தெரிவித்தனர்.

மதத்திணிப்பு? : தேர்வுத்துறை இணை இயக்குனர், ராமராஜுடம், அவர்கள் அளித்த புகார் மனு:
பள்ளி பாடத் திட்டங்களில், தி.மு.க., கொள்கை, நாத்திக கருத்துகள், மத கருத்துகள், வலிந்து திணிக்கப்படுகின்றன. பைபிள் பற்றி மாணவர்கள் மத்தியில், தாக்கத்தை ஏற்படுத்தவே, இந்த
கேள்வியை கேட்டுள்ளதாக கருதுகிறோம். கேள்வியை அமைத்தவர், வேண்டும் என்றே, பகவத் கீதையை சேர்த்துள்ளார். மத திணிப்பை நோக்கமாகக் கொண்ட, இந்த கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில், இது போன்ற சர்ச்சைகள் ஏற்படாத
அளவிற்கு, பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், ""கேள்வி, மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும், ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

"தவறில்லை' : தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: தமிழ் பாடப் புத்தகம், பக்கம், 182ல், "காந்தி, ஒரு முறை இயேசுநாதரின், மலைசொற்பொழிவு பற்றிய நூலை படித்தார். தீயவனை எதிர்க்காதே;
அவனிடம் உள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு எனும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. பகவத் கீதையை படித்ததன் மூலம், மன உறுதியை பெற்றார்' என, வருகிறது.
இதன் அடிப்படையில், 185ம் பக்கத்தில் உள்ள மாதிரி வினாக்களில், இந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. பாடத் திட்டத்தின்படி, கேள்வியிலும், விடையிலும் தவறு இல்லை. எனவே, இதற்கு, கருணை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை. இந்த பிரச்னை குறித்து, தமிழக அரசுக்கு, அறிக்கை அனுப்புவோம்.
இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

Thursday, 27 March 2014

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள்.
1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு துரோகம் இழைத்த கட்சி எது என்று பார்த்தால் அது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்.  நாடு பிளவுபடுவதற்குத் துணை போன காங்கிரஸ் கட்சியினர், இன்று தேசியவாதிகளான பாரதிய ஜனதா கட்சியினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகக்  கொக்கரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு,  “யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து  உள்ளே வை ” என்பார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய இத்தாலியர்கள், இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்பது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நினைவுப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் பேச்சு, ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை துரத்துவது போல உள்ளது, 

அண்டானியோ மைனோ என்ற சோனியாவின் குடியுரிமைச்சான்றிதழ்
ராகுல் காந்தியின் தாயார் திருமதி சோனியா காந்தி, இந்த நாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றார் என்று எவராவது சவால் விட்டுக் கூறத் தயாரா?   1968-ம் வருடம் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ராஜீவ் காந்தி சோனியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1983 வரை சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பக்கவில்லை.  அவர் தொடர்ந்து இத்தாலியப் பிரஜையாகவே வாழ்ந்து வந்தார்.
பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாத தகவல்,  மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், பத்ரி நாராயண் சுக்லா என்பவர்  தாக்கல் செய்த மனுவே, சோனியா இந்தியக் குடியுரிமை பெற முக்கியமான காரணமாக அமைந்தது என்பதாகும்.  பிரதம மந்திரி வீட்டில் நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்கள் போன்ற முக்கியமான தஸ்தாவேஜுகளை சாதாரணமாக வைத்திருப்பதாலும், அவையெல்லாம் வெளிநாட்டவரான சோனியாவின் பார்வைக்கு வரக்கூடிய ஆபத்து இருப்பதாலும், சோனியா அந்த வீட்டில் இருக்கக் கூடாது என மனு தாக்கல் செய்த காரணத்தினால் தான்,  கட்டாயத்தின் அடிப்படையில் அன்டோனியா மைனோ (அவர் தான் சோனியா) இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பத்தார். இதை வெளிப்படையாகக் கூற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி முன்வருவாரா?
திருமதி அன்டோனியா சோனியாவாக மாறிய பின்னரும் கூட,  இத்தாலியக் குடியுரிமையை ரத்து செய்யவில்லை.  இதன் காரணமாக ராஜீவ் காந்திக்கும், திருமதி அன்டோனியாவிற்கு பிறந்த பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டப்படி இத்தாலிய பிரஜையாகவே (அம்மா வழியில்- இத்தாலிய குடியுரிமை சட்டப்படி) மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இன்றும் இத்தாலிய குடியுரிமை உண்டு.
பாரதிய ஜனதா கட்சியை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்று கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்தி தனது இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்து விட்டாரா என்பதை முதலில் மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும்.
இந்தியத் திருநாட்டின் சட்டம், இரட்டைப் பிரஜா உரிமையை அனுமதிக்கவில்லை;  ஆனால் பிறப்புரிமை காரணமாக இன்னொரு நாட்டு (இத்தாலி) பிரஜையாக அந்த நாட்டுச் சட்டம் கருதுவதைத் தடுக்காது.   1992-ல் இத்தாலிய குடியுரிமைச் சட்டம் மாற்றப்பட்டு, ஓர் இத்தாலிய பிரஜை வேறு நாட்டுப் பிரஜையாகவும் இருக்க அனுமதி அளிக்கும் விதமாக திருத்தம் கொண்டுவந்து, அது சட்டமாக்கப்பட்டுள்ளது. (யாருக்காக? இது யாருக்காக?)   இதன் அடிப்படையில் ராகுல் காந்தி இத்தாலிய பிரஜையாக உள்ளார். எனவே அந்நிய நாட்டு குடியுரிமையை தன்னிடம் வைத்திருக்கும் ராகுல் காந்தி தேசியவாதிகளான பா.ஜ.க.வை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்பது முரண்நகை அல்லவா? இதைத் தான்  ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்கள்!
நாடு விடுதலை பெற ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த வார்த்தை  ‘வந்தேமாதரம்’ என்ற இனிய சொல்.  2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7- ம் தேதி நாடு முழுவதும்  ‘வந்தேமாதரம்’  பாடப்பட்டது.  இது காங்கிரஸ் தலைமையில் நடக்கும் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவு. ஆனால் தில்லியில் நடந்த  நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.  ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது இதுவரைக்கும் எவருக்கும் தெரியாது.  நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் தங்களது ஜாதி, மதம், பிரதேசம், மொழி போன்ற எல்லா பிரிவினைகளையும் மறந்து இப்பாடலைப் பாடினார்கள்.  ஆனால் இத்தாலிய மணிமேகலை மட்டும் பாடவில்லை.
இந்த நாட்டின் தேசிய கீதமான வந்தேமாதரத்தைப் பாட மறுத்த சோனியாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா, அல்லது தேசியவாதிகளான சங்க பரிவார் இயக்கங்கங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? வரும் நாடாளுமன்றத் தேர்தல் நல்ல பதில் அளிக்கும்.
உண்மையில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகும். கடந்த காலத்தில் நடந்த இரண்டு சம்பவங்களில் சோனியா காந்தியின் செயல்பாடுகள் மேற்படியான கேள்வி எழுப்பக் காரணமாக உள்ளன.
முதலாவது, 1971-ம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் மூண்டபோது நிகழ்ந்தது.  அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் பணியாற்றும் எந்த விமான ஓட்டியும் விடுப்பில் செல்ல அனுமதி கிடையாது என்று விதி இருந்தது.  இது நடைமுறையில் இருந்த போர்க்கால நிலைப்பாடு.  அப்போது 1971-ல் திருவாளர் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அரசின் விதிமுறைக்கு மாறாக சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது மனைவி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைவரும் இத்தாலிக்குச் சென்றதும், இந்திய- பாகிஸ்தான் யுத்தம் முடியும் வரை அவர்கள் இந்தியா திரும்பாததும் ஏன்?  இம் மாதிரி நடக்க வேண்டிய அவசியம் என்ன?  இதுதான் நாட்டுப் பற்றா?
இரண்டாவது, 1977-ல் இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன்,   சோனியா காந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் இத்தாலித் தூதரகத்தில் பாதுகாப்புக் கோரி தஞ்சம் புகுந்த சம்பவம். பின்னர் இந்திரா காநதி, சஞ்சய் காந்தி மற்ற உறவினர்கள் அனைவரும் கேட்டுக்கொண்ட பின்னரே தூதரகத்தை விட்டு அவர் வீடு திரும்பியபோது,  சோனியா காந்தியின் ‘நாட்டுப் பற்று’ வெளிச்சத்திற்கு வந்த்து.
ஆகவே இரண்டு சம்பவங்கள் மூலமாக சோனியா காந்தியின் நாட்டுப் பற்று உலகறிந்த விஷயமாகும்.  இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் உலா வந்தபோது, 1962-ல் இந்திய- சீனா யுத்தம் நடந்த போது, யுத்தம் நடந்த எல்லைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதிய ஜன சங்கத்தினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்கள். இந்த தேசபக்தர்கள்  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவது வேடிக்கையானது.
ஆகவே இந்தியா மீது சீனாவோ அல்லது பாகிஸ்தானோ படையெடுத்தால்,  சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியையும், மகள் பிரியங்காவையும் இத்தாலிக்கு அழைத்துச் செல்ல மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க இயலுமா?  இப்படிப்பட்டவர்கள் இந்தியத் திருநாட்டில் வாழலாம், இந்த தேசத்திற்காகவே உயிரை தியாகம் செய்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிப்பதும், அதை ஊடகங்கள் எந்தக் கேள்வியும் இன்றி பிரசுரிப்பதும் எவ்வகையில் நியாயம்? 

நன்றி- தமிழ் இந்து


தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி
16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே..கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகும் முன்னர் எடுக்கப்பட்டது. தமிழகத்திற்கு இக்கணிப்பு பொருந்தாது)
அதாவது தே..கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இதே நிலை தேர்தல் வரை நீடித்தால் பாஜக தலைமையிலான கூட்டணி 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பது உறதி
பாஜகவுக்கு சாதகமான காற்று வீசுவதற்குச் சான்றாக, பல மாநிலங்களிலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒருகாலத்தில் தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜக, இப்போது திமுக- அதிமுக கூட்டணிகளுக்கு நிகராக பெரிய கூட்டணியை உருவாக்கி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தே.ஜ.கூட்டணி தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பு விழாவில்,  ‘கேப்டன்’ விஜயகாந்த், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வைகோ, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து ஊடகங்களின் ஹேஸ்யங்களை முறியடித்தபோது மோடி புயலின் விளைவை உணர முடிந்தது. இதைவிட பல அரிய அரசியல் நிகழ்வுகளை நாடு முழுவதும் காண முடிகிறது
UP தலித் தலைவர் உதித்ராஜ்


குறிப்பாக, பீகாரில் லோக்ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் தே..கூட்டணியில் சேர்ந்தது பெரும் அரசியல் திசைமாற்றத்தை வெளிப்படுத்தியது. 2003-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் சென்ற இவரது மீள் வருகை, தலித் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு பெருக வழிவகுத்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அதவாலே, .பி.யில் தலித் தலைவர் உதித்ராஜ் ஆகியோரின் வருகை பாஜகவின் பலத்தை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும் பாஜக அணியில் சேர்ந்துள்ளது.
மகராஷ்டிராவில் ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, சுவாபிமானி பக்ஷா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. ஏற்கனவே இங்கு சிவசேனை வலுவான தோழமைக் கட்சியாக உள்ளது. போதாக்குறைக்கு, சிவசேனாவில் இருந்து பிரிந்து மகராஷ்டிர நவநிர்மான் சேனாவை நிறுவிய ராஜ்தாக்கரே, மோடி பிரதமராவதற்கு தனது கட்சி உதவும் என்று அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும் பல தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
பாஜக ஆளும் கோவாவில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஏற்கனவே கூட்டாளியாக உள்ளது. இங்கு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீதான நல்லெண்ணமும் பாஜகவின் வெற்றிக்கு உதவும்.
தெலுங்கானா பிரச்னையால் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ள ஆந்திரப் பிரதேசத்திலும் தே..கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. இங்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் போட்டி போட்டன. இறுதியில் தெலுங்குதேசம் கூட்டணியில் ஐக்கியமாக உள்ளது. இக்கட்சி ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தோழமைக் கட்சியாக இருந்தது. அதேபோல, தெலுங்கானா பகுதியில், தனி மாநிலத்திற்காகப் போராடிய தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் மோடி அணியில் இணையப் போவதாகத் தகவல். தவிர, சீமாந்திராவில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் துவங்கியுள்ள ஜனசேனா கட்சியும், ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக் சதா கட்சியும் கூட தே.ஜ.கூட்டணியில் சேர உள்ளன. மொத்தத்தில் சென்ற முறை காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பெருமளவில் உதவிய ஆந்திராவில் இப்போது பாஜக அலை வீசுகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட, தேர்தலுக்குப் பிறகு மோடியை ஆதரிக்க வாய்ப்புள்ளது


பாஜக ஆண்ட மாநிலமான கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது கர்நாடக ஜனதா பக்ஷா கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார். பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஸ்ரீராமுலுவும் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார். பிரிந்துசென்ற பாஜகவின் தலைவர்கள் பலரும் தாய்க் கட்சியில் சங்கமிப்பதன் விளைவாக பாஜகவின் வலு அதிகரித்துள்ளது. இது வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கண்டுள்ளன. பாண்டிசேரியில், மாநில முதல்வர் ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தே..கூட்டணியில் அங்கமாகிவிட்டது. தமிழகத்தில் மேலும் பார்வர்டு பிளாக் (வல்லரசு), புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
கேரளத்திலும் கூட, கேரள புலைய மகா சபா பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நாராயணகுருவின் வழிவந்த எஸ்.என்.டி.பி. இம்முறை தனது அரசியல் சாரா நிலைப்பாட்டை (காங்கிரஸ் சார்பு) மாற்றிக்கொள்ளும் என்றும் தெரியவருகிறது. எல்லாம் மோடி செய்யும் மாயம்.
ஹரியானாவில் பஜன்லாலின் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியும் தே..கூட்டணியில் உள்ளது. தவிர, சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சி பாஜகவின் நட்புக் கட்சியாக உள்ளது. பஞ்சாபில் நெடுநாள் கூட்டாளியான சீக்கிய மக்களின் ஆதரவு பெற்ற சிரோமணி அகாலிதளம் பாஜகவின் நமபகமான துணைவனாக உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களிலும் இம்முறை மோடி சூறாவளி பலனைத் தரத் துவங்கியுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. தவிர பி..சங்மா (தேசியவாத காங்கிரஸ்) தேர்தலுக்குப் பிந்தைய நட்புக் கட்சியாக மாறவும் வாய்ப்புள்ளது.
நாகலாந்தில் நாகா மக்கள் தேசிய முன்னணி தே..கூட்டணியில் சேர்ந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்கா மக்கள் விடுதலை முன்னணி பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது நல்ல அறிகுறி. மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் பழங்குடியினரின் கட்சிகள் சில பாஜக பக்கம் சாய்கின்றன.
அஸ்ஸாமில் அஸாம் கணபரிஷத் தலைவர்கள் பலர் கூண்டோடு பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். அங்கு இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. அஸ்ஸாம் கணபரிஷத் கட்சியும் தே..கூட்டணியில் சேர பேச்சு நடத்துகிறது
அயோத்தி நாயகன் கல்யாண் சிங்
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவுடனான ஊடல் தீர்ந்து, தனது ஜனகிராந்தி கட்சியைக் கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் சங்கமித்துவிட்டார். மேலும் பல சிறிய கட்சிகள் உ.பி.யில் தே..கூட்டணியில் சேர்ந்துள்ளன. குஜராத்தில் மோடியின் முன்னாள் சகாக்களும் அதிருப்தியால் பிரிந்து போனவர்களுமான கேசுபாய் பட்டேல், கோர்தன் ஜடாபியா ஆகியோர் தனிக் கட்சிகளை கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் இணைந்துவிட்டார்கள். பாஜக தனது பலவீனங்களை உணர்ந்து சரிசெய்துகொண்டிருப்பது அக்கட்சியின் வெற்றிவாய்ப்புகளை பல மடங்காக்கி உள்ளது.
உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவின் நட்புக் கட்சிகள் கூடியுள்ளன. ஒடிசாவில் ஆளும் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தில்லியில் அகில பாரதீய பாசி சமாஜ் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் லடாக் மக்கள் கட்சியும் காஷ்மீர பாந்தர் கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணித் தோழர்களாக மாறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாசலம் முதல் குஜராத் வரை தே..கூட்டணி வலிமை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவின் எதிரிக் கட்சிகளிலிருந்து விலகி விபீஷண சரணாகதி அடையும் தலைவர்களின் பட்டியலும் நீண்டுவருகிறது. பீகாரில் லாலுவின் வலக்கரமான ராம்கிருபால் யாதவும், அஸ்ஸாமில் பிரபுல்லகுமார் மொகந்தாவின் வலக்கரமான ஹிதேந்திர கோஸ்வாமியும் சில உதாரணங்கள். தமிழகத்தில் திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார்.

நாட்டிற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன்விளைவாகவே, பாஜகவின் வலுவை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதற்கு மோடி அலையும் முக்கிய காரணமாகியுள்ளது. 1998- 2004–இல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. 2014-இல் அந்த எண்ணிக்கை இருமடங்காகும் நிலைமை காணப்படுகிறது

மறுபுறமோ, காங்கிரஸ் தனது தோழமைக் கட்சிகளை இழப்பதுடன், அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மறுத்து ஓட்டமெடுக்கும் நிலையைக் காண முடிகிறது. இடதுசாரிகளின் பாஜக எதிர்ப்பரசியல் செல்லாக்காசாகி வருவதையும், மூன்றாவது அணி தேர்தலுக்கு முன்னரே காணாமல் போகும் நிலையையும் அவதானிக்க முடிகிறது. தேர்தல் நாள் நெருங்கும்போது இன்னமும் பல அரசியல் அதிசயங்களை நாடு காணும் என எதிர்பார்க்கலாம்

நன்றி- தமிழ் இந்து

Wednesday, 26 March 2014

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர் என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாகவே தங்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கியிருக்க வேண்டும். இதுகுறித்த விவரத்தை வேட்பு மனுதாக்கலின் போது முறையாக தெரிவிக்க வேண்டும். வேட்பாளர் செலவிடும் தொகை இந்த வங்கிக் கணக்கின் மூலமாகவே பணப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு கொடி மற்றும் 8க்கு 4 என்ற அளவிலான பதாகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் வர நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே, கூட்டமாக வரக் கூடாது.
அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாராத்திற்காக பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் எஸ்பி சோனல் சந்திரா, டிஆர்ஓ ராஜன் துரை, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன் ரெட்டி, ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மலையாளம், கார்த்திகாயினி, சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சிகளின் சார்பில், (திமுக) முருகேசன், (அதிமுக) சேகர், (பாமக) கண்ணபிரான், (காங்) சையது பதோருதீன்,  தமிழ்ச்செல்வன், (பாஜக) அன்புதுரை, (மதிமுக) துரைராஜ், (பகுஜன் சமாஜ்) காமராஜ், (தேமுதிக) யுவராஜ், (தேசிய வாத காங்கிரஸ்) குணசேகரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி-தினகரன்.
வ.களத்தூரில் பிரபு வாக்குசேகரித்த காட்சி
தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபு பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, மேட்டுபாளையம், வ.களத்தூர் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தி.மு.க.வினர் முன்அனுமதி பெறாமல் அதிக அளவில் கொடி தோரணங்கள், டியூப் லைட் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்ததாக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் வ.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முடிமன்னன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
வ.களத்தூர் கால்துறையிடம் முன் அனுமதிபெறமால் அதிக அளவில் கொடி மற்றும் தோரணங்கள் வைத்ததால் வழக்கு பதிவு செய்தது.

Tuesday, 25 March 2014

சேலம் அருகே, வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தில் ரூ.8.25 லட்சத்தை திருடிய 2எஸ்எஸ்ஐக்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் குப்பனூர் சோதனை சாவடி அருகே வீராணம் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்.ஐ.க்கள் கோவிந்தன்(50), சுப்பிரமணி(50) தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சோதனையிட்டனர்.

அதில், வந்த ஏற்காடு அதிமுக பிரமுகர் குப்புசாமியிடம் 2 பேக்குகளில் ரூ.35 லட்சம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டதை வீடியோ எடுப்பதற்காக தேர்தல் அதிகாரிகளுடன், குப்புசாமியும், டிரைவர் பாலகிருஷ்ணனும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, ரூ.26.75 லட்சத்தை மட்டுமே உதவி தேர்தல் அலுவலரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மீதி பணம் ரூ.8.25 லட்சம் எங்கே என்று குப்புசாமி கேட்டார். அதை கேட்டு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் தேர்தல் நடத்திய விசாரணையில், எஸ்.எஸ்.ஐ.க்கள் ரூ.8.25 லட்சத்தை பதுக்கியது தெரிந்தது. போலீஸ் ஸ்டேசனில் உள்ள ஒரு அறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம்  மீட்கப்பட்டது. இது தொடர்பாக பறக்கும் படை தேர்தல் அதிகாரி மணிவண்ணன்  வீராணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு எஸ்ஐக்கள் கோவிந்தன், சுப்பிரமணி ஆகியோர் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் 4வது நீதித்துறை நடுவர் விஜயலட்சுமி முன் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

இதற்கிடையே, கைதான போலீசாரிடம் இருந்து ரூ.4 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 4.25 லட்சம் எங்கே போனது என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து போலீசார், வேன் டிரைவர் பாலகிருஷ்ணன், குப்புசாமியிடம் விசாரித்து வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்கவே போலீசாரை கொண்டு சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் பறிமுதல் பணத்தை அபகரித்தது தொடர்பாக இரு போலீஸ் அதிகாரிகள் சிக்கியது தேர்தல் வரலாற்றில் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தை மோசடி செய்த எஸ்எஸ்ஐக்கள் இருவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து டிஐஜி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி-தினகரன்.
பெயர்: முள்ளு சீதா
தாவரவியல் பெயர்: Annona muricata
மற்ற பெயர்கள்: Graviola, Soursop, Brazilian Paw Paw, Guanabanaª

மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் பயனுள்ள பல தாவரங்களும் வைத்திய முறைகளும் பிரபலமாகி வருகின்றன.  சமீபத்திய மிகப் பிரபலம் - ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படும் முள்ளு சீதா! அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம் இது. இம்மரத்தை அங்குள்ள  பழங்குடியினர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உபயோகித்தனர்.

இதன் பட்டை, இலை, பழம் என எல்லாமே நோய்களை குணமாக்க உதவுகிறது. பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும்  குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். இது பல நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. ஒரு  பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தின் மூலம் தீர்வு கண்டதாகவும், பின் காப்புரிமை பெற  முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இந்த ரகசியத்தை வெளியுலகிற்கு  அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

கர்ப்ப காலத்தில் அதிகம் உண்ணக் கூடாது என்றும் சொல்வதுண்டு. தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும், சிலர் ‘இதை  அதிகம் சாப்பிடக்கூடாது’ என்றும் ‘பக்க விளைவுகள் உண்டு’ என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் நவீன மருத்துவ முறையில் ‘கீமோதெரபி’  சிகிச்சைக்குப் பின் ஏற்படுகிற உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள  ‘முள்ளு சீதா’ நன்று  என்றே தோன்றுகிறது.

இப்போதைய உணவுப் பழக்கம், அளவுக்கு மீறிய ரசாயன மருந்து மற்றும் உரங்கள் ஆகியவை புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. இதனை  குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும்  அவரவர் கையில் உள்ளது!

நன்றி-தினகரன்.
இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 26-ந் தேதி (புதன் கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள் 4 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 416 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான வினாத் தாட்கள் அனைத்தும் சிறப்பு அலுவலர்கள் மூலமாக அனைத்து தேர்வு மையங் களுக்கும் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் வாகனங்களில் எடுத்து சென்று வழங்கப்பட உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
மாவட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் இருப்பு மையங்களுக்கும் விடைத்தாள் இருப்பு மையங்களுக்கும், தலா 2 போலீசார் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை துணை- கலெக்டர் மதுசூ தனன் ரெட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்வார் கள்.
புகைப்படத்துடன் விடைத்தாள்
தேர்வு எழுதுவோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விடைத்தாள்கள் இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. மாணவ -மாணவிகளின் பெயர் பதிவு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.
தனித் தேர்வர்கள் தங்களது தேர்வு மைய நுழைவுச்சீட்டை வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகள் முறைகேடுகள் இன்றி நடக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளது. தேர்வு மையங் களின் அருகே ஒலிபெருக்கி தேவையற்ற சப்தம் போன்ற வற்றால் ஏற்படும் இடையூறு களை உடனுக்குடன் களையவும் போதிய பாதுகாப்பு வசதி செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள்
மேலும் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிமலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நேரடியாக விண்ணப்பித்த தனித்தேர்வர் களும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தட்கல் முறையில் விண்ணப் பித்த தனித் தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுத வுள்ளனர்.

நன்றி-தினத்தந்தி.

Monday, 24 March 2014


பாரிவேந்தர் என்ற பச்சமுத்து.

பச்சமுத்துவின் SRM கல்வி நிறுவனமானது ஒரு அரசாங்கத்தை போல் இந்தியாவெங்கும் கிளைகள் பரப்பி பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. ஹோட்டல், பஸ்,என்று மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் கூட புதியதலைமுறை , புதுயுகம் என்று கிளைகள் பரப்புகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவரைப்போன்ற பெருநிறுவனங்கள் நடத்தும் முதலாளிகள் அரசியல்  கட்சிகளின் தேர்தல் செலவிற்கு கப்பம் கட்டவேண்டும் என்பது நமது அரசியலில் எழுதப்படாத விதி. மேலும் தேவைப்படும்போதெல்லாம் கட்ச்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி அவர்களும் அரசியல்வாதிகளாகிவிட வேண்டியதுதான். MGR பலகலைகழகம் நடத்தும்  AC சண்முகம் அரசியலுக்கு வந்த காரணமும் இதுதான். இதுதான் பச்சமுத்தும் அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருக்ககூடும்.  
அடிப்படை தொண்டனாக ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தலைவனாக ஆவதென்பது இன்றைய காலகட்டத்தில் முடியவே முடியாத ஒன்று. அதனால்தான் உடையார் சமூகத்தை முன்னிறுத்தி பச்சமுத்து IJK தொடங்க காரணமாக இருந்த்தது.
சரி,............ உடையார் சமூகத்தை முன்னிறுத்தி தனது தொழில் சாம்ராஜ்யத்தை காக்க வேண்டும் என்பது பச்சமுத்துவின் நோக்கமாக இருக்கும்போது , பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கும் அவரை  நாம் ஏன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்...?  
ஆ.ராசா மீது 2G அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டாலும் மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை குறிப்பாக பெரம்பலூரை பல திட்டங்கள் வந்தடைய காரணமாக இருந்தார் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இதற்க்கு காரணமாக இருந்தது ராசாவிற்கு  அதிகார மட்டத்தில் இருந்த நெருக்கமும், அவர்களின் அரவணைப்பும்தான் என்பது நாம் அறிந்த ஒன்று. தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளரும் IJK மற்றும் SRM நிறுவனங்களின் நிறுவனரான பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து , இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மோடிக்கு நெருங்கியவர் மட்டுமல்ல. இந்நாள், முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்.
SRM பல்கலைகழக எட்டாவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி
 
SRM பல்கலைகழக ஒன்பதாவது  பட்டமளிப்பு விழாவில் மோடி
பெரம்பலூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் சீமானூர் பிரபுவோ, அ.தி.மு.க. வேட்பாளர் மருதைராஜாவோ தமது கட்சிகளின் தலைவர்களுக்கு அடிமையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களின் பலம் அவ்வளவுதான். இவர்களால் தமது தொகுதிக்கு என்ன  வேண்டும் என அதிகார வர்க்கத்திடம் கேட்ககூட முடியுமா என்பது நேருவோ.. அம்மாவோ தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் பச்சமுத்து IJK கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் BJP யின் சின்னமான தாமரை சார்பில்தான் நிறுத்தப்படுகிறார். நாளை வெற்றிபெற்றால் அவர் BJP MP யாகத்தான் கருதப்படுவார். எனவே கட்சித்தலைவரான ராஜ்நாத் சிங்கையோ மோடியையோ சந்தித்து, பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு அவர்கூறும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கும் திறமை மற்றும் செல்வாக்கு கொண்டவர் பச்சமுத்து என்பது உண்மை.
இன்று மாநிலம் தொடங்கி குக்கிராமம் வரை ஒரு திட்டம் வருவதென்பது அதன் மக்கள் பிரதிநிதிகளின் மேல்மட்ட செல்வாக்கை பொறுத்தே அமைகிறது, அந்தவகையில் மற்ற வேட்பாளர்களை விட பச்சமுத்து பதவிக்கு வருவதற்கு முன்பே செல்வாக்கு மிக்கவர்.
இனி முடிவு செய்ய வேண்டியது நாம். நமக்கு MP யாக வருபவர் நேருவின் அடிமையா.. அம்மாவின் அடிமையா.......
பெரம்பலூர்,:   பெரம்பருக்கு ரயில் பாதை, மருத்துவக்கல்ரி அரசு மகளிர் கல்ரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார்.
பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஆலோ சனைக் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐஜேகே கட்சி மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் கோவைத் தம்பி, மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், மாநில அமைப்பு செயலாளர்கள் காமராஜ், வெங்கடேசன், மாநில வழக்கறிஞரணி செயலாளர் அன்புதுரை, ஜெயபாலாஜி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது : இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட வழியில்லையே எனத் தவித்தபோது மோடி  கிடைத்துள்ளார். மோடி நாட்டுக்கான தலைவராக உருவாக்கப்பட்டவரல்ல. தானாகவே உருவானத் தலைவர்.
இப்பகுதி மக்களுக்காக பல்வேறு திரு மண நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளோம். மருத் துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளோம்.  பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என குரல் கொடுக்கும் இயக்கமாக ஐஜேகே விளங்கி வருகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு செல்லும் புதிய ரயில்பாதை அமைத்துத் தருகிறேன். டெல்லியில் உண்ணாவிதரம் இருந்தாவது ரயில்வே துறை அமைச்சரிடம் போராடி ரயில்பாதை அமைத்துத் தருகிறேன். பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி விரைந்து தொடங்க ஏற்பாடு செய்கிறேன். அரசு மகளிர் கலைக்கல்லூரியை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்குவேன் என உறுதியளிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், ஒன்றிய செயலாளர் வாசுரவி, பாமக மாவட்ட செயலாளர் செந்தில், கண்ணபிரான், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், ஜெயசீலன் மற்றும் ஐஜேகே கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 ஜெ.வின் மனக்கோட்டையை மண்கோட்டையாக்க வேண்டும் என்று பெரம்பரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
பெரம்பரில் லோக்சபா தொகுதி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
பெரம்பரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை வகித்தார். பா.ஜ கட்சி மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், பாமக மாவட்ட செயலாளர் செந்தில், ஐஜேகே மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐஜேகே மாநில தலைவர் கோவை தம்பி, பொதுசெயலாளர் ஜெயசீலன், பா.ஜ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், ஐஜேகே மாநில வக்கீல் பிரிவு செயலாளர் அன்புதுரை, ஐஜேகே பொறுப்பாளர்கள் காமராஜ், முத்தமிழ்செல்வன் உட்பட பலர் பேசினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் கூட்டணி, இது வெற்றிக் கூட்டணி. இந்த தேர்தலில் நரேந்திர மோடி தான் பிரமராவார். பெரம்பர் ஆத்தூர் சேலம் வழியாக ரயில் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மெடிக்கல் கல்ரி கொண்டு வரவில்லை, கல்லாறு குறுக்கே அணை கட்டுவேன் என்றார்கள். ஆனால் அணை கட்டவில்லை, மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை,  அறிக்கை மட்டுமே விடும் ஜெயலலிதா அறிக்கை ராணியாக திகழ்கிறார். மக்களுக்கு எதுவும் ஜெயலலிதா செய்யவில்லை. வரும் தேர்தலில் 40 தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது, ஏனென்றால் மக்களை ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார். கூட்டணி கட்சி மரியாதை தரமாட்டங்க, தேமுதிகவுக்கு திராணி இருந்தா தேர்தலில் நிக்கட்டும் என்றார்கள். எங்களுக்கு திராணி உள்ளது என்பதை காட்ட புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றோம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கோட்டை ஜெயலலிதா கட்டியுள்ளார். அதை நீங்கள் மண் கோட்டையாக்க வேண்டும். மீண்டும் அதிமுகவிற்கு 2004 தேர்தல் நிலை ஏற்படும். ஒரு பாட்டில் ரூ.10 க்கு விற்பனை செய்கின்றனர். தமிழக முதல்வரால் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. உணவு, குடிநீர், பார்மஸி போன்றவற்றிற்கு அம்மா என பெயர் வைத்த ஜெயலலிதா பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா என பெயர் வைக்கவில்லை. 2016ல் நான் உங்களிடம் ஓட்டுகேட்பேன். அப்போது எனக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள். ஒரு முறை ஓட்டை மாற்றிபோடுங்கள், ஊழல் இல்லாத ஆட்சி அமையும். நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும். அப்போது இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார்